இன்றைக்கு இணையம் என்பது பலரின் வாழ்வில் ஒர்
அங்கமாகிவிட்டது. கட்டற்ற சுதந்திரமாக நல்லது,
அப்படி இல்லைஎனக்கருதப்படுவது எல்லாம் மிக எளிதில் வசப்படும் இந்த வலிமையான ஆயுதம் உலகெங்கும் இலவசம்.
யூ டியூப்பில் படம் பார்க்கலாம், பதிவேற்றம் செய்யலாம்,
ஃபேஸ்புக், லிங்க்டுஇன் கணக்கு தொடங்கலாம்,
கூகுள், யாகூ எதில் வேண்டுமானாலும் எதையும் தேடலாம்.
ஃபிலிப்கார்ட், அமேசான் என எந்தவோர் இணைய வணிகர்களிடமும்
பொருள் வாங்கலாம், ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யலாம்.
மின் கட்டணம் செலுத்தலாம், நெட் பேங்கிங் செய்யலாம்,
இவை அனைத்துக்கும் தேவை நீங்கள் இணையத்துக்கான இணைப்பு (நிரந்தரமாக அல்லது தாற்காலிகமாக) பெற்றிருக்க வேண்டும்.
அவ்வளவுதான்
இப்போது இதில் சில வசதிகளை கட்டணசேவையாக அறிமுகபடுத்துவது
குறித்து விவாதம் எழுந்திருக்கிறது. இப்படி செய்தால்
ஒருசில தொலைபேசி நிறுவனங்களுக்கு அதிக லாபம்
ஈட்டும் வழியாகவும், இணைய பயனாளிகள் சில நிறுவனங்களின் பிடியில் மட்டும் சிக்கி கொள்வார்கள் என்று
எதிர்ப்பு அலை எழுந்திருக்கிறது.
சமநிலை இணைய சேவை வேண்டும் (நெட் நியூட்ராலிட்டி)
என்பது உலகம் முழுவதிலும் இணையப் பயன்பாட்டில் இருப்போர் வலியுறுத்தும்
கருத்து. இணையத்தைப் பயன்படுத்தும் நபர் எதை வேண்டுமானாலும் பார்க்க,
எந்த இணைய சேவை நிறுவனத்தின் தகவல் களஞ்சியத்துக்குள்ளும் நுழைந்து பார்க்க,
எந்தவோர் இணைய வணிக நிறுவனத்துடனும் இ-வர்த்தகம்
செய்யத் தடையில்லாத நிலைமைதான் சமநிலை இணைய சேவை என்பது.
உலகில் பல நாடுகளில் இதற்காக தனி சட்டங்கள்
வந்துவிட்டன. அமெரிக்காவில்
சமநிலை இனைய வசதி அரசால் உறுதி செய்யபட்டிருக்கிறது.
ஆனால் ஆனால்,இந்தியாவில் சேவைகளைக் கட்டுப்படுத்துதல்,
சேவைகளுக்குக் கட்டணம் விதித்தல், சேவைகளைத் தரவரிசைப்படுத்துதல்,
சில சேவைகளுக்கு அதிவேகம் நிர்ணயித்தல் ஆகிய உரிமைகளை தனியார் தொலைத்
தொடர்பு நிறுவனங்கள் கோருகின்றன. இதற்கு முக்கிய காரணம் 2014ஆம் ஆண்டில் வெறும் ரூ.62,162
கோடி ஏலம் போன அலைக்கற்றை, தற்போது இரட்டிப்பு
கட்டணம் கொடுத்து நிறுவனங்கள் ஏலம் எடுத்திருக்கின்றன.. அதை எப்படி சம்பாதிப்பது? அதனால் அரசிடம் அவர்கள் இந்த கட்டண
சேவைக்கு அனுமதி கேட்கிறார்கள்
.வழக்கமான தொலைபேசி சேவை, குறுந்தகவல், எம்எம்எஸ் ஆகியவற்றைப் பயன்படுத்தாமல்,
வாட்ஸ் அப் , முகநூல், லைன்,
வைபர், வீசாட் போன்றவற்றின் மூலம் தகவல்,
விடியோ, புகைப்படம் பரிமாறிக்கொள்வதால் உலகம் முழுவதிலும்
உள்ள தகவல் தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 50 லட்சம் கோடி அமெரிக்க
டாலர் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்கள் வாதம். இந்தியாவில்
மட்டும் ஆண்டுக்கு ரூ.3,700 முதல் ரூ.4,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது
இதற்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று
ஆணையம் (டிராய்)
தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இணைய சேவை (நெட் நியூட்ராலிட்டி)
குறித்த உங்கள் கருத்துகள், இதில் நீங்கள் எதிர்கொள்ளும்
சிக்கல்கள், தீர்வுகள் என்ன என்று கேட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்
செய்தி வெளியானவுடன் இந்தியஇணைய குடிமகன்கள்(நெட்சிட்டிசன்) கொதித்து எழுந்திருக்கின்றனர். முக நூலில், டூவிட்டர்களில் ஆதரவு திரட்டி அரசுக்கு அனுப்பிகொண்டிருக்கிறார்கள் பல லட்சகணக்கானபேர்
“எனது இணையம் அதில் சம நிலை எனது உரிமை” என மெயில்கள்
அனுப்பி கொண்டிருக்கிறார்கள் நீங்களும் உங்கள்
கருத்துகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பலாம்.
தொலை பேசி நிறுவனங்களுக்கு இதனால் ஒன்றும் பெரிய இழப்பு அல்ல. அவர்கள் மொத்த வருவாயில் 5%
குறைவு, அவ்வளவே. மேலும்
ஏர்கண்டிஷன், 62 அங்குல எல்சிடி டிவி பயன்படுத்தினாலும்,
40 வாட்ஸ் குண்டு பல்பு பயன்படுத்தினாலும் மின்கட்டணம், ஒரே மாதிரியானது தானே? இணையத்தில் மட்டும் பயன்படுத்தும் தளத்திற்கேற்ப எப்படி மாறுபட்ட கட்டணம் வசூலிக்கமுடியும்
என்கிறார்கள் இணைய பாதுகாப்பு போராளிகள்.
யோசிக்க வைக்கும் கேள்வி தான்.
.
.
இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன், நேற்று வரை. இந்த விஷயம் ஐஎஸ்பி சம்பத்தப் பட்டதாம். எல்லா வலைகளும் ஒரே மாதிரி நடத்தப் பட வேண்டும் என்பது தானாம். ஒரே வேகத்தில்.. தடுக்காம... என்று.. இங்கு எல்லா தொலைபெசி நிறுவனங்களும் ஐஎஸ்பி என்பதால் தான் வித்தியாசமாகப் பார்க்கப்படுகிறது.
பதிலளிநீக்கு