அனுதாப அலைகள் சூனாமியாக தாக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் புதிய தலைமுறை மக்கள் மேடையில் பங்கு கொள்ள திரு வெங்கட் அழைத்தார்.(29/07/15) சற்று யோசித்தேன். நிகழ்ச்சியில் மாவட்டங்களிலிருந்து மாணவர்களும் பங்கேற்பதாக சொன்னதால் நிகழ்ச்சி வெறும் அஞ்சலியாக இல்லாமல் மாறுதலாக இருக்கும் என எண்ணி பங்கேற்றேன். அந்த நிகழ்ச்சியில் தெளிவான பார்வையில் துணிவாக கருத்துகளை சொன்ன இந்த மாணவர்கள் கலாம் கண்ட கனவுகளின் நம்பிக்கை விதைகளாகத் தெரிகிறார்கள். விரைவில் வளர்ந்து விருட்சமாகப்போகும் அடையாளங்கள் தெரியும் இவர்களை வளரும் இந்தியாவின் அடையாளமாக பார்க்கிறேன். சென்னையிலிருக்கும் முகங்களையே பார்க்க வேண்டிய நிலையிலிருந்து மாறி மாவட்டங்களிலிருந்து மக்களை நேரலையில் இம்மாதிரி பங்கு கொள்ளச் செய்யும் நிகழ்ச்சிக்கு புதிய தலைமுறைக்கு நன்றி சொல்ல வேண்டும். தனது தொழில் வாழ்க்கையின் துவக்க காலங்களிலேயே நான் கண்ட கலாமின் நம்ப முடியாத எளிமை,பற்றிச் சொல்ல ஒரு வாய்ப்பு. ராஷட்டிரபதி பவனில் அவர் இருந்த அறையில் மழை ஒழுகிய போது தூங்காமல் தவித்த கலாம், ஊழியர்களின் வீடுகள் எந்த நிலையில் இருக்கிறதோ என்று பட்ட கவலை ( நன்றி: சுதாங்கனின் கலாம் காலங்கள் புத்தகம்) பற்றிச் சொன்ன போது நெறியாளர் வெங்கட் கேட்டது ஒழுகும் அரசாங்க கட்டிடங்களுக்கு ராஷ்டிரபதி பவனும் விலக்கில்லையா?வினாடி நேரத்தில் அரசியலாகியிருக்ககூடிய ஒரு விஷயம் கலந்துரையாடலில் வந்தபோது அதை மிக சாமர்த்தியமாக கையாண்ட சட்ட மன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியன், நிகழ்ச்சி முழுவதும் கலாம் நல்ல குழந்தைகளை உருவாக்க ஆசிரியர்களின் கடமைகள் பற்றி கலாம் சொன்னதை நினைவூட்டிக் கொண்டிருந்த "தோழமை" அமைப்பின் தேவநேயன் ஆகியோருடன் பங்கேற்றது மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்ததுநன்றி வெங்கட்.
அந்த வீடியோவை இங்கே கிளிக் செய்தால் பார்க்கலாம்
- Vasudevan Parthasarathy, Sundaram Narayanswamy M, Bala Mukundhan and 52 otherslike this.
- 2 shares
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்