பிரமாண்டமான
ஷாப்பிங் மால்களினால் நிறைந்த நகரம் துபாய் என்ற எண்ணத்தை மாற்றியது இந்தப் பயணம்.
உலகின் மிகச்சிறந்த விஷயங்களை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அரசரின்
நிர்வாகம், , மனித உழைப்பை மிகப்பெரிய அளவில் வளரும் தொழிநுட்பத்துடன் பயன்படுத்தி
நாட்டை நாளொரு வண்ணமாகவும் பொழுதொருமேனியாகவும் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்போது 15 லட்சம் சுற்றாலப்பயணிகள் வரும் இந்தக் குட்டி தேசத்துக்கு 2020க்குள் அதை இருமடங்காக்க
திட்டமிட்டிருக்கிறார்கள்> அப்போது வரப்போகும் EXPO 2020 என்ற உலக கண்காட்சியை இங்கே
நடைபெறப்போகிறது. அதற்காக இப்போதிலிருந்தே திட்டமிடுகிறார்கள்.
இங்குச்
சுற்றாலத்துறை தனியாரால் இயக்கப் படுகிறது. இங்கு அனைத்து நிறுவனங்களிலும் அரசின் முதலீடும்,
நிர்வாகத்தில்பங்கும் இருக்கிறது. அதனால் அரசின் எண்ணங்கள் சிறப்பாகச் செயலாகின்றன.
நகரை
சுற்றிப் பார்க்கப் பலவிதமான பஸ்கள் முழுவதும் ஏர்கண்டிஷன், பாதிமூடியது, மொட்டைமாடி
பஸ் எனப் பலவகை. இயக்குவது லண்டனிலிருக்கும் BIG BUS என்ற நிறுவனம். எல்லாபஸ்கலிலும்
இந்தி உள்பட 14 மொழிகளில் ஆடியோ அமைப்பு. தேவையான மொழியைத் தேர்ந்தெடுத்து காதில் போனை
சொருகிக்கொண்டால் நாம் பார்ப்பதை அது விவரித்துச் சொல்லும். நாம் தேர்ந்தெடுக்கும்
இடங்களில் இறங்கிக்கொண்டு நாம் விரும்பியபடி பார்த்தபின் அடுத்துவரும் பஸ்ஸில் ஏறிக்கொள்ளலாம்.
படங்கள் எடுக்க வசதியாக இருப்பதால் நான் மொட்டைமாடி பஸ்ஸை தேர்ந்தெடுத்தேன்.
வண்ணமயமான வானுயர்ந்த நவீன கட்டிடங்களைக் கடந்து நகரின் மறுகோடியிலிருக்கும் பகுதியில் பழைய அரேபிய கட்டிடகலையின் மிச்சங்களைப் பார்க்கமுடிகிறது. வெளிப்புற சுவர்களில் அழகான வண்ணகோலங்கள். அங்குள்ள மீயூசியத்தில் இறங்கி சிலமணிநேரங்களை செலவிட்டேன். பலநாடுகளில் மீயூசியம் என்பது வெறும் கட்டிடத்தில் பொருட்களாக இல்லாமல் மிக அழகாக ஆவலைத்தூண்டும் விதமாக அமைத்திருப்பார்கள். துபாய் மீயூசியம் அதுபோல்தான். நுழைவாயிலில் ஒரு படகு அதன் பின்னே ஒரு பழைய கோட்டையில் மீயூசியம். துபாய் நகரம்/தேசம் பிறந்து வளர்ந்த கதையைச்சொல்லும் தத்ரூபமான ஃபைபர் பதுமைகள் இதமான ஓளி/ஒலி அமைப்பில். முத்துக்குளிக்கும் நகரமாக இருந்ததை நமக்குக் காட்ட, மீயூசியத்தின் நிலவறைப்குதியில் கடலின் அடியில் இருப்பது போல ஒரு சூழல். மெல்லிய கடல்நீல வெளிச்சம், அலைகளின் மெலிதான ஓசை நீரின் அடியில் நீந்தும் மனிதர்கள் என அசத்துகிறார்கள். வெளியே வரும்போது கடலிலிருந்து தரைக்கு வந்த உணர்வு.
தொடர்ந்த
பஸ் பயணத்தில் பழைய துபாயை நினைவுட்ட நிர்மாணிக்கப்பட்ட பகுதி இதை souk என்று அழைக்கிறார்கள்.
மார்க்கெட் என்று அர்த்தம். சிறிய கடைகள் ஒரு கிராம சூழ்நிலையில் மிக நெருக்கமாக, ஒரே
வரிசையில் அமைந்திருக்கிறது. போர்டுகள் கூடப் பழைய பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன.
மார்கெட்டின் கட்டிட அமைப்பும், பழமையைப் பறை சாற்றுகிறது சூடான காற்றை வெளியேற்றும்
வசதிக்காகக் குறுக்கு கட்டைகள் பொருத்தப்பட்ட பாரம்பரிய மண் சுவர் கோபுரங்கள் கூட இருக்கிறது.
. கோல்ட் சூக் என்ற பகுதியில் பலசரக்கு கடைகளில் தொங்கும் ஷாம்ம்பு பாக்கெட் சரங்கள்
போலக் கொத்து கொத்துக்காகத் தொங்கும் தங்கச்சங்கலிகள். வளையல்கள். எப்படிப் பாதுகாக்கிறார்கள்?
என்பது ஆச்சரியம்.வெளியே பிரதான சாலையில் எல்கேஎஸ், பீமாஸ். ஜாய் ஆலுக்காஸ் போன்று நமக்கு அறிமுகமான பெயர்களில் வழக்க்மான பாணி ஷோ ரூம்கள். ஆனால் தி நகர் ஆடம்பரம் இல்லை.
அருகிலேயே
spice souk வாசனை திரவிய பொருட்கள் அனைத்து நிரம்பி வழியும் கடைகள். குங்குமப்பூ, கிராம்பு
மட்டுமில்லை. காய்ந்த ரோஜா இதழ்கள் இதழ்கள் மட்டுமில்லை காய்ந்த ரோஜா மொட்டுக்ககளைக்
கூடக் கிலோகணக்கில் விற்கிறார்கள். டூரிஸ்ட்கள் வேடிக்கை பார்க்கிரார்கள் உள்ளுர்காரர்கள்
வாங்குகிறார்கள்
தொடர்ந்து
பஸ்ஸில் ; பயணித்துத் தேரியா துபாய் , மற்றும் ஃபர் தூபாய் எனத் துபாய் நகரை இருபகுதியாகப்
பிரிக்கும் அமையதியான கடல் பகுதியில் creek dhow படகில் பயணம். இரு பக்ககங்களில் இருக்கும்
பிரமாண்ட கட்டிடங்கள் வழியனுப்பிய மெதுவான படகுசவாரி. கரைகளில். பெரிதும் சிறிதுமாக
ஏராளமான ஆடம்பர படகுகள். அணிவகுத்து நிற்கின்றன. சில பெரிய படகுகள் பாலிவுட் இளவரசர்,
இளவரசிகளுக்குச் சொந்தம் என்றார்கள்
...
ஒரு
சிறிய தீவாக இருந்த துபாயின் நிலப்பரப்பை விரிவாக்கி நகரைப் பெரிதாக்கும் திட்டத்தின்
ஒரு பகுதி palm jumairah. நடுப்பகலில் ஒரு ஈச்சமரத்தின் நிழல் தரையில் விழுவதைக் கற்பனை
செய்து பாருங்கள்.
அப்படியொரு அமைப்பைக் கடலில், மண்கொட்டி நிரப்பி அதன் மீது ஒரு நகரத்தையே
எழுப்பியிருக்கிறார்கள்:. ஈச்சை மரத்தின் உடல் பகுதியைப் போலக் கடல் நீரின் நடுவில்
நீண்ட பாதை. அதன் முனையிலிருந்து விரிந்துவழியும் இலைகளின் மட்டைகள்போல இருபுறமும்
அமைக்கப்பட்ட சிறிய சாலைகள் அதில் வீடுகள், பங்களாக்கள், குட்டி அரண்மனைகள். எல்லம்.
. இதுதான் எங்கள் வீட்டு பீச் எனக் காட்டிக்கொள்ள எல்லோருக்கும் கொஞ்சம் கடலும் மணலும்.
உலகின் மிக விலையுர்ந்த நிலப்பரப்பாக வர்ணிக்கப்படும் இந்தப் பகுதியில் உலக பணக்கார்கள்
பட்டியலில் இருப்பவர்கள் வீடுவாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நமது பாலிவுட் கான்களுக்கு
கூட வீடுகள் இருக்கிறது. தீவின் இறுதியில் ஆடம்பர ஹோட்டல்கள். ஹெலிபேட் வசதிகளுடன்.
இவற்றை நகருடன் இணைக்கும் மோனோ ரயில்.
அட்லாண்ட்டிஸ்
தி பாம் என்ற அந்தப் பெரிய கட்டிடத்தின் நடுவில் ஒரு மாளிகையின் விதானத்தின் வடிவில்
வெற்றிடத்துடன் ஒரு பிரம்மாண்ட ஹோட்டல். கனவுலகமாக அதன் வரவேற்பு கூடம் உள் அலங்காரங்களினால்
ஜொலிக்கிறது
இப்போது
துபாயில் வெளிநாட்டவர்கள் நிலம்வாங்கி கட்டிடம் கட்டி தங்கள் தொழில்களைக் கொண்டுவர
வரவேற்கிறார்கள். இதற்காகப் பலவிதமான சலுகைகள். உலகின் பல நிறுவனங்கள் இந்த சலுகைகளைப்
பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நமது இன்போஸிஸ், டாடா, டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள்
மிகப்பெரிய அளவில் கட்டிடங்களில் முதலீடு செய்து பரவிக்கொண்டிருக்கிறார்கள்.
Knowledge city என்ற பகுதியில் உலகின் பிரபல யூனிவர்சிட்டிகளின் கல்லூரிகள். நமது பிட்ஸ்,
எஸ் பி ஜெயின் மேனேஜ்மென்ட் கல்லூரிகளும் இருக்கின்றன.
2020க்குள்
துபாயை உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் மிக மும்மரமாக இயங்குகிறது. ஹாலிவுட்டில்
யூனிவர்சல் சினிமா நகரம் இருப்பது போல நமதுபாலிவுட் நகரம் பல சினிமா செட்டுகளுடன் தயாராகிறதாம்.
நேரம் இல்லாதால் பார்க்க இயலவில்லை.
இறுதிக்கட்டமாகப்
பஸ்சில் பாலைவனத்தின் ஒரு மூலைக்கு அழைத்துச்சென்று அரேபிய பாலைவன வாழ்க்கையை சாம்பிள்
காட்டுகிறார்கள்:. கண்ணுக்கெட்டிய தூரம்வரை பறந்து கிடக்கும் மணல் வெளியில் தார் இடப்படாத
சாலை. வால்வோ பஸ்ஸே திணறும் அளவு மேடு பள்ளங்கள். சாலையின் குறுக்கே ஓடிய மான்கள்.
ஆம்! இந்த இடத்தில் இந்த வெப்பம் மிகுந்த பாலைவனத்தில் மான்கள்:.!
தொலைவில்
மணற்கோட்டையின் உள்ளே ஹோட்டல். விருந்தினரை வாசலிலேயே ஒரு கூடாரத்தில் வரவேற்று அரபியா
காபி கொடுத்தார்கள். ஒரு வளைந்த நீண்ட மூக்குடன் இருக்கும் பெரிய கெட்டிலிலிருந்து
கொஞ்சுண்டு ஒரு சின்ன --மிகவும் சின்னக் கப்பில் கொடுத்தார்கள். அவ்வளவுதான் சாப்பிட
வேண்டுமாம். சுவை தெரிவதற்குள் விழுங்கி விட்டதால் எப்படியிருந்தது எனச் சொல்லத்தெரியவில்லை.
ஒட்டக சவாரி, குதிரைச் சவாரிகளில் ஒரு சுற்று வரலாம் மணற்தரையில் போடப்பட்டிருக்குக்
திண்டுகளில்; சாய்ந்து கார்ப்பெட்டில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டு பார்த்த அழகான
சூர்ய அஸ்தமனம் இப்போதும் நினைவில் நிறைந்திருக்கும் காட்சி
மாலை
மயங்கியவுடன், பாதைகளில் தீவட்டிகள் ஏற்றப்படுகிறது. ஏதோ சினிமா செட் போல ஆகிவிட்டது
அந்த இடம், இரவு பார்ட்டிக்கு தயாராகிறதாம். குளிர் நம்மைத் தொட ஆரம்பித்தவுடன் நகருக்கு
திரும்பச் செல்ல அழைக்கிறார்கள். திரும்பும் நம்மை மின் விளக்குகளில் மிதந்து கொண்டிருக்கிறக்கும்
துபாய் ஆச்சரியப்படுத்துகிறது. பெரிய சிறிய எல்லாக் கட்டிடங்களிலும் வெளிப்புறத்தில்
விளக்குகள். ஈச்சமரங்கள் எல்லாம் மின்விளக்கு புடவை உடுத்திக்கொண்டிருக்கின்றன. முக்கிய
சந்திப்புக்களின் பாதைகளில் வண்ண மின்விளக்கு பார்டர்கள். இவர்களுக்கு மின்சாரம் என்பது
உற்பத்தி செலவு மட்டுமே அவசியமான கச்சாப்பொருளான எண்ணையை ஆண்டவன் அள்ளிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்
அதனால் தண்ணீராக – கடல் தண்ணீராக- செலவழிக்கிறார்கள். .
மறு
நாள் காலையில் சென்னை திரும்ப விமான நிலையத்துக்கு வந்துகொண்டிருந்தபோது நண்பர் பார்க்கதவறிய
மிராகள் கார்டன் போன்ற இடங்களையும் நண்பர் குழுக்களையும் பட்டியிலிட்டார்.அடுத்தமுறை
மேலும் சிலநாட்கள் தங்கும்படி திட்டமிட்டு வாருங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது
விமான நிலைய நுழை வாயிலில் தெரிந்த வாசகம்.
Tomorrow never stops exploring
“நாளை
நமதே” என்பதுதான் எவ்வளவு நம்பிக்கையைத் தரும் வாசகம்
( இந்தப் பயணம் நிறைந்தது)