30/6/18

பாரதி : கவிஞனும் காப்புரிமையும் - புத்தக அறிமுகம்

-
 ந்த  இதழ் புதிய தலைமுறை இதழிலின் புத்தக அறிமுகத்தில் எழுதியது


உலக இலக்கிய வரலாற்றில் தமிழகத்தில்தான் முதன்முதலாக ஒரு படைப்பாளனின் எழுத்துக்கான பதிப்புரிமை அரசுடைமை செய்யப்பட்டு, பிறகு பொதுவுடைமை ஆக்கப்பட்டது. காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, இரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்ட எவருடைய எழுத்துகளுக்கும் கிடைத்திடாத இந்தத் தனிப்பெருமை மகாகவி பாரதியின் எழுத்துக்குத்தான் கிடைத்தது.

ஆனால் அந்தப்பெருமை அவ்வளவு  எளிதில் கிட்டிவிடவில்லை. இதற்காக நடந்த முயற்சிகள் அதன் மூலம் நிகழ்ந்த மாற்றங்கள், ஏமாற்றங்கள், வழக்குகள் அரசு எடுத்த நிலைப்பாடு அனைத்தையும் வரலாற்று ஆவணங்களின் துணைகொண்டு தான் சார்ந்த வரலாற்றுத்துறைப் பார்வையுடன் இந்நூலை  முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி மிக அருமையாக எழுதியுள்ளார்
.
மகா கவியின் படைப்புகள் நாட்டுடமையானது குறித்து வழங்கி வரும் பலவித கதைகளைக் கேட்ட நமக்கு இவர் துல்லியமான தரவுகளுடன் உண்மை வரலாற்றை விவரிக்கிறார்.
மகாகவி பாரதி தான் வாழ்ந்த காலத்தில் வெளியான அவரது படைப்புகள் வெகுகுறைவு. பாரத ஜன சபை எனும் காங்கிரஸ் இயக்க வரலாற்றைப் பற்றிய மொழிபெயர்ப்பு ஒன்றுதான் வெளியாகியிருக்கிறது.
 பாரதி வாழ்ந்த காலத்தில் அவரது பாடல்களுக்கு இருந்த சமூக, அரசியல் மதிப்பைவிட அவரது காலத்துக்குப் பிறகு சுதந்திரப் போராட்டம் உச்சம் பெற்ற காலகட்டத்தில்தான் பல மடங்காக உயர்ந்தது அதனால் அச்சிட்ட புத்தகங்கள் அதிகம் வரத்துவங்கியது. அப்படி பதிபிக்கபட்ட பாரதியின் படைப்புகள் பொதூடமையாக்கப் படுவதற்கான் தேவை எப்படி எழுந்தது என்பதை நிகழ்வுகளின் காலபோக்கோடு விவரிக்கிறார் நூலாசிரியர். சில இடங்களில் தரவுகளாகச் சுட்டிகாட்டபடும் ஆவணங்களும், கடிதங்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கின்றன
.
மஹாகவியின் மனைவி அவரது மகளின் திருமணத்துக்காக அவரது படைப்புகளின் உரிமையை அடகு வைத்திருக்கிறார். அதுவும் யாரிடம் தெரியுமா?. கவிஞரின் தம்பி விஸ்வநாதய்யரிடம். . இதைவிட அதிர்ச்சியான செய்தி அந்தக் கடன் திருப்பிச் செலுத்தபடாததால் உரிமை அவருக்குச் சொந்தமாகிவிடுகிறது.
 அவர் பாரதி பிசுரலாயம் என்ற பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிலையில் 1928ல் அன்றை அரசு பாரதி நூல்களுக்குத் தடை விதிக்கிறது. விற்பனையைப் பாதிக்கிறது. காங்கிரஸ்காரர்களின் போரட்டங்களுக்குபின் தடைவிலக்கப்படுகிறது. புத்தகங்கள் பரபரப்புடன் விற்க துவங்கின. இந்தக் கட்டத்தில் ஒரு குழுவினர் பாரதியின் படைப்புக:ள் ஏன் ஒரு தனிநபரிடம் இருக்க வேண்டும் அதை அரசுடமையாக்க வேண்டும் என்ற கருத்தை முன்னெடுக்கின்றனர். அந்தக் கருத்தாக்கம் மெல்ல பாரதிக்கு விடுதலை என்ற அமைப்பாக உருவாகிறது. எழுத்தாளர்கள் மாநாடு, பாரதி மணிமண்டப விழா போன்ற மேடைகளில். விவாதிக்கபடுகிறது மக்களிடம் அந்தக் குழுவின் கோரிக்கை வலுப்பெறுகிறது.

இதே காலகட்டத்தில் எழுந்த ஒரு வழக்கு பாரதியின் படைப்புகள் நாட்டுடமையாக்கப்பட வேண்டியதின் அவசியத்தை அதிகப்படுத்தியது. பாரதியின் பாடல்களை இசைதட்டாக்கும் உரிமையை 1934 ஆம் ஆண்டு விஸ்வநாத அய்யர் ஒரு நிறுவனத்துக்கு விற்றிருந்தார். அவரிடம் சினிமா தயாரிப்பாளார் ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கியிருந்தார்
.
டி.கே.சண்முகம் அவர்கள் நாடகத்துறையில் முன்னோடி. அவ்வை சண்முகம் என்று பரவலாக அறியப்பட்ட அவரின் நிறுவனமே தமிழகத்தின் முதல் சமூகப் படமான மேனகையைத் தயாரித்தது. அவர்கள் உருவாக்கிய ‘பில்ஹணன்’ எனும் நாடகத்தைத் திரைப் படமாக்க முனைந்தபோது, பாரதியின் கண்ணன் பாட்டில் வரும், ‘தூண்டில் புழுவினைப் போல் - வெளியே, சுடர் விளக்கினைப் போல், நீண்ட பொழுதாக - எனது நெஞ்சம் துடித்ததடீ!’ எனும் பாடலைத் திரைப்படத்தில் இணைத்திருந்தார்.
ஏ.வி.மெய்யப்ப செட்டியார். தன்னிடம் இருக்கும் பாடல் உரிமையைப் பயன் படுத்தினால் இழப்பீடாக ஐம்பதாயிரம் தர வேண்டும் என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். பல ஆண்டுகளாகப் பாரதியின் பாடல்களைத் தன் நாடகத்தில் பயன்படுத்திக்கொண்டிருந்த டிகே சண்முகம் வழக்கை எதிர்கொள்ளத் தயாரானார். இந்தப் புத்தகத்தில் விவரிக்கபட்டிருக்கும் அந்த வழக்கில் ஏற்பட்ட ஒரு திருப்பம் பலர் அறியாதது.
ஒரு புறம் மக்களின் கிளர்சி மறுபுறம் ஒரு வழக்கு என்பதால் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது. அப்போது எடுத்த முடிவுதான் பாரதியின் படைப்புகளை நாட்டுடமையாக்குவது. எந்த முன் மாதிரியும் இல்லாத, உலகில் எந்த அரசும் செய்யாத விஷயம் ஒரு படைப்பாளியின் உரிமையை அரசு வாங்குவது என்பது நிகழ்ந்தது. பாரதியின் எழுத்துகள் அரசுடைமை ஆக்கப் பட்டதாக கல்வி அமைச்சர்  அவினாசிலிங்கம் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டசபையில் அறிவித்தார்.

இதுவரை நிகழ்ந்தையும், மகாகவி பாரதியின் படைப்புகளைப் பொது வுடைமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, வேகமாக வலுப்பெற்று, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறிய நீண்ட கதையை அரசின் அறிவிப்புக்குப் பின்னரும் அரசு இயந்திரத்தின் மெத்தனத்தால் 8 ஆண்டுகளுக்குப் பின்னரே !  பாரதியின் எழுத்துகள் அவன் விரும்பியபடி  தீப்பெட்டி, மண்ணெண்யை விட மலிவாகக் கிடைத்தது என்பதைச் சொல்லும் அரிய ஆவணம் இந்தப் புத்தகம்.



19/6/18

நிஜ நாயகன் நிழல் வில்லன்





இரண்டாண்டுகளுக்கு முன் சென்னையைச் சீரழித்த பெருமழை வெள்ளத்துக்கு சில நாட்களுக்குப் பின் நண்பர் ஒருவருக்கு ஒரு போன் அழைப்பு. “உங்கள் பகுதியிலிருந்து உதவி கேட்டு ஒர் கடிதம் வந்திருக்கிறது. நீங்கள் சென்று பார்த்து உண்மையாக இருந்தால் நீங்கள் சார்ந்திருக்கும் தொண்டு நிறுவனம்மூலம் உதவுங்கள். ஆகும் செலவை நான் நன்கொடையாகத்தருகிறேன்.” நண்பருக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, மகிழ்ச்சி. காரணம் போனில் பேசியவர் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நானாபடேகர். நண்பருக்குச் சில மாதங்களுக்கு முன் மும்பையில் ஒரு ஷேர் டாக்சி பயணத்தில் கிடைத்த அறிமுகம் தொடர்ந்து நட்பாக மலர்ந்திருந்திருந்தது.
உதவியைக்கோரிய அந்த வேண்டுகோள் உண்மையானது என்பதால் நண்பரின் குழு அந்தப் பணியைச் செய்கிறது. செலவிடபட்ட கணிசமான பணத்தை விடக் கூடுதலாகவே தன் நன்கொடையை இந்த விஷயம் மீடியாவுக்கு போக வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் அனுப்புகிறார் நானா படேகர்.
இந்திய சினிமாவின் முன்னணிக் கலைஞர்கள் பலர் அவ்வப்போது தொண்டு நிறுவனங்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தன் வருவாயில் பெரும் பகுதியை(70%) எந்த ஆர்பாட்டமும் இல்லமல் நன்கொடையாக வழங்கிக்கொண்டிருப்பவர் நானா படேகர் மட்டும் தான்

எந்த இந்திய மொழிப் படமானாலும் ஹீரோவைவிட வலிமையானவராகப் படைக்கப்பட்ட வில்லனுடன் போராடி ஹீரோ ஜெயிக்கும் படங்களில் அந்த வில்லன் தன் நடிப்பால் மக்களின் மனதில் தனியிடம் பிடித்துவிடுவார். அவரது நெகட்டிவ் கேரக்டர் கொண்டாடப்படும் அளவுக்குப் பேசப்படும். படம் ஹிட்டாவதற்கு அவரும் ஒரு காரணமாக அமைந்துவிடுவார். ரசிகர்களால் போற்றப்படுவார்.
இன்றைய சூப்பர் ஹிட்டான ரஜனியின் “காலா” வில் வில்லானக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் நானாபடேகர் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். ஏராளமான பாலிவுட் படங்களில் ஹிரோவாக, வில்லனாக, மட்டுமில்லாமல் முக்கியப்பாத்திரங்களிலும் நடித்துத் தனியிடத்தைப்பிடித்து தக்க வைத்துகொண்டிருப்பவர்

“உணர்வுகளை வெறும் வசன்ங்களில் கொண்டுவர முடியாது. முக அசைவு, உடல்மொழியில் தான் அவற்றை வெளிகாட்டும் கலைஞதான் மக்கள் மனதில் இடம்பிடிப்பார்கள்” என்று சொல்லும் நானா மராத்தி, இந்தி, கன்னடம், தமிழ் எனத் தனது நடிப்பின் எல்லயை உலகிற்கு புரிய வைத்து., இதுவரை 3 தேசிய விருதுகளையும் பல பிலிம் ஃபேர் மற்றும் சர்வதேச விருதுகளையும் பெற்றவர்.
சினிமாவிற்காக நானாவான விஷ்வநாத் படேகர் கடந்து வந்தது மிகக்கடுமையான பாதை. ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்திறந்தாலும் பள்ளிப்பருவம் அவருக்கு இனிமையானதாக அமைய வில்லை. தந்தையின் துணிவியாபாரத்தில் அவரது பார்ட்னர் ஏமாற்றியதால் ஒரே இரவில் ஏழையாகிப் போனது அவரது குடும்பம். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே குடும்பத்துகாகப் பகுதி நேர வேலை செய்து பள்ளிக்குப் போனவர்.அப்போது செய்த வேலை சினிமா போஸ்டர் ஒட்டுவது. அதிலிருந்து எழுந்தது தான் நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் வெறி எல்லாம். ஆனால் பாலிவுட் இவரை உடனே ஏற்க வில்லை. உயரம், கருப்புநிறம். முகம் எடுப்பாகயில்லை.ஹிந்தி உச்சரிப்பில் அதிக மாராட்டிய வாசனை போன்ற பல காரணங்கள் சொல்லி நிராகரிக்கப் பட்டவர். பின்னாளில். இது அனைத்துமே இவரது தனித்துவமாகப் பாரட்டப்பட்டது வேறு விஷயம்
.
தனக்குப் பிடித்த ஒவியத்தில் பட்டம் பெற ஜே ஜே காலேஜ் ஆப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். ஆனால் தொடர்ந்து படிக்கப் பணமில்லை.மாரத்தி நாடகங்களில் நடித்துக்கொண்டே
சினிமா வாய்ப்புடன் வேலையையும் தேடிக்கொண்டிருந்தார். உனக்கு என்ன தெரியும்? எனக் கேட்டவரிடம் தன் ஓவியத்திறமை நம்பி ““பெயின்ட்டர்” (டிராயிங் ஆர்டிஸ்ட் என்று சொல்லதெரியாதால்) என்ற சொன்னவருக்குக் கிடைத்த வேலை ரோடுகளில் மக்கள் கடக்கும் போடுகளை பெயிண்டால் போடும் வேலை.
70களின் பிற்பகுதியில் நானா படேகர் தனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பில் தன் திறமையை நிருபித்ததால் கிடைத்த வாய்ப்புகளைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் தன் இடத்தைப் பிடிக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். முதன் முதலாக வில்லன் மற்றும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர்களுக்கும் கோடிகளில் சம்பளம் கொடுக்கலாம் என்ற ட்ரெண்டை ஆரம்பித்து வைத்தவர் நானா படேகர்.
.
அதிக அளவில் பணமும் புகழும் சேர்ந்தாலும் மிக எளிமையான வாழ்க்கைமேற்கொண்டவர். கோடிகளில் சம்பாதித்தாலும் தன் அம்மாவுடன் ஒரு சிங்கள் பெட் ரூம் பிளாட்டில் வசிப்பவர். தன் வாழ்க்கையில் சந்தித்த வலியையும், துயரங்களையும் மறக்காமல் கஷ்டபடுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதை தன் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டவர். அவ்வப்போது பலருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்த இந்த மனிதரின் இந்தக் கருணை முகம் பெரிய அளவில் வெளிப்பட்டது சில வருடங்களுக்கு முன்னர் மஹாராஷ்டிர மாநிலம் பெரும் வறட்சியை சந்தித்தபோது தான். விவசாயம் பொய்க்கவே ஏரளமான விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொண்டபோது தான். நானாப்டேகர் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்த அதிர்ந்து போனார். உடனடியாகத் தன் சொந்தப்பணத்திலிருந்து இறந்த 62 விவசாயிகளின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் 15000 ரூபாய் அன்றே கொடுத்தார்.


"தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டால் உடனே என்னை அழையுங்கள்.... உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் நான் தீர்த்து வைக்கிறேன்...... உயிரை மட்டும் விட்டு விடாதீர்கள்...... நீங்கள் தான் இந்த நாட்டின் சொத்து"
விவசாயிகளுக்கு மத்தியில் அன்று பேசிய நானா படேகர் கூறிய வார்த்தைகள் இவை. இதை வெறும் மேடைப்பேச்சாக இல்லாமல் இதற்கான பணிகளைத் தொடர்ந்து இதைச் சிறப்பாகசெய்ய “ நாம் என்ற அமைப்பை உருவாக்கி நன்கொடைகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
துவக்க நாளிலே கிடைத்த பணம் 80 லட்சம். சில நாட்களில் சில கோடிகளைத்தொட்டது. இன்று அந்த அறக்கட்டளை கிராமங்களில் விவசாயிகளுக்கு வேலை, குளங்கள் தூர் வாருதல் போன்ற பல சமூகப்பணிகளை சிறப்பாகச் செய்கிறது. பல நேரங்களில் நானாவே நேரடியாகக் கிராம சபை கூட்டங்களில் குறைகள் கேட்டு உதவிகளைத் திட்டமிடுகிறார்
.
விவசாயிகளுக்கு உதவுவது மட்டுமில்லாமல் விதவைகளின் மறுவாழ்வில் கவனம் செலுத்துகிறார். இன்று மஹராஷ்டிர கிராமங்களில் அரசியல் வாதிகளைவிட பிரபலமான இவர் ஒரு கட்சி துவங்கி அரசியிலுக்கு வந்தால் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவது உறுதி. ஆனால் அதில் எனக்கு ஆர்வமில்லை என்கிறார்.
தான் செய்யும் எந்தப்பணியையும் அரப்பணிப்புடன் செய்பவர். நானா படேகர். அவரே எழுதி, இயக்கி நடித்த திரைப்படம் ப்ரஹார். இதில் நானா ஒரு ராணுவ வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நடிப்பதற்கென்றே இரண்டு ஆண்டுகள்வரை உண்மையாகவே ராணுவப் பயிற்சி எடுத்தார். இந்திய ராணுவத்தை சிறப்பாகக் காட்ட இப்படி இவர் செய்த நல்ல பணிக்காக இந்திய ராணுவத்தின் கெளரவ கேப்டன் ரேங்க் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

சினிமாத்துறையைச் சாரத நணபர்கள் பலர் இவருக்கு இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்கள்மூலம் பலருக்கு சத்தம் இல்லாமல் நிதியுதவிகளைச் செய்து வரும் நானா படேகர், இதுகுறித்து தனது பேட்டிகளில் கூடப் பதிலளிக்க மறுத்துவிடுவார்.

எந்தச் சந்தர்ப்பத்திலும் தன் மனதில் பட்டதை பட்டென்று வெளிப்படையாகப் பேசும் இவர் அதனால் கோபக்காரர் என்ற பெயரையும் பெற்றவர். அரசியல் வாதிகளையும், சிவ சேனா போன்ற அமைப்புகளையும் கூடக் கடுமையாக விமர்சனம் செய்தவர். பாஜகா பிரமுகர்கள் இருந்த கூட்டத்திலேயே நம் நாட்டில் ஜனநாயகம் வளர்ந்திருப்பதிற்பதற்கு காங்கிரஸ் காரணம் என்று சொன்னவர்.
993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட பாலிவுட் நடிகர் சஞ்செய் தத்திற்கு சர்ச்சைக்குரிய முறையில் பரோல் வழங்கப்பட்டபோது இம்மாதிரி செய்வது தவறு என்று துணிந்து சொன்ன ஒரே நடிகர் இவர்தான்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அனைவரும் வரவேற்றபோது, "ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது... அவரின் குணத்திற்கு அரசியல் அவர் புகழை இழக்க வைத்து விடும்" என்று சொன்னவர் நானா படேகர். காலாவில் வில்லன் ரோலை ஏற்க தயங்கிய அவரை ரஜினி சந்தித்து ஊக்குவித்து அதை ஏற்க செய்த நேரம் அது.

எழுத்தாளர், இயக்குனர், கவிஞர், சமூக ஆர்வலர், அரசியல் விமர்சகர் என்று பன்முகம் கொண்ட கலைஞர் நானா படேகர். மொழி என்ற எல்லைக்கு அப்பாற்பட்டு தன் பயணத்தைத் தொடங்கிநடிகன் என்ற இடத்திலிருந்து நல்ல மனிதன் என்ற பெயருடன் மக்கள் மனங்களில் அமர்ந்திருக்கிறார். இந்த உயரத்தை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் எட்டியதில்லை
.
படத்தில் ஹீரோவாக வாழும் பலர் நிஜவாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில்லை ஆனால் பல படங்களில்,வில்லனாகவே முன்னிறுத்தபட்டிருக்கும் நானா படேகர் நிஜத்தில் ஹீரோவாகவே பல குடும்பங்களைக் காப்பற்றி வருவது ஒர் ஆச்சரியமான உண்மை




12/6/18

சோழனைக் காப்பாற்றிய வேல்

10 நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழனின் திறன்மிகு கட்டிட கலைக்குச் சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோவில் அந்நியர் படையெடுப்பு, இயற்கை பேரிடர்கள், அண்மைகால அரசியல் வாதிகளின் “அரசியல்”, போன்ற பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. காலத்தின் சாட்சியாகக் கம்பீரமாக நிற்கும் இந்தத் தஞ்சை பெரிய கோவில் அண்மையில் சந்திருக்கும் ஆச்சரியம் அங்கிருந்து மாயமாக மறைந்த மன்னர் ராஜராஜன், மற்றும் அரயின் ஐம்பொன் சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் நிறுவபட இருப்பது தான்.


பல தமிழக கோவில்களில் அது உருவாகக் காரணமான மன்னர் பரம்பரையினர், எழுப்பிய சிற்பிகள் போன்ற விபரங்களைப் பார்க்க முடியாது. மாறாகத் தஞ்சைப் பெரிய கோவிலில் அதைத் திட்டமிட்ட பொறியாளார். தலமைச் சிற்பி, பலதுறைகளில் உதவியவர்களின் பெயர்கள் கல்வெட்டுகளாகக்  கோவிலிலேயே இருக்கிறது.

உள்ள உலகப் புகழ் பெற்ற பெரிய கோயில் எனப்படும் பெருவுடையார் கோயிலில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அக்கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், அந்தக் கோயில் அதிகாரியாக இருந்த தென்னவன் மூவேந்த வேளாண் என்பவரால், ராஜராஜன் சோழன் மற்றும் அவரது பட்டத்தரசி உலகமாதேவியார் ஆகியோருக்கு அவர்கள் உயிருடன் இருக்கும்போதே ஐம்பொன் சிலைகள் உருவாக்கப்பட்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்தன.ராஜராஜன் இறந்த பிறகு அவற்றோடு குத்துவிளக்கு, விபூதி மடல் இவைகளையும் செய்து வைத்தார்அதிகாரி. இந்தக் தகவல்களை அனைத்தையும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயி லின் மேற்கு திருச்சுற்றில் உள்ள கல்வெட்டு சொல்லுகிறது.

எப்போது இந்தச் சிலைகள் காணமல் போனது தெரிந்தது.?

ராஜராஜன் லோகமா தேவி சிலைகள் 1900 வரை பிரகதீஸ்வரர் கோயிலில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு அங்கிருந்து கடத்தப்பட்டு புதிய சிலை ஒன்றை செய்து, அதன் பீடத்தில் ‘பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா’ என்று பெயர்வெட்டி வைத்து விட்டார்கள். கடத்தப்பட்டது ராஜ ராஜன் சிலை கூட என்பது தெரியாமல் ராஜேந்திர சோழன் பெயரை வெட்டி இருக்கிறார்கள்.

.எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தஞ்சை பெரிய கோயிலில் இப்போதுள்ள ராஜராஜன் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் வழங்கியது. அதை அணிவிப்பதற்காகப் பிரதமர் இந்திரா காந்தியை தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அதுசமயம், தஞ்சை கோயிலில் இருப்பது ஒரிஜினல் ராஜராஜன் சிலையே இல்லை என்று ஆதாரத்துடன் சர்ச்சையைக் கிளப்பினார் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத் தின் வெளியீட்டு மேலாளராக இருந்த தொல்லியல் ஆர்வலர் குடவாயில் பாலசுப்பிரமணியன். அப்ப்போது தெரிந்த விஷயம் தான் ஒரிஜனல் ராஜராஜனும் ராணியும் காணாமல் போய்விட்டார்கள் என்ற விஷயம். இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களின் படி இந்த ஐம்பொன் சிலைகள் தான் 50 ஆண்டுகளிக்கு முன்னரே காணமல் போயிருக்கிறது



அரசனும் அரசியும் எங்கே போனார்கள்?

அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் ஃபவுண்டே ஷனுக்குச் சொந்தமான ‘காலிக்கோ’ மியூசியத்தில் வைக்கப்ட்டிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சோழர்கால செப்புச் சிலைகளில் இந்த ராஜராஜன் - லோகமாதேவி சிலைகள் இருக்கிறது என்ற செய்தி கசிந்தது. அது உண்மையானதுதானா என்ற விவாதமும் எழுந்தது. அந்த நிலையில் டெல்லி நேஷனல் மியூசியத் தின் டைரக்டர் ஜெனரலாக இருந்த சி.சிவமூர்த்தி 1963-ல், அவர் எழுதிய தென் இந்திய செப்புச் சிலைகள்குறித்த ஒரு நூலில் சாராபாய் மியூசியத்தில் இருப்பது ராஜராஜன் சிலைதான் என்பதை தெளிவுபடுத்தினார். 1983-ல் டெல்லியில், அணிசேரா நாடுகள் கூட்டம் நடந்தபோது, டெல்லி நேஷனல் மியூசியம் இந்தியாவின் அரிய செப்புச் சிலைகள்பற்றி, ‘The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அதில், ‘காலிக்கோ மியூசியத்தில் உள்ளது ராஜராஜன் - லோகமாதா சிலைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார் முனைவர் தொல்ப்ருள் அறிஞர் நாகஸ்வாமி

மீட்கும் முயற்சிகள்



இருக்குமிடம் தெரிந்து விட்டதால் ராஜராஜனை மீட்டுவர அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் பிரதமர் இந்திரா மூலம் முயற்சி எடுத்தார். ஆனாலும்  சொல்லதக்க முன்னேற்றம் எதுவுமில்லை

.

தொடர்ந்து இந்தச் சிலைகளை மீட்க திமுக ஆட்சிக் காலத்தில் சுற்றுலாத்துறை செயலர் இறையன்பு, தொல்லியல் துறை இயக்குநர் டாக்டர் நாகசாமி, தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், அப்போதைய அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் முதல்வர் இருந்த நரேந்திர மோடியும் ராஜராஜன் சிலையைத் தமிழகத் துக்கு மீட்டுக் கொடுப்பதில் ஆர்வமாக இருந்தார். குஜராத் அரசுச் செயலாளராக இருந்த வெ.இறையன்புவின் சகோதரர் திருவாசகம் மற்றும் அங்கிருந்த தமிழகத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அத்தனை பேரும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டினர். ஆனாலும், ராஜராஜனை தமிழகம் கொண்டுவரமுடிய வில்லை. அருங்காட்சியம் அசைய வில்லை. பல்வேறு காரணங்களைக் கூறி தர மறுத்துவிட்டது.

ஆச்ரியப்படுத்திய ஒர் ஆவணம்

.

அவர்கள் சொன்ன காரணங்களில் முக்கியமானது ஒரு முக்கியமான காரணம் இது ராஜராஜனின் சிலை என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பது தான். அதற்கு அவர்களிடமிருக்கும் வலுவான சாட்சியம். அந்த அருங்காட்சியகத்திலிருக்கும் சிலைகளுக்கென்று அவற்றின் வரலாற்றைச் சொல்லும் கேட்லாக். அதில் அது ராஜாராஜின் சிலை இல்லை என்று பதிவு செய்யபட்டிருந்தது.தான். ஒரு தனியார் கேட்லாக்கில் சொல்லபட்டிருப்பதால் ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் என்ன? இங்குதான் எழுந்தது ஒர் அதிர்சியான ஆச்சரியம். ஒரு சர்வ தேச் கூட்டத்தில் வாசித்தளித்த ஒரு பேப்பரில் அந்தச் சிலை ராஜராஜன் தான் என்று சொன்ன திரு நாகஸ்வாமி தான் அந்தக் கேட்லாக்கை தயாரித்தவர். ஏன் இப்படி எழுதியிருக்கிறார்? என்பது இன்றுவரை புரியா மர்மங்களில் ஒன்று. தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சிலையை மீட்டுவர சென்றிருந்த தமிழக குழுவினரிடம் காலிக்கோ மியூசியத்தின் தலைவரான கிரா சாராபாய், ‘இது ராஜராஜன் சிலைதான் என்றுநிருபிக்கபட்டால் மட்டுமே சிலையைத் தர முடியும் என்று சொல்லிவிட்டனர். ஏமாற்றத்துடன் திரும்பியது குழு

.

கால வெள்ளத்தில் மக்களும் அரசும் மறந்துபோன் பல விஷயங்களில் இதுவும் ஒன்றாகக் கரைந்து போயிற்று. மன்னர் ராஜராஜன் தன் மனைவியுடன் அந்த ஆருங்காட்சியகதிடின் கண்ணாடிச் சிறைக்குள்ளேயே காலத்தைக் கழித்துகொண்டிருந்தார்.

கைகொடுக்காத தீர்ப்பு

இந்த நிலையில் தான்,தமிழக இந்து சமய அற நிலையத்துறை முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில்ஒரு பொதுநல வழக்கைத் தொடர்ந்தார். அன்றைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன். மனுவை விசாரித்தனர். இறுதியில் நீதிபதிகள், ‘‘விலை மதிக்க முடியாத பழங்கால சிலைகள் வெளி மாநிலத்தில் இருந்தால், அவற்றை மீட்டு கொண்டு வருவது தமிழக அரசின் கடமை நீதிமன்றம் நேரடியாக அருங்காட்சியகத்துக்கு உத்திரவிட முடியாது.மனுதாரர் தமிழக அரசை மீண்டும் அணுகி இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும். என்று  மனுவைப் பொதுநல வழக்காகக் கருத முடியாது’’ எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.

.தமிழக அரசு நீதிமன்ற ஆணைப்படி காணமல்போனாதாக்ச்சொல்லப்படும் சிலைகளைக் கண்டுபிடிக்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு உத்திரவிட்ட்து., அவர் அப்பிரிவின் டிஎஸ்பி வெங்கட்ராமனை முதல் கட்ட விசாரணை நடத்த நியமித்தார். அதன்படி, டிஎஸ்பி வெங்கட்ராமன் தலைமையிலான குழுவினர், அண்மையில் பெரிய கோயிலில் நடத்திய ரகசிய விசாரணையில், இரண்டு சிலைகளும் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், மாமன்னன் ராஜராஜ சோழனால், பெரிய கோயிலுக்கு வழங்கப்பட்டதாகக் கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 68 சிலைகள் பெரும்பாலானவை இங்கு இல்லாமல் போனதும், பல முறைகேடுகள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்ததும் தெரியவந்தது. இந்தச்சிலைகளை கோயிலில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலர், தஞ்சையில் உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரி மூலமாகச் சென்னைக்குக் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கௌதம் சாராபாய் என்பவருக்குக் கோடிக்கணக்கான ரூபாய்க்கு இரு சிலைகளையும் விற்கப்பட்டது தெரியவந்தது.

அதிரடி  மீட்பு

உடனே செயலில் இறங்கினார் பொன்மாணிக்கவேல். கிராமங்களுக்குத் தானே நேரில் சென்று இந்தச்சிலைகளை நேரில் பார்த்தவர்களை தேடினார். இரண்டு 80 பிளஸ் பெரியவர்கள் கோவிலில் சிலைகளைப் பார்த்தவர். அவர்களில் ஒருவர் கோவில் பணியா

ற்றியவர். கல்வெட்டுகளில பழந்தமிழர் கணக்குமுறையில் சொல்லப்ட்ட உயர, பீடங்களின் அளவுகளை இன்றைய சென்டிமீட்டரில் கணக்கிட்டபோது அது சிலைகளின் அளவோடு பொருந்திப் போயிருந்தது.

கோவிலில் இருந்தது, திருடபட்டது, விற்கபட்டது, கல்வெட்டு சொல்லும் விபரங்களுடனும் தன் டீமுடனும் அஹமதாபாத் பறந்த ஐஜி அருங்காட்சிய அதிகாரிகளிடம் இந்த விபரங்களுக்குபின்னர்சிலை திருப்பித் தரப்படவிட்டால் தமிழக அரசுக்குச் சொந்தமான அவற்றை பறிமுதல் செய்வேன் என்றார். அதிர்ந்துபோன அருங்காட்சியகத்தினர் சிலைகளை கொடுக்கச் சம்மதித்தினர். உடனே அவைகளை

தம்முடன் ரயிலில் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணம் கொண்டு வந்தார். இவர் ரயில் பாதுகாப்பு ஐஜியாகவும் இருந்த்தால் வழக்கமான தாமதங்கள் அனைத்தும் தவிர்க்கப் பட்டன. தமிழகத்துக்கு கொண்டுவந்துவிட்டார். சென்னையில் மேள்தாளத்துடன் வரவேற்கபட்டசோழ மன்னரைச் சிதம்பரம் கோவிலில் பூஜித்தபின்னர் கும்பகோணம் கொண்டு வந்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்பட்டன. இந்த 2 சிலைகளையும் தஞ்சை பெரிய கோயிலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டிருக்கிறது, நீதிமன்றத்தின் இந்த உத்தரவினை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். பெருவுடையார் இனி தஞ்சை மாவட்டத்திலே பஞ்சம் நீக்கி அருள்பாலிப்பார் என்று விவசாயிகள் மகிழ்ச்சியுடன் சொல்வது “இனி காவிரியில் தண்ணீர் வந்துவிடும்”

இந்தச் சிலைகள் மீட்பை உலகின் பல பகுதிகளிலிருக்கு தமிழ் ஆர்வல்களும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

துணிவுடன் அதிரடி முடிவுகளை எடுத்து அதை செம்மையாகச் செயலபடுத்தும் பொன்மாணிக்கம் போன்ற அதிகாரிகளைத் தமிழகம் பெற்றிருப்பதற்காகப் பெருமயை அடைந்தாலும், தாங்கள் பதுகாக்கவேண்டிய அரிய  செல்வங்களை காசுக்காக  விற்ற அதிகாரிகளை நினைத்து வருத்தமும் வேதனையும் எழுவதைத் தவிர்க்க இயலவில்ல.



_______





தெய்வங்களைக் காக்க நீதி மன்றம் நியமித்த காவலர்

தூங்கிக்கொண்டிருக்கும் சில அரசுத்துறைகள் தலமை அதிகாரிகளின் மாற்றத்தால் சட்டென்று விழித்துக்கொண்டு பபரபுடனும் சுறு சுறுப்புடனும் இயங்கும். அப்படியான ஒன்றுதான் தமிழகப்போலீசின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் நடந்துகொண்டிருக்கிறது. வேறுபல மாநிலங்களில் இல்லாத இந்தப் பிரிவின் தலமைப் பதவி ஆளுவோரால் ஓரங்கட்டபட்ட அதிகாரிகளுக்காக ஒதுக்கபட்டது. திரு பொன்மாணிக்க வேல் தன் திறமையான, கண்டிப்பான அதிகாரியாகப் பெயர் எடுத்தவர், படிப்படியாக உயர்ந்து ஐஜியாகப் பதவி உயர்வு பெற்ற இவருக்குத் தரப்பட்ட போஸ்டிங் சிலகடத்தல் தடுப்பு பிரிவின் தலமை
.
செய்யும் தொழிலைத் தெய்வமாக நேசித்துச் செய்யும் பொன் மாணிக்க வேல் பதவி ஏற்றுக்கொண்டவுடனேயே தூசி படிந்து தூங்கிக்கொண்டிருந்த பைல்களை தேடி ஆராய ஆரம்பித்தார். . இவர் தலைமையிலான டீம், தமிழகக் கோயில்களில் திருடப்பட்ட 155 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை மீட்டது. சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் கடத்தப்படுவதையும் தடுத்திருக்கிறது. சிலைக்கடத்தல் பிரிவில் 33 வழக்குகளும் தமிழகம் முழுவதும் 455 வழக்குகளும் பதிவாகின. இதுவரை இந்தத்துறை இவ்வளவு வேகமாக இயங்கியதில்லை
.
சென்னையில் தீனதயாளன் என்ற முதியவர் சர்வ தேச கடத்தல் மன்னன் கபூருக்கு உதவியர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கைது செய்தார். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து தமிழக போலீஸ் பொன்.மாணிக்கவேலை ரயில்வே ஐ.ஜி-யாக மாற்றியது தமிழக அரசு. சிலைக்கடத்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘சிலைக்கடத்தல் தொடர்பான 19 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிப்பார். பிற வழக்குகளைச் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கும்’ என்று டிஜிபி உத்திரவிட்டிருப்பதாகச் சொன்னவுடன் நீதிபதி மிக் கோபமாக
நீதி மன்றம் 531 வழக்குகளைப் பொன்.மாணிக்கவேல் விசாரிக்க உத்தரவிடப்பட்ட நிலையில், எதன் அடிப்படையில் 19 வழக்குகளை மட்டும் அவர் விசாரிப்பதற்கு டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்தார்? என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் ஐ.ஜி-யாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கபட்டார்
.
இது இவர்மீது நீதி மன்றம் வைத்துள்ள நம்பிக்கையையும் நன்மதிப்பையும் காட்டுகிறது. அண்மையில் இவர் வெளிக்கொண்டுவந்த பழனி ஆண்டவர் கோவில் ஐம்பொன் சிலை மோசடியில் கைது செய்யபட்ட அரசியல் பின்புலம் கொண்ட ஒரு முன்னாள் அறநிலைத்துறை துணை ஆணயர் ஜாமின் மனு வழக்கில் தானே நேரில் ஆஜாராகி ஏன் ஜாமீன் வழங்கக் கூடாது? என்று நீதிபதியிடம் விளக்கினார்.
(புதிய தலைமுறையில் எழுதியது)

6/6/18

பழையகோவிலில் புதிய கடவுள்



அஹமதாபாத் நகரில் பிரமாண்டமான கோவிலைத் தலமையகமாக்கொண்டு இயங்கும் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான் என்ற அமைப்பு உலகின் பல நகரங்களில் ஸ்வாமி நாராயணன் கோவில்களை நிறுவி வருபவர்கள். இந்தக் கோவில்கள் அஹமதாபாத்திலும், டில்லியிலும் இருப்பதைப் போன்ற அக்ஷரதாம் ஒவ்வொரு நாட்டிலும்  மிக அழகாக வெளிர் ஆராஞ்ச் வண்ணத்தில் இந்திய சிற்ப, கட்டிட கலை மிளர அமைக்கபட்டிருக்கும்
.
ஓவ்வொரு இடத்திலும் செல்வச் செழுமையை பறை சாற்றும் இந்தக் கோவில்கள் முழுவதும் பிரமாண்ட சாண்டிலியர்கள், தானியங்கி கதவுகள், சன்னதியில் நீங்கள் நிற்கும் நேரம் மட்டும் தானே ஒலிக்கும் பிரார்த்தனை, லேசர் ஷோ, இசை நீருற்று என அமர்களபடுத்துவார்கள்.
இந்தியக்கோவில்களில் இரு புறமும் ஒலி ஒளி காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும் அவர்களின் முதல் குருவின் வாழ்க்கை கதையைப் பார்க்க அமைக்கபட்டிருக்கும் செயற்கை கால்வாயில் திரிலிங்கான படகுப் பயண வசதியும் இருக்கும். 3D  சினிமாக்கூட உண்டு 
.
இவர்கள் அமெரிக்காவில் ஏற்கனவே இதுபோல இருக்கும் கோவில்களைத் தொடர்ந்து இப்போது மேலும் சில புதிய கோவில்களை உருவாக்கிவருகிறார்கள் என்ற செய்தியில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் இவர்கள் அங்குள்ள பழைய சர்ச்களை வாங்கி அதைப் புதுப்பித்து ஸ்வாமிநாரயாணன் கோவில்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் ஆச்சரியம்.
கலிபோர்னியா, கென்டகி மாநிலங்களில் உள்ள இரண்டு நகரங்களில் சர்ச்களில் ஸ்வாமி நாரயணனைக்குடியமர்தியிருப்பதைப் போல அண்மையில் அமெரிக்காவின் டெலவேர் என்ற மாநிலத்தில் பேர் (bear) என்ற நகரில் ஒரு 50 ஆண்டு பழமையான சரச்சை வாங்கி வினாயகரை பிரதிஷ்டை செய்து கணபதி பூஜையுடன் கடந்த ஆண்டு புதுபிக்கும் பணியைத் துவக்கி இபோது முடித்திருக்கிறார்கள். இதற்கான கோபுர முகப்புகளும் விதானங்களும் இந்தியாவில் செய்து அனுப்பபட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் பயணம் செய்த இந்த அமைப்பின் தலைவர் புருஷோத்மபிரியதாஸ் ஸ்வாமிகள் அமெரிக்காவில் பல நகரங்களிலும் ஸ்வாமி நாரயாண கோவில் அமைக்க ஆர்வம் கொள்ள வேண்டும் எனப் பக்கதர்களை கேட்டுகொண்டதின் விளைவாக முனைப்புடன் செயல்பட்ட பக்தர்கள் கண்டுபிடித்த விஷயம், பெரிய வழிபாட்டுக் கூடம் பலர் சாப்பிடும் வசதியுடன் இருக்கும் சமயலறையுடன் இருக்கும் இந்த சர்ச் விற்பனைக்கு வருகிறது என்பது தான்.

யேசு நாதர் வாழ்ந்த வீடாக இருந்தாலும் பரவாயில்லை அதை ஸ்வாமி நாராயணன் கோவிலாக மாற்ற ஆட்சேபணை இல்லையென இந்திய தலமை சொல்லிவிட மளமளவென எழுந்துவிட்டது கோவில்
இதுவரை செலவழித்திருப்பது 14 லட்சம் டாலர்கள். டெலவேர் மாநிலம் அமெரிக்காவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்று.  அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்ட முதல் மாநிலம் என்பதால் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும் மாநிலம். டெலவேரில் 800 இந்தியர்களே இருந்தாலும் நியூஜெர்ஸி, மெரிலான்ட், பென்ஸ்லிவேனியா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து இது ஒரு மணி நேரப்பயணம் என்பதால் அந்த பகுதிகளில் வாழும் அதிகமான இந்தியர்களிடையே பிரபலமாகிக்கொண்டிருக்கும் கோவில் இது.


மிகப்பெரிய நிலப்பரப்பை வாங்கி அதில் பிரமாண்டமாகக் கோவில்களை எழுப்பும் இவர்கள் இப்படி சர்ச்களை வாங்கி புதுபித்து இந்து கோவில்களாக மாற்றுவதற்கு காரணம் அமெரிக்க வழிபாட்டு தலங்களின் விதிகள் என்கிறார்கள். அமெரிக்காவில் எந்த மத்தினர் கோவில் போன்ற வழிபட்டுதலங்கள் அமைக்க அரசிடம் லைசென்ஸ் பெற வேண்டும். எந்தக்கோவிலாக இருந்தாலும் சர்ச் என்ற பெயரில் தான் அனுமதி வழங்கப்படும். சில மாநிலங்களில் இப்போது புதிய வழிபாட்டுதலங்களுக்கு அனுமதியில்லை. அதனால் சர்ச் அனுமதியிள்ள கட்டிட்டத்தை வாங்கி புதிப்பது என்ற அணுகு முறையை இவர்கள் கையாளுகிறார்கள்.

சரி ஏன் சர்ச்சுகளை அதுவும் 50 அல்லது 80 ஆண்டுகள் பழமையான சர்ச்களை விற்கிறார்கள்? சர்ச்களை விற்க முடியுமா?

அமெரிக்காவில் பல மாநிலங்களில் பல சர்ச்கள் எந்தவித கூட்டமைப்பின் கீழ் இல்லாமல் தனிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றவை. அந்த சர்ச்சும் அது சார்ந்த இடங்களுக்கும் அதன் தலைமைப் பாதிரியார் தலமையில் இயங்கும் குழுவினர்தான் உரிமையாளர்கள்.
அதிக அளவில் பிரார்த்தனை கூட்டங்களுக்கு மக்கள் வருவதில்லை. வருபவர்களுக்கு இவ்வளவு பெரிய இடம் அவசியமில்லை என்றும் உயர்ந்துவரும் இன்றைய நில மதிப்பினால் கிடைக்கும் பெரும் தொகையை அவர்களது கல்வி சமூகப்பணிகளுக்கு செலவிட முடியும் என்றும் காரணங்கள் சொல்லபடுகிறது. சமூக பணிகளுக்குச்செலவிட்டால் வரிவிலக்குகளும் இருக்கின்றன. என்ற காரணமும் சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகச் சர்ச்களுக்கு தனியார் கொடுத்துவரும் நன்கொடைகள் குறைந்து கொண்டே வருகிறது முன்போல் சர்ச் திருமணங்கள் என்பது இப்போதில்லை. பெரிய அளவில் இருக்கும் சர்ச்களை பராமரிக்க அதிகம் செலவாகிறது என்பதும் ஒரு காரணம் 80 சதவீத  அமெரிக்கர்கள் கடவுளை நம்புபவர்களாக இருந்தாலும் வார இறுதி விடுமுறை நாளை சர்ச்சில் கழிக்க விரும்புவதில்லி. 
.

சில ஆண்டுகளுக்கு முன் நியார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் சாலை சீரமைப்பு பகுதிக்காகப் பல தனியார் கட்டிடங்களை நகர நிர்வாகவம் வாங்கியதில் அந்ததெருருவிலிருந்த ஒரு பழைய சர்ச்சையும் வாங்கினார்கள்.  அதற்கு நகர நிர்வாகம் தந்த விலை பல பழைய சர்ச் நிர்வாகங்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது.
இப்போது அமெரிக்காவின் பல நகரங்களில் பழைய சர்ச்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோல்ட் வெல் என்ற பிரபல அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனம் பழைய சர்ச்கள் விற்பனைக்கென்றே ஒரு தனி இணைய தளத்தைத்துவங்கி சர்ச்சின் படங்களுடன் விளம்பரபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். இது பல மில்லியன் டாலர் பிஸினஸ் என்பதால் வேறுசில ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.




அதனால் இந்துக் கோவில்கள் தவிர தனிப்பட்டமுறையில் ஆசிரமங்கள் நடத்தும் அமெரிக்க வாழ் இந்தியர்களின் அமைப்பினர்களும் இந்த சர்ச்களை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
அமெரிக்க மக்களிடம் இந்த சர்ச் விற்பனைகளுக்கு மத ரீதியாகக் கூட எந்த எதிர்ப்பும் எழவில்லை. சொத்தின் உரிமையாளார்கள் அதை விற்கிறார்கள். என்ற ரீதியில் தான் பார்க்கிறார்கள். சர்ச்களை ச்ர்ச்சையில்லாமல் விற்றுகொண்டிருக்கிறார்கள்
 தீவிர மதபக்தியுள்ளவர்களில் சிலர் மட்டும் ஏற்கனவே சர்ச் வழிபாடுகள் குறைந்து வரும் இன்றைய நிலையில் இம்மாதிரி விற்பனைகள் இளைஞர்களுக்கு சர்ச்களை விட்டு விலகும் எண்ணத்தை அதிகரிக்கும் என சில நாளிதழ்களில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்
.
ஸ்வாமி நாரயணன் கோவில் நிர்வாகம் அமெரிக்காவில் மட்டுமில்லை இங்கிலாந்திலும் இரண்டு நகரங்களில் சர்ச்களை வாங்கி கோவில்களை நிறுவியிருக்கிறார்கள் என்ற செய்தி ஐரோப்பவிலும் மெல்ல இந்த பழைய சர்ச்களின் விற்பனை ஜுரம் பரவிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துகிறது
.
முன்பு இங்கு இருந்தது  யாராகயிருந்தால் என்ன? உலகெங்கும் நிறைந்திருக்கும் எங்கள் கடவுள் இப்போது இங்கு இருக்கிறார் என்பதைச்சொல்ல சர்ச்சாக இருந்த கட்டிடங்களையும்  ஏற்று  இந்து மதத்தின் பெருந்தன்மையை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள் ஸ்வாமி நாரயாயணன் ஸன்ஸ்தான்.