காலையில் காபி, பேப்பர், கிடையாது. இன்டர்நெட் செல்போன் அனுமதியில்லை. டிவி இல்லை.
பசியைத் தூண்டும் மணியோசைக்குப் பின்னர் காலை, மதியம் . இரவு அட்டவணைப்படி சாத்விக உணவு. இன்று காலை உணவு நண்பர் பெ.கருணாகரனின் பேவரிட்.
எப்படி ஒரே நாளில் மனமும் உடலும் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டது என்பது எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது
இங்கு நிலவும் சூழல் தான் காரணம் என நினைக்கிறேன். இந்த காட்டுப் பகுதியின் நடுவில் எழுப்பபட்டிருக்கும் சோலை.
பளீரெனத் தெரியும் இமயம், எங்கும் மரங்கள் மலர்கள் . செண்பக மாம்பூக்களின் மெல்லிய மணம் (தரையெல்லாம் மாவடுக்கள்) அமைதி எல்லாம்.இணைந்து எழுப்பும் அதிர்வுகள்
-
இயற்கைக்கு மனித மனங்களை இயக்கும் வலிமை இருப்பதை உணர்கிறேன். குறிப்பாக நிலவும் அமைதி. இங்கு பிரம்மச்சாரிகளும் ஊழியர்களும் பேசிக் கொள்ளும் போது கூட ரகசியம் சொல்வது போலத்தான் பேசிக் கொள்கிறார்கள். மரங்களுக்கும், செடிகளுக்கும் கூட ஓசையில்லாமல் அசையச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
இசைக்கவி சொல்வது
போல தியானம் செய்ய சிறந்த இடம்
மரத்தடியிலோ புல்தரைகளிலோ . குருதேவரின் குடிலிலோ
மண்டபங்களிலோ நீங்கள் விரும்பும் வரை தியானம் செய்யலாம். படிக்கலாம் ,எழுதலாம்
நீண்ட நாளுக்குப் பின் பேனாப்பிடித்து நீண்ட நேரம் எழுதினேன். (மோசமான கையெழுத்து முன்னேறி இன்னும் மோசமாகியிருக்கிறது)
காலை உணவுக்கு பின் இன்று காட்டினுள் இருக்கும் ஒரு கிராமத்திற்குப் போகத்திட்டம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்