சவாலே சமாளிதொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சவாலே சமாளிதொடர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31/1/13

சோதனைகளை சாதனைகளாக்கிய தொழில் சக்ரவர்த்தி


சவாலே சமாளி  1


“நீ  உன் ஐபிஎம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு உடனே இங்கே வா. நமது கம்பெனிகளில் நீ செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்று மாமாவிடமிருந்து வந்த அந்த தந்தியை பார்த்து திகைத்து நின்றான் அந்த இளைஞன். படிப்பின், உழைப்பின் அருமை தெரிந்த ஒரு பணக்கார இந்திய குடும்பத்திலிருந்து வந்து அமெரிக்காவில்  கட்டிடகலை படித்த உடனேயே ஒரு பெரிய நிறுவனத்தில் நல்ல  வேலையும் கிடைத்திருந்த அந்த இளைஞனின் ஆச்சரியத்திற்கு காரணம் அவனை அமெரிக்காவிற்கு படிக்க அனுப்பியதே அவனுடைய மாமா தான். திரும்பிபோக தயங்கியதற்கு மற்றொரு காரணம் கல்லூரி இறுதியாண்டில் அரும்பிய காதல் அபோதுதான் மலர்ந்திருந்தது. காதலி  இந்தியா வரத்தயாராகயில்லை. குடும்பத்தொழிலா? காதலா? என்ற நிலையில்  அந்த இளைஞன் எடுத்த முடிவு காதலை துறந்து மாமாவின் விருப்படி நாடு திரும்புவது. காரணம் சிறுவயதில் தாயும் தந்தையும் பிரிந்ததால் பாட்டியால் வளர்க்க பட்ட அவனுக்கு மாமா ஜே ஆர் டி டாட்டா தான் எல்லாம். அவர் வார்த்தைகள் அவனுக்கு வேதம். அந்த இளைஞன் தான் இன்று 98 கம்பெனிகளுடனும் 3,95,000 ஊழியர்களுடனும் உலகெங்கும் பரந்துவிரிந்து கொண்டிருக்கும் டாட்டா சாம்ராஜ்யத்தின் தலைவர் ரத்தன்டாட்டா. கடந்த 10 ஆண்டில் டாட்டா நிறுவனத்தின் வளர்ச்சியை 12 மடங்கு உயர்த்தி பல ஆயிரம் கோடி கம்பெனியாக்கியிருப்பது (கடந்த ஆண்டு வருமானம் 67 பில்லியன் டாலர்கள்-ஒருபிக்கியன் 100கோடி) இவரது சாதனை. அந்த சாதனைகளுக்கு பின்னால்  இவர் சந்தித்த சோதனைகளும்  நெருக்கடிகளும் சவால்களும் பிரச்சனைகளும் ஏராளம்.
1962ல் இந்தியா திரும்பிய உடன்கொடுக்கபட்ட வேலை ஜாம்ஷெட்பூர் உருக்கு ஆலையில் தொழிலாளர் பணி. சுண்ணாம்பு கற்களை கொதிகலனில் இடுவதிலிருந்து எல்லா வேலையும்.  டாடா நிறுவனத்தில் உயர் பதவிக்கு போகபோவருக்கு  அவர் நிறுவனரின் குடுமபத்திலிருந்து வந்தவரானாலும் எல்லாம் சரியாக தெரிந்திருக்கவேண்டும் என்று அவருக்கு சொல்லபட்டது நீண்ட பயிற்சிகளுக்கு பின் அதே ஆலையில் மேலாளாராக இருந்தவரை நிறுவன தலைவர் ஏற்க சொன்னது டாட்டாவின் ரேடியோ மற்றும் மின்பொருள் தயாரிக்கும் நெல்கோ நிறுவனத்தை, நஷ்டத்தில் 2 சதவீத மார்கெட் ஷேருடன் இயங்கிகொண்டிருந்த அதை 25 %மாக உயர்த்தி லாபம் ஈட்டும்கம்பெனியாக்கி காட்டியவருக்கு அதை மேலும் உயர்த்தமுடியாமல்  நெருக்கடி நிலை பிரகடனம் என்ற அரசியல் சூழ்நிலை குறுக்கிட்டது. தொடர்ந்து வந்த தொழிற்சங்கபிரச்னைகளினால் டாடா நிர்வாகம் அந்த நிறுவனத்தை மூட முடிவுசெய்துவிட்டது.  அதற்காக வருந்தினாலும்  மனமுடைந்துபோகாமல்  ரத்தன் கேட்ட கேள்வி எனது அடுத்த சவால் என்ன? பாம்பாயில் ஒரு நலிந்துகொண்டிருந்த துணிஆலையின் பொறுப்பு அவருக்கு கொடுக்க பட்டது. ஊழியர்களை குறைத்து, இயந்திரங்களை நவீனபடுத்தி உற்பத்தியை பெருக்கும் அவரது யோசனைகளை நிர்வாகம் ஏற்கவில்லை.. இறுதியில் அந்த ஆலை மூடபட்டது. “ அன்று எனக்கு ஒரு 55 லட்சம் தரப்பட்டிருந்தால் அது இன்று நாட்டின் சிறந்த துணி ஆலையாகியிருக்கும் என எழுதுகிறார் ரத்தன். தொடர்ந்த போராட்டங்கள், தோல்விகளிலிருந்து ரத்தன் டாட்டா புரிந்துகொண்ட விஷயம் இந்த நிறுவனம் புதுமைகளை ஏற்க தயங்கிறது. ஆனாலும் அடுத்த சவாலாக அவர் ஏற்றது அவர்களின் மோட்டார் தயாரிப்பு நிறுவனம், அந்த கால கட்டத்தில்1991ல் நிறுவன சேர்மன் ஜேஆர்டி டாட்டா தனக்கு அடுத்த சேர்மனை தேர்ந்தெடுக்கபோவதாக அறிவித்திருந்தார்.. நீண்ட நாள் டாட்டாவில் பணியிலிருந்த ருஸிமோடி, பல்கிவாலா, அஜித்கேல்கர் போன்றவர்களிலிருந்து யாரவது அறிவிக்கபடுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் தேர்ந்தெடுதெடுத்தது ரத்தனை. இதை எதிர்பார்க்காத அவர்கள் ரத்தன் டாட்டாவிற்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்காமல்  “ஒன்றும் தெரியாத  அந்த சின்னபையனை தங்கள் பிடியில் வைத்துகொள்ள“ முற்சித்தனர். ரத்தன் டாட்டா சந்தித்த மிகப்பெரிய சோதனையிது. டாட்ட நிறுவனத்தில் எவரும் நீக்கபடுவதில்லை. ராஜினாமாதான் செய்வார்கள். நிறுவனத்துடன் வளர்ந்தவர்களை, அதை வளர்த்தவர்களை தான் மதிப்பவர்களை  காலத்தின் கட்டாயத்தை புரிந்துகொளாததால் அவர்களை அதை செய்யவைத்தார். குழுமத்தில் லாபத்தில் இயங்காத பல கம்பெனிகளை மூடினார். எல்லா கம்பெனிகளுக்கும் திறமையான இளம் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து அமர்த்தினார். இந்த அதிரடி மாற்றங்கள் இந்திய தொழிற்துறையையே ஆச்சரியத்தில் ஆழத்தியது. மெல்ல எல்லா நிறுவனங்களும் லாபம் ஈட்டின. கம்ப்யூட்டர் நிருவனமான டிசிஸ்  உலக அளவில் புதிய உயரங்களை தொட்டது.

ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் பயணம் செய்யும் காட்சியை அடிக்கடி கண்டபோது இந்தமட்டத்திலிருப்பவர்களுக்கான ஒரு சின்ன காரை லட்சரூபாயில் நனோ என்ற பெயரில்  இவர் அறிவித்தபோது அது எப்படி சாத்தியமாகாது என்று சொன்னவர்கள்தான் அதிகம். மேற்கு வங்காளத்திலிருந்த கம்யூனிசஅரசு வேலை வாய்ப்பை அதிகரிக்க கேட்டுகொண்டதின் பேரில் அங்கு அதற்காக துவக்கப்படவிருந்த தொழிற்சாலையை தொடர்ந்து வந்த ஆட்சிமாற்றத்தால், அரசியல் மாச்சரியங்களினால் நிறுத்த வேண்டிய நிலை எழுந்த்ததுதான் இவருக்கு வந்த அடுத்த சோதனை. அசரவில்லை ரத்தன் உடனடியாக முழுதொழிற்சாலயையும் குஜராத்தில் நிறுவி தந்து கனவு காரான நானோவை 2008ல் மார்கெட்டுக்கு கொண்டுவந்தார்.  டிமாண்ட் அதிகம் இருக்கும் கார்களுக்கு பதிவு செய்யும்போது முன்பணம் செலுத்துவது வழக்கம். நானோவிற்கு முழுபணமும் கடன் வாங்கி செலுத்தி குலுக்கல் முறையில் பெற்று கொள்ள மக்கள் தயாராகிருந்தனர். அறிவிப்பு வந்தவுடன் அப்படி புக் செய்தவர்கள் 2 லட்சத்திற்கும் மேல். நிருவனம் பெற்ற பணம் 2500 கோடிகள். சந்தேக பட்டவர்கள், சவால்விட்டவர்கள்  எல்லாம் சத்தமில்லாம்ல் அடங்கிபோனார்கள்.  உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த நிதி தரம் வழங்கும்  உலக நிறுவனங்கள் டாடா நிறுவனத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை புரிந்துகொண்டது. நிறுவனத்தின் 100 ஆண்டு பராம்பரியம், மக்களின் நமபிக்கை அரசின்  “உலகமயமாதல்” கொள்கையினால் எழுந்த வாய்ப்புகளை பயன்படுத்த இது உதவியது. டாட்டா சாம்ராஜ்யத்தின் எல்லைகள் உலகின் பலநாடுகளுக்கு விரிவடைந்தது, சிறிதும் பெரிதுமாக பலநாடுகளில் நிறுவனங்கள் வாங்கபட்டன.  இன்று 80 நாடுகளில் இயங்குகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே பெரும் விலை கொடுத்து   வாங்கியது. உலகின் பெரிய வங்கிகள் கடன் உதவி செய்தது. இதன் மூலம் டாடா உலகின் 5வது பெரிய இரும்பாலைக்கு சொந்தமானது.
தொடர்ந்து பிரச்னைகளை வெற்றிகரமாக சமாளித்த ரத்தன்டாட்டா வை தேடி வந்த அடுத்த சோதனை இது., இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை டாட்டா வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது. சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு கடன் செலுத்த முடியவில்லை. இந்த சோதனையை ரத்தன் வென்றமுறை உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தது. ”இது உங்கள் நாட்டிலிருக்கும் இருக்கும் தொழிற்சாலை. பல ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்காமல் காப்பாற்ற  நீண்ட கால கடன் உதவிசெய்யுங்கள்” என  தொழிளார்கள் யூனியன்களுடன் இணைந்து  இங்கிலாந்து அரசிடம் வேண்டினார். முதலில் மறுத்த அரசு  பின்னர் உதவியது,
ஒரு நிறுவனத்திற்கு பிர்ச்னைகள் எங்கிருந்தும் வரலாம், பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் மும்பை தாஜ்ம்ஹால் ஹோட்லை 2008 தாக்கி எரித்த விபத்தில் டாடாவிற்கு நேர்ந்த்து வெறும் பொருளாதார இழப்பு  மட்டுமில்லை. பாதுகாப்பு இல்லாத ஹோட்டலென்ற அவப்பெயரை எற்படுத்திவிடக்கூடிய அபாயமும்கூட. சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை தொடர்ந்து பெற வேண்டியது சவால். தாக்கபட்ட 8மாதங்களில் புதுபிக்கபட்ட ஹோட்டலில் அடுத்த ஆண்டு வந்து தங்கியவர் அமெரிக்க அதிபர் ஒமாமா. இதற்கான பப்ளிக் ரிலேஷன் முயற்சிகளை முன்னின்று செய்தவர் ரத்தன்.
எந்த பிரச்னைகளையும் எதிர் கொண்டு அயராது உழைத்து வெற்றிகண்ட ரத்தன் டாடா கடந்த மாதம்  தன் 75 வது வயதில் ஒய்வு பெற்று விட்டார். ஓய்வை எப்படி கழிக்க போகிறார்? “ அதுதான் நான் இப்போது சிந்தித்துகொண்டிருக்கும் அடுத்த பிரச்னை” என்கிறார்.


கல்கி03/02/13