திரு மு.பசுலுதீன் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர். நீண்ட போராட்டங்களுக்குப்பின் . 14000 பேருக்கு அத்துறையில் பணி நிரந்தரம் பெற்றுத்தந்த ஒரு தொழிற்சங்க போராளி. 20 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்தவர்.
கடந்த மாதம் பணிநிறைவு பெற்ற அவருக்கு அவரது சங்கம் அவரது சொந்த மண்ணான மணப்பாறையில் ஒரு விழா எடுத்தது. விழாவிற்கு இவருக்கு வாழ்த்துரை வழங்குவதற்காக துரையின் இயக்குநர்,துணை இயக்குநர் என மூத்த அதிகாரிகளின் பட்டாளமே வந்திருந்தது. சங்கத்தின் பல மாவட்ட தலைவர்கள் தங்கள் பரிவாரங்களுடன் . . வலிமை மிக்க தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் திரு சண்முக ராசன் விழாவிற்கு தலமை ஏற்றார். இத்தகைய கெளரவம் பணிநிறை செய்த எல்லோருக்கும், எல்லாத் தொழிற்சங்க தலைவர்களுக்கும் கிடைப்பதில்லை.
இந்தியாவின் வரைபடம் பிறந்த கதையைச்சொல்லும் புத்தகம் என்னுடைய ’கடைசிக் கோடு’. இது முழுக்க முழுக்க நமது நாட்டின் பல பகுதிகளின் நிலங்களை அளக்க போராட்டங்கள் நிறைந்த ஒரு நில அளவையாளரின் 40 ஆண்டு பயணத்தையும்,. அவரைத்தொடர்ந்த நில அளவையாளர்கள் அந்தப் பணியை முடித்ததையும்,அதன் இறுதியில் எவரஸ்ட் சிகரம் தான் உலகில் உயர்ந்தது என்பது கண்டுபிடிக்க பட்டதை விவரிக்கும் கதை. புதிய தலைமுறையில் தொடராக வந்தது. புத்தகமாகவும் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாடு நில அளவைத்துறை சங்கத்தினர் ஒரு நில அளவையாளரின் கதையான இந்தப் புத்தகத்தின் ஒரு சிறப்பு பதிப்பை அவர்கள் தலைவர் பணிநிறைவு விழாவில் விழாவில் வெளியிட விரும்பி என்னை அணுகினார்கள். இம்மாதிரி விழாக்களில் புகழார மலரும் தலைவரின் வாழ்க்கை கதை போன்றவற்றை வெளியிடும் பலரிடையே ஒரு புத்தகத்தை சிறப்பு பதிப்பாக கொண்டுவருவது ஒரு மாறுதலான ஆச்சரியம்.
மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். புத்தகத்தின் பதிப்பாளர் (கவிதாபதிப்பகம்) சொக்கலிங்கம் மிக குறைந்த அவகாசத்தில் (4 நாட்கள்) சங்கத்தினர் விரும்பியபடியே ஒரு சிறப்பு பதிப்பை உருவாக்கித் தந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
விழாவில் திரு சிலம்பொலி செல்லப்பன் புத்தகத்தை வெளியிட அதை நில அளவை துறை இயக்குநர் இரா வாசுகி IAS பெற்றுக்கொண்டார். ”இந்த நூல் நில அளவைத்துறைக்கு கிடைத்ததொரு வரப்பிரசாதமாகக் கருதுகிறேன். ஒவ்வொரு நில அளவையாளர்களும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகம்” என பராட்டினார். சிலம்பொலியாருக்கு என் எழுத்துப்பணிகள் பற்றித் தெரியும். அவர் அது குறித்தும் புத்தகத்தின் பல பக்கங்களைக் குறிப்பிட்டும் நீண்ட நேரம் பேசினார்
.
ஒரு எழுத்தாளானின் வாழ்வில் அவனுடைய எழுத்து சம்பந்தபட்டவர்களை அடைவதும் அதனை அவர்கள் பாராட்டி வரவேற்பதும் மிக மகிழ்ச்சியான தருணம். அன்று அது நிகழ்ந்தது
.
தமிழில் அறிவியல் நிகழ்வுகள் சார்ந்த படைப்புகள் அதிகம் வெளிவருவதில்லை. அப்படி வருவதும் சேரவேண்டியவர்களை சரியான முறையில் சேருவதில்லை என வருந்துவதில் நண்பர் சுப்புவும்(வாசகர் வட்டம்/தமிழ் வளர்த்த சான்றோர்) ஒருவர். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கு கொண்ட அந்த விழாவில் 300 நில அளவை பணியாளர்கள் இந்த புத்தகத்தை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டனர். என்ற செய்தி அவரை சந்தோஷப்படுத்தும்
- Subramanian Venkateswaran, Krishnaswami Cvr and 23 others like this.