அடுக்குமாடிவீடுகள்
புனேயில் புதிதல்ல. 50 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்ட விஷயம். ஆனால் இப்போது பல
அடுக்குமாடிகளுடன் களுடன் அதிகமான கட்டிடங்கள் மிக வேகமாக எழுந்திருக்கின்றன.
28 அல்லது 24 அடுக்குமாடி வீடுகள். 8 அல்லது 10 மாடி பிரமாண்ட
அலுவலககட்டிடங்கள் நிறைய எழுந்திருக்கின்றன. எல்லா அடுக்குமாடி வீடுகளிலும். முதல்
4 மாடிகளுக்கு -1,-2,-3.-4 என நம்பரிட்டு 5 வது
அடையாள
அட்டையை அழுத்தினால் திறக்கும் கதவு. கிச்சனில்; புகைவந்தால் அலறும் அலாரம் நடக்க நல்ல பாதைகள் மெத்தென்ற பசும்புல்வெளி பார்க்
நீச்சல் குளம், குழந்தைகள் விளையாட வெண்மணல்திடல்
கோல்ப்மைதானம் என மிக நவீன வசதிகளுடன் சுத்தமான
குட்டி ஹைடெக் ஊர். கால்நகம்வெட்டிக்கொள்வதிலிருந்து சகல நகர வாழ்க்கையின் ஆடம்பரங்களும்
இங்கேயே இருக்கிறது.
ஆனாலும். பனித்துளிகள் மின்னும்பயிர்களுடன் அருகிலிருக்கும்
விளைநிலங்களையும் அதன் எதிரே மிதக்கும் மேகங்கள் தொட்டுசெல்லும் உயர்ந்த கட்டிடங்களையும் நம் பால்கனியிலிருந்து
ஒன்றாக பார்க்கும்போது ஒரு மாறுபட்ட வினோதமான
உணர்வு எழுகிறது.
”இன்னும்
சில நாட்களில் நாங்கள் அங்கேயும் வந்துவிடுவோம்” என்று அந்த உயர்ந்த கட்டிடங்கள் சொல்லுவதைக்கேட்டு அழும் அந்த நிலங்களின்
கண்களில் நீர் கட்டியிருப்பது போல தோன்றிற்று. .
















