சூட் அணிந்த பிசாசுகளை அறிமுகபடுத்துகிறார் இவர்.
ஆங்கில இலக்கிய உலகத்தில் அருந்ததி ராய், விக்ரம்சேத் போன்ற இந்திய படைப்பாளிகள்
உலக சாதனைகள் படைத்து வருவதைத்தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஆங்கில புத்தகங்களைநேசிக்கும் இந்திய வாசகர்களுக்காகவே
புத்தகங்கள் நிறைய வரத்தொடங்கின. அவைகளின் ஆசிரியர்களில்அதிகம் பேசப்படுபவர் ரவி சுப்பரமணியன்.
இரண்டாண்டுகளுக்கு முன் இவரின் முதல் புத்தகம் “கடவுள் ஒரு பாங்க்ராக இருந்திருந்தால்..”(if
God was a Banker) ஒரு லட்சத்திற்குமேல் விற்பனையாகியிருக்கிறது. ‘தங்க இறகு’ பரிசையும்
பெற்றிருக்கிறது. இரண்டு துடிப்பான இளைஞர்கள் ஒரேநாளில் இந்தியாவிலிருக்கும் வெளிநாட்டு
வங்கியில் பணியில்சேருகிறார்கள்.எப்படியாவது,எதையாவது செய்து உயரங்களைத்தொட்டுவிடவேண்டும்
என்று ஒருவரும், தன் திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து அயராது உழைக்கும் மற்றொருவரும் எப்படி உயருகிறார்கள்.
இறுதி நிலையில் ஒருவர் மட்டும் எப்படி ஜெயிக்கிறார் என்பது கதை. இதில் கதையைவிட சொல்லப்பட்ட
விதம் விவரிக்கபடும் காட்சிகள், இந்தியாவில் செயலாற்றும் அந்நிய வங்கிகளில் நடைபெறும்
பலவிதமான விஷயங்களைத் தோலுரித்து காட்டுகிறது.அடுத்த எழுதிய “நான் வாங்கிய துறவியின் ஃபெராரி”(கார்) புத்தகம் நல்ல விற்பனையிலிருப்பதைதொடர்ந்து இந்த
ஆண்டு தனது மூன்றாவது புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார் ரவி. பெயர் “டெவில் இன் பின்ஸ்ட்ரைப்ஸ்””
(பின்ஸ்டிரைப் என்பது பெரும்பாலும் பாங்கர்கள்
அணியும் மெல்லிய கோடுகளுடன் கூடிய சூட்) சூட் அணிந்த பிசாசுகள்’ என்று சொன்னால் எளிதில்
புத்தக தலைப்பு புரியம். இந்த புத்தகம் விற்பனையில்
முதல் புத்தகத்தை தாண்டிவிடும் என்கிறார்கள்
இந்த புத்தகமும் வெளிநாட்டு வங்கியின் ‘உள் நாட்டு அரசியலை’ அப்பட்டமாக
படம்பிடித்துகாட்டுகிறது. உங்கள்புத்தகங்கள் எல்லாமே ஏன் பாங்க் சூழலலிலயே அமைகிறது
என்ற கேள்விக்கு இவர் தரும் பதில். இன்று இந்தியாவில்
வங்கிகள் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு தரும்
ஒரு துறை. மேலும் இன்றைய வங்கிகள் வாய்ப்புகள், எமாற்றங்கள், ஆச்சரியங்கள், சாதனைகள்,
சவால்கள் மற்றவர்களின் தொழில் பணம்பற்றிய விபரங்கள். திறமைமிக்க அதிகாரிகள் நிறைந்த ,மிகப்பெரிய தொழிலதிபர்களிலிருந்து
சாதாரண மனிதர்கள் வரை தவிர்க்க முடியாத ஒரு
இடமாகிவிட்டது. கதைசொல்ல அது நல்ல களம்.அதைவிட
முக்கியமானது அந்த களம் எனக்கு மிகவும் பழக்கமானது. கதைக்கான களத்துக்காகா அதிக ஆராய்சிகள்
செய்ய வேண்டிய அவசியம் இல்லை என சொல்லும் இவர்
ஒரு வெளிநாட்டு வங்கியில் பணியாற்றும் ஒரு அதிகாரி.. “அப்படியானால் எழுதுதில்
எந்த அளவு சொந்த அனுபவம்?”
“எழுதியவையெல்லாம் நிகழந்தவையில்லை. - தங்கள் வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்த சில நிகழ்ச்சிகளின்
நீட்சிகள்தானே எவர் எழுதும் கதைக்குக்கும் கருவாக அமைகிறது. அதுபோல்தான் இதுவும் “
என்று சொல்லும் இவர் IIM பங்களூரில் நிர்வாகயில் பயின்ற பட்டதாரி. இந்தியாவிலிருக்கும் பல வெளிநாட்டு
வங்கிகளில் பல இடங்களில்பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.பயோடெக்னாலாஜி படித்திருக்கும்
இவரது மனைவி தரணியும் பணியாற்றுவது வெளிநாட்டுவங்கியில்தான்.இவர்களது ஒரே மகள் அனுஷாவுடன்
இப்போது வசிப்பது மும்பையில். துவக்கியிருக்கும்
அடுத்த நாவளின் பெயர் “முழுவதும்சரியில்லாத
கடவுள்(imperfect God)” “இதுவும் பாங்க்களிலிருக்கும் அரசியல் பற்றிதான். ஆனால் எல்லோரும்
எளிதில் அடையாளம் கண்டுகொள்ளகூடிய எல்லா நிறுவனங்கலிலுமிருக்கும் கார்பெரேட் பாலிடிக்ஸ்
தான்” என்று சொல்லும் ரவி ஆங்கில பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதுகிறார். “நாவல்கள்
எழுதவதைவிட கடினமான,நான் சாதிக்கவிரும்புபம் ஒரு விஷயத்திற்காக இப்பொது பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்” என்று இவர் சொல்லும் அந்த ஒரு விஷயம்-
நல்ல சிறுகதைகள் எழுதுவது.
சந்திப்பும் படங்களும் ரமணன்
kகல்கி 23.05.10