16/10/12

டாக்டர் எழுதிய ஒருநோயின் வாழ்க்கை வரலாறு

(அமுத சுரபி  அக்டோபர் 12)
வாழ்நாளில்  வெற்றி கண்ட சாதனையாளார்களின், வரலாற்றில் இடம் பிடித்த நாயகர்களின், அரசியலில் தங்கள் அடையாளங்களை ஆழமாக பதித்த தலைவர்களின் வாழ்க்கையை பேசும்  வாழ்க்கை வரலாறு நூல்கள் இலக்கிய உலகில்  என்றும் தனியிடம் பெறுவதில் ஆச்சரியமில்லை.  ஆனால் ஒரு நோயின் வரலாற்றை, அதுவும் இன்றளவும் விடை கண்டிபிடிக்கமுடியாத வினாக்களை  இன்னமும் எழுப்பிகொண்டிருக்கும் ஒரு கொடிய நோயின் தோற்றதையும்,  அதனிடம் ஆராய்ச்சியாளார்களும், மருத்தவர்களும் போராடித் தோற்றதையும் விறுவிறுப்பான நடையில், தனது நோயாளிகளின் வாழ்க்கை கதைகளுடன் ஒரு சுவையான வாழ்க்கை வரலறாக எழுதப்படிருக்கும் இந்த புத்தகம் உலகம் முழுவதிலும் வரவேற்பை பெற்றிருப்பது தான் ஆச்சரியம்

2011ஆம் ஆண்டின்  புலிட்சர் விருது,  அமெரிக்கபுத்தக விமரிசகர் வட்டவிருது,. டைம் பத்திரிகைதேர்ந்த்டுத்த சிறந்த புத்தகம், இங்கிலாந்தின்கார்டியன் பத்திரிகையின்  முதல்புத்தக” “ விருது என  தொடர்ந்து பல விருதுகளை பெற்றிருக்கும் இந்த துயரங்களின்  சக்கரவர்த்தியான புற்று நோயின் வாழ்க்கைவரலாறு”“  என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் ஒரு டாக்டர். சித்தார்த்தா முகர்ஜி எனற அமெரிக்க வாழ் இந்தியர்.. இது அவரது முதல் புத்தகம். ஓரே ஆண்டில் இதுவரை எந்த புத்தகமும் இத்தனை சிறப்பான அகில உலக விருதுகளைப்பெற்றதில்லை டாகடர் சித்தார்த்தா  நியூயார்க் நகரின் கொலாம்பியா யூனிவர்சிட்டியில் ம்ருத்த்வபேராசிரியராகவும், அதன் மருத்துவமனையில் சர்ஜனாகவும பணியாற்றும் ஆராய்ச்சியாளார்.  
துவக்கதத்லிருந்து முடியும்வரை ஒரு விறுவிறுப்பான நாவலைபோல  மிக சுவாரஸ்யமாக எழுதபட்டிருக்கும் இந்த புத்தகத்தில் மருத்துவ சொற்கள்  சில இடங்களில் இடம்பெற்றிருந்தாலும் அவை எளிதில் புரியும்  நடையில்   அமைக்கபட்டிருக்கிறது. திறமையான ஒரு சர்ஜனின் விரல்கள் சிறப்பான நாவலையும் படைக்கமுடியும்  என புரியவைக்கிறது.  
டில்லியில் வாழ்ந்த ஒரு மத்தியதரகுடும்பம் சித்தார்த்தாவினுடையது. கண்டிப்புக்கு பெயர் பெற்ற ஒரு கத்தோலிக்க பள்ளியில் படித்தவர். ஆங்கில பொயட்டிரியை சரியாக் ஒப்பிக்காதாதால் தண்டிக்கபட்டது கூட நினவிலிருக்கிறது என்று சொல்லும் இவர்  கல்லூரியில் எல்லாபாடங்களிலும் சிறப்பிடம் பெற்றமுதல் மாணவர். தொடர்ந்து அமெரிக்க ஸ்ட்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் உயிரியலில் முதுகலைப் பட்டபடிப்பின்போது சித்தார்த்தா விற்கு  மிக மதிப்பு வாய்ந்த ரோடோ ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ரோடோ அறகட்டளை உலகின் சிறந்த மாணவர்களை தேர்வுசெய்து அவர்கள் விரும்புவதை விரும்பும் வரை படிக்க உதவும் நிதி. இந்த ஸ்காலர்ஷிப்க்கு உரியவர்கள் கடும் தேர்வுகளுக்கு பின் தேர்ந்தெடுக்கபடுவதால் உலகின் எந்த கல்லூரியின் கதவும் இவர்களுக்கு முதலில் திறக்கும். சித்தார்த்தாவிற்கு மருத்துவதுறையில் சிறப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ரோடோ ஸ்காலர்ஷிப் அந்த லட்சியத்தை அடைய உதவிசெய்தது.   இதன் உதவியால் சித்தார்த்தா ஆக்ஸ்போர்ட் பல்கலகழகத்தில் நோய்தடுப்பில் டாக்டர் பட்டம் பெற்றார். தொடர்ந்து ஹார்வர்ட் மருத்துவ கல்லூரியில்  விரும்பி படித்த நோய்தடுப்பு ஆராய்ச்சி படிப்பின் ஒரு பகுதியாக தினசரி வார்டுகளுக்கு சென்று நோயாளிகளின் நிலைகுறித்து குறிப்புகள் எழுதிவந்தபோதும் அது சம்பந்தமாகவும் படிக்க நேர்ந்தபோது டாக்டர் சித்தார்த்தாவுக்கு இந்த கொடிய நோயின்  தோற்றமும் தொடர்ந்து மருத்தவ உலகத்தினர்  அதை ஒழிக்க செய்து வரும் போராட்டங்களையும் தியாகங்களையும் அறிந்து  ஆச்சரியமைடைந்தார்.  ஜுனியர் மாணவர்களுக்கு பாடம் நடத்த குறிப்புகள் எடுத்த போது  இந்த செய்திகளை  மருத்துவ அதுவும் இதுபற்றி படிக்கும் மாணவர்கள் மட்டுமே அறிய முடிகிறது. இது மக்களுக்கு சொல்லபடவேண்டிய முக்கிய விஷயம் என எண்ணிக்கொண்டிருந்தார்.  பரிசோதிக்கும் நோயாளிகளிடமிருந்து இவர்  தவறாமல் சந்திக்கும் கேள்வியான ஏன் எனக்கு இது வந்தது?  தீர்வேகிடியாதா?“ என்ற கேள்வி இவரை இந்த புத்தகம் எழுத வைத்திருக்கிறது.
கி.மு 500ல் ஒரு பெர்ஷய அரசிக்கு வந்த மார்புகட்டி ரக்சியமாக ஒரு கிரேக்க அடிமையால் கொடுரமான முறையில் வெட்டபட்ட முதல் சர்ஜரியிலிருந்து இன்று கையாளாபடும் கம்பூட்டர்மயமாக்கபட்ட நவீன சோதனைகருவிகள் வரை இந்த நோயுடன் மருத்துவ உலகம்  நிறுத்தாமல் தொடர்ந்து  போராடுவதையும் அதற்காக செய்யபட்ட ஆனால்   பலர் அறியாத தியாகங்களையும் மனம்தொடும் வாழ்க்கை போராட்டங்களையும் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கும் இந்த டாகடர் இந்த நோயைபற்றிய சமூக பார்வையும் அதன் அரசியல் முகத்தையும் துணிவுடன் பதிவு செய்திருக்கிறார். சிகரெட் பெட்டிகளில் ” “புகைபிடிப்பதில் புற்று நோய் அபாயமிருக்கிறது”“ என்ற வாசகத்தை அச்சிடுவதை சட்டமாக்க அமெரிக்க அதிபர் கென்னடி கூட தயங்கியதையும், அதற்கு காரணம்  அவரது கட்சிக்கு பெரும்  தேர்தல் நிதி தந்தவர்கள் சிகரெட் தயாரிப்பளார்களாகயிருந்தது தான். என்பதையும், நிக்கஸன் அதிபராகயிருந்த்போது வியட்நாம் போரில் இறந்தவர்களைவிட புற்று நோயால் இறந்த அமெரிக்கர்கள் அதிகம். அமெரிக்கா  புற்று நோயை ஒழிக்க ஒரு போரை துவங்க வேண்டும் போராடிய டாகடர்களின் அமைப்புபற்றியும் விவரித்திருகிறார். இதன் மூலம்  புற்று நோய் சம்பந்தபட்ட பல்வேறு விஷயங்களை வரும் தலைமுறையனருக்கு சொல்ல விரும்பும் இவரது சமூக பொறுப்பு புரிகிறது.
2009லிருந்து  நியூயார்க்கின் கொலம்பியா மருத்துவ மனையில் ஒரு விசேஷ ஆராய்ச்சிபிரிவை துவக்கி அதன் மூலம் புற்று நோயில் ஒரு வகையான லூக்கெமியா (ரத்த புற்று நோய்) பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார். அதில் ஒரு மிக முக்கிய திருப்பத்தை சந்திருப்பதாகவும்  இறுதி பரிசோதனைகள் முடியாத நிலையில்  அதுபற்றி  எதுவும் பேசுவது ஆராய்சி மரபுகளுக்கு புறம்பானது என சொல்லுகிறார்.
20 ஆண்டுகளாக தொடர்ந்த அமெரிக்க வாழ்க்கை சித்தாரத்தா முகர்ஜியை மற்றிவிடவில்லை. மரபுகளை மதிக்கும் இந்திய வாழ்க்கைமுறையை நேசிக்க்கும் இவரது மனைவி  சாரா ஒரு அமெரிக்கர். சாரா  ஒவியகலையை முறையயாக பயின்று அதில் முதுகலைபட்டம் பெற்றிருப்பவர்.  இவர்  அமெரிக்கா அறிந்த ஒரு புகழ்பெற்ற விருதினைப் பெற்ற சிற்பகலைஞர். சிற்பம், ஒவியம்  சம்பந்தமான அரசு, மற்றும் அரசு சாராத பல அமைப்புகளில் இடம்பெற்றிருக்கும் இவர் நியூயார்க் பல்கலைகழக ஆசிரியர். தங்கள்  பெண் குழந்தைகள். லீலா, மற்றும் ஆர்யாவுடன் நியூயார்க் நகரின் புறநகர்பகுதியில் வசிக்கின்றன்ர்  இந்த தம்பதியினர். தன் குடும்பத்தைப் போலவே ஆராய்ச்சியையும் அழமாக நேசிக்கும் இந்த டாக்டர் நம்பிக்கையுடன் சொல்வது இன்று சிகிச்யைகள் மூலம்  பல கட்டங்களில் 65% குணமாக்கபடும் இந்த நோய் ஒரு நாள் நிச்சியம் ஒழிக்கபட்டுவிடும் எனபது தான்.
நல்ல டாகடர்கள் தருவது சிகிச்சைமட்டுமில்லை நம்பிக்கையும்தான்.
                                                            

10/10/12

நயாகராவின் நாயகன்


நயாகராவின் நாயகன்

உலகின் மிக அழகான ஆனால் ஆபத்தான அருவிகளில் ஒன்று நயாகாராஅமெரிக்க கனடா நாடுகளின் எல்லைப்பகுதியிலிருக்கும் மலைச்சரிவில் இந்த அருவி சீறிபாய்ந்து மூன்று பகுதிகளாக விழுகிறது. ஒரு அருவி அமெரிக்க பகுதியிலும் மற்றொன்று கனடாவின் பகுதியிலும் இன்னொன்று இரு நாடுகளின் எல்லைகளை பிரிக்கும் பகுதியின் நடுவிலும் விழுகிறதுஇந்தபகுதியை பார்க்க அமைக்கபட்டிருக்கும் பிரமாண்டமான பாலம் வழியாக இரு நாடுகளுக்கும் போக்குவரத்து வசதியுமிருக்கிறது. நயாகராவின் மிக அகலமான அருவியான இதில் நிமிடத்திற்கு 60 லட்சம் கன அடி தண்ணீர் கொட்டுகிறது.
இந்த அருவியின் அருகே அமெரிக்க எல்லைபகுதியிலிருந்து கனாடா நாட்டின் எல்லைபகுதிக்கு நடந்து சாதனை செய்திருக்கிறார் நிக்கோலஸ் வாலண்டேனா எனற அமெரிக்கர்நடந்தது  இழுத்துகட்டபட்ட  ஒரு கம்பியின் மேல்.!  நிக் தன் 13 வயதிலிருந்து கம்பியின் மேல் நடக்கும் வித்தையை செய்துவருபவர். உலகின் பல உயாரமானஇடங்கள்,கட்டிடங்களின் இடையே எல்லாம் நடந்து சாதனை படைத்தவர். 6 முறை கின்னஸ் சாதனைபட்டியலில் இடம்பிடித்தவர். ஆனால் நேரடியாகநயாகாராவின் மேல் தரையிலிருந்து 200 அடி உயரத்தில் கட்டபட்ட கம்பியில்  1800 அடிகள் நடந்து கடந்த முதல் மனிதன் என்ற சாதனை தான் மகத்தானது. காரணம் நயாகாராவின் அந்த பகுதியில் பொங்கி விழும் அருவியிலிருந்து எழும் பனிப்படலமும், ஆளைச்சாய்க்கும் காற்றும், பேரிரைச்சலும்  மிகப்பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்கும் டூரிஸ்ட்களையே அச்சபடுத்தும் ஒரு  விஷயம்.
உலகின் அழகான டூரிஸ்ட் தலத்தில் அடிக்கடிவிபத்து நேருவதை விரும்பாதாதால் அமெரிக்கா, கனடா இரு நாடுகளுமே தங்கள் பகுதி அருவிகளில் சாகஸ முயற்சிகளுக்கு தடை விதித்திருக்கிறது. இரு நாட்டின் எல்லைகளுக்கிடையே இந்த சாதனையை நிகழ்த்த விரும்பிய  “நிக்க்கு இது ஒரு நீண்ட நாள் கனவு. இரண்டாண்டு போராட்டங்களுக்குபின்னர்  இரண்டு அரசுகளிடமும்அனுமதி பெற்றிருக்கிறார். நியார்க் மாநில சட்டமன்றம் விசேஷ சட்டம் மூலம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் மிகப்பெரிய அளவில் அனுமதி கட்டணத்தை நிர்ணயத்தது. கனடாநாட்டில் ஒண்டார்ரியோ நகர்மன்றம் பல லட்சம் டாலர்களை நகர வளர்ச்சிக்காக நன்கொடையாக பெற்றபின்தான் அனுமதித்திருக்கிறது.
ஒரு சர்க்கஸ் குடும்பத்தின் 7 வது வாரிசான நிக்கோலஸின் குடும்பத்தில் பலர் சாதனையாளர்கள். தாத்தாவின் தந்தை அமெரிக்க பகுதி நயாகாராவை கடக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவர். நிக்கோலஸ் இந்த சாதனை செய்ய விரும்பியதற்கு அதுவும் ஒரு காரணம். மற்ற இடங்களைப்போல இங்கு ஒருமுறை பயிற்சி செய்யது பார்க்க முடியாது. அதனால் அருவிக்கு அருகில் ஒரிடத்தில் உயரத்தில் கம்பிகள் அமைத்து  ராட்ச தீயணக்கும் எந்திரங்கள்மூலம்  அருவி போல நீர்பாய்ச்ச செய்து பயிற்சி எடுத்திருக்கிறார்  நயாகாரா காற்றின் வேகத்தை தாங்க கூடிய கம்பிகள் மார்க்கெட்டில் இல்லாதால், விசேஷமாக கம்பிகள் தயாரிக்க பட்டன. இரு நாட்டின் மலைப்பகுதிகளிலும் அமைக்கபட்ட விசேஷ தூண்களில் இந்த கம்பியை  இணைக்கும் சவாலான விஷயத்தை ஹெலிகாப்படரின் மூலம் இழுத்துகொண்டு போய் செய்திருக்கிறார்கள்.   செலாவான பல மில்லியன் டாலர்களை ஏற்றுகொண்டன ஸ்பான்ஸர் செய்த டிவி சானல்கள்.
இறுதியில் திட்டமிட்டபடி சாதனையை துவக்கும் முன் பாதுகாப்பு ஏற்பாடாக இடுப்பு பட்டையிலிருந்து நடக்கும் கம்யினுடன் ஒரு சங்கலி இணைக்க வற்புறுத்தியது  ஸ்பான்ஸர் செய்த ஒரு டிவி சானல்முதலில் ஏற்க மறுத்த நிக் இறுதியில் சம்மதிக்க வேண்டியாதாயிற்று
25 நிமிடத்தில்  மெல்ல நடந்து  இவர் செய்த சாதனையை இரு நாட்டின் எல்லைகளிலும் லட்டசகணக்கானோருடன் உலகம் முழுவதும் டிவியில் பார்த்த்து.    முன்னிரவு வேளையில்  மின்னொளியில்  இதை செய்யவிரும்பியது சானல்கள்.  “  “ வெண்புகையான பனிச்சராலினிடையே ஓளிவெள்ளத்தில்  நடக்கும்போது கம்பியே கண்ணில் தெரியவில்லை. மிகமிக கவனமாக அடிகளை வைக்க வேண்டியிருந்ததுஎனறு சொன்ன நிக் தன்காலர் மைக்கின்மூலம் தரையிலிருக்கும் நண்பருடன் பேசிக்கொண்டே  நடந்தார். மைப்பகுதியை கடக்கும் போது  “இங்கிருந்து பார்க்கும் போது   நயாகாரா மிக ரம்மியமாகயிருக்கிறது. என்னைத்தவிர இதை யாரும்பார்த்த்தில்லை எனபது பெருமையான விஷயமாகயிருக்கிறதுஎன்றார்கனடா நாட்டின் எல்லையைத் தொட்டவுடன்  “கடவுள் அருளால் இதை சாதிக்க முடிந்ததுஎன்று சொன்ன நிக் செய்த முதல் வேலை அவருடைய பாட்டிக்கு போன். அவர்காலத்தில் சாதனையாளராக இருந்த பாட்டி வயது மற்றும் உடல் நிலை காரணமாக டிவி பார்க்க அனுமதிக்க படவில்லை. வினாடி தப்பினால் விபத்து என்ற இந்த சாதனைப்பயணத்தில் நிக் பத்திரமாக எடுத்துச் சென்றது கனடாநாட்டின் விசாவுடன் கூடிய அவரது பாஸ்போர்ட்.!