21/2/10

அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்


அமெரிக்க தபால்தலையில் பிள்ளையார்.

பிள்ளையார் மட்டுமில்லை! சீனிவாஸ பெருமாள்,கிருஷ்ணர், முருகன்  என்று நம்மூர் தெய்வங்களெல்லாம், 44செண்ட் தபால் தலையாக (ஒரு சாதாரண கவருக்குரியது)  அமெரிக்காவில் இப்போது கிடைக்கிறது.
மிக வேகமாக அதிகரித்துவரும்  ஈ மெயில், குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவை, இவைகளினால் தபால் அனுப்புவர்கள் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதனால்  அமெரிக்க அஞ்சல்துறை தங்கள் சேவையை பிரபலமாக்க அதிரடி நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். 2006ல் அமெரிக்க தபால் சட்டம் திருத்தப்பட்டபின் நிறைய மாற்றங்கள். தபால் நிலையங்ககளில் நிறைய வசதிகள். சிறிய நரங்களில் காரில் வரும் தபால்காரர் வந்த தபாலைக்கொடுத்துவிட்டு நம்மிடம் எதாவதிருந்தால் வாங்கிப்போகிறார்கள்.இரவு திறந்திருக்கும் தபால் நிலையம், ஆங்காங்கே ஸ்டாம்புகள் விற்கும் மிஷின்கள் அஞ்சல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் என  படிப்படியாக பல மாற்றங்கள். இந்த கடைகளில் பரிசுப்பொருட்கள்,கீரிட்டிங் கார்டுகள்விற்கிறார்கள்.அனுப்பவேண்டியவற்றை அழகாக பாக்கிங் செய்துகொடுக்கிறார்கள். சரியான அளவில் பெட்டி, கவர் எல்லாம் கிடைக்கும்.கட்டணம் அதிகமில்லை. உடன் வந்த நண்பர் தமது உறவினருக்கு அனுப்ப வேண்டிய வடகத்தை காட்டியதும்  உள்ளே குமிழ் குமிழான (bubble) பிளாஸ்டிக்கவர் ஒட்டிய அட்டைப்பெட்டியிலிட்டு, விலாசத்தோடு ‘உணவுப்பொருள்-கவனம்” என கம்யூட்டரில் அச்ச்சிட்ட ஸ்டிக்கர் ஒட்டிக்கொடுத்தார்கள்.
ஸ்டாம்ப் வாங்க தபால் நிலயம் போக வேண்டாம்,நமக்கு வேண்டிய தபால்தலைகளை ஆர்டர் செய்தால் வீடிதேடி வருகிறது. அதைவிட அழகான வசதி தேர்ந்தெடுத்த நம் குடும்பத்தினரின் படத்தை கம்யூட்டரில் அவர்கள் இணைய தளத்தில் அப்லோட் செய்தால்  அனுப்பிய படங்களை ஸ்டாம்ப் ஆக செய்துதருகிறது அங்கீகரிக்கபட்ட கம்பெனிகள். இந்த ஸ்டாம்ப்களை போஸ்ட்டாபீஸ்களில் வாங்கிய ஸ்டாம்ப்களைப்போல பயன் படுத்தலாம். பண்டிகை காலங்களில் குடும்பபோட்டோ,  திருமண அழைப்பிற்கு மணமக்கள், பிறந்த நாள் அழைப்பிற்கு குழந்தையின் படம் என இந்த ஸ்டாம்புகள் இப்போது பிரபலமாகிவிட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே  தனியார் நிறுவனங்களை இதுபோல ஸ்டாம்ப் தயாரித்து விற்க அனுமதிருக்கிறார்கள் என்றாலும் இதை முதலில் செய்திருப்பது அட்லாண்டாவில் இந்தியர் ஒருவருக்கு சொந்தமான கம்பெனிதான். அவர்கள் வெளியிட்டிருக்கும் இந்து கடவுள் பட ஸ்டாம்ப் இப்போது  அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே மிகவும் பிரபலம். இங்கிலாந்து, ஜெர்மனியில் வசிப்பவர்கள் கூட நண்பர்களுக்கு நினைவுப்பரிசாக அனுப்ப ஆர்டர் செய்கிறார்களாம்.
இணைப்பில் படங்கள்.
21/02/10 கல்கி






கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்