உடல் நலத்திற்காக ஒரு கப் காஃபி
சிக்காகோ நகரின்
யூனியன் ஸ்டேஷனில் புறப்படத்தயாராகயிருக்கும்
அந்த மின்சார ரயிலை பிடிக்க ஒடிக்கொண்டிருக்கும் ஒரு பெண் அந்த அவசரத்திலும்
அந்த கடையின் ‘ரஷ்’ கவுண்ட்டரில் கார்டைக்காட்டி
ஒரு கப்
காபி வாங்குகிக்கொண்டு ஓடுகிறார். நியூயார்க் நகருக்கு வெளியே செல்லும் அந்த
நீண்ட ஹைவேயில் சென்றுகொண்டிருக்கும் கார்
வலது புறம் தெரியும் அந்த போர்டை பார்த்தவுடன் வேகம் குறைந்து அந்த ட்ரைவின் கவுண்ட்டர்
அருகே செல்லுகிறது.ஒட்டுவரின் கரம் நீண்டு காரின் சீட் அருகே பொருத்திக்கொள்ளும் வசதியுள்ள
கப்பில் ஒரு காபி வாங்கிக்கொண்டு பறக்கிறது.
ஸான்ஸ்பிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பின் சந்தடி எதுவும் கேட்காத அந்த பாரிஸ்டாவில் தனது
லாப்டாபில் முழ்கி கிடக்கும் அந்த இளைஞைன் அருகில் ஒரு பெரிய கோப்பை காபி. இப்படி அமெரிக்க
தேசமே இந்த ஸ்டார்பக் நிறுவனத்தின் காஃபிக்கு அடிமையாகி கொண்டிருக்கிறது.
காஃபி பயிரே விளயாத
தேசமான அமெரிக்கா தான் உலகில் அதிகம்பேர் காஃபி
அருந்தும் நாடு . கடந்த 10 ஆண்டுகளில் காஃபி குடிக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கையை உயர்த்தியதில் (87% மக்கள்) ஸ்டார் பக் நிறுவனத்திற்கும் ஒரு கணிசமான பங்கு உண்டு. தேர்ந்தெடுத்த காப்பிக்கொட்டையை
வறுத்து அரைத்து கொடுக்க, டீ மற்றும் வாசனைத்திரவியங்கள்
விற்கும் கடையாக துவங்கிய நிறுவனம் இது. வாடிக்கையாளருக்கு ருசி காட்ட அதன் வாசலில் ஒரு சின்ன காபி கடை திறக்கலாம் மகன்கள்
சொன்ன யோசனையை நிராகரித்து, “காஃபி என்பது
வீட்டில் தயாரிக்க வேண்டியது. அப்படி எதாவது ஆரம்பித்தால், நமது முக்கிய வியாபாரம்
பாதிக்கும்” என்று சொன்னவர் இதன் நிறுவனர். ஆனால் அடுத்த தலைமுறையினர் துவக்கிய இந்த
காஃபி கடை தொழில் இன்று மிக பிரமாண்டமாக வளர்ந்த. அமெரிக்கா முழுவதும் 11200 கடைகளும்
உலகின் 43 நாடுகளில் பல கிளைகளுடன்
ஒரு தனி சாம்ராஜ்யமாகியிருக்கிறது
“சூட ஒரு கப் காஃபி கொண்டுவாங்க” என்று இவர்கள் கடையில்
ஆர்டர் செய்ய முடியாது. 20வகையான காபியை 160 வித முறைகளில் தயாரிக்கிறார்கள். அமெரிக்க
தேசத்தின் பல பகுதி மக்களின் ருசிக்கேற்ப பல
காஃபி வகைகளை பட்டியலிட்ருக்கிறார்கள்.அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பதை
உடனடியாக தயாரித்துக் கொடுக்கிறார்கள், இதற்ககாக
இந்த நிறுவனத்தின் கல்லூரியில் பயிற்சிபெற்று ‘காஃபி மாஸ்டர்’ பட்டம் பெற்றவர்கள் பணியிலமர்த்தப்ப்ட்டிருக்கிறார்கள்.
கடைகள் நகரின் முக்கியமான இடங்களில், எர்கண்டிஷன்,
எளிதான(வயர்லெஸ்)இண்டர்நெட்வசதி,வசதியான இருக்கைகள், இனியஇசை போன்ற வசதிகளுடன் இருப்பதால்
கடைகளில் எப்போதும் கூட்டம். அதிக காஃபி உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் என்பதை மறுக்கும்
இவர்கள் தங்கள் தாயரிப்பில் எந்த வகையில் எந்தமாதிரிப் பாலில் எவ்வளவு கொழுப்பு,எவ்வளவு
சக்கரை, எவ்வளவு கார்போஹைரேட் என்பதை பட்டியிலிட்டு தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து
ஆர்டர் செய்யுங்கள் என்று வாடிக்கயாளருக்கு அறிவுறுத்துகிறார்கள். “60லிருந்து110 வரையிலான கலோரியில் ,11கிராம் கொழுப்புசத்துடன்,திக்காக சக்கரை போடாமல் ஆனால் திதிப்புடன்,கொஞ்சம் விட்டமின்
D சேர்க்கப்பட்ட ஆர்கானிக் பாலில் ஒரு சின்ன கப் காஃபி தாருங்கள்” என்று கூட ஆர்டர்
செய்யலாம். இதற்காக இவர்கள் விற்கும் காஃபிகளில்
இருக்கும் கலோரி,கொழுப்பு,சோடியம், சக்கரை,
கால்சியம், இரும்பு, காஃபைய்ன் போன்றவைகளின் அளவுகளை குறிப்பிட்டு டைட்டியிஷயன் தருவது போல சார்ட் தருகிறார்கள். இதை ஆராய்ச்சி
செய்து மண்டையை உடைத்துக்கொள்ளும் கஸ்டமர்களுக்கு உதவி செய்ய தனி பணியாளார்களுமிருக்கிறார்கள். இதைத்தவிர சட்டென்று
தேர்ந்தெடுக்க 200 கலோரிகளுக்கு குறைவான 20சுவை யான தேர்வுகள் என்ற குட்டி லிஸ்ட்டும்
தருகிறார்கள்.
வேலைசெய்ய சிறந்த
பணியிடம் என ஃபார்ச்சூன்100 நிறுவனத்தால் தெர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தில்
வேலை செய்வோர் 1 லட்சத்திற்கும் மேல். கடந்த ஆண்டின் வர்த்தகம் 10,000பில்லியன் டாலர்களுக்கும்
மேல். இந்த நிறுவனம் பற்றியும்,இதில் பணி புரிவர்களுக்கு தரப்படும் சிறந்த பயிற்சி பற்றி யும் பல புத்தங்கள்
வெளிவந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் வெற்றியைப் பற்றிய கேஸ் ஸ்டெடியை உலகெங்கும் MBA மாணவர்கள் படிக்கின்றனர்.
சில ஆண்டுகளுக்கு வேலை நேரத்தை நீடித்து தொழிலாளர்களை
சுரண்டுகிறார்கள், லாபபணத்தை இஸ்ரேல் ராணுவத்திற்கு
போருக்காக உதவ அனுப்புகிறார்கள் போன்ற சர்ச்சையில் சிக்குண்டு சற்று ஆட்டம் கண்ட இந்த
நிறுவனம் அதை மறுத்து தங்கள தரப்பு நிலையை
விளக்க ,’வதங்திகளும்,உண்மைகளும்’ என்ற இணையதளத்தை துவக்கி நிலமையை பிரமாதமாக சாமாளித்தது..
இதை விட பிரபலமனாது திருமதி ஓஸாமா அணியும் உடையிலிருந்து,குளோபல் வார்மிங்
வரை அலசப்படும் ஸ்டார்பக் காஃபி ரசிகர்களின் ‘காஸிப்” என்ற இணையதளம்தான்.
ஸ்டார்பக் நிறுவனத்திற்கு சம்பந்தமில்லாமல் தனித்து இயங்கும் இதில் வெளியாகும் விஷயங்கள்
மக்கள் கருத்தின் பிரதிபலிப்பாக இருப்பதால் இதை பலர் கூர்ந்து கவனிக்கிறார்கள்.
மானேஜ்மெண்ட் குரு பீட்டர் டெரெக்கர் “ஒரு வியாபார
நிறுனத்தின்குறிக்கோள் வாடிக்கியாளர்களை உருவாக்கி
அவர்களை தக்க வைத்துக்கொள்வது தான்” என்கிறார். ஸ்டார்பக் நிறுவனம் அதை வெற்றிகரமாக
செய்து கொண்டிருக்கிறது.
V
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்