ஸரஸ்வதியின் ஆசிபெற்ற சச்சின்..
“கல்யாணமான புதிதில் கணவரோடு பம்பாயில் குடித்தனம் செய்யப்போனபோது வீடு
இருந்த அந்தத்தெருவில்பையன்கள்எப்போதும்கிரிக்கெட்விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டேயிருப்பேன்.
கிராமத்திலிருந்து வந்திருந்த எனக்கு அந்த விளையாட்டு புரியவேஇல்லை. கணவரிடம் கேட்டபோது
மிக பொறுமையாக, எளிதில் புரியும்படி சொல்லிக்கொடுத்தார். தொடர்ந்து ரேடியோ கேட்டுக்கேட்டு
நிறைய புரிந்து கொள்ளவைத்தார். டிவி வந்ததற்கு அப்புறம் நன்றாக இன்னும் நன்றாக புரிந்துகொண்டேன்.
என் கணவரைப்போலவே என் 2 பிள்ளைகளும் கிரிக்கெட் ஆட்டக்காரகளாக இருந்ததால் வீட்டில்
எல்லோருக்கும் கிரிக்கெட் நன்றாக புரியும். அனேகமாக எல்லா சர்வ தேச மாட்ச்களையும் விடாமல்
பார்த்திருக்கிறேன்” என்று சொல்லும் சரஸ்வதி வைத்தியநாதன் சச்சின் தண்டுல்கரின் அதி தீவிர ரசிகை.சச்சின் விளையாட ஆரம்பித்த நாளிலிருந்து
இன்று வரை அவரது சாதனைகள பற்றிய எந்த கேள்விக்கும் அனாசியாமாக பதில் தரும் இவரின் வயது
அதிகமில்லை. 87 தான்! இப்போது சென்னயில் மகனோடு
வசிக்கும் இந்த“ கிரிக்கெட் பாட்டியை” சந்திக்கிறோம். படுக்கை அறையில் சச்சின்
போஸ்டர். அருகில் சச்சின் பற்றிய புத்தகம்.தெளிவான ஆங்கிலம் அவ்வப்போது ஹிந்தி.
“முதலில் கவாஸ்கரின் ரசிகையாகத்தான் இருந்தேன். “ஞபகமிருக்கிறதா 1993 ஹிரோ
கப் மாட்ச் தெனாப்பிரிக்காவோடு மோதியபோது கடைசி ஒவர்-வெற்றிக்கு 6 ரன் தேவை என்ற நிலையில்
தய்ங்கிய அசாருதின் கையிலிருந்து பந்தை வாங்கி இந்த குட்டிபையன் செய்த பெளலிங்கில்
பேட்ஸ்மென் ரன் அவுட்டாக 3 ரன்னில் நாம் ஜெயித்தோமே-
அன்றிலிருந்து சச்சின்தான் என்னுடைய பேவரிட்.” என்று எதோ போன வாரம் பார்த்த மேட்ச்சைப்பற்றி
பேசுவது போல பேசுகிறார். அது மட்டுமில்லை தொடர்ந்து சாதனைகள் படைத்தாலும் மிக சிம்பிளாக,
தெய்வபக்தியுடன், சமுக சேவை செய்வதால் சச்சினை
நான் என் பேரனைப்போல மிக மிக நேசிக்கிறேன் என்று சொல்லும் இந்த பாட்டி கிரிக்கெட்க்கு
அப்பால் சச்சினைபற்றி பல விஷயங்கள்- அவர் பந்தராவில் பள்ளிக்கூடம் நடத்துவது,எழைகளுக்கு
படிக்க உதவது போன்ற பல தகவல்கள் தெரிந்திருக்கிறது. கிரிகெட்டைத் தவிர பிடித்தது டென்னிஸ்
.ரோஜரர் ஃபெடர்ர், பீட்டர் சாம்ராஸ் போன்ற ஜாம்பவான்களின் ஆட்டங்கள் பற்றி பேசும் இவர்
கிரிக்கெட் ஒரு விளையாட்டில் தான் பலவிதமான காட்ச்.,பேட்டிங் ஸ்டைல் என வெரைட்டி இருப்பதால்
அது தான் பெஸ்ட் கேம் என்கிறார். இரவு 1 மணியானாலும் சச்சின் விளையாடினால் கண் முழித்து
(வீட்டில் மற்றவர்கள் தூங்கினாலும்) பார்த்து கையிருக்கும் சிறுபேப்பரில் ஸ்கோர் விபரங்களை
குறித்து வைத்துகொண்டு அதை மறு நாள் நோட்டில் எழுதிவைக்கிறார். ஒரு முறை எழுதிய பின்னர்
அதை அவர் அந்த விபரங்களை மறப்பதில்லை..இந்த
வயதிலும் இந்த நினைவாற்றல் எப்படி சாத்தியாமகிறது? “விசேஷ பயிற்சி எதுவும் கிடையாது-
பகவான் அருள்’ என்னும் இவர் குடும்பத்தில் அனைவரது பிறந்த நாள், நேரம் சரியாக சொல்லுகிறார்.-
4வது பேரன் சச்சின் உள்பட. இரண்டு வயதில் அம்மாவின் பின்னால் மாடி படியேறி போய் கடைசிப்படியிலிருந்து
விழுந்ததும், முச்சுநின்றிருந்ததால் இறந்துவிட்டதாக எண்ணி எல்லோரும் அழுததும்,பின்
நினைவுவந்ததும் இன்றும் நினைவிருக்கிறது என்று சொல்லி ஆச்சரியப்படுத்தும் இவர் அதற்கு
பிறகு சச்சின் விஷயங்கள் தான் அந்த மாதிரி நினைவில் நிற்கிறது என்கிறார்.
ஆஸ்திரேலியாவிலிருக்கு பேரனை போய்பார்ப்பதைவிட சச்சினை நேரில் பார்த்தால் சந்தோஷப்படுவேன் என்று சொன்ன இவரது பேட்டியை ஹிந்து நாளிதழில் பார்த்த
சச்சின் IPL மேட்ச்சுக்காக சென்னை வந்தபோது அழைத்து சந்தித்தார். வரும் எப்பரல் 24ல்
பிறந்த நாள் கொண்டாடும் சச்சினுக்கு “இண்டெர்நேஷனல் கிரிக்கெட்டில் 100 செஞ்சுரி அடிக்க
இன்னும் 7 பாக்கியிருக்கிறது, சீக்கிரம் அதைச் செய்ய ஆசிகள்” என்று சொல்லி ஒரு சிறு வெள்ளிப்பிள்ளையாரை கொடுத்தபோது இவரின் காலைதொட்டு வணங்கி அதைப்பெற்றிருக்கிறார்
பிளாஸ்டர் மாஸ்டர். சச்சினை நேசிக்கு இவர் அவர் விளையாடும்போதெல்லாம் அவரது வெற்றிக்கு
பிரார்த்திப்பதில் ஆச்சரியம் இல்லை- இவர் இதுவரை ஒரு கிரிக்கெட் மாட்சைக்கூட ஸ்டேடியத்தில்
பார்த்ததில்லை என்பதுதான் ஆச்சரியம்.
சந்திப்பு- ரமணன்
கல்கி18.04.2010
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்