2/5/10

ஐ பிஎல்லில் அவுட்டான அமைச்சர்
“ஒரு பாகிஸ்தான் ஆட்டகாரரைக்கூட ஏலத்தின்மூலம் சேர்க்காதது தப்பு” என்ற சர்ச்சையில் துவங்கிய ஐபிஎல் 3 வதுசீசன் ஆர்பாட்டங்களான ஆட்டங்களுடன் தொடர்ந்து புதிய கொச்சி அணி எலத்தில் ஊழல் என்ற மற்றொரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது. வீரர்கள் நிகழ்த்தியதைவிட மிகப்பெரிய சாதனை ஐபிலின் தலைவர் லலித் மோடி வீசிய புகார்பந்துகளைபேட்செய்யமுடியாமல்  ஒரு மத்திய அமைச்சர் சசி தரூர் அவுட்டானது தான்.
விளையாட்டுத்துறையில் அமைச்சர்களின் தலையீடு, ஊழல் குற்றசாட்டு என்பதெல்லாம் இந்திய அரசியலில் புதிதான விஷயம் இல்லை என்றாலும், இதில் குற்ற சாட்டுகள் புதுமாதிரியானது.எழுந்த புகார்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் எல்லாமே புதிதானவை மட்டுமில்லை புரியாத புதிரானவைகளும் கூட. தினமொரு செய்திகளுடனும் திடுக்கிடும்திருப்பங்களுடனும், தொடர்ந்த இந்த விஷயம் கிரிக்கெட் மாட்ச்சுகளைவிட விறுவிறுப்பாகயிருந்தது. ஆனாலும் தெருக்கோடியில் விளையாடும் கிரிகெட் ஆடும் பையன்களிலிருந்து பெரிய அரசியல் வாதிகள் வரை இதில் சமந்தப்பட்ட “கோடிகளைப் ” பற்றி எழுப்பும் கேள்விகள் கிரிகெட் ரசிகனுக்கு மட்டுமில்லாமல் சாதரண மக்களுக்கும் புரியாத மர்மங்களாகத்தான் இருக்கிறது. 
மர்மம்1
மற்ற டீம்களைவிட மிகமிக அதிக விலையில் (333மில்லியன் டாலர்கள் கோடி ரூபாய்) ஏலமெடுக்கபட்டது இந்த கொச்சிஅணி.     வினாடிகளைக்கூட விணாக்காமல்,விளம்பரங்கலிருந்து கொட்டும் பணமழையினால் உலகம்முழுவதற்கான தொலைகாட்சி  ஐபிஎல்லின் உரிமைகள் பெரிய விலைக்கு விற்கபட்டிருக்கிறது. அதனால் ஐபிஎலின் மதிப்பபும் (18000 கோடிரூபாய்!) பங்குகொள்ளும் அணிகளின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்து விட்டது ஒவ்வொரு ஆட்டதிலும் தொடர்ந்த லாபம் நிச்சியம் என்பதால் இந்த விலை என்று பேசப்பட்டது. ஆனால் ஏலமெடுத்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் யார் என்று தெளிவாக ஏலத்திற்கு மனுச்செய்தவர்களுக்கு கூடத்தெரியாது என்று சொல்லுவது யார் தெரியுமா? ஐபிஎலின் கமிஷனருமும் ஏலத்தை நிகழ்த்திய குழுவின் தலவருமான லலித் மோடி! ஓரு சாதாரண பஞ்ஞாயத்தின் காண்டிராக்டை எடுப்பவர் கூட, காண்டிட்ராக்ட் கிடைத்தால் அந்த பணியை செய்ய தனது பொருளாதார தகுதியை நிருபிக்க சான்றுகள் சமர்பிக்கவேண்டும்.அப்படியிருக்க 300மில்லியன் டாலர்  பிசினஸ் எப்படி முகம்தெரியாதவர்களுக்கு வழங்கப்பட்டது?
மர்மம்2
ஏலமெல்லாம் முடிந்து 30 நாள் காத்திருந்து ஏன் திடுமெனலலித்மோடிபுகார்புயலைகிளப்பியிருக்கிறார்?  ஏலமெடுத்த தொகையை விட பல கோடிகள் மேலும் அதிகமாக கொடுத்து அவர் விரும்பிய மற்றொரு நிறுவனத்திற்கு உரிமையை மாற்ற அவர் செய்த முயற்சிகள் பலனளிக்காதால் எழுந்த கோபத்தின் விளைவு இந்த புகார் என்றும் சொல்லபடுகிறது. அப்படியானால் அந்த அணியின் உண்மையான மதிப்புதான் என்ன?

மர்மம் 3
தனியாக ஒருபெண் போராடி தொழில்செய்து முன்னேறுவதில் இவ்வளவு முட்டுகட்டையா?அமைச்சரின் தோழியாக இருப்பதற்கும் தனக்கு இலவசமாக கிடைத்த பங்குகளுக்கும் (மதிப்பு 70 கோடி) எந்த சம்பந்தமுமில்லை. அது தனது உழைப்பிற்கும், தொடரப்போகும் சேவைக்கும் கிடைத்தது என முழங்கிய இதில் சம்பந்தப்பட்ட ஒரேபெண் சுனந்தா புஷ்க்கர்        அதிரடியகாக தன் பங்குகளைதிருப்பிக்கொடுப்பானேன்?. ஓசியாக கொடுத்து அப்படி திரும்பப்பெறபட்ட பங்குகளை அந்த நிறுவனம் என்ன செய்யும்?
மர்மம்4
ஐபில் என்ற அமைப்பு பிசிசிஐ என்ற கிரிகெட் கட்டுபாட்டு வாரியத்தால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு. ஆனால் இந்த பிரச்சனைகளில் அந்த அமைப்பு எதுவும் தலையிடவில்லையே ஏன்.? அரசின் நிதித்துறையின் ஆணையால் வருமான வரி அதிகாரிகள் ஐபில் அலுவலகத்தை சோதனையிட்டபோது லலித்மோடி தர்மசாலாவில் தலாய்லாமாவை சந்த்தித்து விட்டு அங்கு நடந்த மாட்ச்சை பார்த்துக்கொண்டிருக்கிறார்.சோதனையே நாடகமா அல்லது வரி மோசடி எதுமில்லையா?
எப்படியோஅரசியல் கிரிகெட் மாட்ச் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சசிதரூர்ரைத்டொடர்ந்து வேறுயாரும் அவுட் ஆவார்களா? அல்லது தப்பாக பெளலிங் செய்ததற்காக  லலித்மோடியே ஆட்டதிலிருந்து மட்டுமில்லமால் இனி விளையாடும் தகுதியையே இழக்குமளவிற்கு தண்டிக்கபடப்போகிறாரா? டிவி அம்ப்பையர் மன்மோகன்சிங்  பார்த்து சொல்லபோவதை கேட்க இந்தியா காத்திருக்கிறது.கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்