or
செம்மொழியை
உலகறியச்செய்தவர்கள்
ஐரோப்பிய
நாடுகளிலிருந்து 17, 18 நூற்றாண்டுகளில் மதத்தொண்டாற்றவந்த
போதகர்களிலிருந்து இன்றைய வெளிநாட்டு ஆராய்ச்சிமாணவர்கள்
வரை
தொடர்ந்து
செம்மொழியின் பெருமையை உலகிற்கு
அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களில சில முன்னோடிகளை
இந்த
தருணத்தில்
நன்றியோடு
கல்கி நினவுகூறுகிறது
பார்தோலோமீயூஸ்
செயான்பலங் (ஜெர்மனி)
செம்மொழியை தம்மொழியாக நேசித்து
அதில் அரும் இலக்கிய பணியாற்றியிருப்பவர்களில் முதலிடம் பெற்றிருப்பவர் ஒரு
ஜெர்மானியர் என்ற செய்தி சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் அறியப்பட்டிருக்கிறது. ஜியூ
போப்பையும், கால்ட்வெல்ட்யும்,வீராமாமுனிவரையும் அறிந்த தமிழுலகம் அவர்களுக்கு முன்னதாகவே தமிழகம் வந்த பணியாற்றியிருக்கும்இவரை
அறிந்திருக்கவில்லை. காரணம் இவரது பணி ஜெர்மானியாரலேயே
மிக தாமதமாகத்தான் அறியப்பட்டிருக்கிறது. இந்திய மொழியான சமஸ்கிருத்தை ஜெர்மனியர்கள்
அறிந்து ஆராயும் 100 ஆண்டுகளுக்குமுன்னமே இவர் தமிழிற்கு அரும்தொண்டாற்றியிருக்கிறார்.
டேனிஷ் ஈஸ்ட் இந்திய கம்பெனி தரங்கபாடி கடல்பகுதியை தஞ்சை மன்னரிடமிருந்து
விலைக்கு வாங்கியருந்தது. பின்னர் அது டென்மார்க்
அரசின் பகுதியாக அறிவிக்கபடுகிறது.பின் டென்மார்க மன்னர் அந்த பகுதியில் கிருத்துவ
மதத்தை பரப்ப போதர்களை அனுப்ப முடிவு செய்தார். டேனிஷ் நாட்டவரில் யாரும் “மலேரிய பூமியான
மலபார் இந்தியாவிற்கு” (அப்போது ஐரோப்பாவில் இந்தியா அப்படித்தான் அறியப்பட்டிருந்தது
)தயாரகயில்லை. அண்டை நாடான ஜெர்மனியிலிருந்து
டென்மார்க் மன்னரின் விருப்பதிற்காக செய்தவர். பார்தோலோமீயூஸ் செயான்பலங் Bartholomaeus
Ziegenbalg .போகுமிடத்தில் முதலில் மொழியை நன்கு கற்று கொண்டு பிராசாரம் செய்து மக்களை மதம்
மாற்றுங்கள் என்ற கட்டளையுடன் 1706ல் வந்தவர் ,வந்த இடத்தில் கற்ற தமிழ் மொழியின்
அழகில் மயங்கி இராண்டாண்டில் அதில் செய்திற்கிற பணி நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 2000
வார்த்தைகளுடன் 1708ல்தமிழின் முதல் சொல் அகாராதியை
17000 வார்த்தைகளுடன் (ஜெர்மனியில் அச்சிட்டுவந்திருக்கி/றது) உருவாக்கியிருக்கிறார்.
இது தான் பின் வரும் பல சொல் அகாராதிகளுக்கு முன்னோடியாகயிருந்திருக்கிறது. தொல்காபியம்,
கொன்றைவேந்தன் நீதிவெண்பா போன்றவைகளை 119 ஒலைச்சவடியிலிருந்து படித்து மொழிபெயர்ததிருக்கிரார்.
அதை எளிய தமிழ் நடையிலும் சிறு புத்தனக்கள்கவும்
எழுதியிருக்கிரார்.
இலக்கியத்தைதாண்டி இவர் எழுதிய குறிப்புகளில்
அன்றைய காலகட்டதிலிருந்த நமது வாழ்க்கைமுறையை ஜெர்மன் மொழியில் பதிவு செய்திருக்கிறார்.
தினசரி தமது டைரியில் பார்த்தது, பாதித்தது, படித்தது போன்றவற்றை மிகத்தெளிவாக பதிவு
செய்திருக்கிறார். நமது திருமண முறைகள்(பல வித தாலி வகைகள் !) செருப்பணிந்து பல்லக்கிலிருக்கும்
மனிதனை செருப்பாணியாதவர்கள் தூக்கிப்போகும்
சமுகமுறை, சாதி ஆதிக்கம் திருவிழாக்கள் சடங்குகள்
அதற்காகவே ஆச்சரகோவை புத்தகம் ஒன்றிருப்பது இப்படி பல. தமிழரின் பண்பாடுகளை காட்டும் கால கண்னாடியாகயிருக்கும் இந்தகுறிப்புகளை
அவர் அவ்வப்போது ஜெர்மனிக்கு அனுப்பிவைத்டிருக்கிறார்.அவை இன்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது.
“தமிழர்களின் கலாச்சாரம் மிகபாரம்பரியமானது,
அவர்களின் மிகதொன்மையான மொழியில் பல அறிய இலக்கியங்கள் படைக்கபட்டிருக்கின்றன. இந்த
மொழி நமது பல்கலைகழகங்களில் போதிக்க்ப்படவேண்டும்,இது மலேரிய தேசமில்லை.மூடத்தடமான
சில்ச் மதச்சடங்க்குகளை பின்பற்றினாலும் வானசாஸ்திரம் கட்டிடக்கலை வரை பலவிஷயங்கள்
அறிந்தவர்கள் தமிழர்கள். இதை ஐரோப்பியர்களுக்கு தெரியபடுத்துங்கள்” என தன்னை இந்த பணிக்கு
அனுப்பிய பேராசிரியருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உங்கள் பணியை
மட்டும் செய்யுங்கள் என்று சொல்லி அந்த கடித்தை வெளியிடவேஇல்லை.
இவருடன் கூடவே இருந்து உதவிய தமிழ் இளைஞர்
தமிழர் மாலிய்ப்பன். மதம் மாறி பீட்டர் மாலியப்பன் ஆகிறார். அவர் இவரைவிட கில்லாடியாக்யிருந்திருக்கிறார்
என்பது இவர் குறிப்பிலிருந்து தெரிகிறது. சிலநாளிலியே ஜெர்மன் மொழியையை கற்று கொண்ட
அவர், பணிக்காலம் முடிந்து திரும்பிய பார்தோலோமீயூஸுடன் டென்மார்க் போய் அங்கு மன்னரின் அவையில்
ஜெர்மன் மொழியில் தமிழின் சிறப்புபற்றி உரையாறியிருக்கிரார்.
“அருமயாக பேசினார்” என்று தனது குறிப்பில்
எழதியிருக்கிறார் பார்தோலோமீயூ. செம்மொழிக்கு
ஜெர்மானியர்கள் ஆற்றிய பனிகள் குறித்து 2லட்சத்திற்குமேலான ஆவணங்கள் ஜெர்மன் ஹாலே நகரில்
பிரங்களின் பவுண்டேஷன் Francken's Foundation Archives in Halle, ஆவணக்காப்பகத்திலிருக்கிறது.
இவற்றில் பல இதுவரை தொடப்படாடதவை. தமிழின்,தமிழரின்
பெருமையை சொல்ல காலம் காலமாக ஆராய்சியாளார்களின் கண்னில்பட காத்திருக்கின்றன.
படம்:
கமில்வெய்த்
செல்லிபல்
செக்கோஸ்லோவிக்கியா (இப்போது செக்)வில் செம்மொழி ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது
என்பதைவிட அதற்கு வித்திட்டவர் செய்திருக்கும் தமிழ்ப்பணி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
செக் பலகலை கழகத்தில் 1952ல் இந்திய மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம் படிக்க துவங்கிய அந்த இளைஞனை மிக கவர்ந்தது
துணைப்பாடங்களில் ஒன்றான தமிழால் ஈர்க்கபட்டு, அதையே முழுவதுமாக கற்றிந்த இவர்
1959ல் அதில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். பல இந்திய மொழிகளையும் ஆர்வத்துடன்
கற்றிருக்கிறார்.திராவிட மொழிகளின் ஒற்றுமையை, தமிழ் பல பகுதிகளில்ம மாறுபட்டு பேசப்படுவது,பிற
மொழிச்சொற்களின் கலப்பு பற்றியெல்லாம் ஆரய்ந்திருக்கிறார். கமில்வெய்த் செல்லிபல்(Kamil
Veith ZVELEBIL)
தமிழக காட்டுபகுதிகளில் பயணம்செய்து அவர்கள் பேசும்தமிழ்,வரிவடிவம் இல்லாது
வழக்கிலிருக்கும் தமிழ். போன்றவகளை ஆராய்ந்து இவர் எழுதிய கட்டுரைகளில் மிக முக்கியமானது.
நீலகரி மலைப்பகுதி இருளர்கள் பேசும் மொழி தனியான ஒரு மொழி அது தமிழல்ல என்பது. இத்தகைய
ஆராய்சிகளுக்காக இவர் செலவிட்டது 5 ஆண்டுகள். செக்கொஸ்லோகியாவில் 1968ல் உள் நாட்டுப்போர்
துவங்கி ரஷ்ய படைகள் நுழைந்து அறிவுஜீவிகளுக்கு
ஆபத்து என்ற நிலை உருவானபோது அமெரிக்கா போன இவர் அங்கும் சிக்ககோ பலகலகழகத்தின் தமிழ்துறையில்
பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு பல்கலைகழகங்களில் பணியாற்றியபோது
ஜெர்மன் பல்கலை கழகங்களில் விஸிட்டிங் பேராசிரியாராக தமிழ் கற்பித்திருக்கிறார். போர்நிலவரம்
சரியானபின் தாய் நாட்டில் மீண்டும் தன் தமிழ் பணியைத் தொடர்ந்திருக்கிறார்
1970களில் தமிழ் பற்றிய இவரது
கட்டுரைகள் செக்மொழி மட்டுமில்லாமல் போலிஷ் மொழியிலும் வெளியாகி தமிழ்மொழிக்கும்,
தமிழர்களுக்கும் ஒரு பெருமையான அடையாளாத்தை அளித்திருக்கிருக்கிறது. சமகால இலக்கியங்கள்.சிறுகதைகள்,கவிதைகள் என பல மொழிபெயர்ப்புகளை
செக்க் மொழியில் அளித்திருக்கிறார். தமிழ் சார்ந்த 500க்கும் மேற்பட்ட படைப்புகளை படைத்திருந்தும்,
தமிழ்கூறும் நல்லுகில் அதிகம் அறியப்படாத இவரை செக் அரசும், பலகலைகழகங்களும் பராட்டி
பட்டங்களும் பதக்கங்களும் தந்து கெளரவித்திருக்கின்றன.
உலகின் தமிழ் சம்மந்தப்பட்ட பல
அமைப்புகளின் பணிகளுக்கு உதவியிருக்கும் இவர்
அந்த காலகட்டதில் சென்னையிலிருந்த தமிழ் மொழி ஆரய்ச்சி அமைப்பிலும்,தமிழ் கலாச்சார
மையத்தின் பணிகளிக்கும் பங்களித்திருக்கிறார்.
சென்புத்தமதத்தத்வதில் தீவிர நாட்டம்கொண்டு பிரான்ஸ் நாட்டில் தங்கி அதுபற்றிய
ஆராய்சியிலிடுபட்டிருந்த கே.வி செல்லிபெல் K. V.ZVELEBIL கடந்தாண்டில்(2009ல்) காலமானார். உலகமறிந்த ஒரு சிறந்த
மொழியில் அறிஞரை இழந்து விட்டோம். இது பேரிழப்பு என செக்நாட்டின் கல்வி அமைச்சகம் அறிவித்தது.
இழப்பு அவர்களுக்கு மட்டுமில்லை தமிழுக்கும்
தான்.
படம்:
டாக்டர்
பிரான்கோஸ் கோர்ஸ் (பிரான்ஸ்) Dr. Francois Gros
பிரான்ஸ்
நாட்டின் லாயன்ஸ் பல்கலை கழகத்தில் பிரென்ச்.,சமஸ்கிருதம்,லத்தின் கீரிக் மொழிகள் கற்று
MA பட்டம் பெற்ற பின் பாரீசுக்கு வந்து தமிழ் கற்றவர் பிரான்கோஸ்.தமிழையையும்.தமிழ்கலாசாரத்தையும்
தன்க்கு அறிமுகபடுத்திய தன் பேராசிரியரை இன்றும்
நினைவுகூறும் இவருக்கு வயது 75. பாண்டிச்சேரியில் பிரென்ச் இன்ஸ்ட்டிடுய்டில் ஆராய்ச்சி
பணியை தொடர்ந்த இவர் சிலப்பதிகாரம்,பரிபாடல்,பத்துபாட்டு பற்றி ஆராய்ந்திருக்கிறார்,
சமகால தமிழ் இலக்கியங்கள் பற்றி- தலித் இலக்கியங்கள் உள்பட பலவற்றை நன்கு அறிந்திருக்கும்
இவர் பரிபாடலை பிரெஞ்ச் சில் மொழிபெயர்த்திருக்கிறார். 8 ஆன்டுகள் செலவிட்டு செய்த
அந்த பணி பிரெஞ்ச் மொழியின் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான பரிசைப்பெற்றிருக்கிறது. திருக்குறள்.
காரைகால் அம்மயார் சரிதம் சைவசித்தாந்தகள் போன்ற் பலவற்றை பிரஞ்ச் மொழியில் மொழிப்யர்த்திருக்கிறார்.
சமகால இலக்கியத்திலிருந்து நிறைய தமிழ் சிறு கதைகளை கண்னன் என்ற ஆராய்சியாளரின் உதவியோடு
மொழிமாற்றம் செய்து அதை புத்தகமாக வெளியிட்டு தனக்கு முதலில் தமிழ் சொல்லித்தந்த ஆசிரியர் முனிசாமிநாயிடுவிற்கு அர்பணித்திருக்கிறார். திருவண்ணாமலை,உத்திரமேருர்
கல்வெட்டுகளை ஆராய்ந்து பிரெஞ்ச் மொழியில் எழுதியிருக்கிறார். தலித் தமிழிலக்கியம்
பற்றி நிறைய ஆய்வு செய்திருக்கிறார். டாக்டர் பிரான்கோஸ்
கோர்ஸ் ( Dr. Francois Gros)
தமிழ்தாத்தா உ. வே சாமிநாதர்களின் சீடர்களான கிவாஜ, ஆர்வி
சுப்பிரமணிஅய்யர் போன்றவர்களை நன்கு அறிந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த இவர், தமிழாராய்சியாளாராக
இல்லாத அவர்களைப் போன்றவர்கள் தமிழுக்குசெய்திருக்கும் பணியை வியந்து போற்றுகிறார்
தமிழைச் செம்மொழியாக்கி கெளரவித்தால் மட்டும்
போதாது. பெரிய அளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட வேண்டும், அதற்கு
நிறையஆராய்ச்சி, வெளிநாட்டவருக்கு தமிழ் கற்பிக்கும் முறை, எளிய வகயில் கற்க வசதியான
புத்தகங்கள் இப்படி பல விஷயங்கள் செய்யப்படவேண்டும்
எனசொல்லும் டாக்டர் பிரான்கோஸ்
கோர்ஸ் 1974ல் இலங்கையில்
நடந்த மாநாட்டை தவிர இதுவரை நடந்த எல்லா தமிழ் மாநாடுகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.
தமிழைகற்பிப்பவர்கள் மொழி மட்டுமில்லாமல் தமிழ் கலாசாரம்,சரித்திரம் பற்றியெல்லாம் கற்பிக்கவேண்டுமென்கிறார். தான் கிரேக்க மொழி கற்றபோது
அகழ்வாராய்ச்சி செய்ய்மிடத்திற்கே சென்று அறிந்ததை நினைவு கூறுகிறார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் தமிழையும், தமிழ்கலாசாரத்தையும்
நேசிக்கும் இவர் ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் வரையும் தொடர்ந்து ஆகஸ்ட் முதல் அக்டோபர்
வரையும் பாண்டிச்சேரியில் தங்கி ஆராய்ச்சியை தொடர்கிறார்.
படம
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்