13/6/10

புரியவைக்கிறார்கள்



“இனி எந்த ஒரு ஒவியனாலும் இப்படி ஒரு படைப்பை உருவாக்கமுடியாது.அந்த கண்களும் புன்சிரிப்பும் ஆயிரம் கதைகள் பேசுகின்றன.”                                                                    
“எனக்கென்னவோ அந்த சிரிப்பில் ஒரு சோகம் தான் தெரிகிறது.”
மாடல் - படம் எழுதும்போது கஷ்டத்துடன் உட்கார்ந்திருப்பது அந்த இறுகிய முகத்தைப்பார்த்தால் தெரியவில்லை?”
“அந்த கைகளை அப்படி வைத்துக்கொண்டு சிரிப்பவர்கள் எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தம்”
“அவர் சிரிக்கவேஇல்லை முகத்தில் கோபம் தெரிகிறது”
பாரீஸ் நகரின் லூவர்(LOUVRE Palace)------ அரண்மனையின் அருங்காட்சியகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம்பேருக்குமேல் பார்க்கும் மானோலீஸாவின் படத்தை பார்த்தவர்களில் சிலரின் விமரிசனம் இவை.ஓவியன் லியோனா டார்வென்ஸியின் இறுதிப்படைப்பான இதன் வரலாறு சுவையானது. கடவுள், மதத்தலைவர்,மன்னர் போன்றவர்கள் மட்டுமே படமாக எழுதப்பட்ட காலத்தில்  500 ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்டு இன்று வரைப்பேசப்படும் ஒரு தனி நபரின் ஓவியம் இது ஒன்று தான். தொங்கவிடப்படும் ஆணியிலிருந்து படத்தின் பிரேம்சட்டம் வரை சிறந்த வல்லுனர்களால் அவ்வப்போது புதுப்பிக்கபட்டு பாதுகாக்கபடும் இந்த ஓவியம் உலகின் சிறந்த கலைப்பொக்கிஷமாக பாதுகாக்கபட வேண்டுமென்று அகில உலக ஒவியர் சம்மேளனத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு  குண்டு துளைக்கமுடியாத கண்ணாடி கூண்டு, 24மண நேர cctகாமிரா கண்காணிப்பு, பல மில்லியன் டாலர்களுக்கு இன்ஷ்யரன்ஸ் என்று பாதுகாப்பாக இருக்கும் இந்த ஒவியம்          1911ம்ஆண்டு காணமல் போயிருக்கிறது. திருடியவர் ஒரு இத்தாலி நாட்டு  சாதாரண ஒவியர். படத்தை பிரதி எடுத்து விற்றுக்கொண்டிருந்தார்.  2 ஆண்டு கழித்து மாட்டிக்கொண்டபோது ‘ஓவியனும், மாடலும் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கும்போது இது பிராண்ஸில் இருப்பது தவறு என்பதால் நம் நாட்டிற்கு கொண்டுவந்துவிட்டேன்’ என்று சொன்னதால் அவரின் தேச பக்தியை பாராட்டி விடுதலை செய்துவிட்டார்கள்.!
படத்தின் இந்த சுவாரஸ்யமான கதைகளைவிட, மானோலீஸாவின் மர்ம புன்னகையைப்ற்றி நடந்த ஆராய்ச்சிகளும், தகவல்களும்  தான் மிக சுவாரஸ்சியமானவை.
 2005ஆம் ஆண்டின் இறுதியில் ஆம்ஸ்ட்டர்டாம் பல்கலைகழகம்(நெதெர்லண்ட்) புகைப்படங்களிலிருந்து அதில் இருப்பவரின் உனர்ச்சிகளை புரிந்துகொள்ள ஒரு மென்பொருளைத்தயாரித்திருந்தது. போட்டோக்களில் பயன் படுத்தி வெற்றிபெற்ற அதை இந்த ஒவியத்தில் பயன் படுத்தி பல நாட்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவித்த முடிவு. “மோனாலீஸா புன்னகை சந்தோஷமான புன்னகைதான். அந்த முகம், 83% சந்தோஷம்,9%வெறுப்பு,6%பயம்,2%கோபம் என்ற கலவையில் இருக்கிறது. கண்களின் ஒரத்தில் தெரியும் சிறிய சுருக்கம்,உதடுகளின் மெல்லிய வளைவு எல்லாம்  ஒரு சாராசரிப் பெண் சந்தோஷத்தில் இயல்பாக சிரிக்கும்போது எற்படுபவைதான்”

அறிவிக்கப்பட்ட முடிவு ஒவிய கலைஞர்களிடமும், கலைவிமர்சகர்களிடம் சர்ச்சயை அதிகரிகச்செய்ததே தவிர  இறுதி விடையாக எற்றுகொள்ளபடவில்லை. கடந்த ஆண்டு(2009) அக்டோபர் மாதம் ஸ்பெயின் நாட்டின் நரம்புமண்டல ஆராயச்சியாளார்களின் பயிற்சிக்கூடம் தங்களது ஆராய்ச்சியின்  பல கட்ட சோதனைகளின் முடிவில் மோனாலீஸாவின் புன்னகையின் மர்மத்தைக்கண்டு பிடித்துவிட்டோம். என அறிவித்தது.  “மோனலீஸா புன்னகைக்கிறாரா,இல்லையா என்பது பார்ப்பவரின் கண்களிலுள்ள ரெட்டினா செல்களில் பதியும் பிம்பத்தையும்,அது மூளையைச் சென்று அடையும் பாதயையும் பொறுத்தது.சில சமயங்களில் ஒரு பாதைவழியாகச் செல்லும்போது சிரிப்பதுபோலவும் மற்றொரு சமயம் வேறு பாதைவழியாக பிம்பம் மூளையை அடையும்போது சிரிக்காத மாதிரியும் தெரிகிறது.ஒருவினாடியில் 100ல் ஒரு பங்கு நேரத்தில் இது நடைபெறுகிறது. ஓவ்வொரு மனிதனுக்கும் இது,மாறும்- சில சமயம் ஒரே மனிதருக்கே கூட இரண்டு பாதைகளும் மாறி வேலை செய்யும். அதன் விளவு தான் இந்த தோற்றம்’ என்று சொல்லுகிறார் இந்த ஆராய்சிக்கு தலமையேற்ற லூயிஸ் மார்டின்ஸ் ஓட்டீரோ என்ற நரம்பியல் விஞ்ஞானி. மோனாலீஸாவின் படத்தை பல மாறுபட்ட பெரிய சிறிய வடிவங்களில் வெவ்வேறு தூரங்களிலிருந்து பங்கேற்பவர்களைப் பார்க்கச்செய்து இதை நிருபிக்கிறார்  “ஒரு படத்தின் மிகச்சரியான நடுப்புள்ளியிலஇருந்துதான் பிம்பம் ரெட்டினாவில் பதிய ஆரம்பிக்கிறது.மின்னலைவிட வேகமாக நமது மூளையில் பதிவதற்குள் பாதை மாறினாலோ அல்லது ரெட்டினா சற்றே நகர்ந்தாலோ படத்தின் நடுப்புள்ளி நம்  மூளையில் பதியாது. ஓவியத்தின் சரியான நடுப்புள்ளியில் புன்னகையை எழுதியிருப்பது தான் ஒவியனின் திறமை” என்கிறார். இவர்.
லியானோடார்வென்ஸீ திட்டமிட்டு இதைச் செய்திருப்பாரா? வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் இந்த ஒவியனைப்பற்றி ஆராய்ந்தவர்கள். “ஓவியம்,கட்டிக்டகலை,பொறியில்துறை, வானசாஸ்த்திரம், பூவியல் இப்படி பல துறைகளில் பிறவி மேதையாக, நிபுணராகயிருந்தவருக்கு இது ஒரு பெரிய விஷயமாகயிருந்திருக்காது., இன்றைய முப்பரிமாண(3 –D) படங்கள் பற்றிய அவரது கையெழுத்தில்  எழுதிய குறிப்புகள் கூட  சமீபத்தில் கிடைத்திருக்கிறது”



 
இந்த முடிவிற்கு ஒவிய உலக ஜாம்பவான்கள் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விஷயங்களை அறிந்த பின்  மீண்டும் மோனாலீஸா ஒவியத்தைப் பார்க்கும்போது “ஏன் இந்த ஆராய்ச்சியெல்லாம்?” என்ற தொனியில் அவர்  சிரிப்பது போலத்தானிருக்கிறத
(கல்கி13.06.10)
Ka(க்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்