உலக கோப்பை
கால் பந்தாட்டத்தின் கதாநாயகன் பால்
உலக காலபந்துதிருவிழாவில் போட்டியிட்ட 204 நாடுகளில் தகுதியான 32 நாடுகளுக்கான
இறுதி சுற்று போட்டிகள் ஒருமாதமாக தெனாப்ரிக்காவில்
நடந்தன. 30 நாட்கள் 30 லட்சம் பேர் நேரிலும் பலகோடி மக்கள் உலகம்முழுவதிலும் டிவியிலும்
பார்த்துகொண்டிருந்த இந்த விளையாட்டுகளின்
கதாநாயகன் ஒரு ஆட்டகாரரோ அல்லது கோச்சோ இல்லை. பால்(PAUL) என்ற ஆக்டோபஸ் தான். கடல் வாழ் உயிரினமான
ஆக்டோபஸுக்கும் கால்பந்தாட்டதிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?- அது சொன்ன ஆருடம்
தான்.
மேற்கு ஜெர்மனியில் ஓபர்ஹௌசென்(Oberahausen) நகரிலிருக்கும் ஸீ லைஃப்(sealife) என்ற கடல்வாழ் உயிரினங்களின் கண் காட்சி உலகப்புகழ்பெற்றது.
3000 சதுர மீட்டர்பரப்பில் 20000க்கும் மேற்பட்ட கடல்வாழ் இனங்கள் சின்ன நத்தையிலிருந்து திமிங்கலங்கள் வரை இந்த பிரம்மாண்ட
உலகில் வாழ்கிறது.. கண்ணாடி சுவர்களாலான அதன் நீண்ட குகைப்பாதையில் போகும்போது
அத்தனைவிதமான கடல்வாழ் இனங்களும் தொட்டுவிடும் தூரத்தில் நீந்திக்கொண்டிருப்பது
பார்ப்பவர்களுக்கு நனையாமல் கடலுக்குள்ளேயே நடந்து போகும் உணர்வைத்தருவதால் உலகெங்குமிருந்து
டூரிஸ்டுகள் வருகிறார்கள்.. இந்த கண்காட்சியில் இருக்கும் ஒரு ஆக்ட்டோபஸ் தான் ‘பால்’. ஜெர்மனி ஆடிய அத்தனை மாட்சிகளின்
முடிவையும் முன்கூட்டியே சொன்ன ஜோஸ்யர். எப்படி இது ஆருடம் சொல்லுகிறது? ஒரு நீண்ட
கம்பியின் முனையில் இரண்டு சிறிய கண்னாடி பெட்டிகள் பொருத்தப்படிருக்கும் கண்ணாடி பலகையை
ஆக்டோபஸ் வாழும் கூண்டின் அடிப்பகுதிக்கு இறக்குகிறார்கள்,
மூடப்பட்டிருக்கும் அந்த பெட்டியின் பக்கங்களில் போட்டியிடும் நாடுகளின் கொடிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன.
கூண்டின் தரைப்பகுதியில் கடல் தாவரங்களுடன் ஒரு சின்ன புட்பாலும் இருக்கிறது. கண்ணாடி பெட்டியின் உள்ளே ஆக்டோபஸுக்கு உணவு இருக்கும். அந்த பெட்டிகளை
வைத்தவுடன் ஆக்டோபஸ் சில நிமிஷங்கள் ஆராய்ந்து ஒருபெட்டியின் மூடியை திறக்கும். முதலில்
திறக்கப்படும் பெட்டியில் எந்த நாட்டின் கொடியிருக்கிறதோ அது தான் அன்றைய போட்டியில் ஜெயிக்கும். ஜெர்மனி, இங்கிலாந்து,
தைவான் நாடுகளில் இது டிவியில் நேரடியாக ஒளிபரப்பானது
நாலுஜோடி கரங்களுடனும்(கால்களும் அதுதான்)இரண்டுகண்களுடனும் இருக்கும்
ஆக்டோபஸ்களில் 300 வகைகள் இருக்கின்றன. கடல்வாழ் உயிரினங்களிலியே மிக புத்திசாலிகளாக
கருதப்படுபவை.ஒலி, ஒளி வண்ணம் எல்லவற்றையும் உணரும் சக்திஉள்ளவை,அவைகளால் யோசிக்கமுடியும்
என்றெல்லாம் பல ஆராய்சிகளில் கண்டுபிடித்திருக்கிரார்கள். ஆனாலும்
‘அதற்கு ஜோஸ்யம் சொல்லும் அளவிற்கெல்லாம் திறமை கிடையாது. இதெல்லாம் தற்செயல்’
என்று சொல்லுபவர்களால் ‘அப்படியானால் 2008ல்
நடந்த ‘யூரோ’ என்ற போட்டி ஆட்டங்களில் ஒரே ஒரு முடிவைத்தவிர மற்ற எல்லாவற்றையும் இதே மாதிரி கணித்து சரியாக சொல்லிற்றே அது எப்படி?’
என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லமுடியவில்லை. உலககோப்பை செமிபைனல் ஆட்டத்தில் ஜெர்மனி
ஸ்பெயினுடன் மோதியது. அந்த ஆட்டதில் ஸ்பெயின் ஜெயிக்கும் என்று ஆக்டோபஸ் சுட்டிகாட்டியதை
கண்டு அதிர்ந்தபோனார்கள் ஜெர்மன் மக்கள். “ஆக்கடோபஸ் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது”
நன்றாக ஆடுங்கள்” என்ற உற்சாக பேனருடன் காலரியில் காத்திருந்தனர் .ஆட்டம் துவங்க சில
மணிநேரங்களுக்குமுன் இந்தியாவில் ஆங்கில சானலுக்கு(NDTV)
பேட்டியளித்த இந்தியாவின் ஜெர்மன் தூதுரும் மிக உற்சாகமாக ஜெர்மனி ஜெயிக்குமென்றார்.இவர்
முன்னாள் கால்பந்தாட்ட வீரர். பேட்டிகண்டவர் ஆக்டோபஸின் ஆருடம் பற்றி கேட்டார். 2008ஆண்டு
மாதிரி ஒரு தவறு செய்துவிட்டது. இன்றைய ஆட்டத்தில்
நாங்கள் ஜெயிக்கிறோம் என்றார். ஆனால் ஜெயித்தது என்னவோ ஆக்டோபஸ்தான். அது ஆருடம் சொன்னபடி
ஸ்பெயின்தான் செமிபைனலில் ஜெயித்தது.
கொதித்துபோன ஜெர்மன் ரசிகர்கள் அதை கடலில்போடுங்கள்,கறிபண்ணி சாப்பிடுங்கள்
(எப்படி பண்ணலாம் என்ற ரெசிப்பிவேறு) என்றெல்லாம் வலைபூக்களில் எழுதித்தள்ளிவிட்டார்கள்.
‘ஐயோ அப்படியெல்லாம் எதாவது பண்ணித்தொலைத்துவிடாதீர்கள். எங்களிடம் கொடுங்கள் நாங்கள்
பாதுகாக்ககிறோம் என்று ஸபெயினின் பிரதமர் ரேடியோவில் பேசினார்.. கால்பந்துவிசிறிகள் மட்டுமில்லாம் பிரதமர்கள்,,தூதர்கள்
என்று எல்லோராலும் பேசப்படுமளவிற்கு ஆக்டோபஸ் ‘பால்’ உலகப்புகழ்பெற்றுவிட்டது. மூன்றாவது
இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனியும் இறுதிஆட்டத்தில் ஸ்பெயினும் ஜெயிக்கும் என்று இது சொல்லியிருந்தபடியே அந்த விறுவிறுப்பான ஆட்டங்களின்
இறுதி நிமிடங்களில் நடந்தது.
ஆக்ட்டோபஸ் பால் புத்திசாலியோ இல்லையோ ஆனால் அதன் மூலம் உலகின் கவனத்தை தங்கள் பக்கம்
திருப்பிய ஜெர்மனி ஸீ லைஃப் கண்காட்சி நிர்வாகிகள் நிச்சியமாக புத்திசாலிக
|
|
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்