22/8/10

சென்னைக்கு ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னைக்கு  ஹேப்பி பெர்த்டே.. . . .


சென்னை நகர்  1639  ஆகஸ்ட் 22ல் பிறந்தது என கண்டுபிடிக்கபட்டு, 2004 ஆண்டுலிருந்து அந்த நாளில்  “சென்னை டே” கொண்டாடப்படுகிறது. முதல் ஆண்டு மூன்று  நிகழ்சிகளுடன் துவங்கிய இது “சென்னை வாரமாகி”  இந்த ஆண்டு, புகைப்பட, ஒவிய கண்காட்சிகள்,இசை நடனவிழாக்கள், கருத்தரங்கு  கூட்டங்கள் குறும்படங்கள் என நகரின் பல இடங்களில் 60 நிகழ்ச்சிகளுடன் நகரின் பல அமைப்புகள் கொண்டாடினார்கள். ரோஜா முத்தையா நூலகமும்  சிறப்பு கூட்டங்களை நடத்தியது.. அதில் “இருளில் கனவு உலகம்- சென்னையின் சினிமா அரங்குகள்” தலைப்பில் தமிழ் சினிமா வரலாற்று ஆராய்சியாளரான திரு தியோடர் பாஸ்கர் பேசியதிலிருந்து.. ..
v  சென்னையில் முதல் சினிமா 10 நிமிட பேசா படம். எக்மோர் அருகே ஒரு டெண்ட்டில் வெள்ளகாரகளால் காட்டபட்டது. மின்சாரமில்லாமல்  எரியும் மக்னீஷ்ய நாடாக்கள் ஒளியில் காட்டபட்டது.தெரு ஒரங்களில் துவங்கி, பின்னர் மத்தியான நேரங்களில் காலியாகயிருக்கும் நாடக அரங்ககளில் காட்டபட்டது.
v  வெள்ளையர்களிடமிருந்து இதை கற்ற  வின்ஸென்ட் சாமிகண்ணு என்பவர்1905ல் இந்த முறையில் நாட்டின் பல பகுதிகளிக்கு டெண்ட்டுடன் பயணம்செய்து படங்கள் காட்டியிருக்கிறார். வடஇந்தியாவில் பெஷாவர் வரை பயணித்து படம் காட்டி ஈட்டிய பணத்தில்தான் கோய,ம்புத்தூரில் ‘வெரைட்டி ஹால்’ என்ற அரங்கை கட்டியிருக்கிறார்.
v  சென்னையின் முதல் மூன்று அரங்கங்கங்களும்  ஒரே ஆங்கிலேயரால் முழுக்க முழுக்க வியாபர நோக்கில் கட்டபட்டிருந்தது. தீண்டாமை மிக பரவலாக இருந்த அந்த காலகட்டத்தில்  திரைப்பட அரங்குகள் தான்  சம உரிமை நிலவியிருந்திருந்த முதல் பொது இடம். ஜாதிமத பேதமில்லால் ஆங்கிளேயர்களும் எல்லா ஜாதி இந்தியர்களூம் ஒன்றாக படம் பார்த்திருக்கின்றனர்.
v  சினிமா அரங்கங்கள் தான்  கம்பெனி நாடகங்களுக்கு மாற்றான ஒரு பொழுதுபோக்கு சாதமாக வளர்ந்ததால் அது நாடககம்பெனி  பழக்கங்களை அடியொற்றி துவக்கதில் மணி அடிப்பது,இடைவேளைவிடுவது எல்லாம் கடைபிடிக்கபட்டது. இன்று உலகளவில் கடைப்பிடிக்கும் சினிமாவில் இடைவேளை என்பது சென்னையில்தான் துவங்கியிருக்கிறது. இடைவேளயில் தின்பண்டங்களை இருந்த இடத்திற்கே வந்து விற்பனை செய்யும் வழக்கமிருந்ததால் அது ஒரு தனி தொழிலாகவே வளர்ந்திருக்கிறது.
v  துவக்கத்தில் சினிமாவை மக்களை தூண்டும் பெரிய சக்திவாய்ந்த  ஒரு ஊடகமாக பிரிட்டிஷ் அரசு நினைக்கவில்லை. அதனால்  சினினா குறித்து எந்த சட்டமுமில்லை. மாக்னீஷ்ய நாடாக்கள் பயன் படுத்துவதால் அரங்கங்களில் தீ விபத்து அபாயம் கருதி பாதுகாப்பு விதிகள் மட்டும்  உருவாயின. சினிமாவில் புராண சரித்திர பாத்திரங்கள் கூட கதர் தொப்பி அணிந்து மறைமுகமாக தேசிய விடுதலை விஷயங்களைப் பேச ஆராம்பித்த பின்னர், சினிமா வந்து 20 ஆண்டுகளான் பின்னர்தான் சென்சார் முறை அறிமுகபடுத்தபட்டது. போலீஸ் கமிஷனர் தான் சென்சார் அதிகாரி.


v  அண்ணல் தன் வாழ்நாளில்  சினிமா அரங்கிற்கு சென்றதில்லை.. அவர் வந்த ஒரே சினிமா அரங்கம் சென்னையிலுள்ள   மிட்லாண்ட் அரங்கம். . அன்றைய சென்னை பல்ககைலலகழக மானவர்கள் அவருக்கு ஒருவரவேற்பு கொடுத்த இடம் அந்த சினிமா தியட்டர். அரங்கத்திலேயே  அந்த வரவேற்புரை பத்திரத்தை  ஏலமிட்டபொழுது அதை வாங்கியவர் சுதந்ததிர போரட்ட வீரர் திருமதி  லஷ்மி சாமிநாதன்.அந்த சமயத்தில் முழு ஏலத்தொகைக்கும் அவரிடம் பணமில்லாதால் தன் தங்க கைவளையல்களை கழட்டிகொடுத்தார்.கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்