8/8/10

நெசவுத்தொழிலின் நிஜங்கள்



               நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 3


இன்றைக்கு  மற்ற எந்த தொழிலையும் விட மிக பாதிக்கபட்டிருப்பது நெசவுத்தொழிலின் மிக முக்கிய அங்கமான நூற்பாலைகள் தான். பல ஆலைகள் நஷ்டத்திலோ அல்லது மிக  குறைந்த லாபத்திலோ தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் சுமை ஏறிக்கொண்டேயிருக்கிறது. மற்ற தொழிளார்களைவிட அதிகம் ஊதியம் பெறுபவர்கள் நூற்பாலைததொழிலாளிகள். ஆனால் அதிகமான தொழிலாளர் பிரச்சனையும் இதில் தான். கடுமையான மின்வெட்டுஅறிவிக்கபட்டது 30% தான் ஆனால் உண்மையான மின்வெட்டு 50%. இதனால் உற்பத்தி பாதிக்கபட்டாலும் தொழிலாகளுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். ஏறிக்கொண்டே போகும் டீசலின் விலையினால் ஜெனரேட்டர் இயக்கத்தின் செலவு மூன்று மடங்கு உயர்ந்திருக்கிறது.  அதுமட்டுமில்லை நல்ல வகை பஞ்சு நேரடியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது இதனால் தொடர்ந்து பஞ்சு  ஒரே விலையில் கிடைப்பதில்லை தரமும் வேறுபடுகிறது.. தயாரிக்கும்   நால் விற்பனை விலை மாறுபடுகிறது என்கிறது நூற்பாலை அதிபர்களின் தரப்பு. உலக அரங்கில் இந்திய ஜவுளித்துறையின் மிகப்பெரிய பலமே பருத்தி உற்பத்திதான் உலகின் பருத்தி உற்பத்தியில் நமக்கு இரண்டாவது இடம்..சுமார் 300 லட்சம் பேல்கள் (ஒரு பேல் 170கிலோ) இந்தியாவில் விளைவிக்கப் படுகிறது. ஆனாலும் பருத்தி விவாசயிகளின் அவலநிலை இன்னும் அப்படியேயிருக்கிறது. எனபதுதான் உண்மை..1997லிருந்து-2007 விளைவித்த பருத்திக்கு ஏற்ற விலை கிடைக்காமல்கந்துவட்டிகொடுமையினால் தற்கொலை செய்துகொண்ட பருத்திவிவசாயிகள் ஒரு லட்சத்து 80ஆயிரம்பேர் என்பது பாராளுமன்றத்தில் பதிவான செய்தி. ஆனால் இடைத்தரகர்களும் பஞ்சாலை அதிபர்களும் பஞ்சு ஏற்றுமதி செய்து  கொள்ளை லாபம் ஈட்டியிருக்கின்றனர்


பஞ்சாலைகளின் நேரடி பஞ்சு ஏற்றுமதி  நூல் விலையேற்றத்திற்கு  ஒரு காரணம் என்று சொல்லும் இந்த நூற்பாலைகள் செய்தது என்ன தெரியுமாதரமாக தயாரிக்கபட்ட நூலையே எற்றுமதி செய்ததுதான். பெரும் மூலதனத்தில் கட்டமைப்பும்பல லட்சகணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கும் நெசவுத்தொழிலின் முக்கிய இடுபொருளை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யாமல் ஏறுமதி செய்ய கற்றுகொடுத்திருக்கிறது அரசின் உலகமயமாதல் கொள்கைகள்.  இதைவிட அதிர்ச்சியான விஷயம் இந்த நூலை வாங்கும் பங்களாதேஷ்வியாட்நாம்பாக்கிஸ்தான்சீனா போன்ற நாடுகள்  சர்வேதேச  ஜவுளிஆயுத்த ஆடைகளின் ஏற்றுமதி மார்க்கெட்டில் நமது போட்டியாளர்கள். நமது நூலை வாங்கி அதில்  துணி உற்பத்தி செய்து நாம் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நாடுகளுக்கே குறைந்த விலையில் விற்கிரார்கள் இந்த புத்திசாலிகள். இதற்கு உதவிக்கொண்டிருக்கின்றன நமது ஆலைகள். ஏற்கனவே   உருகிஓடிகொண்டிருக்கும் உலக பொருளாதாரவீழ்ச்சியில் டாலர் மதிப்பு 13 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததால்  நமது துணி ஏற்றுமதியாளருக்கு  13% வரவுஇழப்பு என்பதோடு  வரும் காலத்தில்  மார்கெட்டையும் இழக்கும்  அபாயமிருக்கிறது. .இந்த ஆண்டு இந்தியாவில் நால் விலையின் இந்த வரலாறு காணாத விலைஏற்றத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் ஏற்றுமதி கொள்கைகள் தான் என்பதை தொடர்ந்து நாங்கள் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம் என்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சியின் அறிக்கை. 2009 செப்படம்பரிலிருந்து நவம்பருக்குள்ளாக ஒரு பேல் `22000லிருந்து 25000 உயர்ந்துவிட்டது. உடனடியாக பஞ்சு ஏற்றுமதியை நிறுத்தவேண்டும் என கோவை தென்னிந்திய மில்சங்கம்,ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகம்இந்திய ஜவுளி கூட்டமைப்புஎல்லாம் மத்திய அரசை வேண்டின. “ தொழிலில் ஈடுபட்டுள்ளோர் தேவையில்லாமல் பீதி அடைந்துள்ளனர். நமது நாட்டில் போதுமான பருத்தி உற்பத்தியுள்ளது பருத்தி  ஏறுமதியை தடை செய்ய வேண்டிய அவசியமேயில்லை என்று அமைச்சர் மாறன் 2009 டிசம்பரில் அறிவிக்கிறார். ஆனால் 2010 ஏப்பரல் மாதத்தில் ஜவுளித்துறை உள்நாட்டு  நூற்பாலைத்தொழிலுக்கு மூலப்பொருள் பற்றாகுறையிருப்பதால் ஏற்றுமதிக்கு தீர்வை விதிக்கபடவேண்டும் என்று பரிந்துரைப்பதால் பஞ்சு ஏறுமதிக்கு தீர்வை என மத்திய நிதிஅமைச்சகம் அறிவிக்கிறது. இதை கடந்த ஆண்டு நவம்பர் மாதமே செய்திருந்தால் இந்த  நூல் விலை உயர்வு வந்தேயிருக்காதுஎன்பது துறையிலிருக்கும் பலரின் ஆதங்கம். ஏற்றுமதி தீர்வை நிலமையை முழுவதும் சமாளிக்க உதவாது. இந்த ஆண்டு விளைந்த பஞ்சில் 81% சதவீதம் தான் வெளியே வந்திருக்கிறது 19 சதவீதம் பதுக்கபட்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் வருமாண்டு  வரப்போகும் பஞ்சு பற்றாகுறையை பணமாக்கி கொள்ள அஹமதாபாத் பஞ்சாலை லாபி திட்டமிட்டிருக்கிறது. அதனால் அடுத்தாண்டும் நூல்விலை குறைய வாய்ப்பில்லை என்கிறது  ஒரு ஆராய்ச்சி கட்டுரை.

நெசவுத்தொழில் சார்ந்த சங்கிலித்தொடரான தொழில்களில் ஈடுபட்டுள்ள பருத்திவிவசாயிகள்ஜின்னிங் தொழில் உரிமையாளர்கள்பஞ்சுவர்த்தகர்கள் நூற்பாலை உரிமையாளார்கள்கைத்தறிவிசைத்தறி தொழிலாளார்கள் ஏற்றுமதியாளார்கள் என அனைவரும் சிக்கிய நூல்கண்டாக தவிக்க வைக்கும் இந்த நூல் பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
ஜவுளிதொழிலில் நீண்ட அனுபமுள்ள ஆலோசரின்  ஆலோசனைகள் அடுத்த வாரம்... ..
_________________________________________________________________________________

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்