15/8/10

நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


நெசவுத்தொழில் பிரச்சனைகளின் நிஜங்கள் 4


திரு.  M. நடராஜன் டெல்லி  IITயில். டெக்ஸ்ட்டையல் டெக்னாலாஜியில் M.Tec படித்திருப்பவர். கடந்த 15 ஆண்டுகளாக ஜவுளித்துறை ஆலோசகராகயிருப்பவர். புதிய ஆலைகளை உருவாக்குவதற்கும் நலிந்த ஆலைகளை சீரமைத்து புத்துயிர் தருவதற்கும் ஆலோசனைகள் வழங்கும் நிபுணர். இந்த பிரச்ச்னையை ஆழமாக ஆராய்திருப்பவர். அவர்
சொல்லும் திர்வுகள்;
1.            .ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் துவக்க பருத்தி இருப்புபருத்தி உற்பத்திபருத்தி இறக்குமதிஉள்நாட்டு ஆண்டுத் தேவைஆண்டு இறுதி இருப்பு ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி பருத்தியை மட்டும் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டின் இறுதி இருப்புஅந்த ஆண்டு உள்நாட்டுத் தேவையில் எவ்வளவு சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற மதிப்பீடும் சரிவர நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இந்த ஆண்டுக்கான இறுதிக் கையிருப்பை நிர்ணயம் செய்வதில் தவறிழைத்தால் அடுத்த ஆண்டு பருத்தி விளைந்து உற்பத்தியாகும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும். சீன நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டு இறுதி இருப்பாக அந்த ஆண்டுத் தேவையின் 40 சதவிகிதம் பஞ்சு இருப்பு வைக்கப்படுகிறது. நமது நாட்டில் இந்த ஆண்டு இறுதி இருப்பாக இந்த ஆண்டுத் தேவையின் 20 சதவிகிதம் கூட பஞ்சு இருப்பு வைக்க முடியாது போல் தோன்றுகிறது.

2.            .நூல் பற்றாக்குறைவிலைஉயர்வை தவிர்க்கஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நூற்பாலைகளில் நிறுவப்பட்டுள்ள கதிர்களின் எண்ணிக்கைநூல் உற்பத்திஉள்நாட்டுத் தேவை ஆகியவைகளை மதிப்பீடு செய்து உபரி நூலை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

3.            பாரம்பரிய நெசவுத் தொழில் என்ற அடிப்படையில் விசைத்தறிகைத்தறி ஆகிய பிரிவுகளில் லட்சக்கணக்கான சாமானிய ஏழைஎளிய உழைப்பாளிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். முந்தைய காலங்களில் நூல் விலை உயர்வு சமயங்களில் இந்த தொழில்களுக்கு மத்திய அரசு நூல் விலைக்கு மானியம் வழங்கிய வரலாறு உள்ளது. தற்போது வரலாறு காணாத வகையில்முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலாக நூல் விலை உயர்ந்துள்ள நிலையில் உள்நாட்டு நெசவுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என்று இத்தொழில்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். உடனடியாக கைத்தறிவிசைத்தறி நூலுக்கு மானியம் வழங்க வேண்டும்
4.            பருத்தி விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள் செலவினங்களுக்கான தொகையை குறைந்த வட்டியில் கடனாக வங்கிகளின் மூலமாக மத்திய அரசு கொடுக்க வேண்டும்.
5.            விவசாயிகள் விளைவித்த பருத்திக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதார விலைக்கு இந்திய பருத்திக் கழகத்தின் (ஊஊஐ) மூலம் மத்திய அரசே கொள்முதல் செய்து நூற்பாலைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
6.            நூற்பாலைகளுக்குத் தேவையான மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழ்நாட்டு மின் தேவையில் பற்றாக்குறைக்கு ஏற்பமத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு உரிய முழுப் பங்கையும் மத்திய அரசிடம் கோரிப் பெற வேண்டும். நூற்பாலைகள் டீசல் ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு மானிய விலையில் தமிழக அரசு டீசல் வழங்க வேண்டும்.
7.            சாயப்பட்டறைத் தொழிலுக்குத் தேவையான சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஏற்படும் செலவுக்கு போதிய மானியம் வழங்க வேண்டும்.
8.            பனியன் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சமீபத்திய உடனடி பாதிப்புகளான நூல் விலை உயர்வுமின்வெட்டினால் ஏற்பட்டுள்ள கூடுதல் உற்பத்திச் செலவுகளை ஈடுகட்டும் விதத்தில் கூடுதல் ஊக்கத் தொகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும்.

9.            விசைத்தறிகைத்தறி நூல்களுக்கு ஏற்கனவே மத்திய அரசு மானியம் வழங்கியது போல தற்போதும் விலை உயர்வைச் சமாளிக்க கைத்தறிவிசைத்தறி நூல்களுக்கு மானியம் வழங்க வேண்டும்.10.          இந்திய ரூபாயின் மதிப்பு உயர்கிற பிரச்சனைக்குரிய மூல காரணமாகவும்உள்நாட்டுப் பொருளாதாரம் பலவீனமடையக் காரணமாகவும் உள்ள அந்நிய நிதி மூலதனத்தை குறிப்பாக ஊக முதலீட்டை இந்தியாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.பிரச்சனையும்தீர்வுகளும்  நமக்கு புரிகிறது.  அரசுக்கு புரிந்து அதன் கவனத்திலிருக்கிறதாதிரு தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறையினமைசாராகயிருந்தபோது பிரதமரால் அவரது வேகமான செயல்திறனுக்காக பராட்டபட்டவர். இபோது அவர் வசமிருக்கும் இந்த துறையிலும் அதுபோல் வேகமான மாற்றங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.---------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்