5/12/10


எண்ணங்களின் வரைபடம்

எந்த ஒரு வெற்றிக்கும் பின்னால் திறமையான திட்டமிடலிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும்  தெரிந்த விஷயம். திட்டமிடுவதில்  வெறும் மனத்தளவில், நெருங்கியவர்களின் ஆலோசனையின்படி,  வரிசைப்படுத்தி ஒரு தாளில் அட்டவணையிடுவது  போன்ற பல வகைகள். சமீப காலங்களில் “”  (mind maping) என்ற எண்ணங்களை வரைபடமாக எழுதிக்கொள்வது என்ற முறை பயன் படுத்தப்படுகிறது. பயன் படுத்தி வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் இந்த முறை குறித்து அதிகளவில் புத்தகங்கள் வந்துகொண்டிருகின்றன. சில அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் அதிகாரிகளுக்கு இதில் பயிற்சி அளிக்க ஆரம்பித்துவிட்டது.

எண்ண ஓட்டங்களை வெறும் வரி வடிவமாக மட்டுமில்லாமல், ஒரு வரைபடமாக வடிவமைத்தால் முளையில் ஆழமாக பதிந்துவிடும்.  அது செயலாற்ற மிக உதவியாகயிருக்கும் என்பது இந்த முறையின் அடிப்படை தத்துவம்.  சிறந்த ஒவியர், கட்டிடகலைநிபுணர், இயந்திர வடிவமைப்பாளார் என்று பலகலை மேதையாக அறியபட்டிருக்கும் லீயோனார்டாவின்ஸி,  படைப்புகளின்  பல குறிப்புகளில் பல  இந்த முறை பயன் படுத்தப்பட்டிருப்பதை  இன்று பார்க்கமுடிகிறது. இதைப்போல் 17ம் நூற்`றாண்டில் வாழ்ந்த மேதை கலீலியோ, மற்றும் “குவாண்டம் எலெட்ரோ டயனமிஸம்” என்ற பெளதிக தத்வத்தை உருவாக்கி நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஃபெயின் மென் , விஞ்ஞானி, ஆல்பர்ட் அயின்ஸ்டின் போன்ற பலரும் பயன்  படுத்தியிருக்கும் இந்த முறையை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர் திரு. டோனி புஸ்ஸன்.(tony buzan) 100க்கு மேற்பட்ட நாடுகளில் 30 மொழிகளில் இவரது புத்தகங்கள் பதிப்பிக்கபடுகிறது. மைக்க்ராஸாப்ட், போயிங், ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகயிருக்கும் இவரது சமீபத்திய புத்தகத்தில் இந்த  மைண்ட் மாப்பிங்கை  எப்படி தனி நபர் மேம்பாட்டிற்கு பயன் படுத்தமுடியும் என்பதினை விவரிக்கிறார்.
 ஒரு நகரின் பல பெரிய வீதிகளும்  சிறிய கிளைதெருக்களும் வளைந்து நெளிந்து நகரின்  மத்திய பகுதியை அடைவதைப்போல,    நமது எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி அடையும் பல வழிகளாக     வரைபடமாக்கி கொள்ளும்  பயிற்சி,    எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் கற்றுகொள்ள, திட்டமிட, பல விஷயங்களை முளையில் சேமித்துக்கொள்ள அவற்றை வகை பிரித்துக்கொள்ள, நமக்கு வேண்டிய பொழுது அவற்றை உடனடியாக நினைவிற்கு கொண்டுவர, என பல வகையில் உதவும். மாணவர், நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியவர், பெரிய நிறுவனத்தின் பல பிரிவுகளை நிர்வகிக்கும் நிர்வாகி,, ஒரு கூட்டத்தை அல்லது நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம் இப்படி எவரும்   தங்கள் தேவைக்கேற்ப பயன் படுத்த முடியும்.
ஒரு நேர்முகத்தேர்விற்கு போகவேண்டியிருந்தால் இந்த முறையை நீங்கள்  எப்படி பயன் படுத்தலாம்?
முதலில் எதெல்லாம் அவசியம் என ஒரு தாளில் எழுதுங்கள். இது வரிசைப்படி அமைய வேண்டியதில்லை. தோன்றும் போதெல்லாம் தோன்றுவதயெல்லாம் குறித்துகொண்டேவாருங்கள்.தேர்விற்கு போகவேண்டிய நிறுவனத்தைப் பற்றிய விபரங்கள்,சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்கள், போட்டியாளார் பற்றிய தவல்கள் இப்படி எல்லாச் செய்திகளையும் திரட்டி குறித்துக்கொள்ளுங்கள்.
   எல்லா நேர்முகத்தேர்விலும் எந்த மாதிரி கேள்விகள் கேட்டகப்படும் என்பதை எளிதாக யூகிகக்கமுடியாது என்பது உண்மையானலும் இந்த 4 கேள்விகள் பல மாறுபட்ட வடிவங்களில் எல்லா  நேர்முக தேர்வுகளிலும் கேட்கப்படுகிறது.
1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
இதைத் தவிர இந்த 5 கேள்விகளும் அனேகமாக எல்லாயிடங்களிலும் கேட்கபடுகிறது.
1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்?
இந்த கேள்விகளை  முக்கிய வீதிகளாகவும் நீங்கள் சேகரித்த தகவல்களை  சிறு துணை வழிகளாகவும்அமைத்து வரைபடத்தை அமைக்க வேண்டும்
எப்படிச்செய்வது?
ஒரு வெள்ளைதாளை எடுத்துக்கொள்ளுங்கள். அதை குறுக்கு வசத்தில் (Landscape size) பயன் படுத்தவேண்டும் (இது முக்கியமானது)

நீங்கள் பங்கேற்கபோவது ஒரு ஆடை வடிவமைக்கும் நிறுவனம்  என்றால் அதன் மையப்பகுதியில் ஒரு வட்டமிட்டு அதில் ஒரு ஆயுத்த ஆடையையோ, அல்லது அந்த கம்பெனியின் சின்னத்தையோ வரைந்துகொள்ளுங்கள். அந்த வட்டத்தை சுற்றி வளைந்த பாதைகளாக கேள்விகளை வண்ண மார்க்கர்களை பயன்படுத்தி எழுதுங்கள்.முக்கியமாதற்கு அழுத்தமான வண்ணங்களைப் பயன் படுத்துங்கள்..சேகரித்த தகவல்களை  அலசி அது எந்த கேள்விக்கு பொருந்துமோ அங்கே கிளைத்தெருவாக  வரையுங்கள். இந்த பயிற்சியின் போது உங்களுக்கு புதிய கேள்விகள் தோன்றலாம். இருக்கும் விஷயங்களுக்கு கேள்விகள் இல்லாமலிருக்கலாம்.அப்போது அவசியமானால் கேள்விகளை மாற்றிக்கொள்ளுங்கள். இப்போது எதிர்பார்க்கும் கேள்விகளையும், அதற்கான பதில்களையும் தயாரித்துவிட்டீர்கள்.ஒருமுறைக்கு இருமுறை பரீசலனை செய்து அவசியமான மாற்றங்கள் செய்து ஒரு தெளிவான பிரதியை வண்ணங்களில் தயாரித்துக்கொள்ளுங்கள்.
ஏன் வண்ண மார்க்கர்கள் பயன்படுத்தவேண்டும்?
மனித முளையின் இடதுபுறம் வார்த்தைகளும் வலதுபுறம் வண்ணங்களும் பதிகிறது,இரண்டும் இணைந்து செயல்படும்போது இரண்டும் மறக்காமல் நினைவிற்கு வரும் என்பது ஆராய்சிகளின் முடிவு. இப்போது இந்த வரைபடத்தை மனதில் நிறுத்தும் பயிற்சியைத் துவக்குங்கள். தினசரி அடிக்கடி பார்த்துகொள்ளுங்கள். கேள்விபாதை, பதில் கிளைபாதை எல்லாம் மனதில் பதிந்துவிடும். தேர்வில் அமர்ந்திருக்கும்போது கண்முன்னே வரைபடம் விரியும் அருகருகே பல விஷயங்களை குறித்திருப்பதால்  கேள்விகள் மாறினாலும் பதில்கள்  பளிச்சென்று நினைவிற்கு வரும்.
ஒரு முறை இந்த பயிற்சியை செய்துபழகிவிட்டால் இதை மற்ற பல விஷயங்களுக்கும் எளிதாக பயன் படுத்தலாம். முயற்சிசெய்து பாருங்களேன்.
 இணைத்திருக்கும் மாதிரிப்படத்தைப்போல வண்ணத்தில் இந்த கேள்விகளுடன் படம் எழுத வேண்டும்

1.நீங்கள் ஏன் இந்த வேலைக்கு  விண்ணப்பித்திருக்கிறீர்கள்?
     -அனுபவம்
     -ஆர்வம்
    - தகுதி
    -சொந்த ஊர்.           
2. இந்த நிறுவனத்திற்காக நீங்கள் என்னசெய்வீர்கள்?
அதிக ஆர்டர்கள்
புதிய வாடிக்கையாளர்கள்
புகார் இல்லாத சேவை
3  நீங்கள் எப்படிப்பட்டவர்?
-ஆர்வமிக்கவர்
-எளிதில் கோப படாதவர்
-நட்பாக பழகுபவர்
4. இந்த வேலைக்கு நீங்கள் தகுந்தவர் என்று எதனால் நினைக்கிறிர்கள்?
கவரும் உருவம்
என் அனுபவம்
திறமையில் நம்பிக்கை
நிறைய தொடர்புகள்

1.அடுத்த 5 ஆண்டுகளில் நீங்கள் என்னவாக வேண்டுமென நினைகிறீர்கள்?
படிப்படியான பதவி உயர்வு
ஒரு கிளயின் முதல் நிலை மேலாளர்
2 உங்களுடைய பலம், பலவீனம் என்ன?
பலம் நிறைய நண்பர்கள்
பலவீனம்=முறயான மார்கெட்டிங் பட்டமில்லாதது
3 உங்களைப்பற்றி  சொல்லுங்கள்?
குடும்பம்
படிப்பு
முன் அனுபவம்
தொடர்புகள்
ஆர்வம்
4.உங்களுடைய வேலையயை ஏன் ராஜினாமா செய்தீர்கள்?
திறமை மதிக்கபடவில்லை/எற்ற வேலையில்ல
நிர்வாக மாற்றத்தினால்

5 இந்த நிறுவனத்தைப்பற்றி என்ன தெரியும்
கடந்த ஆண்டின் சாதன
ISO தர சான்று பெற்ற விபரம்
புதிய கிளைகள்திறப்பு
வேகமாக வளரும் நிறுவனம்
வெளிநாட்டு ஒப்பந்தம்
            

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்