20/3/11

தமிழக தேர்தல் 2011


தலித் கட்சிகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியா?

ஒவ்வொரு  தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று தலித் ஓட்டு வங்கியை கையில் வைததிருக்கும் கட்சிகள் எந்த கூட்டணியில் இணைகிறார்கள் என்பது. உண்மையிலேயே இந்த தலித் கட்சிகள் கூட்டணிகளின் வெற்றிக்கு ஒரு பெரிய சக்தியாக இருந்து  உதவுகிறார்களா? அல்லது எதிரணியின் ஒட்டுகளைப்பிரிக்க மட்டுமே பயன்படும்பகடைகாய்களாக பயன் படுத்தபடுகிறார்களா?
தமிழக மக்கள்தொகையில் 19% தலித்மக்கள். தேசிய அள்விலான சராசரி 16%தான். ஆனாலும் இங்கு இவர்கள் எந்த ஒரு தேர்தலிலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்ததில்லை. தமிழகத்தைவிட 2% மட்டுமே அதிக தலித்மககள் தொகைகொண்ட உத்திரபிரேதசத்தின் அரசியலின் தலையெழுத்தை மாற்றியவர்கள் தலித் மக்கள்.  சுதந்திரம் பெறுவதற்குமுன்னரே பிரிட்டிஷ் அரசிடம் தங்கள் உரிமைகளை வலியுறுத்தி நடந்த பூனா  வட்டமேசை மாநாட்டில்  மதுரையிலிருந்து சென்று பங்குபெற்று தனிஓட்டூரிமை, போட்டியிட தொகுதிகள் என்பதியெல்லாம் வலியுறுத்தி சட்டரீதியாக பெற்றதில் தமிழ் தலித்துகளுக்கு பெறும்பங்கு இருந்திருக்கிற்து. ஆனால் அந்த பாரம்பரியங்களெல்லாம் இன்று பழங்கதைகளாகி திராவிடகட்சிகளின் தயவில் தலித் இயக்கங்கள் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர். 1990களில் மிகப்பெரிய எழுச்சியுடன் எழுந்த தலித் இயக்க்ஙகள் கடந்த 20 ஆண்டுகளில் அதன் தலைவர்கள் தங்களை நிலைநிறுத்திகொள்வதற்க்காக எதாவது ஒரு திராவிட கட்சியுடன் இணைந்துகொள்கிரார்களே தவிர வெற்றிவாய்ப்பை நிர்ணயக்கும் சக்தியாக இருந்த்தில்லை
” “அப்படி ஒரேடியாக சொல்லிவிடுவதிற்கில்லை. கடந்த  சிலதேர்தல்களில் தலித் ஓட்டுகள் கூட்டணியின் வெற்றிக்கு உதவியிருக்கிறது. கடந்த நாடாளூமன்ற தேர்தலில் திண்டுக்கல் கங்கிரஸ் வேட்பாளார் சித்தன் அந்த தொகுதிக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளார் அந்த பகுதியில் அதிகம் இருக்கும் கொங்கு வேளாளர் இனத்தவ்ர். அதனால் வெற்றிவாய்ப்பு அவருக்குதான் அதிகம் என் கணிக்கபட்டிருந்த்து. ஆனால் அந்த தொகுயின் தலித் ஒட்டுகள் 90000. விடுத்லைசிறுத்தைகளின் உதவியால் அது சிதறாமல் காங்கிரசுக்கு கிடைத்து சித்தன் வெற்றிபெற்றார். இதேபோல்தான் கருர், மதுரை தொகுதிகளிலும். நிச்சியமாக விடுத்லை சிறுத்தைகள் வெற்றிவாய்ப்பை உருவாக்கும் சக்திபெற்ற்வர்கள் தான் என சொல்லுகிறார் மூத்த பதிரிகையாளாரும், அரசியல் விமர்சகருமான திரு சோலை.
” “ஒருசில இடங்களில் கிடைத்த அரசியல்வெற்றிகளினால் இவர்களை ஒரு வலிமையான சக்தி என்று சொல்லிவிடமுடியாது. அடிப்படையில் ஒரு வலிமையான் சக்தியாக உருவாகியிருக்கவேண்டிய இவர்கள் சிலசீட்டுகளுக்காகவும் அரசியல் லாபங்களுகாகவும்  திமுகஅதிமுக கட்சிகளின் தயவை நாடி கடைசியின் அவர்களின் மேலாதிக்கநிலையினால் தங்கள் தனித்துவத்தை இழந்துவிட்டார்கள். விடுதலைசிறுத்தைகளும்சரி, புதிய தமிழக கட்சியும் சரி தங்கள் இலக்குகளான தலித்துகளுக்கு சமுக நீதியும் உரிமையையும் பெற்றுதருவதை மறந்து தமிழன பிரச்சனைகையில் எடுத்துகொண்ட அரசியல் வாதிகளாகிவிட்டனர். இனி இவர்கள் எதாவது ஒரு திராவிட கட்சியை சேர்ந்த அணியில் தான் இருக்க முடியும் என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் “ என்கிறார் திரு ஹ்யூகோ காரின்ஞ். (Hugo Gorringe, Lecturer in Sociology at the University of Edinburgh.) இவர் எடின்பர்க் பல்கலைகழகத்தில் சமுகவியல் விரிவுரையாளார். தமிழகதில் 3ஆண்டுகள் தலித்துகளுடன் தங்கி அவர்கள் பற்றி ஆராயந்து  முனைவர்பட்டம் பெற்றவர். தலித்கள் பற்றி 4 புத்தகங்கள் எழுதியிருப்பவர். தலித்கள் பற்றிய அத்தனைவிஷ்யங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவர். அரசியல் கட்சிகளுடன் இணைந்தாலும் தலித்துகள் அந்த அணியில்  ஒரு வலிமையான அழுத்தம் தரும்  ஒரு குழுவாக, சக்தியாக இல்லாதால் எதுவும் சாதிக்கமுடியவில்லை என்கிறார்.
அரசியலில் சாதித்தது கிடக்கட்டும் தலித்துகளுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ”துவக்க கால்ங்களில் காங்கிரஸுக்கும் பின்னர் திராவிடகட்சிகளுக்கும் ஆதரவு அளித்துவந்த தலித்துகள் தனி இயக்கஙகள் எழுந்தவுடன் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இருந்து ஏமாற்றமடைந்துவிட்டனர்.இன்னும் கிராமடீகடைகளில் இரட்டை டம்பளரிலிருந்து எல்லா கொடுமைகளும் தொடர்கிறது. அந்த அவலங்களை எதிர்த்துபோரடி வெற்றிபெறமுடியாதநிலையில் இருக்கிறார்கள் இந்த தலைவர்கள் என்கிறார் டாக்டர் பிராஸாத். இவர் தீண்டாமை தடுப்பு சட்டதினைபலபடுத்தும் தேசியகூட்ட்மைப்பின் தலவர். இவர்து குழு கடந்த பிப்ரவரி 25ல்வெளியிட்டிருக்கும்  ஒரு அறிக்கை  திடுக்கிடவைக்கிருக்கிறது. இன்னும் 80% தலித்துகள் கிராமங்களில் குறைந்தபட்ச வசதிகூட இல்லாத வாழக்கை, 50% மேல் படிப்பறிவில்லாத நிலை என்று அவதிப்படுகிறார்கள். பஞ்சாயத் ராஜ் சட்டதின் கீழ் அளிக்க் பட்ட உரிமைகள் கூட மறுக்க்படுகின்றன.  கடந்த 20 ஆண்டுகளூக்குமுன் தமிழகத்தில் 28 மாவட்டங்கள் தலித்துகளுக்கு அநீதி இழைக்கபடும் மாவட்டங்களாக அடையாளாங்காட்டபட்டிருந்தது. இது இன்னும் அப்படியே நீடிக்கிறது.. நீண்டநாட்களுக்கு முன் இந்த மாவட்டங்களை கண்காணித்து  முதலவருக்கு அறிக்கை அனுப்ப ஒரு 5வர் குழு அமைக்கபட்டது. அவர்கள் இன்னும் ஒரு அறிக்கைகூட தரவில்லை. அரசும் அறிவித்தபடி இதற்கு ஒரு ஸ்பெஷல் ஆபிஸர் போடவில்லை.  குறைந்த பட்சம் இவைகளுக்காகாவது தலித் தலைவர்கள் போராடியிருக்க்வேண்டும்” “ என்கிறார். இவர்.
கடந்த ஆண்டு ஜுன் ஜூலை மாதங்களில் உத்தபுரத்தில் தீண்டாமையின் சின்னமாக் நின்றுகொண்டிருந்த சுவரை இடிக்கும் போராட்டத்தினை முன்னின்று நடத்தியது மார்க்ஸ்ஸிஸ்ட் கம்னியூஸ்ட்கட்சியினரே தவிர த்லித் இயக்க்ங்கள் இல்லை எனபதையும் சுட்டிகாடுகிறார் இவர்.
கடந்த 20 ஆண்டுகளில் படித்த தலித இளைஞ்ர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சி எற்பட்டிருக்கிறது. தங்கள் இனத்தை அடையாளங்காட்டும் கட்சியைவிட ஒரு பிரபலஅரசியல் கட்சியில் நேர்டியாக பங்குகொள்வது பலனளிக்கும் என் எண்ணது வங்கியிருக்கிறார்கள். இதை விஜயகாந்தின் கட்சியில் பார்க்கமுடிகிறது. வருங்காலங்களில் தலித் இயக்கங்கள் அரசியலைவிட்டுவிட்டு சமூக விழிப்புணர்ச்சியியக்கஙளானால் கூட வியப்படையவதிற்கில்லை. என்கிறார் ஒரு மூத்த பத்திரிகையாளார்.
தேர்தலில் இவர்கள் சக்தியாக் இருப்பார்களாக் மாட்டார்களாக எனபதை ஆராய்சியாளார்களுக்கு விட்டுவிட்டு, சந்தேகபட்டு வாய்ப்பை கெடுத்துகொள்வானேன் என்று  மளமளவென காய்களை நகத்ததுவங்கிவிட்டனர் கூட்டணியினர். ராசாவிற்கு எதிராக விடுத்த அறிக்கைகளினால் எங்கே தலித்களை பகைத்துகொண்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் அதிமுக தனது அணியின் முதல் தொகுதி உடன்பாட்டை தலித் கட்சிகளுடன் செய்துகொண்டது அதிமுக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகளையும், செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசுக் கட்சிக்கு ஒரு தொகுதியையும் ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா.
அதுமட்டுமில்லை பிராசரமும் தலித் தொகுதிகளிடமிருந்து  துவங்கும் என அறிவித்திருக்கிற்து அதிமுக. தமாதமானால் எங்கே எதாவ்து 3வது அணி எழுந்து அதில் போய் சேர்ந்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்  திமுக விடுதலைசிறுத்தைகளுக்கு சிவப்புகம்பளம் விரித்து 10 சீட்டுகளுடன் வற்வேற்றுவிட்டது. தேர்தலின் வெற்றிகளை தீர்மானிக்கும் சக்தியாகயிருக்க்போகிறார்களோ இல்லையோ கூட்டணிகளின் தலைமைகட்சிக்கு நிச்சியமாக பயம் எற்படுத்தும் சக்தியாகதான் தலித் கட்சிகள் இருக்கின்றன..

1
திருமதி சிவகாமி (முன்னாள் IAS அதிகாரி- தலைவர் சமூக சமத்துவ படை)

உத்திரபிரதேசத்தைப் போல தமிழகத்தில் தலித்சமுகத்தினர் ஏன் ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழமுடியவில்லை?
தமிழக அரசியலை சற்று ஆழ்ந்துபார்த்தால் துவக்கதிலிருந்தே இங்கு தலித்துகளும் அவர்களின் பிரச்சனைகளும் தனியாக இனங்கண்டு கொள்ளபடாமல் பார்பனரல்லாதார் பிரச்சனையோடு இணைத்துதான அடையாளாங்காட்டபட்டிருகிறது. அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிகளில் தலித்துகளுக்கு பிரதிநித்துவம் கொடுப்பதாக சொல்லி அப்படி கொடுக்கபட்டவர்களின் மூலம் தங்கள் கட்சியை பலபடுத்தினார்களே தவிர தலித்துகளை தலைவர்களாக வளரவிடவில்லை. காங்கிரஸ். திராவிட கட்சிகளில் தலித்களின் பிரநிதிகளாக அறியபடுவர்கள் தலித்களுக்காக எதுவும் செய்யவில்லை என்பது மட்டுமில்லை செய்ய முயற்சித்தால் கட்சியில் அவர்களுக்கு அந்த கட்சியில் முக்கிய இடமில்லை எனபது தான் உண்மை நிலை.கட்சியில் தங்களுக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துகொள்ள, தலமையை திருப்திபடுத்தவேண்டிய கட்யாய சூழலில் தாங்கள் தலித்களின் பிரதிநிதியாகதான் இந்தகட்சியில் இருக்கிறோம் என்பதையே அவர்கள் மறந்து போனார்கள். தாங்கள் அரசியல் கட்சிகளினால் வஞ்சிக்கபட்டதை  தாமதமாக புரிந்துகொண்டதமிழக தலித் மக்கள் தஙகளுக்கு என அரசியல் கட்சியின் அவசியத்தை இப்போது உணர்ந்திருக்கின்றனர். அது ஒரு வலுவான அரசியல் சக்தியாக எழ  இன்றைய பணபலம், ஆதிக்க அரசியல் சூழலலில் இன்னும் காலம் பிடிக்கும்.
அடிபடையான இலக்குகள்  ஒன்றாகயிருக்குபோது ஏன் இத்தனை பிரிவுகள்? ஒரு தலைமையின் கீழ் வலிமையான இயக்கமாக வாய்புகள் இல்லையா?
பிரிவுகளாக இருந்து இயங்குவதில் என்ன தவறு? எந்த அணியானாலும் கிடைக்கும் வாய்ப்புகளுடன் வளர வேண்டிய சூழ்நிலை இன்று. குறைந்த பட்ச திட்டம்,  அதிகாரத்தில் பங்கு என கேட்ககூடிய நிலையில் இன்று தலித்கட்சிகள் இல்லாமலிருக்கலாம், ஆனால் அந்த நிலைக்கு வளர இம்மாதிரி அணிகளிலிருக்கும்  சிறு கட்சிகளாக தலித்துகள் இருப்பது உதவுமே” “


2
தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் மூன்று பிரிவுகளாகயிருக்கிறார்கள். தென்மாவட்டங்களில்
தேவந்ததிரகுல வேளார்கள் முதல்பிரிவினர்.அடுத்தது ஆதிதிரவிடர்கள் பின்னர்
அருந்த்தியினர்.வடமாவட்டங்களில் 90%  ஆதிதிராவிட்ர்கள். இந்த சமுதாய மக்களிடம்  அவர்கள் சமுகம் சார்ந்த அரசியல் கட்சிகளான் விடுதலைசிறுத்தைகள், அல்லது புதியதமிழகம் செல்வாக்கு பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தல்களில் இந்த தொகுதிகளில் வெற்றியை நிர்ணயத்த ஒட்டுகளின் எண்ணிக்கை இந்த சமுகத்தினர் ஓட்டு எண்ணிக்கையை நெருங்கியிருந்ததால் கூட்டணிகள் இந்த கட்சிகளை தங்கள் அணியில் அதிக அக்கரையுடன் இணைத்துகொள்கின்றன்ர். தமிழக ஒட்டு வங்கியில் இவர்களது 18% என கணக்கிடபடிருக்கிறது
கடந்த 2006 தேர்தலில் திமுக பெற்றது26.46% வாக்குகள். இது அதிமுக பெற்ற ஒட்டுகளின் % விட(32.64%) குறைவு என்றாலும் அவர்களைவிட 35 தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததற்கு கூட்டணியில் இருந்த தலித் கட்சியினரின் ஒட்டுகளும் ஒரு முக்கிய காரணமாக கருதபட்டது.



3
தலிதமக்களுக்குஅம்மா அளித்த அங்கீகாரம்
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக முதலில் தலித் கட்சிகளுக்கு புரட்சித் தலைவி தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார். இதை, தலித் சமுதாய மக்களுக்கு அம்மா அவர்கள் அளித்த மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதுகிறோம். தமிழகத்தில் இப்போதுள்ள தலித் விரோத அரசை அகற்ற தமிழ்நாட்டில் உள்ள அடித்தளத்து மக்கள் அனைவரையும் அதிமுகவுக்கு ஆதரவாக அணி திரட்டிட எங்கள் கட்சியினர் மிகக் கடுமையாக உழைப்பார்கள். தேர்தலில் அதிமுக அணிக்கு வரலாறு காணாத வெற்றி கிடைக்கப் போவது உறுதி
  செ.கு தமிழரசன்  தலைவர் இந்திய குடியர்சுகட்சி

4
                                                        தொகுதி  பங்கீடு மகிழ்ச்சி அளிக்கிறது-கிருஷ்ணசாமி:

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெறுவதற்கு புதிய தமிழகம் பாடுபடும்

கிருஷ்ணசாமி  தலைவர் , புதிய தமிழகம்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்