3/4/11

தேர்தல் 2012


திமுக ஆட்சியில் தொழில்வளர்ச்சி, வேலைவாய்ப்பு பெருகியிருக்கிறதா?

 நிச்சியமாக இல்லை என்று எதிரணியும். ” “சொன்னதை செய்திருக்கிறோம் “ என்று திமுகவும் சவால்விட்டுகொண்டிருகிறது. உண்மை நிலை என்ன- ஒரு அலசல்.
ஒரு மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்பது ஒரிரு ஆண்டுகளில் நிகழந்துவிடக்கூடிய மாயம் இல்லை. தொலைநோக்குடன் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை  திட்டமிட்டு  செய்யும்  பணிகள் தான் உண்மையான  தொழில் வளர்ச்சிக்கு உதவும். அந்த வகையில் பார்த்தால் முந்தைய அரசுகளைவிட திமுக ஆட்சியில் பல  தொழில்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் துவங்கபட்டிருக்கின்றன.
சென்னை இன்று உலகளவில் அறியப்பட்டிருக்கும் ஒரு கார் தயாரிப்பு நகரமாக அறியப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 15 லட்சம் கார்கள் தயாரிக்கப்டுகின்றன. அமெரிக்க மாநில நகரங்களில்கூட இந்த அளவிற்கு வசதி கிடையாது.இந்தியாவில் ஓடும் கார்களில் 30%  வீதமும் அதன் உதிரி பாகங்களில் 35% வீதமும் சென்னையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் முண்ணணி கார் தயாரிப்பு நிறுவனங்களான பிஎம்டபிள்யூ ஹூண்டாய்,போர்டு.நிஸான் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள் தமிழகத்தில் வேறுன்னற இந்த அரசும் ஒரு காரணம். இம்மாதிரி பெரிய நிறுவனங்கள் துவக்கதில் சிறிய அளவில் தொழிலை துவங்கி ஒரு காலகட்டம் வரை அரசின் உதவி, இதர சூழ்நிலைகளை பரிசோதித்த பின்னர்தான் நிரந்தரமாக பெரிய அளவில் முதலீடு செய்து வளர்வார்கள். ஆண்டுக்கு 60 ஆயிரம் கார்களை சென்னயில் தயாரிக்கும் போர்ட் நிறுவனம் இன்று 2200 கோடியில் தஙகளது தொழிற்சாலையை விரிவக்க திட்டமிட்டிருக்கிறார்கள். போர்ட் மட்டுமில்லாமல்  ஹூண்டாய், ஜெனரல் மோட்டார்ஸ், பிம்டபிள்யூ போன்ற நிறுவன்ஙள் கடந்த ஆண்டு தங்கள் புதிய மாடல்கார்களை சென்னையில் தயாரித்து உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர்களது உற்பத்திவசதிகள் பெருக்கபட்டிருக்கின்றன. ஆட்டோமொபையில் தொழில்துறை தமிழகத்தில் மிக சிறப்பாக வளர்ந்திருப்பதற்கு அரசின் அணுகுமுறையும், தொழிற்துறை அதிகாரிகளின் திறமையான செயல்பாடுகளும்தான் எனபதை மறுப்பதிற்கில்லை எனபது துறை சார்ந்த வல்லுன்னர்களின் கருத்து. சரி மற்ற துறைகள் ? ஆஙகாங்கே சிறிய அளவில் தொழில்கள் துவங்கபட்டாலும் பெரிய அரசுத்துறை சார்ந்த தொழிற்சாலைகள் துவக்கபடவில்லை. நலிந்து கொண்டிருக்கும்  தொழிற்சாலைகளையும் மேம்படுத்த வழி செய்யப்படவில்லை.மதுரை,திருச்சி,நெல்லை போன்ற துணை நகரங்களில் துவங்க போதாக அறிவிக்கபட்ட மென்பொருள் பூங்காக்கள் இன்னும் துவக்ககட்டதில்தானிருக்கின்றன..  மறைந்த அமைச்சர் மாறனின் கனவு திட்டமான நாங்குநேனேரி பகுதியில் ஒரு சிறப்பு பொருளாதாரமண்டலத்தின் ஆரமப கட்டபணிகள் கூட இன்னும் துவஙகவில்லை.பன்னாட்டு அல்லது பெரிய நிறுவனங்களை வரவேற்பதில் ஆர்வமாகயிருக்கும் தமிழக அரசு, நேரிடையாக அரசின் சார்பில் பெரிய அள்வில் தொழிலகளை துவங்கவில்லை எனபது தான் உண்மை நிலை
வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கின்றனவா?  அடிக்கடி தொலைகாட்சிகளில் வெளிநாட்டவருடன் கையெழுத்தான ஒப்பந்தங்களை மாற்றிக்கொண்டு கைகுலுக்கும் காட்சிகளைபார்க்கும்போது  கேட்கும் செய்தி “ இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு “ என்பது.இது எந்த அளவிற்கு உணமை?
அரசின் தொழில் துறையிலிருந்து இதுவரை இம்மாதிரி பெரும் அன்னிய முதலீட்டில் தவ்ங்கபட்ட திட்டங்களினால் வேலைவாய்ப்பை பெற்றவர்களின் விபரங்கள்  தெளிவாக அறிவிக்கபடவில்லை.   “ஆட்டோமொபையில், ரசாயான துறையில் பெரும் வாய்ப்புகள் உருவாகி பல ஆயிரக்கணகானவர்களுக்கு வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி பன்னாட்டு நிறுவனங்கள் தகுதி/ திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைகளை வழங்குவதால் அந்த பகுதி – மக்களுக்கு, தமிழ் நாட்டினருக்க் மட்டும் வேலை வாய்ப்பு என்பது சாத்தியமில்லை” “ என்கிறார் இம்மாதிரி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டிற்கு ஆலோசனைகள் வழங்கும்  ஒரு வல்லுனர்.
  இருக்கும் அரசின் துறைகளில் வேலை வாய்ப்பு எந்த அளவிற்கு அதிகமாகியிருக்கிறது ?
முந்திய ஆட்சிகாலத்தில் போடப்பட்ட பணிநியமன சட்டம் நீக்கபட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஆன்லைன் பதிவு வசதி அறிமுகபடுத்தபடிருக்கிறது.
போக்குவரத்துதுறையில் டிரைவர் நடத்துனர் பணிகளுக்கு 45000பேர்,, மின்துறையில் 5000 பேர் புதிதாகவும், நிரந்தரமாக்கபட்ட 21000 ஒப்பந்த தொழிலாளர்கள்,. பல நிலைகளில் நியமனம் செய்யபட்ட ஆசிரியர்கள்  இப்படி பல வகைகளில் சுமார் 5 லட்சம் பேர் பணி நியமனம் செய்யபட்டிருக்கின்றனர். இது கடந்தகால ஆட்சியைவிட மிக  அதிகம். ஆனால் தலமைசெயலகம் உள்ளிட்ட பல அரசுத்துறையில் பல ஆயிரக்கணகான பணியிடங்கள் காலியாக உள்ளன.பதிவு செய்த 70 ல்ட்சம் இளைஞ்ர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.
 தொழில் வளர்ச்சி,வேலைவாய்ப்பு துறைகளில் திமுக அரசு கணிசமான அளவில் முன்னேறியிருந்தாலும்  பெரும்பகுதியான தொழிலாளார்கள்  நீண்ட காத்திருப்புக்குபின் பெற்ற பணிஆணை,பணிசுமை,நீண்ட நாட்களுக்குபின் நிரந்தரம், பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சஙக உரிமைகள் மறுக்கபடுவது, அந்த நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு செயல்படுவது போன்றவற்றால் நல்ல மனநிலையில் இல்லை என்பதை தொழிற்சங்கத்தினருடன் பேசும்போது உணர முடிகிறது. மொத்த்தில் இந்த் துறைகளில் திமுக அரசு பாஸ் மார்க்கு சற்று மேலாக  பெறுகிறது. ஆனால் ’ “தேர்வில்”’’””“ தேர்ச்சிபெற எல்லா பாடங்களிலும் பாஸாகவேண்டுமே.?

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்