அரசியல் கட்சி சாமிகளும்.. தேர்தல்
ஆணைய பூசாரிகளும்...
எந்த
பொதுதேர்தலிலும் எல்லா கட்சிகளும் மறக்காமல் தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடும் ஒரு விஷயம ஆட்சிக்குபின் அவர்கள்
ஆட்சி தரபோகும் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள். ஆனால தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே
சுவர் எழுத்து ஓவியர்கள், போஸ்ட்டர்
பிரிண்டிங், டிஜிட்டல் பிளக்ஸ்
பேனர், ஸ்டிக்கர் கொடிதோரணங்கள் தயாரிப்பு போன்ற சில
துறைகளில் பிரமாதமாக வேலைவாய்ப்புகள் உருவாகும் இரவுபகல் கடினமாக உழைக்க
வேண்டியிருந்தாலும் குறுகிய காலத்தில்
கணிசமாக காசு பார்க்கலாம் எனபதால்
ஆட்சியில் அம்ரத்துடிக்குக்ம் எதிர்கட்சிகளைவிட இந்த்துறையினர் தேர்தலில்
ஆவலாகயிருப்பார்கள். ஆனால் இந்த தேர்தலில் இவர்கள் மிகவும் எமாற்றத்துடனும்
வருத்தத்துடனும் இருக்கிறார்கள். அதிக நாட்கள் இல்லாமல் அவசரமாக அறிவிக்கபட்ட
தேர்தல் அட்டவணையினால் மட்ட்மில்லாமல் தேர்தல் கமிஷனின் அதிரடியான புதிய
கட்டுபாடுகளினால் இந்த துறையினர் ஆடிபோயிருக்கின்றனர்.
மிக
லாகவாமாக 1 மணிநேரத்தில் எந்த தமிழக அரசியல் தலைவரையும் கட்வுட் செய்ய வ்சதியாக
அழ்காக வரைந்து கொடுக்கககூடியவ்ர் லக்ஷமணன். ஓவியத்தை முறையாக பயிலாவிட்டலும்
இவரது மற்றும் இவர் சீடர்களின் படத்துக்கும் கட்சிகளிடையே மிகுந்த வரவேற்பு.
மாநாடு, கூட்டங்களைவிட
தேர்தல்காலங்களில் அதிகம்பேர் வேலைசெய்யும் இவரது ஸ்டூடியோ இன்று காலியாக் கிடக்கிறது.
காரணம்- இந்த தேர்தலில் கட் வுட்களுக்கு அனுமதியில்லை. இவரைப்போல் தமிழகம்
முழுவதும் வேலையிழந்த ஓவியர்கள் பல ஆயிரத்துக்குமேல் என்கிறார். ”
“ பிளக்க்ஸ் பேனர்கள்
வந்த்தலிருந்தே எங்கள் வேலை வாய்ப்பு குறைந்துகொண்டே வந்ததது. இப்போது சுத்தமாக
அழிந்துவிட்டது. சுவரில் எழுதுவத்ற்கும்
தடை விதிக்கபட்டிருப்பதால் லெட்டர்ரைட்டிங் ஆர்டிஸ்ட்களுக்கும் வேலையில்லை.
உடனடியகாக கிடைப்பதால் சுவரில் ஓட்டக்கூடிய பெரிய சைஸ் வினையல் ஸ்டிக்கர்களையும்
ஃபிளக்ஸ் பேனர்களையும் இபோது கட்சிகளும் ஆதரிக்க துவங்கியிருக்கிறார்கள். இந்த தேர்தலில்
அவ்ர்களுக்கு தான் நல்ல காலம் “ என்கிறார் அரசியல் கட்சி ஓவியங்களில் 20 ஆண்டு
அனுபவம் உள்ள இந்த ஒவியர்.
“ ஓவிய நணபர் உண்மை நிலமை தெரியாமல்
சொல்லியிருக்க்லாம். இந்த தேர்தலில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் நஷ்டத்தையும்
சந்தித்துக்கொண்டிருப்பது பிளக்க்ஸ்
டிஜிடல் ப்ரிண்டிங் துறைதான்.நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்று தமிழகமுழுவதும் 6 ல்ட்சம்
பேர்,
சென்னையில் மட்டும் 10 ஆயிரம்பேர் ஈடுபட்டிருக்கும் இந்த துறையினர் தேர்தல்
வேலைகளை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள். தேர்தல் கமிஷனின் கெடிபிகளினால் ஆர்டர்
ஏதுவும் வராமல் தவிக்கின்றனர். “ என்கிறார் திரு. எம். ஸ் பஷீர் அஹமது. சில
ஆண்டுகளுக்கு முன் மலிவான ரேட்டுகளில் டிஜிட்டல் பிளக்க்ஸ் பேனர்களை தமிழகத்தில்
பிரபலமடையச் செய்ததில் இவரது மெகா டிஜிட்டல் நிறுவனத்திற்கு கணிசமான பங்கு உண்டு
எல்லா கட்சிகளுக்கும் டிசைன் செய்து ஆல்பமாகவே வைத்திருக்கிறார்கள். தேர்வு
செய்தால் மாற்றங்களுடன் உடன்டியாக பேனர்கள் ரெடி..சென்ன நகரில் பல கிளைகளுடன்
இயங்கும் இவர்கள் நிறுவனத்திற்கு முந்திய தேர்தலில்களில் கட்சிகளின்
தலமையிடத்திலிருந்து பலஆயிரக்கணகான பேனர்கள் த்யாரித்து நேரிடையாக அனுப்ப
ஆர்டர்கள் கிடைக்குமாம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை எந்த கட்சியும் அணுகவில்லை.வேட்பாளார்
அறிவிப்புக்குபின் அந்தந்த பகுதிகளிலிருக்கும் நிறுவனங்களுக்கு
வாய்ப்புகிடைக்கலாம் என்று சொல்லும் பஷீர் அஹமது தமிழக டிஜிட்டல் பேனர் தயாரிப்பு
நிறுவனங்களின் சங்கத்தின் மாநில் தலைவர். “ எதிர்பாரத கெடுபிடிகள். 12X8 என்பது சதாரணமாக தேர்தல் காலங்களில்
த்யாரிக்கபடும் ஸைஸ். இது இபோது தடை செய்யபட்டிருக்கிறது. கலெக்டரிடம் வைக்கும் இடம் அனுமதி
பெற்றபின் 10X8 தயாரித்து வைக்கலாம். எவ்வளவு இடம்
எப்பொது அனுமதிப்பார்கள்,
இது எந்த அளவிற்கு நடைமுறையில் முடியும்
என்று தெரியவில்லை. திமுக போன்ற பெரிய கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வந்தவுடனேயே தலமை
அலுவகத்திலுருந்து கட்சி கூட்டணி தலைவர்கள் பட்த்துடன் பொதுவாக ஆதரவு கோரி
பேனர்கள் தயாரிப்பார்கள் இந்த முறை தேர்தல் அறிவித்த நாளிலிருந்தே விதிமுறைகள்
அமுல்படுத்த பட்டதாலும்,, பொது
இடங்களில் தேர்த்ல் விள்ம்பரம் தடைசெய்யபட்டிருப்பதலூம் அந்த ஆர்டர்களும் இல்லை.
டிஸைனர்களுக்கும், மிஷின்களுக்கும்
வேலைகொடுக்கவேண்டுமே என்பதால் ஆட்டோவில் ஒட்டும் சிறிய சினிமா போஸ்டர்
ஸ்டிக்கர்களும், ரசிகமன்ற
வேலைகளை செய்துகொண்டிருகிறோம். சதாரணமாக கிடைக்கும் திறப்புவிழா, கட்சி காரர்களின் இல்ல திருமண விழா
ஆர்டர்கள் கூட தேர்தல் காலத்தினால் கிடைப்பதில்லை. அதில் தலைவர்கள் படமிருந்தால்
தேர்தல்விதிகளின் படி தவறாகிவிடும் என பயப்படுகிறார்கள்” “ என்கிறார் இவர்.
பிள்கஸ்பேனர் த்யாரிப்பவர்கள் நிலை இது என்றால், காலங்காலமாக பயன் படுத்தும் மீடியமான
போஸ்ட்டர்கள் அச்சிடும் பிரிண்ட்டர்களின்
நிலை இன்னும் மோசமானதாயிருக்கிறது. “ தேர்தல்
நேரம் என்பது ஆப்செட் பிரஸ்கார்களுக்கு அதிக பிஸினஸ் தரும் நேரம். ஆனால் இந்த
ஆண்டு 8 பகுதிகளாக தயாரிக்கும் பெரிய
போஸ்ட்டர்களுக்கு தடை. அதில்8ல் ஒரு
பகுதியான அளவில் சிறிய அளவு போஸ்ட்டர்க்ளுக்கே அனும்தி அதுவும் மீட்டிங் நடக்கும்
இடதிலிருந்து 200 மீட்டர் தூரத்திற்குள்ளாக போலீஸ் அதிகாரிகளீடம் ஒரு நாள்
முன் அனுமதி பெற்ற பின்னரே என்கிறது விதி.
இந்த நிலையில் பெரிய ஆர்டர்களை எப்படி எதிர்பார்க்கமுடியும். ஒரு சின்ன பிட்
நோட்டிஸாக யிருந்தாலும் அதில் அச்சிட்ட பிரஸ்ஸின் போன் நம்பர் இடவேண்டும். மேலும்
கட்சிகாரர்கள் சொன்னாலும் நீங்கள் செய்யக்கூடாது என நேரிடையாகவே போலீஸ் உதவி கமிஷனர்
எங்களை அழைத்து விதிமுறைகளை சொல்லியிருகிறார்.” “ என்கிறார். டைமண்ட்லித்தோ
பிரஸ் நிருவன அதிபர் திரு மோகன் சுந்தர். 18 ஆண்டுகள் அச்சுதொழிலில்
இருக்கும் இந்த நிறுவனம் நிறைய தேர்தல்களுக்கு போஸ்ட்டர் தயாரித்து கொடுத்தவர்கள்.
இந்த ஆண்டும்நிறைய டிஸைன்களுடன் காத்திருந்தவ்ர்கள். ” “போஸ்டர் தொழிலில் தேர்தல்
முடிந்தவுடனும் நன்றி அறிவிப்பு போஸ்டர் வேலைகள் வரும். இந்த முறை 1 மாதம் கழித்து
ரிஸல்ட் வரப்போதால் எந்த அளவிற்கு அந்த வேலைகள் அச்சகங்களுக்கு கிடைக்கும் என
தெரியவில்லை இந்த தேர்தலில் போஸ்ட்டர்
அச்சகங்கள் கடந்த முறைகள் போல பெரும் பொருளீட்ட வாய்ப்பில்லை” “ என்கிறார்.
பிரச்சனைகளில் வாய்ப்பை கண்டுபிடிப்பவன் புத்திசாலி எனறு
சொல்லப்படுவது உண்டு. சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக பணத்தை
வாரியிறைக்க கட்சிகள் தயாராகயிருந்தாலும் தடுக்கும் தேர்தல் ஆணையத்தை குறைசொல்லி
புலம்பும் இவர்கள் மததியில் சிவகாசியில் ஒரு
சில் அச்சகங்கள் ஓசைப்படாமல் நமது அரசியல் தலிவர்களின் முகங்களை முகமூடியாக்
லட்சகணக்கில் தயாரித்து தள்ளிக் கொண்டிருக்கிறது.மேல் நாடுகளில் தேர்தலில்
கட்சிகளின் ஆதரவளார்கள் பயன் படுத்தும் முறையிது.தேர்தல் கமிஷன் முகமூடி பற்றி
எதுவும் சொல்லாதால் தமிழகத்தில் தயாரிப்பை துவக்கிவிட்டார்கள். இந்திய அரசியல்
கட்சிகள் முழுமைக்கும் சிவகாசி இதன் தயாரிப்புகளமானலும் ஆச்சரியமில்லை. இதைபோல
திருப்பூரில் ஒரு பிரபலமான கட்சிக்காக் முன்புறம் அதன் த்லைவர் படம் கட்சியின் சின்னம் பின்னால் கொண்ட காலர் இல்லாத
பனியன் டீ சர்ட்டும்களும்,
சின்னத்துடன் தொப்பிகளும் லட்சககணக்கில் தயாராகிக்கொண்டிருக்கின்றன். தேர்தல்
நேரம் நல்ல கோடை காலம் எனப்தால் தொப்பி அணிவதை தடுக்க் முடியாது. மேலும் விதிகளில்
தனிநபர் உடைகளுக்கு தடை ஏதுமில்லையே
என்கிறார் அந்த கட்சியின் விளம்பர பொருப்பாளார்.
உடலிலயே பெயிண்ட்டால்
சின்னம் எழுதிக்கொண்டு சட்டையில்லமல் நடக்கலாம் என திட்ட்மிட்டிருக்கும் அதிமுக
விசுவாசிகள் சிலர் அதை அதன் தலமையலுவலகத்திற்கு அருகில் சமீபத்தில் செய்தும்
காட்டினர்.
சாலைசந்திப்புகளில்
பிரமாண்ட கட்வுட்கள், பத்து அடிக்கு ஒன்றாக பளபளக்கும் டிஜிட்டல் பேனர்கள்.
தெருமுழுவதும் கட்சிகொடிகள், செவிப்பறையை
கிழிக்கும் பிரச்சாரஙகள் இல்லாத ஒரு தேர்தலை தமிழகம் சந்திக்க போகிறதா இல்லை
க்டைசிநேரதில் கட்சிகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு நமக்கு பழக்கமான
காட்சிகளையே காட்டபோகிறார்களா?
பொறுத்திருந்து
பார்ப்போம்
ரம்ணன்.
கொடிகள் கட்டும் “கம்பெனிகள்” “
குடும்பத்தினரை
மறந்து கைகாசுபோட்டு டீ யும் பன்னும் சாப்பிட்டு கட்சி கொடிகளை தெருவெல்லாம் கட்டி
தொண்டர்கள் தேர்தல் வேலை செய்வதெல்லாம் மெல்ல இப்போது மாறிவருகிறது. இந்த ப்ணிகளை
இப்பொது கட்சிகாரகளின் மேற்பார்வையில் பணத்திற்காக தொழில் ரீதியாக செய்துகொடுக்க எஜென்சிகள்
வந்துவிட்டன.
சென்னையின்
புறநகர் பகுதியான கேளம்பாக்கத்தில் இப்படிபட்ட பணிகளை செய்யும் நிறுவனத்தினரிடம்
பேசினோம். மறுப்புக்கும் நீண்ட
தயக்கதிற்கும் பின்னர் பெயர், படம் கூடாது எனற
நிபந்தைனகளுடன் பேசினார் அதன் நிருவனர்.
” “இன்று கட்சிகள்
அவ்ர்கள் தொண்டர்களைவிட இந்த வேலைகளை நாங்கள் செய்வதையே விரும்புகிறார்கள்.
குறித்த நேரத்திற்குள் போலீஸ் அனுமதி வாங்குவதிலிருந்து அப்புறபடுத்துவது வரை எல்லாம்
நாங்கள் பொரபஷனாலாக செய்வது தான் காரணம் “ என்று சொல்லும் இவரிடம் 4 லாரிகள்,
ஒரு குட்டி டிராக்டர் 5 ஆயிரத்துக்குமேல்
ஸ்டீல் பைப்புகள் இருக்கின்றன்.. ஒரு
கோடவுன் ஒரு ஆபிஸ் என்று கார்ப்ரேட் ரேஞ்சில் இருக்கிறது. எல்லா கட்சிகளுக்கும்
வேலை செய்யும் இவர்களை போன்றாவ்ர்கள்
சென்னையையும் அதன் சுற்றுபுறத்தையும் பகுதி பிரித்துகொண்டிருகிறார்கள்.
ஒருவர் ஏரியாவில் மற்றவர் வேலை செய்வதில்லை.ஒவ்வொரு கட்சிகளிலும் குறிப்பிட்ட
சிலர்தான் இவர்களை தொடர்பு கொள்ளமுடியும். தலைவர்கள் பிறந்த நாள், பொதுகூட்டங்கள் பேரணிகள் என ஆண்டு முழுவத்ற்கும் இவர்களுக்கு வேலையிருக்கிறது ” “முன்போல் மூங்கில் சவுக்குகட்டை எல்லாம்
கொடிகளுக்கு பயன் படுத்துவதில்லை. எல்லாமே ஜிஅய்(GI) பைபுகள் தான். நடுவது எடுப்பது எளிது ரோடுகள்
பழாவதில்ல. (!) தேவையான் இடங்களுக்கு லாரிகளில் பைப்புகள் இறக்கப்படும்.
பின்னாலேயே வரும் இளைஞர்கள் டீம் சிலமணிகளில் தரையில் துளையிட்டு பைப்புகளில்
கொடிகளை பொறுத்தி நடுவார்கள். வேகமாக் வேலைகளைச் செய்ய டிரில்லர் போன்ற
சாதனங்களும் எல்லா கட்சி கொடிகளும் எங்களிடமிருக்கிறது.” “ என்று சொல்லும் இவரது வருத்தம் தேர்தல் கமிஷனின்
விதிகட்டுபாடுகளினால் இன்னும் சில நூறு பேர்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பு இல்லாது
போய்விட்டதே எனபதுதான்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்