” “மிகத்திறமையான ஒவியகலை படைப்பாளியான அவருடைய மரணம் கலையுலகில் வெற்றிடத்தை தோற்றுவித்துவிட்டது
“ என குடியரசு தலைவரும், ”உலகில் இந்தியாவின் அடையாளாமாக அறிய பட்ட
ஒரு ஒவியனை தெசம் இழந்துவிட்டது” “ என பிரதமரும் அஞ்சலி செய்தி வெளியிட்டு கெளரவிக்கபட்டவர்
இந்தியாவின் பிகாசோவாக அறியபட்ட ஹூசேன். மரணத்தின் பின் இத்தகைய கெளரவம் பெறும்
இவரது இறுதிகால வாழ்க்கை சோகமானது.
உலகிலேயே நவீன ஒவியத்தின் தந்தையாக
கருதபட்ட பிகாசோவிற்கு பின்னா அத்தகைய பாணி ஓவியங்களினால் உலகபுகழும்,பெரும் பணமும் ஈட்டிய இவர் தனது 96ம் வய்தில் லண்டனில்
மரணம்அடைந்தார். சில ஆண்டுகளுக்கும் முன் ஒரு ஒவியம் விற்கபட்ட விலை 9 கோடி
ரூபாய்கள். கடந்த மாதம் விற்கபட்ட ஒரு ஒவியத்திற்கு கிடைத்தவிலை 2 கோடி. இவரது
மரணம் அடைந்த தினத்தன்று கூட இவரது ஒரு ஒவியம் 87 லடச்திற்கு
ஏலமிடப்ட்டிருக்கிறது. எந்த இந்திய ஒவியனும் தந்து படைப்புகளுக்கு இவ்வளவு பணம்
ஈட்டியதில்லை. இவரது ஒவியங்களைப் போலவே பிரமிக்கவைக்கும் விஷயம் இவரது
சுறுசுறுப்பு. மரணத்திற்கு சில நாட்கள் முன்னர் கண்ணாடிசுவரில் ஒரு புதிய
ஒவியத்தை எழுத துவங்கியிருந்தார்.
மிக சாதாரண குடுமபத்தில் பிறந்து
பிழைப்புக்க்காக சினிமா பேனர்கள் வரைய துவங்கி அந்த பணத்தில் ஓவியகல்லூரியில் நவீன
ஓவியத்தை முறையாக் கற்று தேர்ந்தவர். மார்டன் ஆர்ட்டில் எண்ணற்ற் படைப்புகளை
உருவாக்கிய இவருக்கு மிகவும் பிடித்த சப்ஜெக்ட் குதிரைகளும், பெண்களும். மாதுரி திட்ஷித்திலிருந்து அனுஸ்கா சர்மா வரை இவர்து
ஓவிய நாயகிகளாயிருந்திருகின்றனர். இவர் தனது ஓவியங்களினால் பெற்ற புகழை விட 90
களில் சர்ச்சைகளினால் பெற்ற விளம்பரங்கள் தான் அதிகம். 70களில் இவர் ஆடைகளில்லாமல் வரைந்த இந்து கடவுள்களின் படங்களை
90ல் ஒரு பத்திரிகை பிரசுரிக்க அதில் எழுந்த சர்ச்சை இவர் முஸ்லீம் எனபதால் அரசியல் ஆகி தேசம்
முழுவதும் எதிர்ப்புஅலையை
எழுப்பியது. தொடர்ந்து 95ல் இவர்
வரைந்த இந்திய வரை படத்தில் பாரதமாத ஆடையின்றி சித்திரிக்க்பட்டதால மீண்டும்
சர்ச்சை எழுந்தது. சிவசேனா, விஸ்வஇந்துபரிஷித்
போரட்டங்களை துவக்கியது. இவரது படைப்புகள் இருக்கும் காலரிகள் நாசம் செய்யபட்டது. நாட்டின் பல கோர்ட்களில் இவர் மீது வழக்குகள்
குவிந்தன, சம்மன்களை
ஏற்காததால். கைதுக்கான் வாரண்ட்டும் சொத்துகளை பறிமுதல் செய்தும் ஒரு
கோர்ட் ஆணையிட்டது.
நாட்டின் உயரிய கெளரவமான பத்ம விபூஷன்
பெற்ற இந்த கலைஞன், வழக்ககுகளையும், அரசியல் போராட்டங்கலையும் சமாளிக்க முடியாமல் நாட்டைவிட்டு
வெளியேறவேண்டியதாகிவிட்டது. .பல நாடுகளில் ஹோட்டலில் வாழ்க்கையை
கழித்துகொண்டிருந்த இவரை கததார் நாட்டு அரசு தங்கள்நாட்டினகுடிமகனாக அழைத்தது. 90
வயதில் தன் இந்திய குடிஉரிமையை இழந்து கத்தார் நாட்டின் பிரஜையான இவருக்கு அங்கு
நிஜமாகவே ராஜ மரியாதை. நாட்டின் மன்னர் குடும்பத்தினர் இவரது ஒவிய ரசிகர்கள். கத்தாரின் அரண்மனை, அரசு கட்டிட வளாகங்களை இவரது படைப்புகள் அலங்கரிக்கின்றன.
கடந்த பிறந்த நாளுக்கு மன்னர் குடும்பம் அளித்த
பரிசு ஒரு ஃப்ராரி பந்த்ய கார். 90 வயதிலும் அதை அனாசிய்மாக ஒட்டி
ஆச்சரியபடுத்தினார்.
தனது
ஓவியங்களுக்காக இந்து அமைப்புகளிடம் மன்னிப்பு கோர மறுத்து தன் மீது உள்ள எல்லா வழக்குகளையும் சேர்த்து டெல்லியில்
விசாரிக்க 2006ல் இவர் கொடுத்த மனு ஏற்கபட்டது இறுதியில் 3 ஆண்டுகளுக்கு முன் டெல்லி உயர்நீதி மன்றம்
தந்த தீர்ப்பு ” “ஒவியர் யார் மனத்தையும் புண்படுத்துவதற்காக எழுதிய படங்கள் இவை இல்லை எனபது அவரது எண்ணற்ற புகழ்பெற்ற
படைப்புகளை பார்க்கும் போது புரிகிறது. இந்த 90 வயது ஒவியன் தன் இறுதிநாட்களில்
தாய் நாட்டில் தங்கி ஒவியங்கள் படைக்க உரிமையை இழக்கவேண்டியஅவசியம் இல்லை. “ ஆனாலும் அரசு இயந்திரம் அந்த தீர்ப்பை செயல்
படுத்த தவறிவிட்டது. கத்தாரில் எத்தனை கெள்ரவம் அளிக்கபட்டாலும் இறுதி நாட்களில் இந்தியாவில் வாழ்வதையே
விரும்பிய ஹீசேனின் இறுதி ஆசை நிறைவேறவில்லை. இந்தியாவில் இவருக்கு மிக பிடித்த
நகரங்களில் ஒன்று சென்னை. இந்து நாளிதழ் ஆசிரியர் ராம் இவரது நெருங்கிய நணபர்.
சென்னை வருபோது அவர் இல்லத்தில் தான் தங்குவார். அங்கு அவரது ஒரு செட் உடைகளும் ஒவிய பொருட்களும் அவருக்கான
அறையிலிருக்கும். மரணத்திற்கு இரண்டு நாள் முறை மருத்தவமனையிலிருந்து திரு ராமிடம்
பேசியபொழுதுகூட தன் ஆசையைப் பற்றி பேசியிருக்கிறார்.
“ நம் காலத்தில் வாழ்ந்த ஒரு உலக புகழ்பெற்ற இந்தியாவில் பிறந்து கடைசிவரை மும்பாய்காரனாகவே
வாழ்ந்த ஒவியன் இறுதியில் ஒரு கத்தார் நாட்டு பிரஜையாக இறந்து எங்கோ லண்டன்
இடுகாட்டில் புதைக்கபடுவது மிகப்பெரிய சோகம்” “ என்கிறார் பிரித்திஷ் நந்தி.
”
“தன் ஒவியங்களுக்காக தன் \தேசத்தையே
விட்டுகொடுத்தாலும் தன் பிடிவாத்தை விட்டுகொடுக்க மறுத்த இவரின் மரணம் மார்டன
ஆர்ட்டுக்கு இழப்பாக இருந்தால் இருந்து விட்டு போகட்டும்.அதற்கு இவ்வளவு
ஆர்பாட்டம் ஏன்? என்கிறார் சிவசேனா
தலவர் பால்தாக்ரே.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்