19/6/11

யோகாசன குரு விரும்பும் “ஆசனம்”


யோகாசன குரு விரும்பும்  “ஆசனம் 

இந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்தே யாராவது ஒரு சாமியார்
தீடிரென்று பாப்புலாராகி அரசியல் பண்ணிக்கொண்டிருப்பார். இப்போது பாபா ராம்தேவ். ஊழலுக்கும் கருப்பணத்திற்கும்  எதிராக போர்க்கொடி துவக்கி உண்ணா விரதம்  துவக்கியிருக்கும் இவர் ஹரியானா மாநிலத்தில் ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்தவ்ர். பக்கத்து சிறு நகரில் 8 ம்  வகுப்புடன் படிப்பை நிறுத்தி தங்கள் யாதவகுலவழக்கதிற்கு மாறக கான்பூர் சென்று ச்மஸ்கிருதம் படித்தவர். அங்குள்ளவர்களின் தொடர்பில் அறிமுகமான யோகாவை நன்கு கற்றபின் 20 வயதில் சனியாசியாகிவிட்டார். அடித்தட்டு கிராம மக்களுக்கு யோகாவை இலவசமாக் கற்பிப்பதில் மிகுந்து ஆர்வம் கொண்டு கிராமம்கிராமாக சுற்றிகொண்டிருந்தவர் திடீரென ஒரு நாள் இம்யமலை சாரலில் தவம் செய்ய போய்விட்டார். இரண்டாண்டுகளுக்குபின் திரும்பியவர் ஆச்சாரியா பால் கிருஷ்ணா எனபவருடன் இணைந்து  “திவ்விய யோக மந்திர்” “ என்ற அறக்கட்டளையை யோகா பயிற்சிக்க்காகவும் ஆயூர்வேத சிகிச்சைக்காகவும்  2003ல் ரிஷிகேசத்தில் நிறுவினார். அப்போது  ஆஸ்தா என்ற டிவி சானிலில்கிடைத்த காலையில் யோகா  பயிற்சிகள் நிகழச்சியை வழங்கும் வாயப்பு இவரது வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. குறுகிய காலத்தில் நாடறிந்த முகமாகிவிட்ட இவருக்கு தனது நிறுவனத்தை வளர்ப்பது எளிதாயிருந்தது 2006ல் ரிஷிகேசத்தில்  ” ‘இந்தியா உலகின் மிகபெரிய யோகா மற்றும் ஆயூர்வேத சிகச்சை கேந்திரமாக இருக்கவேண்டும் எனற குறிக்கோளுடன்  இவர் நிறுவிய”’’’’’ “பதஞ்சலி யோக பீட டிரஸ்ட்டின்  துவக்க விழாவில் பங்குகொண்டவர் அன்றைய துணை ஜனாதிபதி ஷெகாவத்.
அந்த கட்டதிலிருந்து இன்று வரை இவரது அசுர வளர்ச்சி ஆச்சரியமானது. நிறைய பக்தர்கள்,நாட்டின் பலநகரங்களில் கிளைகள், என வளர்ந்த இவரது அமைப்பு வெளிநாடுகளிலும் வேகமாக பரவியது. அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் முக்கிய நரங்களில் சொந்த கட்டிடங்களில் கேந்திரங்கள். தினசரி யோகா வகுப்புகள் பயிற்சி முகாம்கள் என பிஸியாக இருக்கின்றன. பாபா ராம்தேவ், உலகம் சுற்றும் “குரு” ஆகிவிட்டார். பெரிய ஆஸ்ரமம், ஆடமபர கார், சொந்த விமானம் என  ஒரு பெரிய கார்பெர்ரேட் அதிபர் போல இயங்கும் இவரது நிறுவனத்தின் வரவு செலவு  அவரே அறிவித்தபடி 1100 கோடிருபாய்கள். ஆனால் உண்மையில்  1500 கோடிக்கும்மேல் இருக்கும் என்கிறார்கள். இலவசமாக யோக பயிற்சியை துவக்கிய இவரது யோகா வகுப்புகளுக்கு தான் இன்று இந்தியாவிலேயே அதிக கட்டணம். குருவிற்கு எதிரே இருக்கும் வரிசை என்றால் 30000ரூபாய் அடுத்த வரிசை 20000 என பல பிரிவுகள் உண்டு. இரண்டுஆண்டுகளுக்குமுன் ஸ்காட்லாந்தில் கிளாஸ்கோ நகரின் அருகில்  “லிட்டில் கும்பேரே’ “ என்ற யாரும் வசிக்காத ஒரு குட்டி தீவை வாங்கி இவருக்கு பரிசளித்திருக்கிறார்கள் கிளாஸ்கோவில் வாழும் ஒரு பணக்கார  இந்திய தம்பதியினர். அதை உலக தர ஆயூர்வேத சிகிச்சை கேந்திரமாகவும் ஆரோக்கிய வாஸஸதலமாகவும்  உருவாக்க போவதாக ராம்தேவ் அறிவித்திருக்கிறார்.
இவரது ஹரித்துவார் ஆயூர்வேத ஆஸ்பத்திரியில் விற்கபடும் மருந்துகளில் மிருக, மனித எலும்புகள் கலக்க பட்டிருகின்றன  இது ஆபத்தானது  என பரிசோதனை ரிபோர்ட்,மருந்துசீட்டு,பில் மருந்து ஆகியற்றுடன் மார்க்ஸிஸ்ட் தலவர் பிருந்தா கரந்த் 2006ல் எழுப்பிய புகார்  பிரச்ச்னையின் சலசலப்பு சரத் பாவர், முலயாம்சிங் போன்ற தலைவர்களின் அறிக்கைகளுக்கு பின் ஒய்ந்தது.

 “ நான் சன்னியாசி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை “  என்று சொல்லிக்கொண்டிருந்தவர், 2014 பாராளுமன்ற தேர்தலில் தனிகட்சி அமைத்து போட்டியிடபோவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.. அண்னாஹஸாரே யின் போராட்டதிற்கு ஆதரவுஇந்த உண்ணாவிரத  போராட்டம் எல்லாம் அதற்கு  ஒரு முன்னோட்டம். டெல்லி ராம்லீலா மைதானத்தில்  உண்ணாவிரதம் ஒரு பெரிய அரசியல் கட்சியின் மாநாடு போல பெரிய பந்தல்,700 ஃபேன்கள், 100 ஏர்கூலர்கள், தற்காலிக டாய்லெட்கள் என பிரமாண்டமாக பெரும் பொருட்செலவில் ஏற்பாடு செய்யபட்டிருந்தது..அரசியலில் இவர் ஒரு புதிய சக்தியாக வளர்ந்து விடலாம் என்ற பயத்தில்  மத்திய அமைச்சர்கள் இவருடன் பேச்சு நடத்திகொண்டிருந்தாலும் காங்கிரஸ்கட்சியின் சில தலைவர்கள் இவரது செயலை கண்டனம் செய்ய தவறவில்லை.. நடிகர் சாருக்கான் ” “ஊழல் ஒழிப்பது போராட்டம் எல்லாம்  சாமியாரின் வேலையில்லை “ என அறிவித்திருக்கிறார். வடஇந்திய பத்திரிகைகள் இவருக்கு இருக்கும் மக்கள் ஆதரவை மட்டுமில்லமல் அவரது  செய்கைகளின் ஆடம்பரத்தையும் அவருடைய  பதவி ஆசையையும் சுட்டி காட்டுகின்றன.
உண்ணாவிரதம் இருப்பது ஜன நாயக உரிமை ஆனால் அதை விளம்பரங்களோடு ஆடம்பரமாக செய்தால் அரசியல். யோகாசான குருவாக தனக்கு இருக்கும் மதிப்பையும் புகழையும், பயனபடுத்தி  “லஞ்சம் வாங்கும் அரசியல் வாதியை தூக்கில்போடவேண்டும், பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும். 500ருபாய் செல்லாதாக அறிவிக்க வேண்டும்,ஆங்கிலத்தை ஒழித்து இந்தியை பரப்பவேண்டும் “ என்று செய்ய முடியாவைகளை உடனடியாக செய்ய கேட்டு அரசை நிர்பந்த்தித்து ஒரு ஜனநாயக  அரசையே பிளாக்மெயில் செய்ததைவிட மோசமானது, நமது அமைச்சர்கள் பதறிப்போய் அவர் காலில்  விழுந்தது தான்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்