17/7/11

இந்தா 50 கோடி!


50 கோடியை நன்கொடையாக கொடுத்தவர் 

கடந்த சில ஆண்டுகளாக  இந்தியாவின் மிக பெரிய கார்பெரேட்கள் கல்விக்காகவும்,  பொது நல தொண்டுகளுக்க்காகவும் தனி அறக்கட்டளைகளை நிறுவி பெரிய அளவில் நன்கொடைகளை அளித்துவருகின்றன. வருமான வரிவிலக்கு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.
கடந்த வாரம் ஒரு தனிமனிதரும் அவர்து மனைவியும் தங்கள்  சேமிப்பிலிருந்து 50 கோடிருபாய்களை நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.  இதுவரை தனி மனிதர் எவரும்  தராத அளவில் பெரிய நன்கொடையை தந்த சாதனையை செய்திருக்கும் . இவர் தொழில் அதிபரோ சினிமா நட்சத்திரமோ இல்லை. இந்தியாவிலேயே அதிகமான மாத சம்பளம் பெற்றுகொண்டிருந்த ஒரு கம்பெனி நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.   தனது நிறுவன தலைவர் கேட்டுகொண்டதற்காக தன் பணியை ராஜினாமா செய்து இந்திய அரசின் ஒரு முக்கிய திட்டத்தை வழி நடத்த பொறுப்பேற்றிருக்கும் நந்தன் நீலேகெனி. தான் அந்த ஆச்சரியமான் நபர்.  (NANADAN NILEKANI). இன்போஸிஸ் நிறுவனர்களில்  ஒருவரான இவர் அந்த நிறுவனத்தின் பிரம்மாண்னட வளர்ச்சிக்கு பெறும் பங்களித்தவர்.  திரு நாரயாணமூர்த்தியை தொடர்ந்து அதன் முதல் செயல் அதிகாரியாக2002ல் உயர்ந்தவர். 2009ல்  இந்திய குடிமக்கள் அனைவருக்கும் அடையாளா அட்டை வழங்கும் பிரதமரின் கனவு திட்டத்தை செயலாக்க பிரதமர் நாரயாணமூர்த்தியிடம் ஆலோசனை கேட்டபொழுது,  அரசின் அந்த பணிக்கு  தலைமையேற்க அவரால் பரிந்ததுரைக்கபட்டவர். பல லட்சஙகள் சம்பளமாகவும் போனஸை கோடிகளிலும் பெற்றுகொண்டிருந்தவர் தன்பதவியை ராஜினாமா செய்து விட்டு காபினெட் அமைச்சரின அந்ததுஸ்த்துள்ள அந்த பதவியை ஏற்றுகொண்டிருபவர்.
” “இண்டியன் இன்ஸ்டியூட் ஃபார் ஹுமன் செட்டில்மெண்ட் என்ற அறகட்டளை  தென்கிழக்கு ஆசியாவிலேயே  மிகப்பரிய டிஜிட்டல் நூலுகம், பலதுறைகளை ஒருங்கிணைத்த ஒரு கல்விநிறுவனத்தை துவக்க 300கோடியில் திட்டமிட்டிருக்கிறது. அந்த நிறுவனத்திற்கு தான் இந்த  50 கோடி ரூபாய் நன்கொடை.  ” “தனிநபர் நன்கொடைகளின் சரித்திரத்தில் சாதனை படைத்திருக்கும் இந்த நன்கொடை எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது மிகப்பெரிய கெளரவம் “ என்று இதன் இயக்குனர் அறிவித்த பின்னர்தான் இந்த  நன்கொடை பற்றிய விபரம் வெளியே தெரிந்தது. 2009ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட  உலகின்  செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியைலில் இடம்  பெற்றவர்.
 இவரது மனைவி ரோஹிணி  சமூகநல சேவைகளில் அதிக ஆர்வம் கொண்டவர். மும்பாய் ஐஐடியில் படிக்கும்போது சந்தித்து காதல் திருமணம் செய்துகொண்டிருக்கும் இந்த தம்பதியினரின் மகனும், மகளும் அமெரிக்க யேல் பல்கலைகழகத்தில் படிக்கின்றனர்.  



கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்