7/8/11

கேளுங்கள் சொல்லப்படும் புதிய பாதையிலே......1
(ஆசிரியரின் அறிமுக குறிப்பக்காக ஒரு  draft
 வெற்றி பெற துடிக்கும் ஒவ்வொருவரின் வாழ்கையும்  அதை   நோக்கிய பயணமாகததான் இருக்கிறது. ஆனால், தீமானம் இல்லாத இலக்குடன் திட்டமிடப்படாத பயணமும் வெற்றியின் அளவுகோலை மாற்றிக்கொண்டே இருககும். அதனால் கிடைத்ததுமட்டுமே வெற்றி என எண்ணிக் கொண்டு  அந்த பயணத்தை பாதியில் விட்டுவிடுபர்கள் பலர்.
ஆனால் சிலர் யாரோ போட்டுவைத்த பாதையில் பயணம் செய்யாமல் தங்கள் பல்வீனங்களை பலமாக்கிகொண்டு,புதிய மாறுபட்ட சிந்தனைகளுடன் போராடி தங்களின் பாதைகளை  தாங்களே  புதிய பாதைகளாக்  உருவாக்கி  அதில்  வேட்கையுடன் பயணம் செய்து வெற்றி காண்கிறார்கள்.
அதிகரித்துவரும்  பல இளைய தலமுறை வாசகர்களின் விருபத்திற்கேற்ப  அப்படி புதிய பாதைகளில் பயணித்து வெற்றிபெற்ற சிரையும் அவர்களின் வெற்றிகளின் ரகசியத்தையும், வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் நம்பிக்கை விதைகளாக தர – இந்த பகுதி
                           ******
கேளுங்கள் சொல்லப்படும்


சில ஆண்டுகள் முன் வரை தேவையான ஒரு டெலிபோன் நமபரை பல நூறு பககஙகள் உள்ள டைரக்டிரியில் தேடி, பின்  தேடிய நமபர் அதில்  இல்லாத போதுதான் அது பழைய பதிப்பு என்பதை  தெரிந்து சலிப்படைவோம்.   இன்று ஒரு நம்பர் தேவையானால் ஜஸ்ட் டயலை கூப்பிட்டு கேட்டால் வினாடிகளில் கிடைக்கிறது.
டெலிபோன் நமபர்கள் மட்டுமில்லை  ஒடிகொண்டிருக்கும் சினிமா, ஆஸ்பத்ரிகள், ரிப்பேர்செய்பவர்கள், கல்யாண மண்டபங்கள் கல்லூரிகள், ரியல் எஸ்டேட், வாட்கைக்கு வீடு, செல்போன் கடைகள் இப்படி  உங்கள் எரியாவிலிருக்கு எதைப்பற்றிய விபரங்களையும் வினாடிகளில்  இலவசமாக தரும் இந்த ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சேவைகளை இன்று 240  இந்திய நகரங்களில்இரண்டரைகோடிபேர் பயன்படுத்துகிறார்கள்.  இந்த நிறுவனம்  மாறுபட்டு சிந்தித்த ஒரு தமிழரின் கனவு.
 3000க்குமேற்பட்ட ஊழியர்களுடனும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விள்மபர வாடிக்கையாளார்களுடனும் வெற்றிகரமாக இயங்கும்  இந்த நிறுவனத்தை துவக்கியவர் விஎஸ்எஸ் மணி. ஜாம்ஷெட்பூரில் பிறந்து கல்கதாவில் வளர்ந்த இந்த  இளைஞனின் பெற்றோரின் விருப்பம் இவர் ஒரு சார்டெட் அக்கெண்டண்ட் ஆவது.  அதற்காக  டெல்லி வந்த இவர் படிப்பு செலவிற்காக பண்ம் சேர்க்க 1985ல்  ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அது யெல்லோ பேஜஸஸ் என்ற டெலிபோன் டைரக்டரி தயாரிக்கும் கம்பெனி.. முதல் முறையாக, தனியாரால் வெளிநாடுகளை போல், இந்திய தொலைபேசி துறையின் போன்டைரக்க்டிரி போல் இல்லாமல்  தொழில் வாரியாக, துறைவாரியாக நம்பர்கள் பட்டியிலிடபட்டு  புதுமாதிரியான வடிவில் வெளியிட துவங்கியிருந்த கம்பெனிஅதில்  வேலைக்கு சேர்ந்த சுப்பரமணி அதன் சார்பாக  பலரை சந்தித்த போது எழுந்த ஒரு எண்ணம், ஏன்  இது புத்தக வடிவில் மட்டும் இருக்க வேண்டும் ?  24 மணி நேரமும் கேட்டால்  போனில் சொல்லும்படி  அமைக்க முடியாதா?
மனதில் கனிந்து கொண்டிருந்த எண்ணம்  வலுவான வடிவம் பெற்ற போது வேலையையும், சிஏ படிப்பையும் விட்டுவிட்டு முழுமையாக இதில் ஈடுபட்டார். நண்பர்கள் முதலீடு செய்து உதவ முன் வந்தனர்.மிக துணிவுடன்“ஆஸ்க் மீ” ‘ என்ற் 24 மணி நேரமும் போன்எண்களைச்சொல்லும் கம்பெனியை துவக்கினார். அந்த காலகட்டத்தில் மக்களிடம் இதற்கு  எதிர்பார்த்தளவு வரவேற்பு இல்லை. ஒரு போன்காலுக்கான காசை செலவழித்து ஒரு நமபரையோ அலலது விஷயத்தையோ தெரிந்துகொள்ள வேண்டுமா எனபதுதான் மக்களின் மனோபாவமாகயிருந்த்தது. கம்பெனி நஷ்டத்தில் இயங்கியது. அதிக முதலீட ஆளில்லை. அதைவிட முக்கியமானது. வெற்றிகரமாக செயல்பட்டிருக்க வேண்டிய தனது நல்ல ஐடியாவை அதற்கேற்ற காலத்திற்கு முன்னதாகவே அறிமுகபடுத்தி கொண்டிருகிறோம் எனபதை மணி உணர்ந்த்தது தான்,  மேலும் இந்த முயற்சிகளுக்கு சிறந்த இடம் மும்பாய்தான் டெல்லி அல்ல என்பதையும் அறிந்தார்.  எந்த விஷயம் பற்றி அறிந்து கொள்வதற்கும்   நண்பர்களையோ   உறவினர்களையோ அல்லது அறிமுகமிலாதவர்களிடம் கூட தகவல் கேட்கும் இந்தியர்களிடையே தனது  கேளுங்கள் சொல்லப்படும் ஐடியா சரியான முறையில் அறிமுகபடுத்தபட்டால் நிச்சியம் வெற்றி பெறும் எனபதை திடமாக  நம்பிய சுப்ரமணி அதை சில ஆண்டுகளுக்குபின் மும்பாயில் செயலபடுத்த் முடிவு செய்தார்.  ஆனால் பணம் வேண்டுமேஅதற்காக  தோன்றிய மற்றொரு எண்ணம்.  “ வெட்டிங் பிளானர்” “ எனற திருமண விளம்பர செய்திதாள்.இது இந்துஸ்டான் டைம்ஸ், டைம்ஸ் ஆப் இந்தியாவுடன் இலவசமாக தரபட்ட  ஒரு இலவச பேப்பர்.  திருமணங்கள்  சமந்தபட்ட அத்தனை வியாபாரஙகளின் விளம்பரங்களுடன்  வரும் அதில்   மணமகன்/மகள்  விள்மபரஙள் இலவசம். இதன் வெற்றியை பார்த்த ஹிந்துஸான் டைம்ஸ் தங்கள் பேப்பரிலேயெ அந்த பகுதியை  இணைப்பாக துவக்கிவிட்டார்கள். இன்று அனேகமாக எல்லா பேபர்களும் செய்துகொண்டிருக்கும் இந்த விஷயத்தின் முன்னோடி   இந்த  எஸ்.சுப்ரமணி தான்.
பையில் சேமித்த 50000 ருபாய்களுடனும் மனதில் கனவுகளுடனும் மும்பாய் வந்த மணி 1996ல் தன் கனவு கம்பெனியான  “ஜஸ்ட் டயல்”“ லை துவக்கினார். எண்ணியபடி மும்பாயில் எதுவும் எளிதாகயில்லை. தனது  தொழிலுக்கு மிக முக்கியமானது டெலிபோன். அதுவும் மக்கள்  மறக்கமுடியாத எளிதில் நினைவில் வைத்துகொள்ளும் போன் நம்பருடன் இருக்க வேண்டும் எனப்தை திட்டமிட்டிருந்தார். ஒரு போனுக்கே 3 வருடம் காத்திருக்க் வேண்டியிருந்த காலம்.  புதிய எக்சேஞ்களில் விரைவில் போன் கிடைக்கும். மும்பாயின் புறநகர் பகுதியான கண்டிவேலியில் புதிய டெலிபோன் எக்ச்சேஜ்  துவக்கபோவதாக் எனபதை  அறிந்து அங்கு ஆபிஸை துவக்கினார்.   டெலிபோன்ஜெனரல்மானேஜரை அணுகி  8ல் துவங்கும் புதிய எக்சேஞ்ஜில் தனக்கு 888-88888 எண்ணை கேட்டார். இவரது பிஸினஸ் திட்டததால் கவரப்பட்ட ஜெனரல் மானேஜர் அந்த நம்பரை விசேஷ அனுமதியின் பேரில் தந்தார். ஒசி மேஜை நாற்காலிகள், வாடகை கம்யூட்டர்களுடனும் ஜஸ்ட் டயல் தன் சேவையை  ஒரு சிறிய இடத்தில் துவக்கியது. இன்று 20000 சதுர அடி பரப்பில் மும்பாயில் சொந்த கட்டிடத்தில் தலமையகத்துடன் நாடு முழுவதும் செயல்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு நகரமாக வளர்ந்து வந்திருக்கும் இவர்களின் வெற்றியின் ரகசியம்   “இன்னும் என்ன புதிதாக செய்யலாம் எனப்தை தொடர்ந்து சிந்தித்துகொண்டே இருப்பதுதான் “.  என்கிறார் மணி. டெலிபோன் நம்பரில் துவக்கி இன்று எல்லாவிதமான தகவல்களையும் தருகிறோம். எவராது கேட்ட  ஒரு தகவல் எங்களால் தரமுடியாவிட்டால் அந்த விஷயம் தான் எங்களது பட்டியலில் சேர்க்க வேண்டிய அடுத்த இலககு என தீர்மானிக்கிறோம். நாடு முழுவதும் பரவியிருப்பதால் பலருக்கு பயனாகயிருக்கிற்து. டெல்லியிலிருக்கும் ஒருவர் மதுரையிலிருக்கும் நணப்ருக்கு அவர் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு கடையிலிருந்து மலர் கொத்து அனுப்ப ஆர்டா செய்ய முடியும். ஒருமுறை இந்த  சேவையை பயன்படுத்திய அவர் எஙகளை மறப்பதில்லை.  எப்படி  இவர்களால் இவ்வளவு விஷயங்களைநமபர்களை தரமுடிகிறது.?  தொடர்ந்து வளர்ந்து வரும் டெக்னாலஜி உதவியுடன் மிகப் பெரிய டேட்டா பேஸை உருவாக்கி அதை மிக கவனமாக அப்டேட் செய்துகொண்டே வருகிறோம். நவீன கணணி வசதிகளுடன் பல இனங்களில் தொகுத்து வைத்திருகிறாம். ஒரு காலர்  விபரம் கேட்ட மறு வினாடி ஆப்ரேட்டரின் முன் உள்ள ஸ்கீரினில்  மின்னல் வேகத்தில் தெரியும், அதை பார்த்து அவர் சொல்லுவார். அல்லது எஸ்எம்எஸ்.  அனுப்புவார்..  செல்போன் வந்த்திலிருந்து இவர்களிடம்   தகவல் கேட்டு எஸஎம்எஸ்சில்  பெறுபவர்கள் பலமடங்கு உயர்ந்திருகிறார்கள்.டெலிகாம் துறையில் எழுந்த புரட்சி இவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியிருகிறது.
இலவசமாக செய்யும் இந்த சேவையில் இவர்களுக்கு என்ன லாபம்.? கேட்பவர்களுக்கு  தகவல் அளிபதற்கு இவர்களிடம்  நிறுவனங்கள் பதிவு செய்ய கொள்ள வேண்டும் விளம்பரத்தைப்போல அதற்கு  அவர்கள் பணம் தரவேண்டும். அதுதான் இந்த கம்பெனியின் வ்ருமானம். கடந்த ஆண்டுமட்டும் 150 கோடி வரவு-செலவு செய்திருக்கும் இந்த நிறுவனத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும் சிறு வியாபார நிறுவனங்கள் லட்சத்திற்கும் மேல். டெலிபோனில் வெற்றிகரமாக் செய்து கொண்டிருக்கும் இந்த  சேவவை 2007ல் இண்டர்னெட்டிலும் துவக்கி கலக்கிகொண்டிருகிறார்கள். போனுக்காவது காசு இது ஒசி எனபதால் இவர்களது  தளத்திற்கு வருகை தருபவர்கள் ஒரு நாளைக்கு லட்சத்திற்கும் மேல்.
மிக வேகமாக வளரும் இந்த நிறுவனத்தை கூர்ந்து  கவனித்த ஹாங்காங்கிலிருக்கும் SAIF என்ற  வென்சர் காப்பிடல் நிறுவனம் லாபத்தில் பங்கு என்ற முறையில் 50 கோடி  முதலீட செய்ய முன் வந்தனர். .அந்த இனிய ஆச்சரியத்தை சரியாக பயன்படுத்திகொண்டு  சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த நிறுவனத்திற்கு  இப்பொது டைகர் குளோபல் எனற  அமெரிக்க வென்சர் கேப்பிடல் நிறுவனம்  77 கோடி  முதலீடு செய்திருகிறார்கள். அந்த மூதலிட்டுடன் அமெரிக்காவில்  1-800 என்ற எண்ணுடன் காலடி எடுத்து வைத்திருகிறார்கள், இனி நியூயாகிலிருப்பவர்களும்  சுவையான் பிட்சா எங்கே கிடைக்கும் என கேட்கலாம்.  அடுத்த இலக்கு  ஜஸ்ட் டயலை சர்வ தேச பிராண்டாக்குவது.
வெற்றி பெற்ற சிறந்த பிஸினஸ் ஐடியாவாக அறியபட்ட இநத நிறுவனத்தை வாங்க முயற்சித்தவர்களில்  முக்கியமானது குகூள்.  நிறுவனம்.  மனதில் தோன்றிய ஒரு மாறுபட்ட எண்ணத்தை, செயலாக்கும் வெறியுடன் புதிய பாதையில் பயணித்து வெற்றிகோட்டை கடந்தும்      ஓடிக்கொண்டிருக்கும் வி எஸ் எஸ் மணி புதிய தொழில் துவஙக விரும்புவர்களுக்கு சொல்ல விரும்பவது ‘ “முதலில் நீங்கள் ஏன் தொழிலை துவங்கவிரும்புகிறீர்கள் எனபதை உங்களயே கேட்டு திருப்தியான் பதிலை பெறுங்கள்.
பொறுமை, தோல்விகளை சந்திக்கும் துணிவு, வெற்றிபெற வேண்டுமென்ற வெறி இருந்தால் மட்டுமே துவங்குங்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்