14/8/11

விளக்கேற்றியவர் ஹரிஷ்


ஓளி மயமான எதிர்காலம் தெரிகிறது .

ஹரிஷ் ஹண்டேயின்  தந்தை ரூர்கேலா உருக்கு ஆலையில் பணியாற்றும் ஒரு பொறியாளார். எல்லா மத்திய தரகுடும்பத்தின் தந்தையைபோல மகனுக்கு  சிறப்பாக படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறித்தி வளர்த்தார். பள்ளி படிப்புதொடர்ந்து ஐஐடி யில் என்ஜினியரிங் முடித்து  அமெரிக்காவில் மேற்படிப்புகாக போனவ்ர் ஸ்கார்ஷிப் கிடைத்தனால் பிஎச் டி யும் முடித்தார். படித்தது எனர்ஜி என்ஜினியரிங். படிக்குபோதே பெரிய வேலைகள் அழைத்தன. ஆனால்  தொழில் செய்ய தீர்மானிஹ்டிருந்தார்
ஆராய்ச்சிபடிப்ப்பில் ஈடுபட்டபோது பாதித்த ஒரு  விஷயம் உலகின் பல பகுதிகளில் இன்னும் மின்சார வசதியில்லை. மாற்று சக்தியான சூரிய ஓளி மின்சாரம் பரவலாக மக்களை அடையவில்லை. அப்போது எழுந்த எண்ணம் சூரிய ஓளி மின்சார தயாரிப்பை ஏன்   தொழிலாக செய்யக்க்கூடாதுஎன்பது தான்.   இந்தியா திரும்பிய ஹரிஷ் ஹண்டேயின் தொழில் துவக்கும் யோசனையை கேட்டு, அமெரிக்காவில் படித்து பெரிய வேலைக்கு போவார் என்ற எதிர்பார்த்த குடும்பத்தினரும் உறவினரும் அதிர்ந்து போனாகள்.
ஓளிமயமான் எதிர்காலம் தெரிகிறது என்ற் நம்பிய  ஹரிஷ் மின்சாரமே இல்லாத கிராம்ங்களுக்கு சூரிய ஒளியிலிருந்து மின்சார விளக்குகள் தர 1995ல் செல்கோ SELCO INDIA, கம்பெனியை  தொடங்கினார். இன்று இந்த நிறுவனம் 120,000 கிராம இல்லங்களில் விளக்கு ஏற்றியிருக்கிறது. இந்த நிறுவன்த்தின் மூன்று முக்கிய குறிக்கோளாக் ஹரிஷ் அறிவித்த்து.
 1) ஏழைமக்களுகு டெக்னாலஜியின் பயன் போய் சேரவேண்டும்
.2) அவர்களையும் இதன் பயன்களை அடையச்செய்ய வளர்க வேண்டும்
 3) இம்மாதிரி சமுக தேவைகளையும் வியாபார ரீதியில் வெற்றிகரமாக் செய்யலாம்
என்பது தான்.  கடந்த 7 ஆண்டுகளில் இதை வெற்றிகரமாக் செய்து காண்பித்து வியக்க வைத்திருக்கிறார்.கர்நாடகத்திலும் குஜராத்திலும் 170 பேர் வேலை செய்யும் இவரது நிறுவனத்தின் கடந்த ஆண்டு வரவு செலவு 13 கோடிகள். இவரை விற்பனை செய்திருப்பது 100000க்கு மேற்பட்ட சோலார் ஸிஸ்டம்கள்.
இந்த மகத்தான் வெற்றியை செய்துகாட்டிய ஹரிஷ் ஹண்டேக்கு 20க்கும்மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கிறது. அதிபர் ஒபாமா தேர்ந்த்டுத்து சந்தித்த 20 பேர்களில்  இவரும் ஒருவர். சென்ற மாதம் இவருக்கு  இந்த ஆண்டு ஆசிய நோபலாக் கருதPபடும் மாகஸெஸே    விருது    MAGASAYSAY AWARD  அறிவிக்கபட்டிருகிறது.
 இவர்  இந்த வெற்றிகளை அடைய கடந்து வந்த பாதை ரோஜா மலர்கள் விரித்த பாதையில்லை. கடினமானது மிக கடினமானது. கர்நாடக மாநில்த்தில் தான் மிக அதிக்மான் கிராம்ங்கள் மின்வசதி பெறாதவை எனபதை நம்மில் எத்தன பேர் அறிவோம்.? அதை கண்டுபிடித்து அங்கிருந்து தன் பயணத்தை துவக்கிய இவர் சந்த்தித்த பிரச்சனைகள் ஏராளாம். முதலில் சூரிய ஓளியிலிருந்து மின்சாரம் எனபதையே கிராம மக்கள் நமபத்தயாரகயில்லை.  நம்பியவர்களும்  அதில்  முதலீடு செய்ய தயாராக்யில்லை. தன் ஸ்கார்ஷிப் பணத்தில் மிச்சம்பிடித்த செய்த  முதலீடான 5000 அமெரிக்க டாலர்களில் ம  செய் முறை விள்ளக்கங்களிலேயே மெல்ல கரைந்து கொண்டிருந்தது.  கடைசியாக ஒரு சின்னஞ்சிறு  கிராமத்தில் வேண்டாம் என்று சொன்ன ஒரு பீடி வியாபாரி வீட்டில் அவ்ர் இலாதபோது கூரையில் பேனல்களை பொருத்தி 4 பல்புகளையும் ஒரு சின்ன டிவியையும் இணைத்திருந்தார்.  மாலையில் வீட்டுக்குவந்த வியாபாரி தன் வீட்டில் பெரிய ஓளியையும் கூட்டத்தையும் பார்த்து ஆச்சரியபட்டு உடனே அதை வாங்கி கொள்ள ஒப்புகொண்டார்.  இப்படி விற்ற முதல் சோலார் ஸிஸ்டத்தின் பணத்தில் அடுத்தது வாங்கி  அதை விற்று அடுத்தை வாங்கி வியாபாரத்தை  வளர்த்தார். சற்று யோசித்து பாருங்கள். அமெரிக்காவில் எனஜரி எஜ்னியரிங்கில்  டாக்ரேட் வாங்கியவர் ஒரு படிபிப்லாத வியாபாரியிடம் மன்றாடி தன ஐடியாவை விற்றிருக்கிரார். ஏன்தன் முயற்சியில் நம்பிகையும் வெற்றி பெறவேண்டும் எனற வெறியினால் தான். . புதிய பாதையில் பயணம் செய்ய விரும்புவர்களுக்கு இது மிக் மிக அவ்சியம் எனகிறார் ஹரிஷ்.
இரண்டு அல்லது நாலு டூயூப் லைட்ஒரு பேன்ஒரு ரேடியோ வை இயக்க தேவயான மின்சாரத்தை சூரிய  ஒளியிலிருந்து பெற்று அதை ஒரு பாட்ட்ரியில் சேமிக்கும் வகையான் சோலார்பேனல்  தயாரித்து விற்கிறாரகள். விலை 8000லிருந்து  10 ஆயிரம வரை. ஆனால் அந்த கிராம வாசிகளுக்கு இது பெரிய தொகை. கடனில் கொடுத்தால் வாங்க தயார்ஆனால் கடன் கொடுபார்தான்  யாருமில்லை.  வங்கிகளுக்கு  இது எழைகளில் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும் எனபதை போராடி புரிய வைத்து கடன் வழங்க ஒரு திட்டத்தையே உருவாக்கிய  பெருமை இவரையே சாரும்,. ஆனால் சிக்கல்  தொடர்ந்த்து. கடன் வழங்க  மனு தாரரின் மார்ஜின் பங்காக 10-15 % பணம் கட்ட வேண்டும்.அதற்கு கூட வசதியில்லாதவர்கள் அந்த கிராம பகுதி மக்கள். வங்கிகளுக்கு அந்த பணத்திற்கு தனது கம்பெனி   கியாரண்டி கொடுக்கும் என்ற திட்டத்தை அறிமுக படுத்தியதின்   மூலம் பல கிராம மக்கள் பயன் பெற்றனர். இன்று பல வங்கிகள் இவரது திட்டத்தின் மூலம் கிராமக்களில்  வழங்கும் க்டன்களை அதிகரித்திருகிறார்கள். முக்கிய காராணம் இவர்களே வங்கிகள் வழங்கிய கடனை வசுலிக்கவும் உதவுகிறார்கள். சோலார் பேனல்கள் விற்பது மட்டுமில்லை இவர்கள் பணிஅதை நிறுவது மாதம் ஒருமுறை பார்த்து பராமரிப்பது போன்ற பணிகளும். அதற்கு உள்ளூர் இளைஞர்களை பயிற்சி அளித்திருப்பது மூலம் வேலைவாய்ப்பையும்  உண்டாக்கியிருக்கிறார்கள்.  கடனில் கூட இந்த வசதியை பெற முடியதாவர்களைக்கூட   இவர்கள் ஈர்க்கிறார்கள். ஒரு ஆதி வாசிகள் கிராமத்தில் கூடைசெய்பவர்கள் போதிய வியாபாரம் இல்லாதால்  விவாசய கூலிவலை செய்கிறார்கள். அவர்களுக்கு மின் விளக்குகள்  அமைத்து கொடுத்து இரவில் செய்யும் கூடைகளில் ஒரு கூடைக்கு 5 ரூபாய் வீதம் கடனை திருப்பி செலுத்த உதவியிருக்கிரார்கள். அரிக்கேன் விளக்கில் படித்த மாணவ்ர்கள் இன்று ட்யூ லைட்டில் படிக்கிறார்கள். பீடி சுற்றுவதுதைய்ல் போன்ற் வேலைகளை இரவில் செய்கிறார்கள்  பெண்கள்.  சுருக்க மாக சொன்னால் ஒரு மின்சார புரட்சியை  இவரது நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது. .இதை நம் கிராம புற பகுதிகளிலும் வியாபாரரீதியாக் செய்ய முடியாதா என்று எண்ணும் அல்லது இதை மேம்படுத்த எதாவது யோசனை வைத்திருக்கிரீர்களாஹரிஷ் ஹண்டேவை தொடர்புகொள்ளுங்கள் காத்திருகிறார்.

======================================================ற்ற்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்