28/8/11

புத்திசாலிகளே வாருஙகள்
“இந்த விஷயத்தை அரசு ஏன் சொதப்புகிறது. இன்னும் சற்று புத்தி சாலிதனமாக செய்திருக்கலாமே என்ற எண்ணுபவரா  நீங்கள்?  அரசு பணியில் இல்லாவிட்டலாலும் உங்கள் திறமையினாலும் அனுபவத்தினாலும் வாய்பு ஒரு கிடைத்தால் சவாலாக ஏற்று சாதிக்க  விருப்புகிறவரா நீங்கள் ? அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங் என்று சொல்லப்படும் மாறுபட்ட சிந்தனையாளாராக அரசுக்கு எதாவது புதிய யோசனை வைத்திருப்பவரா ?  இருக்கும் வேலைக்கு லீவு  போட்டுவிட்டு வாருங்கள். சேர்ந்து உழைப்போம். புதியதோர் உலகம் செய்வோம்- என்று அழைக்கிறது கர்நாடக அரசு.

இந்திய நாட்டை அறிவுசார்ந்த நாடக மாற்றும் குறிக்கோளுடன் பிரதமர் “தேசிய அறிவுசார் ஆணையத்தை “ (NATIONAL KNOWLEDGE COMMSSION)  அமைத்திருக்கிறார். பொருளாதார மேதைகளும், சிறந்த அறிஞர்களும் உறுப்பினாராகளாயிருக்கும் இதன் தற்போதைய தலைவர் திரு. சாம்பிட்ரோடா.
கர்நாடக அரசின் முதல்வர் எடியூரப்பா 2008ல் தனது அரசுக்கு உதவ இதே அடிப்படையில் கர்நாடக நாலெட்ஜ் கமிஷனை   இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலமையில் அமைத்தார்.  அந்த அறிவுசார்மையம் தான் இந்த அழைப்பை விடுத்திருகிறது. “ நீங்கள் காணவிரும்பும்  மாற்றமாக முதலில் நீஙகள் இருங்கள்” “ என்ற அண்ணல் காந்தி அடிகளின்  வார்த்தைகளுகேற்ப   ‘ ஞானம்” “ என்ற திட்டத்தை உதவித்தொகையுடன் அறிவித்திருக்கிறது.  ஒரு குறிபிட்ட திட்டதை திறம்பட செயல் படுத்துவது, ஊழியர்களுக்கு ப்யிற்சிஅளிப்பது,  ஆராய்ந்து அறிக்கைஅளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட தகுதியும் ஆர்வமும் உள்ள 28 வயதுமுதல்-40வயது வரை உள்ள இளையதலைமுறையினரை- தொழில்துறை தகுதியுடன் பணியிலிருப்பவர், சொந்ததொழில்செய்பவர், இல்லத்தரசி  என்று எலோரையும்  அழைகிறது இந்த ஆணையம். குறைந்த பட்சதகுதி பட்டபடிப்பு,,  5 ஆண்டு முன் அனுபவம் போன்ற விபரஙகளுடன்  இனையதளத்தில் அறிவிப்பு வெளியான உடனே மனு செய்திருப்பவர்கள் 300 பேர். பல ஆயிரகணகானவர்கள் இணைய தளத்தை பார்ப்பது பதிவாகி கொண்டிருக்கிறது.
மனுசெய்தவர்களுக்கு இரண்டுகட்ட தேர்வு. மனுக்களிலிருந்து முதல் கட்ட பரிசீலனையில் தேர்ந்தெடுக்கபட்டவர்கள் முதல் கட்ட நேர்முக தேர்வு நேரடியாகவோ அல்லது டெலிபோனிலோ நடக்கும். இதில் தேர்ந்தவர்கள்  மட்டும் நேர்முகத்திற்கு அழைக்கபடுவார்கள். இராண்டாம் கட்டதில் குழுவிவாதம், தனி நேர்முகம் போன்றவை களினால் தேர்ந்தெடுக்கபடுபவர்கள் ஆறுமாதம் முதல் ஒரு வருடம் வரை பணிசெய்ய வேண்டும் உதவித்தொகை  மாதம் ரூபாய் 40000/. தேர்வு செய்யபட்டால்,தற்போது இருக்கும் பணியில் நீண்ட விடுமுறைக்குபின் மீண்டும் சேரும் உரிமையும்  உண்டு. இவர்களின் பணிகள் அந்தந்த துறை செயலர்களால் நேரிடையாக கண்காணிக்கபடும்.  இவர்களின் பணிகளில் முன்னாள் அதிகாரிகள்,வல்லுனர்கள், வழிகாட்டிகளாக இருந்து உதவுவார்கள்.பணிகால இறுதியில் எதாவது ஒரு துறையில் திட்ட அறிக்கை சமர்பிக்கவேண்டும். பின்னர் மீண்டும் தஙகளது பணிக்கே திரும்பிவிடலாம். செய்த திறமையான பணியின் அடிபடையில் நாலெட்ஜ்கமிஷன் அதன் வேறு திட்டங்களுக்கு  மீண்டும் உதவ அழைக்கபடகூடிய வாய்ப்பும் உண்டு. .
அறிவிக்கபட்டதிலிருந்து இந்த திட்டதிற்கு வந்து குவியும் விண்ணபஙகள், மேல்விபரங்கள் அறிய வரும் எண்னற்ற போன்கள் பற்றியும் அறியும்போது  அரசின் திட்ட பணிகளில் உதவ  காத்திருக்கும் இளய தலைமுறையையினரையும்,    சிறந்த  புத்திசாலிகளை  அரசு பணிகளுக்கு பயன்படுத்திகொள்ள வேண்டிய அவசியத்தை  உணர்ந்த ஒரு  மாநில அரசையும் புரிந்துகொள்ளமுடிகிறது.
பக்கத்து வீட்டை பார்த்து  நாமும்  செய்யலாமே?       

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்