லைப் பூஸ்டர்
5 4
மேனகா கார்ட்ஸ் சங்கரலிங்கம்
சொர்கத்தில்
நிச்சியக்கப்பட்டாலும் இணையத்தில் நிச்சியிக்கப்பட்டாலும், அழைப்பிதழ்கள் அச்சிடபட்டு வழங்கபட்ட பின்னர்தான்
தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண அழைப்பிதழ் எனபது அச்சகங்களின் ஒரு
அச்சு பணி என்ற நிலையை மாற்றி அவைகள் அழகான வடிவத்தில் அமைக்கபட்டு முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே
ஒரு தனிகெளரவம் சேர்த்தவர்கள் மேனகா கார்ட்ஸ். இன்று இந்த
துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் க்ஷ்க்ஷ்க்ஷ் கிளகளுடனும்
க்ஷ்க்ஷ்க்ஷ் போன்ற வெளிநாடுகளிலும் கிளைகளுடன் இயங்கும் இந்த நிறுவனத்தின் துவக்கம் ஆச்சரியமானது. இதை துவக்கியது அச்சு தொழிலை செய்துகொண்டிருந்த
ஒரு குடும்பத்திலிருந்து அல்லது பெரிய வியாபரா பிண்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்தவராலால் இல்லை. மிகமிக
எளிய குடுமபத்தில் பிறந்து படிப்பின் அருமையை உணர்ந்த ஆனால் படிக்க
முடியாத வாழ்க்கைச் சூழ்நிலைகளின்யின்
மேடு பள்ளங்களை கடந்துவந்தவர்.. இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் வந்த
பாதை புதியபாதை மட்டுமில்லை கடினமானதும் கூட.
தென்
தமிழகத்திலிருக்கும் வானத்தை நம்பியிருக்கும் பல வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான்குளம்.
திருநெல்வேலியிலிருந்து 50 கீமி
தூரத்திலிருக்கும் இந்த கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் தான்
அதிகம். ஆனால் விவசாய தொழிலுக்கு வாய்ப்பில்லாததால் சாரயாங்காய்ச்சுவதுதான்
பலருக்கு வேலை. ஒரு பகுதி கூலியாக
கிடைத்தை குடித்துமகிழ்ந்தவர்கள். அந்த கிராமத்தில் உழைப்பின், படிப்பின் அவசியத்தையை உணர்ந்த்டிருந்திருந்த ஒரு
தந்தை, தன் மகனை பக்கத்துஊர் பள்ளிக்கூடத்திற்கு கைபிடித்து நடத்தி கூட்டிபோய் படிக்கவைத்தவர். அப்படி
ஆரமப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம்.
நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலைபள்ளிப் படிப்பை தொடர்ந்தபோது அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள
டிவிஎஸ் அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.
இந்த நிலையை அடைக்க தான் ”நன்றாக
படிக்க வேண்டியதின் அவசியத்தை யாரும்
சொல்லாமலே உணர்ந்தான் அந்த மாணவன். தந்தையின்
விருப்பபடி அக்ரிகல்சரல் ஆபிஸாரகும் ஆவலில் கோவைகல்லூரிக்கு மனுச்செய்து
நேர்முகத்திற்கு அழைப்பு வந்தவுடன் எதோ வெளிநாட்டுக்கு போகும் ஆவலுடன் கோவை சென்ற சஙகரலிஙக்த்திற்கு ஏமாற்றம.
அட்மிட்ஷன் கிடைக்கவில்லை. மனமொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த் ஆண்டு மீண்டும் முயற்சிக்கும் வரை பக்கத்து ஊரான திசையன்விளை வரை சைக்கிளில் போய் டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர் ஊர்கார்களுக்கு உதவ விறகு வாங்கி தந்ததையையே ஒரு தொழிலாக ஆரம்பிதார்.. அடிக்கடி சைக்கிள்
பஞ்சரானாதால் பஞ்சர் ஒட்ட கற்று கொண்டதிருந்ததினால், சாத்தன் குளத்தில் முதல்முதலாக ஒரு பஞ்ஞ்ர்
ஒட்டும்கடை போர்டுடன் பிறந்தது. கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டு மனுச்செய்தபோதும் அட்மிஷன் கிடைக்கவில்லை. மனம் வெறுத்துபோன
சங்கரலிங்கத்தை கடையை கவனத்துடன் கவனித்து பெரிது படுத்தும் யோசனையைச்சொல்லி
ஆறுதல் படுத்தினார்.தந்தை. ஆனாலும் அந்த
இளைஞனின் மனதில் சாதிக்க வேண்டும் என்று
கனிந்து கொண்டிருந்த கனல் மெல்ல அனாலாகி, உயரஙகளைத்தொட வேண்டிய நமக்கு வேண்டியது இந்த
கிராமத்தில் இல்லை என்ற முடிவோடு கையில்
300 ரூபாய்களுடன் கோவைக்கு பயணமானான்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு தெரியாத ஊரில் வேலை
கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறுஏதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கலிங்கம் ஏற்றது ஒரு
ஹோட்டலில் சர்வர் வேலை. சாப்பாடும், தங்குமிடமும்
நிச்சியமாகயிருந்ததாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்த வில்லை. கோவையிலிருந்து
அப்போது வெளியாகிகொண்டிருந்த கலைகதிர்
பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம் அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும்
வேலையை தந்தார். இந்த மனிதரை சந்தித்தது தன்
வாழ்வில் அதிர்ஷ்டம் என்கிறார். சஙகரலிஙகம்.
இவரது படிக்கும் ஆர்வத்தை பாராட்டி மாலைக்கல்லூரியில் பி.காம் படிக்க
வைத்திருக்கிறார். அச்சக தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக சிறப்பாக அறிய
பிரிண்டிங் டெக்னாலாஜி படிக்க விரும்பிய போது அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிரார் முருகானாந்தம்
எனற அந்த நல்ல மனிதர். தொடர்ந்து அச்சக
கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்கு சேர்ந்து திறமையை வளர்த்து கொண்டிருந்தவரின் வாழ்க்கையில்
ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின உதிரிபூக்கள் படத்தில் ஒரு சின்ன
வேடதில் நடிக்க கிடைத்த வாய்ப்பு “கனவுத்
தொழிற்சாலயில்”’“ ஆர்வத்தை தூண்டியது. சில வாய்ப்புகள் பல ஏமாற்றங்கள் என நான்காண்டு போராட்டதிற்கு பின்னர் அண்டன் கனவு
கலைந்தபின் இவர் புரிந்துகொண்டது.” “
முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவிலையென்றால், முடியும்
விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை “ என்பதுதான். இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர் இவருக்கு திருமணம் பேசி முடிவு
செய்திருக்கிறார்கள். அச்சுக்கலையை நன்கு அறிந்த இவர் தன் திருமண பத்திரிகையை தானே அழகாக வடிவமைத்து அச்சகத்தில் கொடுத்த போது எல்லா அச்சகங்களும் சொன்னபதில் “ இதை
உடனடியாகச் செய்ய முடியாது “ மிக சதாரண
முறையிலேயே தன் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்கு தோன்றிய யோசனை “ஏன் இதற்காகவே ஒரு அச்சகத்தை ஏற்படுத்தகூடாது? “ என்பது தான். எண்ணம் எழுச்சி பெற்று 1900 ஆம் ஆண்டு செயல்வடிவம்
பெற்றது. தரமாக தயாரிக்க பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ
அச்சிட்டு தரப்பட்டது அந்த கால கட்டதில் ஆச்சரியமான விஷயம். இந்து மத பிரிவுகள்
தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்ட்ட கார்டுகளும், தயாரித்து வைக்கபட்டிருந்த பத்திரிகைகளின்
வாசகஙகளும் பெரும் வரவேற்பை பெற்றது.
இன்று 1000க்கு மேற்பட்ட டிசைன்களடன் எந்த மதப்பிரிவினரின்
திருமணத்திற்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள் தொடர்ந்து புதிய
டிசைன்களையும் உருவாக்கிகொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்திற்குமட்டும் என டிசைன் கார்டுகளை துவங்கிய இவர்கள் இப்போது பிறந்த
குழந்தையை தொட்டிலிடுவதிலிருந்து, சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷகம் வரை எல்லா சுப நிகழ்வுகளுக்கும் பல டிசைன்களில்
கார்டுகளை தயாரிக்கிறார்கள்.
ஒரு கார்டு 5 ருபாயிலிருந்து 5000 ரூபாய்வரை என விலைகளில் பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை
ஆன்லைனில் பார்த்து தேர்ந்தெடுக்கும் வசதியையும்
அறிமுகபடுத்தியிருகிறார்கள். தொழில்
நுட்ப வளர்ச்சியுடன் நாம் இணைந்து வளர வேண்டியது
காலத்தின் கட்டாயம் என்று சொல்லும் நிறுவனர் “ இண்ட்டர்னெட்ட்டைப்பயன்படுத்தி நேரிலே வராமல்
தேந்தெடுத்த கார்டில் அழைப்பிதழை தயாரித்து பெற்றுக்கொள்பவர்களும் உண்டு. எங்களிடம்
வந்து இருக்கும் டிசைன்களைய்ல்லாம் பார்த்துவிட்டு மாறுதல்களை சொல்லி புதிதாக உருவாக்குசொல்பவர்ககளும்
உண்டு”. எதுவாகயிருந்தாலும் சிறப்பாக செய்யவேண்டும். ஏனெனில் அடுத்த கஸ்டமர்களை
அறிமுகபடுத்தபோகிறவ்ர்கள் அவர்கள் தான் “.
என்கிறார். சென்னையில். பெரிய நகரங்களில் விற்பனை செய்தாலும் கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சலையை தன் சொந்த கிராமமான் சாத்தன்குளத்தில் நிறுவி
கிராமத்து இளைஞகள் பலருக்கு வேலை வாய்ப்பை தந்திருக்கிறார். தொழில் துவஙக விரும்பும் இளைஞர்களுக்கு இவர்
சொல்லவிரும்புவது “பிஸிஸில் நேர்மையாக
இருக்க முடியாது-ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக முடியம் “ என்று சொல்லுவதை
நம்பாதீர்கள். ஏற்காதீர்கள். முடியும் என்பதற்கு என் வாழ்க்கையே
உதாரணம் “
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்