20/11/11

அமெரிக்காவிலிருந்து ஆன் லைனில் அம்மாவிற்குஅரைகிலோ கத்திரிக்காய்


லைப் பூஸ்டர் 12             

 வெஜ்ஜி பஸார் வெங்கடேசன்


 பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒரு பன்னாட்டு  கம்ப்யூட்டர் நிறுவனத்தில்  நல்ல பதவியிலிருந்த வெங்கடேசனுக்கு, உலக பொருளாதார சரிவினால் அவர் பணியாற்றிய நிறுவனம் சம்பள குறைப்புபதவிகள் குறைப்பு செய்ய  துவங்கியபொழுது எழுந்த எண்ணம் தனக்கென  ஒரு சொந்தத்தொழில். பொதுவாக புதிய தொழில் செய்ய விரும்புவர்கள்  வெற்றியடைந்த மாடல்களைத்தான் பின்பற்றுவார்கள். மாறுதலாக  ஒரு தோல்வியடைந்த தொழிலை தேர்ந்தெடுத்து ஏன் அவர்கள் வெற்றி பெறமுடியவில்லை எனபதை ஆராய்ந்து கண்டுபிடித்து அதைச்சீராக்கி இவர் துவக்கிய தொழில்   “வெஜ்ஜி பஸார்” “  என்ற ஆன்லைன் காய்கறி, கனிகள் வியாபாரம். யோசனையையும் திட்டவடிவையும் சொன்னவர் மனைவி நிர்மலா. சில ஆண்டுகளுக்கு முன் இதே முயற்சியில் ஈடுபட்டு 2 கோடி நஷ்டத்துடன் கையை சுட்டுக்கொண்ட இளைஞர்களைபற்றி அறிந்திருந்தும் துணிவுடன் 2009ல் துவக்கி வெற்றிகரமாக செய்துகொண்டிருக்கிறார்.  காய்கறிகள் பழங்கள் வாங்க மார்கெட் போக வேண்டாம். கம்ப்யூட்டரில் ஆன் லயனில் பார்த்து ஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் என்பது மட்டுமில்லை. அவசியமானால் அழகாக நறுக்கிய வடிவில் வந்து சேரும் எனபது  இவர் உருவாக்கியிருக்கும் பிசினஸ் மாடல்.
இவரது வெஜ்ஜிபஸார் வெப் ஸைட்டில் 54 விதமான காய்கறிகள் படங்களுடன் கேட்லாக் செய்யபட்டிருக்கிறது. படத்தை கிளிக்செய்தால் அதன் அன்றைய விலை நறுக்கியவடிவில் விலை எல்லாம் வரும் அதை பார்த்து ஆர்டர் செய்து  கிரிடிட் அல்லது டெபிட்கார்டுகள் மூலம் பணம் செலுத்தினால் காய்கறிகள் பழங்கள் வாடிக்கையாளார்கள் வீட்டிற்கு அனுப்பிவைக்கபடுகிறது. இப்போது சென்னை வாசிகளுக்கு மட்டும்தான். சாதரண உள்நாட்டு காய்கறிகளுடன், பச்சைநிறகாளான், நீல நிறமுட்டைகோஸ் போன்ற அபூர்வ காய்களும் கிடைக்கும் கடிகாரத்துடன் போட்டியிட்டு வேலைகளை செய்துவிட்டு அலுவலகத்திற்கு ஓடும் தாய்மார்களுக்கு இது வசதியாயிருக்கிறது. இன்று 5000 வாடிக்கையாளர்களிருக்கும் இவரது நிறுவனத்தை ஒவ்வொரு நாளும் 100 வாடிக்கையாளர்களுக்கும் மேல் பயன்படுத்துகின்றனர். ஆய்ந்த கீரை, நறுக்கிய சேனை, கருணைகிழங்குகளுக்கு தினமும் ஆர்டர்கள் வருகிறதாம் தினசரி தேவை காய்கறிகளைத்தவிர வாரம் முழுவதுக்குமான, கர்ப்பணி பெண்களுக்கு, குழந்தைகளுக்கு என பேக்கேஜுகளும் வைத்திருக்கி
றார்கள்.
 “பிடித்தமான பாட்டை லேப்டாப்பில் கேட்டுகொண்டே  15 நிமிடத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வேண்டிய காய்கறி ஷாப்பிங்கை செய்துவிட முடிகிறது.நேரம், பெட்ரோல் செலவு மிச்சம்” “ என்கிறார் ஜனனி. இவர் இரவு பகலாக நாளைக்கு 16 மணி நேரம் உழைக்கும் சாப்ட்வேர் என்ஜினியர்.

காய்கறிகள்  சூடான நீரிலும், குளிர்ந்த் நீரிலும்  கழுவபட்டு ஜெர்மனியிலிருந்து இறுக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களில் அழகாக   விதவித்மாக நறுக்கி பேக்செய்யபடுகிறது. சில நிமிடங்களில் ஒவ்வொரு வகை காய்கறிகளையும் அதேற்கேற்ற வடிவில் நறுக்கி குவிக்கிறது. ஆர்டர்களின் நமபர் இடப்பட்ட பைகளில் நிரப்பி அனுப்ப படுகிறது. ஆடம்பர  சுழலில் பரபரப்பாகபணி செய்தாலும் வீட்டு கடமைகளை மறக்காத  பெண்மணிகளின் சைக்காலாஜியை நன்கு அறிந்திருக்கும் வெங்கடேஸன் இப்போது நறுக்கிய காய்கறிகளை அவர்களின் அலுவலகத்திற்கே அனுப்பும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். பெரிய சாப்ட்வேர் நிறுவனங்களில்,  தொழிற்சாலைகளில் நிருவனங்களின் அனுமதியுடன் இந்த திட்டம் செயல்படுகிறது. தங்கள் பெயருடன் காத்திருக்கும் காய்கறி கவரை வீட்டுக்குபோகும்முன்  அலுவலகத்திலிருந்தே எடுத்து செல்லலாம். இந்த புது முயற்சிக்கு நல்ல  வரவேற்பிருக்கிறது என சொல்லும் இவர்  இப்போது  அதை  பல அலுவலகஙகளில் அறிமுகபடுத்தவிருக்கிறார். மிக அதிகமான அளவிலிருக்கும்  அடுக்குமாடி குடியிருப்புகளில்   மாலைநேர கடைகளயும் நடத்த ஆரம்பித்திருக்கிறார். இரவு 10 மணி வரை  ஆன்லையனில் வந்த ஆர்டர்களை பார்த்து பிரித்து அதற்கேற்ப கோயம்பேடு, செங்கல்பட்டு திண்டிவனம் போன்ற இடங்களிலிருக்கும் இவர்களின் சப்ளையர்களுக்கு தங்களது தேவைகளை  இரவு 11.30க்குள் எஸ்எம்எஸ் செய்கிறார்பழங்களை கொடைக்கானல், ஊட்டி போன்ற தனியார் பண்ணைகளிலிருந்து பெறுகிறார். வெங்கடேஸின் இந்தப் பணியில் துணை நிற்பவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராகயிருக்கும். அவரது மனைவி நிர்மலா.  அலுவலக வேலைக்குபின் இதை செய்கிறார்.   காலயில் 6 மணிக்கு புதிதாக வந்திறங்கும் காய்கறிகளின் தரம் சோதிக்கபடுவதிலிருந்து பணி துவங்குகிறது. மாலைக்குள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்படுகிறது. அனுப்பிய விபரம் ஈ மெயில் செய்ய்படுகிறது. ஆன்லயனில் வந்த சில ஆர்டர்களில்  அமெரிக்க விலாசமிருந்ததை பார்த்து ஆச்சரியபட்ட இவர் அறிந்தகொண்ட விஷயம் அவை அமெரிக்காவிலிருக்கும் ஒரு பெண் அடையாரிலிருக்கும் தனது பெற்றோர்களுக்காக ஆர்டர் செய்தது எனபது.    “ஆன்லையனில் காய்கறிகள் பழங்கள் விற்பனை எனபது எளிதான பிஸினஸ் இல்லை. விலை, தரம் சரியான நேரத்தில் டெலிவரி எல்லாம்  எல்லா நாளும் சரியாகயிருக்கவேண்டும். நாங்கள் அதில் மிக கவனமாகயிருப்பதால் வேகமாக வளருவோம் என நம்பிக்கையோடுயிருகிறோம்”“ ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்கள் ஊர்களில் துவக்கலாம் என்கிறார்கள் இந்த தம்பதியினர்.

)

11/11/11

11 11 11

 

             11 11 11

 

இந்த தேதியை ம்றுபடி எழுத இன்னும் 1000 ஆண்டுகள் ஆகும். வங்கிப்பணியில் இம்ம்மாதிரி  விநோத தேதிகளில் எதாவது   ஒரு முக்கிய   விஷயத்தை (கிளைதிறப்பு  ஒப்பந்தங்கள் முக்கியஅறிக்கைகள் வெளியிடுவது போன்றவற்றை) செய்வதை வழக்கமாக்கியிருந்தேன். ஒரு கட்டத்தில் இம்மாதிரி நாட்கள் நெருங்கும்போது என்ன செய்ய்ப்போகிறீர்கள் என நணப்ர்கள்  கேட்க துவங்கிவிட்டனர்.
கடந்த ஒருவருடமாக அசைபோட்டுக்கொண்டிருந்த  ஒரு எண்ணமான இந்த  Blog ஐ பதிவு செய்யும் எண்ணம் எழுந்த்து.    
பெயர் ? ....சுவடுகள்     ஏன்  “சுவடுகள்“?

 என் அனுபவச் சிதறல்கள், படித்தவைகள்,  பார்த்தவைகள் கேட்டவைகள்  சந்த்தித்தவைகள், பயணங்கள்  எழுதியவைகள் எல்லாமே என் மனதில் பதிந்த சுவடுகள். சில கடல் அலையருகின் மணலில் பதிந்தவை. சில ஈர சிமிண்ட்டில் பதிந்ததடங்களாக வாழ்ந்துகொண்டிருப்பவை. . அவைகளை, உங்களுடன் பகிர்ந்துகொள்ள, என்னை வசீகரித்த மனிதர்களைப்பற்றிசொல்ல, என் வாழ்வின் வேறு சில நினைவலைகளைப்பதியவும்  இந்த சுவடுகள் உதவும்.   என் எண்ணங்களுக்கு சங்கிலிப் போடாத  என் குடுமப்த்தினருக்கும், எனக்கு தமிழ அறிவித்த ஆசான்களுக்கும்  நன்றியுடன்  இன்று இதைத் துவங்கிறேன். 
படைப்பின்சந்தோஷத்திற்காகவும் படிக்கிறவர்களுக்காகவும்  எழுதுவதை  நிரந்தரமாக பாதுகாக்க இந்த தொழில் நுட்பம் கைகொடுபதும் ஒரு காரணம். சரி நமக்கு பின் இதை பாதுகாத்து பராமரித்து  எழுதப்போவது யார்?  என்ற் கேள்வி மனத்தில் எழுகிறது. சமீபத்த (dec 2011) அமெரிக்க பயணத்திலிருந்தபோது படித்த ஒரு செய்தி. சமயல் குறிப்புகளை வலைப்பூவில் எழுதி வந்த ஒருவரின் மரணத்திற்கு பின் அந்த வலைப்பூவை உரிமை கொண்டாடி அவரின் வாரிசுகள் கோர்ட்டில் நின்றனர். எழுதபட்டிருந்த உயிலில் எதுவும் சொல்லப்ப்டாதால் வழக்கு. பல நூற்றுகணக்கான கட்டுரைகளில்  ஒரே ஒரு கடுரையில்  என வாழநாளுக்கு பின் இதை என் மகள் தொடர்வாள் என் நம்புகிறேன் என்று சொன்னதை சுட்டி அந்த வலைப்பூ எனக்குதான் சொந்தம் எனறாள்  மகள். நான் இந்தியா திரும்பும்  வரை வழக்கின் தீர்ப்பு வரவில்லை.
இதனால் வருங்காலத்தில் வலைப்பூக்களூம் சொத்தாக மதிக்கபடபோவது புரிகிறது.   எனவே இந்த வலைப்பூவின் வாரிசாக எனது பெயர்த்தி பார்கவியை நியமிக்கிறேன். பேச துவங்கிய சில நாட்களிலேயே  மீரா பாட்டி சொல்லிக்கொடுத்த “அகர முதல“” குறளை மனனம் செய்து சொன்ன இந்தப்பெண் தமிழ் நன்கு படித்து மாலனைபோல் தமிழ்எழுத வேண்டும் என  இறைவனை வேண்டுகிறேன்.
பிறப்பின் சரித்திரம் போதுமே. சுவடுகளின் பதிவுகளை பார்த்துவிட்டு எனக்கு எழுதுங்களேன்.
அன்புடன்
Ramanan