15/4/12

மச்ச அவதாரம்
ஜேம்ஸ் கேம்ரோனின்  “ மச்ச அவதாரம்

உலக சினிமா  வரலாற்றில் அழியாத இடம் பெற்றிருக்கும் படம் டைடானிக். இன்றும் உலகின்  எந்த பகுதியில் திரையிடப்பட்டாலும் வசூலை அள்ளிக்குவிக்கும் இந்த படத்தின் டைரக்டடர் ஜேம்ஸ் கேம்ரோன்.  தொடர்ந்து தன் படங்களுக்கு ஆஸ்கார், அக்கடமி விருதுகளை வாங்கிக்கொண்டிருக்கும் இந்த டைரக்டர் இந்த ஆண்டு பெறப்போகும்  ஒரு விருது அவரது சினிமாவிற்காக இல்லை. அறிவியலில்கடல்பற்றிய ஆராய்ச்சியில் அவரது பங்களிப்புககாக..
ஆழ்கடலின் அடிப்பகுதியை முதலில் பார்த்து அதில் பயணம் செய்த முதல் மனிதன் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியிருக்கிறார் கேம்ரோன். சினிமாதிரைக்கதையாசிரியர், கேமிராமேன், டைரக்டர் எனபல முகங்கள் கொண்ட இவருக்கு பிடித்த மற்றும் ஒரு விஷயம் ஆழ்கடல் ஆராய்ச்சி. ஸ்கூபா டைவராக உலகின் கடல் பகுதிகளை பார்த்திருக்கும் இவரது ஆசை கடலின் அடி மண்ணை பார்க்கவேண்டும் என்பது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு டிரக் டிரைவராகி, ஸ்டார்வார் பாத்த ஆர்வத்தால் நூலகங்களில் சினிமா, கேமிரா பற்றி படித்தறிந்து போராடி சினிமா உலகில் சரித்திரம் படைத்திருக்கும் கேம்ரோன்  “இது என் 7 ஆண்டு கனவு”“ என்று சொல்லுகிறார். இவர் அவதார் படத்திற்கு பின் இதில் தீவிரமாக ஈடுபட்டு அதற்காக தன்னை தயாரித்துகொள்ள ஆரம்பித்தார். உலகியே அதிக ஆழமான கடல் பகுதியாக அறியபட்டிருக்கும்  “சாலெஜ்ர் டீப்” “ என்ற  கடல் பகுதியில் செல்வதற்காகவே பல மில்லியன் டாலர் செலவில்  24 அடி நீளத்தில் ஒரு குட்டி சப்மெரீன் ” “டீப் ஸீ சாலெஜ்ர்“ தயாரிக்கபட்டது. அவருக்கு பிடித்த பச்சை வண்ணத்தில், இயந்திர கைகள், சக்திவாய்ந்தவிளக்குகள், 3டி கேமிராக்கள் என விசேஷமாக தயாரிக்கபட்ட இதில் ஒருமுறை பரிசோதனை பயணமும் செய்தபார்ததிருக்கிறார்.   ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியான மேரினா தீவு பகுதிதான் உலகிலேயே ஆழமான கடற்பரப்பை கொண்டது. அந்த கடல் பகுதியில்தான் இந்த சாதனையைச் செய்திருக்கிறார்.  “நாங்கள் திட்டமிட்டதைவிட மிக வேகமாக ஒரு டார்பிடோ போல பாய்ந்த  டீப் ஸீ-சாலென்ஜர் கடலடியை  2 மணி நேரத்தில்  அடைந்தது.  கடலின் அடிப்பகுதியில் 4மணி நேரம் சற்று தூரம் அந்த கப்பலை ஒட்டிச்சென்று  பார்த்தேன். அடர்ந்த இருட்டில் 35 000 அடி ஆழத்தில் கப்பலின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்த அற்புதமான காட்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  வேறு ஒரு கிரகத்திலிருப்பதை போல உணர்ந்தேன். கப்பலின் ஹைடிராலிக் பிரேக் சரியாக இயங்காதலால் சீக்கிரமே திரும்பிவிட்டேன். “ என்று சொல்லும் கேம்ரானின் இந்த பணியில் நேஷனல் ஜியாகிராபிக் சொஸைட்டியின் ஆராய்ச்சியாளார்களுக்காக சாம்பிள் சேகரித்ததோடு 3 டி படங்களும் எடுத்திருக்கிறார். உட்காருமிடம் நாலு அடிக்கும் குறைவாக ஒரு விண்வெளிப்யணியின் சீட்போல வடிவைக்கபட்டிருந்த  இந்த சப்மெரீன் ஒரு ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி கப்பலிருந்து இறக்கபட்டதலிருந்து பயணத்தை ஒவொரு நிமிடமும்   “ஆக்டோபஸ்”””“ என்ற  தனது உல்லாச  படகிலிருந்து கண்காணித்து அவருடன் வர்லெஸ் தொடர்பிலிருந்தவர் கேம்ரானின் அருமை நண்பர்  பால்ஆலன். இவர் மைக்ரோ சாப்ட் நிறுவனர்களில் ஒருவர். கேம்ரான் தரும் தகவல்களை  அங்கிருந்து டீவிட் செய்து கொண்டிருந்தார். டிவி சானல்கள் அதை அறிவித்து கொண்டிருந்தது.  கேம்ரோனின் சப்மெரின் கடல்மட்டத்திற்கு  வெளி வரும் பகுதியில் ஹெலிகாப்டர் கண்காணிப்பும் இருந்தது. கடலடியிலிருந்து   அவர் அனுப்பிய முதல் செய்தி  “எல்லாம் சரியாக இயங்குகிறது.””” “
சினிமா சாதனையாளார்களில் அவர்கள் துறையைத்தவிர மற்ற துறைகளில் பெரிய சாதனையை நிகழ்த்திய சினிமாகாரர்கள் மிகச்சிலரே. கேம்ரோன் கடலாராய்ச்சி துறையில் படைத்த வரலாற்று சாதனை காலம் முழுவதும் பேசப்படும்.
ஆழ்கடலிலிருந்து எழுந்த நீர்பிரளயதிலிருந்து உலகை காப்பாற்ற பகவான் மச்ச அவதாரம் எடுத்தாக சொல்கிறது நம் புராணம்.  ஆழ்கடலின் நிலத்தடியை  நிஜமாகவே பார்த்துவந்த இவரின் அடுத்த படம் அதுவாகவே இருக்குமோ ?கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்