8/4/12

கோபுரங்களும் சாய்வதுண்டு.


உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்த செப் 11 2001 அன்று இதை நாங்கள் மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்என்று கோபத்துடன் அன்றைய அமெரிக்க அதிபர் தன் உரையில் சொன்னதை சொன்னதை உலகமே  பார்த்தது.. 10 ஆண்டுகள் ஆனபின்னரும், அதிரடி ஆப்ரேஷனில் பின்லேடனை பிடித்து கொன்ற பின்னரும் இன்றும்  அந்த கறுப்பு தினத்தை அமெரிக்கர்களால் மறக்கமுடியவில்லைநியூயார்க் நகரின் அத்தனை வானாளவிய கட்டிடங்களுக்கிடையே   துல்லியமாக தகர்க்க பட்ட அந்த இரட்டை கோபுரங்கள்  இருந்த இடத்தில் ஒரு நினைவு சின்னம் எழுந்த்திருக்கிறது. நிகழ்ந்த அந்த விபத்தில் உலக புகழபெற்ற அந்த டவர்களில் வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள்ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவர்கள், உணவகங்களில் இருந்தவர்கள், அதே நாளில் மற்றொரு விமானவ்பத்திலும் பெண்டகன் அலுவலகத்தில் பலியானோர்,  மீட்புபணியில் பலியானாவர்கள் என்று மறைந்த போன 3000பேர்களுக்கும்  இப்போது ஒரு நினவு சின்னம்  அங்கே எழுப்பபட்டிருக்கிறது.. 10 ஆண்டுகாலமாக கிரவுண்ட் ஸீரோ  என அழைக்கப்பட்டு வந்த அந்த இடம் இனி 9/11 தேசிய நினைவகம் என அழைக்கபடும், 63 நாடுகளிலிருந்து,பெறபட்ட 5200 டிசைன்களிலிருந்து தேர்ந்தெடுக்க்பட்டிருக்கிறது இந்த டிசைன். 8 ஏக்கர் பரப்பில்,பறந்துவிரிந்திருக்கும் பசும் புல்வெளியில்  அணிவகுத்து நிற்கும் 400 ஓக் மரங்களுடன் நியூயார்க நகர கான்கீர்ட் காட்டிற்கு நடுவே ஒரு பசுஞ்சோலையாக இதை உருவாக்கியிருகிறார்கள்




மிகச்சரியாக இரட்டை கோபுரங்கள் இருந்த  அதே இடங்களில் இப்போது தொடர்ந்து நீர்வழிந்துகொண்டே இருக்கும் இரண்டு பெரிய தடாகங்கள். அதன் சுற்று சுவர்களின்மேலே  சற்றே சாய்வாக அமைக்கபட்டிருக்கும்  கரும்பளிங்கு பலகைகளில் விபத்தில்  உயிர் நீத்த அனைவரின் பெயர்களும் தங்க எழுத்தில் மின்னுகிறது.  அதில் சில தமிழ் பெயர்களைக்கூட பார்க்கமுடிகிறது.


இரண்டு நீர்தடாகங்களுக்குகிடையே ஒரு மியூசியம். பூமிக்கடியில்  உருவாகிகொண்டிருக்கிறது. பணி இன்னம் முடியவில்லை. அதன் முகப்பு ஒரு கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து சாய்ந்து விழுந்த நிலையில் வடிவமைக்கபட்டிருக்கிறது.  பின்னணியில் பிரமாண்டமாக எழுந்துகொண்டிருக்கும் புதிய ஒற்றை கோபுரம்.
 மியூசியம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ள அங்கு காட்சியில் வைக்கபடப்போகும் பொருட்கள் சிலவற்றின்  மாதிரிகளுடன்  ஒரு பிரிவியூ செண்டர் அமைத்திருகிறார்கள். மறைந்தவர்களின் உடமைகள், போராடி மடிந்த தீயணைப்பு படையினரின் சீருடைகள், பெயர் பேட்ஜ்கள், மறைந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த  பரிசு பொருட்கள் இப்படி பல. இரட்டை கோபுரங்களில் ஒன்றின் வடிவில் அமைக்கபட்ட எக்ஸாஸ்ட் பைப்புடன் ஒரு ஒரு மோட்டார் சைக்கிள் பார்ப்பவர்களை கவருகிறது.
கடந்த ஆண்டு செப் 11 பத்தாவது நினைவு நாளான்று அதிபர் ஒபாமா நாட்டுக்கு அர்ப்பணித்த விழாவில் நாள்முழுவதும் கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் அத்தனை பேரின் பெயரும் படிக்க பட்டது.. இன்னமும் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் அந்த சதுக்கத்தில் பலத்த பாதுகாப்பு. முன்னமே ஆன்லனைல் பதிவு செய்துகொண்டவர்கள் மட்டுமே  விமான நிலையங்களைப் போல தீவீர சோதனைக்கு பின்னர் பார்க்க அனுமதிக்கபடுகின்றனர்..
மறந்து தொலைக்க வேண்டிய  ஒரு சோகத்தை ஏன் இப்படி நிரந்திரமாக்கி  பார்பபவர்களின்  மனதை கஷ்ட படுத்துகிறார்கள் என்று கோபமாக அரசை திட்டும் அமெரிக்கர்களும் இருக்கிறார்கள். சரிதானே.. என நமக்கும் தோன்றினாலும்  நீண்ட தூரத்திலிருந்து வந்து  மகனின் பெயரை தேடிபார்த்து தடவி அழும் தாயையும்நண்பனின் பெயரை பார்த்தவுடன் இங்கிருந்தே  அவரது உறவினருக்கு போன் செய்பவர்களையும், தினசரி யாராவது வைத்துதிருக்கும்  பூங்கொத்துக்ளையும்  பார்க்கும்போது, திட்டமிட்ட ஒரு தீவிரவாதத்தையும்  அதன்  உச்சகட்டத்தின் வீபரீதத்தையும் வரும் தலமுறை  உணர்ந்துகொள்ள இப்படி ஒரு நினைவுச் சின்னம் அவசியம்தானே என்ற எண்ணம் எழுகிறது.


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்