29/8/12

காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்


காப்பாற்ற பட்ட கம்போடிய கலைச்செல்வம்

கல்கி02/09/12
கம்போடியா நாட்டின்  ஆங்க்கோர்(Angkor)  பகுதி உலகின்  முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று.  800 ஆண்டுகளுக்கு முந்தைய கட்டிடகலைகளுக்கு சான்றாக நிற்கும் கற்கோவில்களையும் அரண்மனையும்  பார்க்க ஆண்டுதோறும் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் மேல்.   இதைத்தவிர அந்த பகுதியின் அருகில் இருக்கும் அடர்ந்த்த காட்டு பகுதியில் இன்னும்  பல கற்கட்டிடங்களின் பகுதிகள்  சிதைந்து சிதறிகிடக்கின்றன.  1992ல் யூனெஸ்கோ இந்த பகுதிகளின் கோவில்கட்டிடங்களை  உலக பராம்பரிய சின்னங்களாக அறிவித்திருக்கிறது. பல சரித்திர ஆராய்ச்சிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் இந்த பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் அந்த பகுதியில் 4000 அடி நீள 1000 அடி அகல பரப்பில் ஒரு மிகப்பெரிய வளாகமும் அதில் 39 வாயில்களுடன் பெரிய ஆடல் அரங்கம் அமைக்கப்பட்டிருந்த விபரமும் தெரிவிக்க பட்டிருந்த்தது. அதை அப்படியே மீண்டும் நிர்மாணிக்க முடியமா என யூனஸ்கோவின் உதவியுடன்  முயற்சிக்க விரும்பியது கம்போடிய அரசு. உலகமெங்கிருக்கும் முக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்  வந்து ஆய்ந்த தந்த அறிக்கை: சவாலான இந்த பணியை சரியான குழு தலமையேற்றால்தான் செய்ய முடியும் என்று சொன்னது. பணியை ஏற்றது  செய்திருப்பது யார் தெரியுமா? இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை. 2004ம் ஆண்டு 5பேர் கொண்ட ஒரு குழு ஆராய்ந்து செய்யவேண்டிய பணிகளைசரியாக திட்டமிட்டு செய்ய துவங்கி இப்போது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டார்கள். இப்போது டூரிஸ்ட்கள் அனுமதிக்க படுவதால் காலை 9 மணிக்கே கியூவில் காத்திருந்து பார்த்து வியப்பது இந்த பாரம்பரிய சின்னத்தை மட்டுமில்லை, நிர்மாணித்த இந்திய வல்லுனர்களின் திறமையையும் தான்.
7 ஆம் ஜெயவர்மன் எனற மன்னன் தன் தாயின் நினைவாக கட்டிய இந்த ராஜவிஹார் பிரம்மதேவனுனக்காக கட்டபட்டகோவிலாக துவங்கியிருக்கிறது. தொடர்ந்து வந்த 8ம் ஜெய வர்மன் புத்தமதத்திற்கு மாறிவிட்டதால்  கட்டிட வேலைகள் முடியும்போது  அது பெளத்த விஹாராக மாறிப்போயிருகிறது. இது ஒரு பெளத்த கோவில் வளாகம் என கருதிக்கொண்டிருந்த கம்போடியர்களுக்கு இந்த தகவலைச் சொன்னது இந்திய குழுதான்.   எந்த வரை படமும், குறிப்புகளும்  இல்லாமல்முழுவதுமாக இடிபாடுகளாகி போயிருந்த இந்த வளாகத்தை புனர்நிர்மாணம் செய்தது மிகபெரிய சவால். அத்தனை கற்களையும் தூண்களையும் பிரித்து எடுத்து  அதன் அளவுகள், எடை போன்ற விபரங்களைப் பட்டியிலிட்டு  ஒவ்வொன்றுக்கும்  எண்கள் இட்டு படத்துடன்  கேட்லாக் செய்த பின்னர். தாங்கள் தயாரித்த மாதிரி  வரை படத்தைப்போலவே அவைகளைப் பொறுத்தியிருக்கிறார்கள். இதில் மிக சவாலான விஷயம் இந்த கல்கட்டிடம்  கட்டபட்டபோது கற்களை இணைக்க  சுண்ணாம்பு, மண்சாந்து போன்ற எதுவுமே பயன்படுத்தபடவில்லை. ஒவ்வொரு கல்லின்வெட்டபட்ட பகுதி  மற்றொருகல்லின் வெட்டுப்பகுதியுடன் நெருக்கமான   இணைக்கபட்டு உருவாக்கபட்டது. அதை மீண்டும் அப்படியே செய்ய 200 கம்போடிய தொழிலாளிகள் 7 ஆண்டுகள் இந்திய அணியின் தலமையில் உழைத்திருக்கிறார்கள்.   “ஒரு ஜிக்-ஜாக் பஸிலை (ZIG-ZAG PUZEL) பல முறை முயன்று இறுதியில் வென்ற மாதிரி என்று தங்கள் பணியை சொல்லுகிறார் இந்த திட்டத்தின் தலைவர்  சூட் (DR. Sood) . முனைகள் உடைந்து, சிதைந்து போயிருக்கும் சிலகற்களினால் இணைக்கமுடியாமல் போன பகுதிகளை, அவற்றின் உள்ளே துளையிட்டு ஸ்டீல் கம்பிகளை சொருகி இணைத்திருக்கிறார்கள். இப்போது 39 வாசல்களுடனும் அழகிய தெய்வச்சிலைக்ளுடனும் நிற்கும் கலைக்கூடமும்,  கோபுரங்களுடன் கூடிய நடனகூடமும்  இனி விழாமல் நிலையாக நிற்கும்  என சோதித்து சொல்லியிருப்பவர்கள் சென்னை ஐஐடியின் வல்லுனர்கள். கேட்பாரற்று இடிந்து விழுந்து கிடந்த இந்த காட்டுகோவிலின்  மிஞ்சி நின்ற சுவர்களின் வெடிப்புகளில் வளரத்துவங்கிய மரங்கள் காலப்போக்கில் மெகா சைஸ் மரங்களாகியிருந்தன. அவற்றை அகற்றினால் அதோடு இணைந்திருக்கும் பகுதிகள் வீணாகும். அழியாத கற்களுடன் மரங்களும்  இணைந்து வளர்ந்து வாழ்ந்திருக்கின்றன  எனபதையும்  மக்கள் பார்க்கட்டும்.  என்று யூனஸ்கோ சொன்னதால். நமது வல்லுனர்கள் மர்ங்களை காக்கவும்  திட்டம் தீட்டினர்.
 டேரானிலிருக்கும் வன ஆராயச்சி கழகத்தின் வல்லுனர்கள் வரவழைக்கபட்டு  வருங்காலத்தில் மரத்தின் வேர்கள் இந்த கட்டிடங்களை சாய்த்துவிடுமா என  ஆராய்ந்து ஆவன செய்து கொண்டிருக்கிறார்கள். இந்திய வல்லுனர்களின் திறமைகளையும் செயலாற்றும் திறனையும் கண்டு வியந்த யூனஸ்கோ உலகின் வேறு சில பராம்பரிய சின்னங்களை மீட்டெடுக்க துறையின் உதவியை நாடியிருப்பது  எனபது நமக்கு பெருமையான விஷயம்
-

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்