3/9/12

ஒவியனின் தோழர்கள்


ஒவியனின் தோழர்கள்

கல்கி090912 இதழ் 

உலகின் எல்லா கலைகளுக்கு முகமும், கலஞர்களுக்கு முகவரியும் தந்து கொண்டிருப்பது புகைப்படங்கள். 1500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல புதிய தொழில் நுட்பஙகளின் துணையோடு வளர்ந்து கொண்டுவரும் புகைப்பட கலை இன்று மனித வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. புகைப்படம் “தயாரிக்கும்” முறையை கண்டுபிடித்து  உலகுக்கு முதலில் அறிவித்த இரண்டு பிரஞ்ச் கார்களின் கண்டுப்பிடிப்பை  பரிசோதித்து ஏற்று கொண்ட பிரஞ்ச் அகடமி ஆப் சயின்ஸ் அதை அனைவரும் எளிதில் பயன்படுத்த அதை உலகுக்கே பரிசாக வழங்க அரசுக்கு சிபார்சு செய்ததை ஏற்று பிரான்ஸ் அரசு அதைஅறிவித்த  நாள்-1839 ஆகஸ்ட் 19.அதன் நினைவாக ஆண்டுதோறும் அந்த நாள் உலக புகைப்பட தினமாக கொண்டாப் படுகிறது, 12 அடி நீளம்,3அடி அகலத்தில் அறை முழுவதும் அடைத்துகொண்டு நிற்கும் ஆதிகால கேமிரா முதல் 11 கிராம் எடையில்  3 அங்குலத்தில் விரல்களின் இடுக்கில் வைத்துக்கொள்ளக் கூடிய உலகின் சின்னஞ்சிறு கேமிராவரை
  நிறைந்த ஒரு கண்காட்சியை உலக புகைப்பட தினத்திற்காக   சென்னை கஸ்தூரி ரங்கா தெருவிலிருக்கும்  ஆர்ட் ஹவுஸ் காட்சிகூடமஅமைத்திருந்தது
 புகைப்பட கலைஞர் பி.ஸ்ரீ ஸ்ரீராம் துவக்கிவைத்த இந்த கண்காட்சியில் கேமிராவை கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மென் அவர்களுக்கு எழுதிய கடிதமாக
காலத்தால் அழிக்க முடியாத கண்டுபிடிப்பை தந்தவனே !
உன்னால் பயன் பெறும் கோடானு கோடி கலைஞர்கள்
சார்பில்……நன்றியுடன்
என்ற வரிகளுடன் முடியும், கவிதை முகப்பில் வரவேற்கிறது. அந்த கலைக்கூடத்திலிருக்கும் 1000க்கும் மேற்பட்ட  அத்தனைவிதமான கேமிராக்களும் தனிப்பட்ட ஒருவரின் சேகரிப்பு என்ற செய்தியை விட ஆச்சரியமானது,  சேகரித்திருப்பவர்  ஒரு புகைப்படகாரர் இல்லைஎன்பதும் அவர் இவைகளில் படமெடுப்பதில்லை  என்பதும்  தான்.
 சிறு வயதிலிருந்தே ஓவியத்தில் அளவற்ற ஈடுபாடு கொண்ட ஸ்ரீதர் இன்றைய இந்திய முன்னணி ஒவியர்களில் ஒருவர். 50க்கும் மேற்பட்ட ஒவிய கண்காட்சிகளை உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தியிருக்கும் இவரின் பொழுதுபோக்குகளில் ஒன்று மாறுபட்ட பழைய பொருட்களை சேர்ப்பது. மும்பையில் ஒரு ஓவிய கண்காட்சி நடத்தி திரும்பும் முன் ஒரு பழைய பொருள் கடையில் பார்த்த பிரமாண்ட (ஒரு ரூம் சைஸ்) கேமிரா தான் துவக்கம். கடந்த 8 ஆண்டுகளில் 1000 க்குக் மேலாக வளர்ந்துகொண்டிருக்கிறது. பாக்கெட் கடிகாரத்தில், , கைக்கெடிகாரத்தில் மறைத்துவைக்கபட்டிருக்கும் துப்பறியும் கமிராக்கள் ஜேம்ஸ் பாண்ட் காலம் வருவதற்கு முன்பே வந்து மார்கெட்டில் விற்கபட்டிருக்கிறது என்று சொல்லி  அவைகளை காண்பிக்கிறார். உலகின் முதல் நீருக்குள் மூழ்கி படமெடுக்கும் காமிரா, 3டி கேமிரா என அபூர்வங்களை மட்டுமில்லாமல் 72 பிராண்ட்களின் பல மாடல்கேமிராக்களை வைத்திருக்கிறார். 1885லிருந்து 2000வரை வெளிவந்த எல்லா கேமிராகளையும் சேர்ப்பது திட்டம். உலகின் முதல் பெரிய கேமிராவை வைத்திருப்பதால் எது மிக சிறியது?  என்று கேட்பவர்களுக்காக  மினி HD 720 என்ற கேமிராவை இண்டெர்னெட்டில் தேடி அலசி ஆர்டர் செய்திருந்தேன். சரியாக கண்காட்சிக்கு ஒரு நாள் முன்னதாக வந்தது. என்று அதை காட்டுகிறார்.  கேமிராக்களின் அணிவகுப்பின் பின்னணிதிரையில் கேமிராக்களின் முன்நின்றே பழகிய சினிமா நட்சதிரங்கள், மூப்பனார் போன்ற அரசியல் பிரபலங்கள் மாறுதலாக கையில் கேமிராவுடன் வேறுஒருவரைப் படெமெடுக்கும் காட்சியில் ஒவியமாக நிற்கிறார்கள். கண்காட்சியின்  பேக்டிராப்களிலும் , ஆங்காங்கே நிற்கும் அழகான மியூரல்களிலும் (பதுமை ஒவியங்கள்) ஓவியர் ஸ்ரீதரின் மென்மையான கலை வண்ணம் புரிகிறது. வெளிநாட்டில் நடத்தும் ஓவியகண்காட்சிகளில் கிடைக்கும் பணத்தில் இவைகளை வாங்கி சேகரிக்கிறேன்.  என்று சொல்லும் ஸ்ரீதருக்கு  இப்போது நிறைய நண்பர்கள். இவரது ஆஸ்திரிலிய நண்பர் கிரிஸ்ஸிடம் வாங்கிய 9 கேமிராக்களை பொக்கிஷமாக கருதுகிறார்.(அவரிடம் பல ஆயிரகணக்கில் இருக்கிறதாம்)
இன்று ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் கேமிராக்களினால் குழந்தைகள் கூட படமெடுக்குமளவிற்கு எளிதாகிவிட்ட போட்டோகிராபிக்கு பின்னே ஒரு நீண்ட சரித்திரமிருப்பதையும், கேமிராக்களின் பரிமாண வளர்ச்சி எப்படி அந்த துறையையே  இன்று மாற்றிவிட்டது பற்றியும் பள்ளிக்குழந்தைகளுக்கு சொல்ல, ஓர்க்‌ஷாப்கள் நடத்த ”ஸ்மைல் பிளிஸ்” என்ற அமைப்பை துவக்கியிருக்கியிருக்கும் ஸ்ரீதர், இப்போது 8mm 16mm சினி கேமிராக்களை சேகரித்து கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு ஊட்டியில் நிரந்தர கேமிரா மியூசியம்  அமைக்க போவதாகவும்  அந்த இந்தியாவின் முதல் கேமிரா மியூசியம் உலக தரத்தில் சுற்றுலாப்பயணிகளை கவரும்வகையில் இருக்கும் என்கிறார்.

.




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்