9/9/12


அந்தமானின் ஆழ்கடலிருந்து எவரஸ்ட் வரை


கல்கி16/09/12
நினைவிருக்கிறதா?  ஆனந்தபுரம் வீடு படத்தில் பார்த்த சுருட்டை தலைமுடியும் பேசும் பெரிய கண்களும் கொண்ட சிறுவன் ஆர்யாவை? சினிமாவை தொடர்ந்து மாடலாக பல விளம்பரங்களில் தோன்றிய இந்த குட்டிபையனுக்கு இப்போது 7 வயதாகிறது. பெற்றோருடன் அந்தமான் தீவில் வசிக்கும் ஆர்யன் இந்த ஆண்டு  பிரமிக்க வைக்கும் சாதனைகளைச்செய்திருக்கிறார்.  இமயமலையில் 17300அடி உயரத்திலிருக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் பேஸ்கேம்ப்  வரை மலை ஏறியிருக்கிறார். உலகிலேயே இந்த இளம் வயதில் இப்படிஒரு சாதனையை செய்த சிறுவன் இவர்தான்,  நேப்பாள நாட்டின் பகுதியிலிருந்து எவரஸ்ட்க்கு போகும் வழியில் இருக்கும் 17900 அடி உயரத்தில் இருக்கும் கல்பத்தர் என்ற சிகரத்தையும்
ஏறி தேசிய கொடியை நாட்டி மற்றொரு  உலக சாதனையையும் படைத்திருக்கிறார் இந்த தமிழ் பையன்.
ஆர்யனின் தந்தை ஸ்ரீநிவாஸ் பாலாஜி இந்திய கடற்படையில் ஒருகமாண்டர்.தற்போது அந்தமானில் பணியிலிருக்கும் இவர் பலமலையெற்றங்களில் பங்குகொண்ட வீரர். வடதுருவ முனையைஇல் ட்ரெக்கிங் செய்திருக்கிறார். அம்மா ரிக்கியும் அடிக்கடி ட்ரெக்கிங் செல்பவர்.ப்ராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து டைவ் செய்பவர்.  பெற்றோர்களுடனும் ஒரு ஷெர்பா கைடுடனும் எவர்ஸ்ட் பேஸ்கேம்ப் வரை மலைஏறிய ஆர்யன் அனாசியமாக அந்த சாதனையை செய்திருக்கிறான்,அந்தமான் லெப்டினட் கவர்னர் வாழ்த்தி வழியனுப்ப 250கிமீ பயணத்தை 22நாளில் கடுங்குளிர்,பனிக்காற்று சில செங்குத்தான ஏற்றங்கள்போன்ற இடர்களுடன் தொடர்ந்திருக்கிறார்கள். போகும் வழியில் புனாவிலிருந்த வந்த ஒரு மலையேற்ற குழுவிலிருந்த சிலர் களைத்து சலித்து மலையெற்றத்தை கைவிடும் நிலையிலிருந்தபோது ஆர்யனைபார்த்து ஊக்கமடைந்து ட்ரெக்கிங்கை தொடர்ந்திருக்கிறார்கள். பேஸ்கேம்ப்பில் மைனஸ் 22 டிகிரியில் ஒர் இரவு சிரமில்லாமல் தங்கிய போது அங்கு வந்திருந்த மற்ற மலைஏறும் குழுவின் உறுப்பினர்களை தன் பாடலால் மகிழ்வித்திருக்கிறான் ஆர்யன்.  எப்படி இந்த சிறுவனால் இதெல்லாம் முடிந்தது? காஷ்மீர் மற்றும் ஹிமாலசலபிரதேசங்களில் மிக குளிர்ந்த பகுதிகளில் தங்கவைத்து நாங்கள் பயிற்சி அளித்திருந்தாலும் அவனுக்கு இருக்கும் இயல்பான மனோதிடம் எங்களையே ஆச்சரியப்படுத்துகிறது என்கிறார் தந்தை பாலாஜி.  மலையேறுவதில் கில்லாடியாகியிருக்கும் ஆர்யனின் மற்றொரு சாதனை அந்தமான்பகுதி ஆழ்கடலில் நீந்தி 25 அடி ஆழத்தில்  ஒரு மணி நேரம் நடந்தது. இதுவும் இந்த வயதில் இதுவரை யாரும் செய்யாத ஒரு உலக சாதனை. இம்மாதிரி சகாசங்களுக்கு மூச்சுபிடிக்கும் திறன் அதிகம் வேண்டும், ஆக்ஸிஜன் வரும் வசதியுள்ள 25 கிலோ எடையுள்ள ஹெல்மெட்டை அணிய வேண்டுமென்பதால்  என்பதால் 12 வயதிற்குட்பட்டவர்களை அனுமதிப்பதில்லை. சிறப்பு அனுமதிபெற்று  இதைச்செய்திருக்கிருக்கும் ஆர்யனிடம் எப்படியிருந்தது?

 என கேட்டால் ” நிறைய அழகான கலர் மீன்களுக்கு நடுவே நடப்பது ஜாலியாக இருந்தது.அம்மாவிற்காக ஒரு அழகான் கலர் சிப்பி எடுக்காலாம் என்று பார்த்தேன். ஆனால் டிரெயினர்  எதையும் தொடக்கூடாது என்று சொல்லிவிட்டார்.” என்கிறது இந்த குழந்தை.
ஆழ்கடலில் நடந்தாலும், எவரஸ்ட்டின் பாதங்களை தொட்டாலும் வீட்டில் மற்ற குழங்தைகளைப்போலதான். விளையாட்டுக்கள், விஷமங்கள் எல்லாம். ஆனால் பள்ளியில் நன்றாக படிக்கிறான். இரண்டாம் வகுப்பு படிக்கும் அவன் எல்லா பரிட்சைகளிலும் முதல்ரேங்க். மியூஸிக், டான்ஸ் ஸ்கேடிங். சைக்கிளீங் என எல்லாவற்றிலும் பரிசுகள் வாங்கியிருக்கிறான் என பெருமைபடுகிறார் அம்மா ரிக்கி.  இவர் மலைஏற்றம், காட்டற்றுபடகுபோட்டி, ஸகை டைவிங்  போன்ற சகாஸவிளையாட்டுகளை திட்டமிட்டு நடத்திக் கொடுக்கும் நிறுவனத்தை நடத்திவருகிறார்.  நாங்கள் அவன் மீது எதையும் திணிப்பதில்லை, ஆர்வம் காட்டினால் உதவிசெய்து ஊக்குவிபோம் என்கிறார்.
ஆர்யனின் அப்பா பாலாஜி தமிழ்நாட்டுகாரர்.கடலூர் மாவட்ட கலியூர் கிராமத்தைசேர்ந்தவர். இப்போதும் அவருடைய பெற்றோர்களூம் உறவினர்களும்  அங்கு வசிக்கிறார்கள். ஆர்யன் தாத்தவுடனும் மாமாவுடனும் தமிழில் பேசுகிறான். இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கியின் பிராண்ட் அம்மாஸிடராகயிருக்கும் ஆர்யன் போலியோ ஒழிப்புக்காக நேப்பாள அரசின் சிறப்பு விளம்பர தூதுவராகவும் இருக்கிறார். கடந்த மாதம் தமிழகவர்னர் ரோசய்யா இந்த சிறுவனை ராஜ்பவனுக்கு அழைத்து கவுரவித்திருக்கிறார். இந்த ஆண்டுடிசம்பரில் கிளிமஞ்சரோ சிகரத்தையும்,2017ல் (அப்போதுதான் 12 வயது ஆர்யன் தகுதி பெறுகிறான்) எவெரஸ்ட் சிகரத்தையும் தொட திட்டமிட்டிருக்கிறது மலைசிகரங்களை நேசிக்கும் இந்த குடும்பம். இந்த ஆண்டு கின்னஸ்சாதனைபட்டியலில் இடம் பெறப்போகும் இந்த சிறுவனின் சாதனையை தமிழக சானல்களும் மீடியாக்களும் கண்டுகொள்ள வில்லை  என  வருந்தும் பெற்றோர்  தமிழக முதல்வரிடம் மகனை அறிமுகபடுத்த நேரம் கேட்டு காத்திருக்கிறார்கள்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ஆர்யனை திரையில் அறிமுகப் படுத்தியவர் இயக்குனர் நாகா. அவரிடம் பேசிய போது

 அறையில் நான் கம்ப்யூட்டரில் ஏதோ பிசியாக இச்ருந்த போது குடுகுடுவென ஓடி வந்து ” ஐஆம் ஆரியா- வாட் இஸ் யூவர் நேம்?” என கேட்டு மடியில் உட்கார்ந்தான். அந்த குட்டிப்பயன். ஆனந்த புரத்து வீடு படத்திற்காக பல குழந்தைகளை பார்த்து திருப்தியில்லாத நிலையில் ஒரு மாடல் கோர்டினட்டர் அனுப்பிய படத்தில் பார்த்து வரச்சொன்ன இந்த குழந்தையின் முகம் நினைவிற்கு வந்தது. நான்  என் பெயரைச் சொன்னவுடன்  “ஒ யூ ஆர் டைரக்டர்” எனசொல்லி என்கம்யூட்டரில் என்ன கேம்ஸ் எல்லாம் இருக்கு? என பேச துவங்கிவிட்டது அந்த  மூணரைவயது குழந்தை.
”படத்தில் அந்த குழந்தை கேரக்டர் மிக அழுத்தமான முக்கிய கேரக்டர். நான் சொல்வதை புரிந்துகொண்டு மிக அனாசியமாக செய்து முழுயூனிட்டையே வியக்க வைத்த பையன். திறமைகளை வெளிகாட்டவதற்கு ஒரு திறமை வேண்டும். அது ஆரியனுக்கு இயல்பாகவே இருக்கிறது. நடிப்பையும் தாண்டி இந்த பையன் சாதிப்பான் என அன்றே தோன்றியதற்கு முக்கிய காரணம் அவனது பெற்றோர்கள். மிக துணிச்சல்கார்கள். அவன் தந்தை பாலாவே ஒரு சாதனையாளார். கவர்னரின் அழைப்பை ஏற்று சென்னை வந்திருந்த போது நாகா அங்கிளை பார்க்க வேண்டும் என சொன்னதால் பாலா என்னை தொடர்பு கொண்டார். நான் நகருக்கு வெளியே ”சென்னை தின” விழாவில் பங்கு கொள்ள ஒரு ஆர்ட்காலரியிலிருப்பதை சொன்னவுடன் அங்கேயே வந்தான் ஆர்யன்.  நம்ப பையன் எவெரஸ்ட் பேஸ்  க்கு  டெரக்கிங் போய் ஒரு கின்னஸ் சாதனை செய்திருக்கிறான் என்பது எனக்கு பெருமையாகயிருக்கிறது “













கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்