அஸ்ஸாம் மாநில காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் அங்கு வாழும் ”ஒற்றைகொம்பு” காண்டாமிருகங்களுக்காக உலகப் புகழ்பெற்றது
. சமீபத்தில் அந்த காட்டுப்பகுதியில் சூழந்த தீடிர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு காண்டாமிருகத்தை பிரம்ப்புத்திரா நதியின் வெள்ளம் கெஹாத்தி நகருக்கு அருகிலுள்ள ராணிசாப்பூரி என்றஊரின் கரையில் கொண்டு சேர்த்தது. நதிக்கரையின் சேற்றுப்பகுதியில் புதையுண்டுசிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த அந்த காண்டாமிருகத்தை 7 நாட்கள் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள். அஸ்ஸாம் காடுகளில் காணப்படும் இந்த ஒற்றைகொம்பன் 5 வகை காண்டாமிருகங்களில் ஒன்று. இந்த வகை உலகில் அரிதாகி கொண்டுவரும் ஒரு அரிய விலங்கினம். உலகில் இருக்கும் 2000 மிருகங்களில் 95% அஸ்ஸாம் காடுகளில் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இதன் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகள் போல எலும்பாக இல்லாமல் முடிகற்றைகள் இறுகியபகுதியாக இருப்பதாலும் அதிலுள்ள சில விசேஷ மருத்துவ பொருட்களினாலும் மிக விலைமதிப்பு வாய்ந்தது. ஒரு கொம்புக்கு 2.25லட்சம் அமெரிக்கடாலர் வரை கிடைக்கும் என்பதால் அந்த காட்டுப்பகுதிகளிலிருக்கும் ”வீரப்பர்களுக்கு” எப்போதும் இவைகளின் மீது ஒரு கண். அதுவும் இதுபோல் எதாவது விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் வேட்டையாடமலேயே அவர்கள் வேலை மிக எளிதாகிவிடும். அதனால் வனப்பாதுகாவலர்கள் இந்த காண்டாமிருகத்தை காப்பாற்றி அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிசெய்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதானாதாக இல்லை. கயிற்றினால் இணைத்து ஒரு டிராக்கடர் மூலம் இழுக்க முயன்றபோது
(அந்த காண்டாமிருகம் அசைந்ததில் டிராக்டர் கவிழ்தபோதுதான். அந்த மிருகத்தின் எடையை உணரமுடிந்தது. ஹெலிகாப்ட்டர் மூலம் கயிற்றை இறக்கி கட்டி தூக்கி காட்டில் விட திட்டமிட்டார்கள், சர்வே செய்த விமான படை அதிகாரிகள் ஹெலிகாப்டர்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது இதற்கு சியாச்சன் எல்லை பகுதியில் ராணுவத்திற்கு சப்பளை செய்யும் தொங்கும் தொட்டில் கொண்ட விசேஷ விமானம் தேவை என முடிவு செய்து அதை கொண்டுவந்தனர். ஆனால் அதன் பைலட் அந்த அடர்ந்த காட்டு பகுதியில் அவ்வளவு தாழ்வாக அதில் பறக்கமுடியாது எனறு சொல்லிவிட்டார்.)
கயிறுகள் இணைத்து தரை வழியாக இழுத்து காப்பாற்றுவது என முடிவு செய்யபட்டது, தான்காப்பாற்றபடுவதை யானைகளைப்போல் புரிந்த கொள்ளத்தெரியாத மிருகம் காண்டாமிருக. வெளியே வந்ததும் மூர்க்கமாக தாக்க கூடிய (காண்டாமிருகங்கள் மணிக்கு 20மைல் வேகத்தில் ஒடக்கூடியவை) வாய்ப்புகளும் இருந்ததினால் மீட்புபடையினரின் பாதுகாப்பும் ஒரு முக்கியமான விஷயமாகயிருந்தது. நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தன.

லோக்கல் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டவண்ணமிருந்தன. சானல்கள்
அப்டேட்களை வழங்கிகொண்டிருந்தன. இந்த காண்டாமிருகத்தைப்பற்றி
கவலை கொண்டவர்கள் அதிகமாயினர். குறிப்பாக குழந்தைகள்.அவர்கள் இதற்குவைத்த செல்லபெயர் ”கேலா” .வனவிலங்குகளின் பாதுகாப்பு இயக்கங்கள் தன்னார்வதொண்டு நிறுவனங்கள் காப்பாற்றும் பணியில் இணைந்துகொண்டன.
தரைக்கு கொண்டுவந்தாலும் அதை அப்படியே காட்டுக்கு கொண்டு செல்வது ஆபத்து,
அதற்கு மயக்க மருந்து ஊசி போட்டு லாரியில் ஏற்றி காட்டுக்கு கொண்டுபோய்
இறக்கிவிடுவது என தீர்மானிக்கபட்டது. இங்கே எழுந்தது அடுத்த சிக்கல்.
காண்டாமிருகங்களுக்கு செலுத்தும் மயக்க மருந்து தெனாப்பிரிக்காவில் மட்டும்தான்
தயாரிக்க படுகிறது. அதிக அளவில் ஸ்டாக் வைத்துகொள்ள முடியாத இதை
பயன் படுத்த நேரும் போது ஒரு நீண்ட அரசு நடைமுறைக்குபின்
புதிய ஸ்டாக் வந்த பின் தான் பயன்படுத்த வேண்டும். .இதனால் காக்கவேண்டியிருந்தது.
ஒரு டன்னுக்கும் மேல் எடையை சுமக்ககூடிய லாரி, காண்டாமிருகத்தை படுத்த நிலயில் வைக்க கூடிய மரமேடை எல்லாம் தயாரவதற்குள்
7 நாட்களாகிவிட்டது. மாநில வனத்துறை அமைச்சர் திரு.ராக்கிபுல் ஹூசைன் (Mr.RockybulHussian) மீட்டுப்பணியை
நேரிடையாக மேற்பார்வையிட அருகிலேயே முகாமிட்டிருந்ததால் பொதுவிடுமுறை, சனி ஞாயிற்றுகிழமைகளில் கூட அரசு இயந்திரம் வேலையைச் செய்தது. இல்லாவிட்டால் மேலும் சில நாட்கள் ஆகியிருக்கும், `
பெரிய பள்ளங்களை தோண்டும் இரண்டு இயந்திரங்கள், பாரங்களை இழுக்க பயிற்சி அளிக்கபட்ட 3 யானைகள், இரண்டு டிரக்குகள், ஒரு டிராக்டர் அதில் பொறுத்திய மேடைமீது நிறுவபட்ட கிரேன் எல்லாம் இணைந்து 6 மணி நேரம் போரடி காண்டாமிருகத்தை மீட்டனர். அந்த பகுதியிலிருந்த நீரையும் சேற்றையும் மிருகத்தை பாதிக்காத வகையில் அப்புறப்படுத்துவது ஒரு சவாலான பணி. எல்லாம் முடிந்து கரைக்கு கொண்டுவரப்பட்டதும் சோதனை செய்த டாக்டர் குழு சொன்னது .”அவளுக்கு உடம்பு சரியில்லை இந்த நிலையில் காட்டில் விடமுடியாது. கெளஹாத்தி மிருக காட்சிசாலையில் சில நாள் வைத்திருந்து சிகிச்சை செய்து பின்னர் காட்டில் விடலாம்.” அமைச்சர் அருகில் ;இருந்ததால் யோசனை ஏற்கபட்டு உடனே ஆணைகள் பிறபிக்கபட்டு மிருக காட்சி சாலைக்கு கொண்டு செல்லபட்டு அங்கு மயக்க முறிவு மருந்து செலுத்தி பின் 15 லிட்டர் பக்கெட் வழியாக பால் டிரிப் மூலம் ஏற்றினார்கள். உடனடியாக உணவு எதையும் ஏற்க மறுக்கும் இது பார்வையளார்களுக்கு அனுமதில்லாத இடத்தில் வைக்க பட்டிருக்கிறது. விரைவில் காட்டுக்கு பயணமாகி தன் குடும்பத்தினருடன் சேரும். டெல்லியிலிருந்த மாநில முதலமைச்சர் திரு.தருண்கோகி மீட்பு குழுவின் சேவையை பாராட்டியதோடு டாக்டர்களிடம் அதன் உடல் நிலையையும் விசாரித்தார். இந்த காண்டாமிருகம் கடுமையான போரட்டதிற்குபின் காப்பாற்றபட்டதின் உடனடி விளைவு இரண்டாண்டு காலமாக பேசபட்டுகொண்டிருந்த காசிரங்கா காட்டுப் பகுதிகளில் கேமிராக்கள் பொறுத்தபட்ட ஆள் இல்லாமல் ரிமோட்டில் இயங்கும் குட்டி விமானங்கள் திட்டம் உடனே செயல் படுத்தப்படும் என மத்திய வனத்துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அறிவித்திருப்பது. இதன் மூலம் மிருகங்களின் நடமாட்டத்தை கண்ட்ரோல் அறையிலிருந்தே கண்காணிக்க முடியும்.

கூரான கொம்புடன், பார்த்தாலே அச்சமுட்டகூடிய, உலகின் இரண்டாவது மிகப்பெரிய விலங்கான காண்டாமிருகங்கள் ப்யூர் வெஜிட்டேரியன்.!
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்