2/11/12

007க்கு 50வது பிறந்தநாள்திரைபடங்களில்  பெயர், கதை, காட்சிகளின் களன்கள், கதாநாயகர், நாயகிகள் எல்லாம் மாறும். ஆனால் கதாநாயகரின் பெயர் மட்டும் மாறாது. இப்படியொரு  அரை நூற்றண்டு சரித்திரத்தை படைத்திருப்பவை ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.   1953 ல்இயான்பிளிமிங் என்ற நாவலாசிரியர்  எழுதிய டாக்டர் நோ என்ற நாவலின் நாயகனின் பெயர் ஜேம்ஸ்பாண்ட்இது இப்படி ஹாலிவுட்டில் ஒரு நிரந்தர பெயராக நிலைத்துநிற்கும் என அவர் நினைத்துபார்த்துக்கூட இருக்க மாட்டார்.

இதுவரை வந்த படங்கள் 22  இறுதியாக  இம்மாதம் திரைக்கு வந்திருப்பது ஸகை ஃபால். எல்லாவற்றிலும் நாயகனின் பெயர் ஜெம்ஸ்பாண்ட் தான்.  <இங்கிலாந்து அரசியினால்  நியமிக்க பட்ட ஒரு சர்வ வல்லமை வாய்ந்த ரகசிய ஏஜெண்ட்களின் குழு M16 அதில் 007 என்ற கிரேடில் இருப்பவர்கள் தேச நலத்திற்காக எவரையும் கொல்லும் லைசென்ஸ் பெற்றவர்கள். இதன் தலமையில்என்ற பெயர் கொண்ட பெண் அதிகாரி.>  உலகின் அத்தனை விஷயங்களையும் நன்கு அறிந்த சுப்பர்புத்திசாலியான ஜேம்ஸ்பாண்ட் இவர் நமபிக்கைக்கு பாத்திரமானவர், உலகின் எந்தப்பகுதியிலும் வீர திர சஹாஸங்களை மிக அனாசியமாக செய்பவர் என வர்ணிக்கப் படும் இந்த  ஜேம்ஸ்பாண்ட்ட் படங்களினால் உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசில் அப்படி ஒரு அமைப்பு இருப்பதாக பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்த சக்தி வாய்ந்த கார்கள், துப்பாக்கிகள் \கடிகாரங்கள் தயாரிக்கபடுவதாக காட்டப்படும். பாண்ட்படங்களில் மிக அழகான பெண்கள் அவருக்கு துப்பறியும் வேலைகளில் உதவுவார்கள். ஆனால் அவர் அவர்களை காதலிக்கவோ அல்லது மணம்செய்துகொள்ளவோ மாட்டார். அவர் என்றும் எலிஜிபிள் பேச்சலர்தான்.
கடந்த 50 ஆண்டுகளில்  ”டாக்டர் நோபடத்தில் சீன்கானரியில் துவங்கி டேனியல் கிரேக் வரை இதுவரை 6 கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகர்கள் மாறினாலும், எல்லாபடங்களும் ஹிட்.காட்சி அமைப்புகளும், உலகின்பலநாடுகளின் கதைக்களன்களும் ஒரு காரணம். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பலமொழிகளில்(தமிழ் உள்பட) மொழிமற்றம் செய்யபட்ட எல்லா பழையபடங்களும் பணத்தை கொட்டுகின்றன.  இந்த அழியா இமேஜை உருவானதற்கு முக்கிய காரணம் முதல் 6 படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த சீன்கானரி. இவர் இதைத்தவிர பல படங்களில் நடித்திருந்தபோதிலும், இன்றும் (வயது82) ஜேம்ஸ்பாண்ட் கானரியாகத்தான் பிரபலம்.
இதுவரை எந்த கதாபாத்திரமும் 50 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தில்லை என்பதால்,ஜேம்ஸ்பாண்டின் 50வது பிறந்த நாளை ஹாலிவுட்டும், இங்கிலாந்து சினிமா உலகமும் ஆர்பாட்டமாக கொண்டாடுகிறது. இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களின் காட்சிகள், செட்களுடன் ஒரு மியூசியம். எல்லா ஜேம்ஸ்படங்களை திரையிடும் விசேஷ திரைப்படவிழா என அமர்களப்படுத்துகிறார்கள்.  இதுவரை வந்த படங்களில் வசூல் சாதனை  விபரங்களைத்தாண்டி எந்த கதாநாயகன்,  “பாண்ட்-ஜேம்ஸ்பாண்ட்என்ற புகழ்பெற்றார் வசனத்தை சொன்னார்,? எத்தனைபேரை கொன்றார்?, எந்த பாண்டுக்கு காதலிகள் அதிகம்?, சினிமாவிற்கு வெளியே இந்த பாண்டுகளில் யாருக்கு எத்தனை காதலிகள் போன்ற புள்ளிவிபரங்களை பிரிட்டிஷ் சினிமா பத்திரிகைகள் அள்ளிவீசுகின்றன. இங்கிலாந்து நாட்டின் சுற்றுலா வாரியம் “  ”ஜேம்ஸ்பாண்ட் எவரிதிங் ஆர் நத்திங்என்று ஒரு ஆவணபடத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. (பாண்ட்கதைகளின் படி ஜேம்ஸ் அரசிக்கு விசுவாசமுள்ள ஒரு பிரிட்டிஷ் பிரஜை)
இத்தனை ஆர்பாட்டங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம். இரண்டு தலமுறையாக ஜேம்ஸ்பாண்ட் படங்களை தயாரித்து கொண்டிருக்கும் இயான் நிறுவனத்தினர் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பயன்படுத்தபட்ட கார்,கைக்கடிகாரம், உடை கேமிரா போன்றவைகளை ஏலமிட்டு அந்த பணத்தை யூனீசிப் போன்ற தொண்டு நிறுவங்களுக்கு வழங்குவதுதான். ஆன்லையினில் மட்டும் நடைபெறும் இநத ஏலத்தில் இதுவரைகிடைத்திருப்பது ஒருமில்லியன் (பத்து லட்சம்) பவுண்ட்களுக்கும் மேல். இன்னும் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகள் திறையில் வாழும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் பெயரின் புகழ்  இத்தகைய பணிகளுக்கு பெரும் நிதிகிடைக்க உதவுமானால் இன்னும் பல ஆண்டுகள் அந்த பெயர் வாழ வாழ்த்தலாம்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்