14/11/12

நம்பிக்கை ஜெயித்திருக்கிறது


.மக்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள்  ஒபாமா ஜெயிப்பது சந்தேகம், ரோம்னி  மிகக்குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கபோகிறார்” என்ற கருத்து கணிப்புகளையும் மீடியாக்களின் அரசியல் ஆருடங்களையும் பொய்யாக்கி விட்டார்கள் அமெரிக்க மக்கள். அதிபர் ஒபாமா அடுத்த 4 வருடங்களுக்கு வெள்ளை மாளிகையை காலிசெய்ய வேண்டிய அவசியமில்லாமல் செய்திருக்கிறார்கள். வெற்றி பெறுவதற்கு 270 பிரதிநிதிகளின் ஓட்டு தேவை என்ற நிலையில் ஒபாமா பெற்றது 303 ஓட்டுக்கள். அமோக வெற்றி.
<
2008 தேர்தலில் அமெரிக்காவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ஒபாமாவிற்கு ஆதரவு அலை வீசியது. காரணம் ஜார்ஜ்புஷ்ஷின் பிடிவாதத் தினால் எழுந்த போர்களூம், நிர்வாக திறமையின்மையினால் வீழந்த அமெரிக்க பொருளாதாரமும் தான்.. முதல் ”ஆப்ரோ-அமெரிக்க” அதிபர் என்ற ஹைப் வேறு..  ”மாற்றம்” வரும் எனச்சொல்லி ஜெயித்த ஒபாமா மக்களுக்கு தந்தது ”ஏமாற்றம்” தான். வாக்களித்தபடி போர்களை நிறுத்தி படைகளை முழுவதமாக வாபஸ் பெறவில்லை.  சற்றே நிமிர்ந்த பொருளாதாரம் வேகமாக சரிந்தது. லட்சம் பேர் வேலையிழந்தனர்.   அமெரிக்க சரித்திரத்திலியே முதல் முறையாக சர்வதேச பொருளாதார தரநிர்ணய  நிறுவனங்கள் அமெரிக்காவின்  பொருளாதார வலிமையை குறைத்து மதிப்பீடுசெய்தன.  வேலையிலாதோரின் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே போயிற்று. ஆட்சிகாலத்தில் அறிவித்த ”எல்லோருக்கும் மருத்தவ இன்ஷ்யூரன்ஸ் திட்டம் துவக்கத்திலேயே சிக்கலை சந்திக்க நேர்ந்தது. பாபுலாரிட்டி ரேட்டிங் சரிந்து கொண்டிருந்தது.அப்படியிருந்தும் ஒபாமா எப்படி ஜெயித்தார்?>
அதிபர் தேர்தலில்  ஒபாமாவிற்கு நிச்சியமாக மற்றும் ”அனேகமாக” கிடைக்கபோகும் ஓட்டுக்கள் 237  எனறும், அதே போல் ரோம்னிக்கு 206 என்றும் உறுதியாகிவிட்டிருந்த  நிலையில் மீதமுள்ள   “ஊஞ்ஞாலடிக்கொண்டிருந்த” 95 பிரதிநிதிகளின் வாக்குகள் தான் முடிவை தீர்மானிக்க போகும் சக்தியாகயிருந்தது. இவர்களில் 66 பேர் ஒபாமாவிற்கு ஓட்டளித்திருக்கிறார்கள்.  ஏன்? முக்கிய காரணம் ரோம்னியேதான். வரியில்லாமல்,பொருளாதாரத்தை மீட்டெடுத்து வேலை வாய்ப்பை பெருக்குவேன் என்று முழங்கி கொண்டிருந்தவர் அதை எப்படி செய்யப்போகிறேன் என்று உருப்படியாக எந்த திட்டத்தையும் அறிவிக்க வில்லை.  இந்த தேர்தலில் ”தெளிவான திட்டமில்லாத  பெரும் பணக்காரர் ரோம்னியை விட, கடந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் முந்தைய அதிபர் புஷ்  நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளை சரி செய்யவதிலும் முழுவெற்றி பெறாவிட்டாலும்,   அதற்காக தீவிரமாகமுயற்சித்த ஓபாமாவிற்கு இன்னும் ஒரு சான்ஸ் தந்தால் சாதிப்பார்  என்று ”ஊஞ்ஞாலடிக்கொண்டிருந்த” பிரதிநிதிகள் நம்பியிருக்கிறார்கள்.
அந்த  நம்பிக்கைதான் ஜெயித்திருக்கிறது.  .

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்