26/11/12

ஒலியின் வேகத்தில் பயணித்த மனிதன்


                                                   ”கேர்ள் பிரண்டுடன் செட்டிலாகபோகிறேன்

ஒலியின் வேகம் மணிக்கு 1,236 கி.மீவிசேஷமாக வடிவமைக்கப்பட்ட சூப்பர்ஸானிக் போர்விமானங்கள் மட்டுமே பறக்க கூடிய இந்த வேகத்தில், வான்வெளியில்  ஒரு மனிதன் தனியாக பயணிக்க முடியுமா? இந்த வேகத்தில் பறக்க அல்லது மிதக்க வேண்டுமானால் முதலில் அந்த மனிதன்  30 கீமீ உயரத்திலிருந்து குதிக்க வேண்டும். (விமானங்கள் பறக்கும் உயரம் 12 கீமீ) சுவாசிக்க தகுந்த காற்றழுத்தம் இல்லாத அந்த நிலையில் அந்த உயரத்தில் 15 வினாடியில்,முளைசெயலிழந்து, உடலில் உள்ள திரவங்கள் ஆவியாகி மரணம் நிச்சியம் எனபதால் இது எவராலும் முடியாத விஷயம் என்று கருதபட்டது. இதை செய்து காட்டி உலக சாதனை செய்திருப்பவர் பெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்ற 43 வயது ஆஸ்திரி நாட்டு முன்னாள் பைலட். அமெரிக்காவில் செட்டில் ஆனாவர்.. இவர் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலம் ரூஸ்வெல் நகர மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி  சுமார் 39 கிலோ மீட்டர் உயரத்திலிருந்து  வான் வெளியில் பாய்ந்து  மிதந்து  பத்திரமாக தரையிறங்கினார்.
எப்படி இதை செய்தார்?.
  5 ஆண்டுகள்  கடின பயிற்சி, 100 பேர் கொண்ட  டீமின் திறமையான திட்டமிடல், பல கோடி டாலர்களை செலவழித்த ஸ்பான்ஸ்ர்கள், அமெரிக்க விண்வெளி ஆய்வகமான நாஸாவின் ஆலோசனைகள் எல்லாம் இருந்த்ததினால்தான் முடிந்தது. முதலில் அந்த

உயரத்திற்கு போக தேவை ஒரு ஹீலியம் வாயுநிரப்பபட்ட பிரம்மாண்டமான  பலூன். ஒரு 55 மாடி கட்டிட உயரமிருந்த இதை தயாரிக்கவே 3 லட்சம் டாலர்கள் செலவயிற்று. பொதுவாக இம்மாதிரி பலூன்களில் பிரம்புகூடை இணைக்கபட்டிருக்கும். அதெல்லாம் அந்த உயரத்தில் காணாமல் போய்விடும் என்பதால், விண்வெளியில்ராகெட் மூலம் செலுத்தபடும் ஓடம் போல ஒரு கேப்ஸ்யூல் வடிவமைக்க பட்டு பலூனின் அடியில் பொறுத்தபட்டது. அதில் பெலிக்ஸ் உட்கார்ந்த நிலையில் பயணித்தார்.   அணீந்திருந்தது, கடுங்குளிர், அதிவெட்பம், கதிர்வீச்சு  போன்றவற்றை தாங்கக்கூடிய நான்கு அடுக்குகளாக வடிவமைக்க பட்ட விசேஷ ஸ்பேஸ் சூட்.. இந்த உடையில், பயணத்தின் போது அவரது உடலில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யும் கருவிகள் குட்டி கம்ப்யூட்டர்கள் எல்லாம்  பொருத்தபட்டிருந்தன.


இரண்டுமணி நேர பயணத்திற்கு பின்னர் 1,28,000 அடி உயரத்தை(40கீமீ) அடைந்தபின்னர்  திட்டமிட்டபடி பெலிக்ஸ் தனது கேப்ஸூயுலில் இருந்து வெளியே வந்து வான்வெளியில் கீழ் நோக்கி பாய்ந்தார். . இரண்டு குட்டி கரணங்களுக்கு பின்னர் இரு கைகள் உடலோடு ஒட்டிய நிலையையில் நீச்சல் போட்டியில் குதிக்கும் வீரனின் போஸில் கீழ் நோக்கி பாய்ந்தார்.  இந்த கட்டத்தில்  அவர் விழுந்துகொண்டிருந்த வேகம் 1340 கீமீ. அதாவது ஒலியின் வேகத்தைவிட சற்று அதிகம்நான்கு நிமிடம் இந்த சாதனையை செய்த பின் பூமியிலிருந்து சில ஆயிரம் அடிகள் உயரத்தை தொட்டவுடன் விரிந்த  பாராசூட்டின் உதவியுடன் பத்திரமாக தரையிங்கினார். பெலிக்ஸ். பலூன் மூலம் மிக உயரத்திற்கு சென்று ஒலியின் வேகத்தில் தரையிறங்கிய முதல் மனிதன் என்ற சாதனையை இதன் மூலம் இவர்  படைத்திருக்கிறார்.
பெலிக்ஸ்க்கு வான் வெளியில் பறப்பது புதிது இல்லை. 16 வயதிலிருந்து உயரமான கட்டிடங்கள், மலைகள், எல்லாவற்றிலிருந்தும்  குதித்து ,பறந்து பல சாதனைகள் செய்தவர்தான். ஆனால் இந்த சாதனையைசெய்ய கடந்த 5 ஆண்டுகளாக பயணத்தின் போது சாப்பிடவேண்டிய உணவு, ஆபத்துக்கள் நேரும் போது மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்புகள் போன்ற பல விஷயங்களுக்கு  விசேஷ பயிற்சி எடுத்து தன்னை தயாரித்துகொண்டார். 50 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய முயற்சியை செய்தஜோஸப் கிட்டிங்கர் என்பவரிடம்  ஆலோசனைகளும் பெற்றார்.
ரெட் புல் என்ற பான தயாரிப்பாளர்கள் ஸ்பான்ஸர் செய்த இந்த நிகழ்ச்சியை 30 காமிராக்கள் பதிவு செய்தன. ஆனால்  டிவி சானல்களில் இல்லாமல் இணையதளங்களில் மட்டுமே ஒளிபரப்பட்டது. யூ- டூயூபில் மட்டும் 73 லட்சம் பேர் பார்த்திருக்கின்றனர்.
அடுத்து என்ன சாதனை செய்போகிறீர்கள்? என்று கேட்தற்கு பெலிக்ஸ் சொன்ன பதில்‘‘மரணத்தின் வாசலை தொட்டுவிட்டு வருவதற்கு நிகரான இந்த பயணம்தான் என் கடைசி சாகச பயணம். இனி சாகசங்கள் செய்யும் எண்ணம் இல்லை. கேர்ள் பிரெண்டுடன் செட்டில் ஆகி, ஹெலிகாப்டர் மீட்பு பணி, மலைகளில் மீட்பு பணி ஆகியவற்றவை மட்டுமேசெய்யப்போகிறேன்
4 கருத்துகள் :

 1. Thrilling, exciting, entertaining too.! Thanks.

  Sent from my iPad

  On 26 Nov, 2012, at 7:45 AM

  Gurumoorthy

  பதிலளிநீக்கு
 2. My Dear Ramanan !
  First of all we should congratulate you, only you could some articles like this !
  I'm afraid if it was flashed in print media
  Or in TV channels !
  Really, Really amazing !
  was there any casualty,
  like his space suit got burnt etc ?
  MANKIND is challenging the nature !
  TX.
  Arvind V Mani / " Mr.Cool "

  பதிலளிநீக்கு
 3. Thank you.
  It was not in any TV Chanel. Only in many websites and YOU TUBE.
  the reason for non telecasting (he could have made millions) is a mystery. It was in print media without any prominence. I understand that not only his space suit is intact but the capsule also is safely recovered and these will be in display at Smithsonian (Washington DC) Air space museum shortly. I wish such adventures are to be to explained to our children in science classes

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்