3/12/12

விண்கற்களும் குஜராத் படுகொலைகளும்




இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக  ஒரு ஆளும் கட்சி  பெண் எம்ல்ஏ கிரிமினல் குற்றத்திற்காக 28 ஆண்டுகள் குஜராத் மாநில  கலவர வழக்கில் தண்டிக்கபட்டிருக்கபட்டவர். திருமதி மாயா கோட்டானி, இவர் ஒரு டாக்டர். சொந்தத்தொகுதியியான நரோடாவிலிருந்து 3 முறை தேர்ந்தெடுக்கபட்ட பிஜெபி கட்சிக்காரர். 2007ல் குஜராத் அமைச்சரவையில் பெண்கள், மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்து 2009ல் ராஜினமா செய்தவர். 2002 கோத்திரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு முன் இவரது தொகுதிகளில் இருந்த கிராமத்தில் நடந்த  இனக் கலவரத்தில் 97 பேர் கொல்லப்படுகின்றனர், அவர்களில் 35 பேர் குழந்தைகள். அந்த கலவரத்தை தூண்டிவிட்டு நேரடியாக இவர் நடத்தினார் என்பது குற்றசாட்டு,

முதலில் நடந்த விசாரணைகளிலும் குற்ற பத்திரிகைகளிலும் இவர் பெயரே இல்லை. அந்த விசாரணைகள் வெறும் கண் துடைப்பு என உச்சநிதீமன்றத்தில்  நடந்த வழக்கில் உச்சநீதி மன்றம் ஒரு சிறப்பு விசாரணை குழுவை நியமித்தது. அதன் அறிக்கையின் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் டாகடர் மாயா கோட்னி தண்டிக்கபட்டிருக்கிறார்.
 இவரை குற்றவாளி என சிறப்பு விசாரணை குழு முடிவு செய்ய உதவியவர் மற்றொரு பெண். இவர் போலீஸ் அதிகாரியோ, பத்திரிகையாளரோ இல்லை. ஒரு விஞ்ஞானி. அதுவும் மிக சிலரே ஆராயும் விண்வெளியில் சுற்றும் விண்கற்களையும் வான் வெளியில் கிரகங்கள் அல்லாது சஞ்சரிப்பவைகளை பற்றி ஆராயும் ஒரு  காஸ்மோஸ் விஞ்ஞானி.  பெயர் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா. நிலவில் இருக்கும் கற்கள் பற்றியும் கிரகங்களுக்கு இடையே பறக்கும் விண்கற்கள் பற்றி நிறைய புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதியிருக்கும் இந்த விஞ்ஞானி உண்மை நிலயை அறிய நானாவதி கமிஷன் போடபட்டபோது உதவ முன்வந்தார்.   பிரபஞ்சத்தை ஆராயும் இந்த பெண்  எப்படி பிரச்சனையை ஆராய முன்வந்தார்?  “நான் அஹமதாபாத்தில் பிறந்த ஒரு குஜராத்தி, அமைதிக்கு பேர்போன இந்த மாநிலத்தில் கண் எதிரே 1000 பேர் கொலபட்டதை சகிக்கமுடியாமல் பார்த்து கொண்டிருந்தேன். போலீசும் அரசாங்கமும் செய்யவேண்டியதை செய்யாமல்  குற்றவாளிகளை காப்பற்ற முயற்சிக்கும் போது  இது சரியில்லை.என நினைத்தேன். ராகுல் சர்மா எனற போலீஸ் அதிகாரி  கமிஷனிடம் சம்பவ இடத்திலிருந்து போலீஸ் அதிகாரிகள் பேசிய போன்களின் பதிவுகளின் சிடியை கொடுத்த போது இந்த அதிகாரிகள் அந்த இட்த்திலிருந்துதான் பேசினார்கள் என்பதை எப்படி நிருபிப்பீர்கள் என்று எழுப்பிய கேள்வி என்னை சிந்திக்க செய்தது.  எங்கோ பிரபஞ்சத்தில் சுற்றி வரும் கோள்களிலிருந்தும், விண்கற்களிலிருந்தும் வரும் ஒலிகளிலிருந்து தூரத்தை தீர்மானிக்கும் விஞ்ஞானத்தின் உதவியால் இதை செய்யமுடியாதா?  என்று யோசித்தேன்.  பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்னர் சமூக ஆர்வலாரன எனது கணவரின் பணிகளில் உதவிகொண்டிருந்தேன்..


அவர் மற்றொரு கலவர வழக்கில் போலீஸ்காரர்களால் கொல்லபட்ட ஷராபூதீனின் சகோதரருக்காக போராடிக்கொண்டிருந்தார். கமிஷனுக்கு தரப்பட்டிருந்த மொபைல் போன் பதிவுகளிலிருந்து  அந்த கம்பெனிகளால் எந்த டவர் என்பதை மட்டும் தான் சொல்ல முடியும். நான் என் சோதனைகளினால் மிக சரியாக அது எந்த இடம் என்பதை அந்த ஒலியலைகளின் கனத்தின் மூலம் தூரத்தை நிர்ணயத்தேன். .   “நான் அன்றைய தேதியில் அந்த கிராமத்திலேயே இல்லை” என்று சொல்லிகொண்டிருந்தார் எம்ல் ஏ டாக்டர் மாயா கோட்னி அன்று காலை முதல் ஒவ்வொரு மணி நேரமும்  அவர் செல்போனுடன் எங்கிருந்தார் என்பதை இந்தவகையில் அளந்து அதை துல்லியமாக கூகுள் மேப்பில் குறித்து ஒரு கிராஃப் ஆக ஆக்கியபோது தெளிவான விஷயம் டாக்டர் மாயா  படுகொலைகள் நடந்தநேரமான  12.30 மணியிலிருந்து மாலை 4.30 வரை அங்குதான் இருந்திருக்கிறார்.
 என்பதுதான்.  இதேபோல் ஷெராபூதின் கொலைவழக்கில் அரசியல் வாதிகள் போலீஸ் அதிகாரிகளுடன் பேசியது ஒவ்வொன்றையும்  நேரத்தோடு ஆரய்ந்து கொடுத்திருக்கிறார். அதில் சம்பந்தபட்ட ஒரு போலீஸ் அதிகாரி அந்த போன் தன்னுடையதில்லை என்று சொன்னபோது  குரல் பதிவான போனின் ஆதிமூலத்தை ஆரய்ந்து அது அவருடன் அப்போது இருந்த போலீஸ்காரரின் போன்தான். தன்னுடையதை ஆப் செய்துவிட்டு அதை பயன்படுத்தியிருக்கிறார்  என்பதையும் சொல்லியிருக்கிறார்.
என் நுணுக்கமான பணித்திறன் நாட்டில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை ஏற்பட உதவியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று சொல்லும் திருமதி நிரஜ்ஹரி சின்ஹா.நோய்வாய்பட்டு அதிகம் நடமாடமுடியாமல் மனமுடைந்து போயிருந்த என்னை இந்த பணியை செய்ய உற்சாகபடுத்திய கணவருக்கு நன்றி எனகிறார் திருமதி சின்ஹாவை தாக்கியிருப்பது புற்று நோய்.

2 கருத்துகள் :

  1. நன்றி ரமணன். தன் அறிவாற்றலை. அநீதியை எதிர்த்து போராட பயன்படுத்த அதுவும் புற்றுநோய் தாக்கிய நிலையிலும் துணிந்த இந்த பெண்மணியை பற்றி நம்ப மீடியாக்கள் இதுவரை சொல்லாத விஷயத்தை எழுதியிருக்கிறீர்கள். எங்கிருந்து தான் இதையெல்லாம் சேகரிக்கிறீர்களோ? இதில் சினிமாவிற்கு ஒரு பிளாட் இருக்கிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  2. இந்த பதிவை படிக்கும்போது கடந்த வாரம் பெங்களூர்ல நடந்த நிகழ்ச்சி நினைவுக்கு வருக்கின்றது. கடந்த வாரம் பெங்களூரில் நடந்த வங்கி கொள்ளையில் 3-4 மணி நேரத்தில் குற்றவாளி பிடிபட்டன. அவன் கொள்ளை அடித்துவிட்டு கிளம்பிய போது தடுத்த நபரை கொன்றுவிட்டு (அவர் வாங்கிக்கு பணம் கட்ட வந்தவர் ) அவரின் செல் போனை எடுத்துசென்றான். அந்த செல் போன் இருக்குமிடம் வைத்து குற்றவாளி பிடிபட்டான்

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்