22/12/12

கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்


கிருஸ்மஸ்காக கடவுள் விட்டுவைத்த மரம்

நியூயார்க் நகரின் மன்ஹாட்ன் பகுதியின் நடுவில் இருக்கிறது ராக்பெஃல்லர் பிளாசா என்ற சதுக்கம். 20 நெருக்கமான வானாளாவிய உயர்ந்த கட்டிடங்களின் மத்தியில் இருக்கும் இந்த சதுக்கமும் அதன் அருகிலிருக்கும் ராக்பெஃல்லர் சென்டரும் நகரின் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்கள். ஐக்கிய நாடுகள்சபை அங்கதினர் நாடுகளின், அமெரிக்க மாநிலங்களின் பலவண்ண கொடிகள்  அணிவகுத்து பறக்கும் கம்பங்களின் கிழே மெல்லிய ஒசையுடன் விழும் அருவியின் பின்னிணியில்  தங்கமாக மின்னும் கிரேக்க கடவுளின் சிலை

இந்த இடத்தின் ஹைலைட்.  சிலையின் முன்னேஇருக்கும் ஐஸ் ஸ்கேடிங் மைதானமும் சுற்றியுள்ள  ஷாப்பிங் செண்டர்களும், ரெஸ்டோரண்ட்களும் டூரிஸ்ட்களின் பர்ஸை பாதிக்கும் ஸைடு லைட்.
சதுக்கதின் முகப்பில் இருக்கும் கட்டிடத்தின் அட்ரஸ் “30 ராக்பெஃலர் பிளாசா”. இந்த கட்டிடத்தில் ஜெனரல் எலெக்டிரிக் நிறுவனமும் வேறு பல அலுவலகங்களும் இருக்கின்றன. “இங்கு உள்ள ஒரு  டிவி அலுவலகத்தில் நடப்பதாக  காமெடி கலாட்டாக்களை காட்டும் ”30 ராக்” என்ற  டிவி சீரியல் நாடு முழுவதும் பாப்புலர்.
இந்த இடத்தில் தான் ஆண்டு தோறும் உலகின் பெரிய கிருஸ்மஸ்  மரம்  கடந்த 80 வருடங்களாக வைக்கப்படுகிறது. மரத்தை தேர்வு செய்ய பக்கத்து மாநிலங்கள் வரை ஹெலிகாப்டரில் பறக்கிறது ஒரு குழு. பின்னர் அதன் உரிமையாளாரை தொடர்பு கொண்டு அந்த மரத்தை நன்கொடையாக பெறுகிறது. இது கெளரமான விஷயமாக கருதப்படுவதால் யாரும் மறுப்பதில்லை, இந்த ஆண்டு தேர்ந்தெடுக்க பட்ட மரம் நீயுஜெர்ஸி மாநிலத்தில் மவுண்ட் ஆலிவ் பகுதியிருக்கும் திருமதி ஜோ. வீட்டுதோட்டத்தில் இருந்தது. இருந்த  5 மரங்களில் நான்கை ஸாண்டி சூராவளி சாய்த்துவிட்டது.இதை கிருஸ்மஸ்க்காக கடவுள் விட்டுவைத்திருக்கிறார் போலிருக்கிறது” 

என்று சொல்லி அனுமதி தந்திருக்கிறார், நவம்பர் மாத தேங்ஸ் கிவ்விங் விழா விடுமுறையின் கடைசி நாளான்று  நிறுவப்படும் இந்த  80 அடி மரம்  அலங்காரங்களுடன் ஜனவரி 7ம்தேதி வரை இருக்கும். இந்த 75 வயது மரத்தை வெட்ட ஆரம்பித்ததிலிருந்து அதன் இலைகள் டிரிம் செய்யப்படுவது, வாடாமல் இருக்க விசேஷ கெமில்கள் தெளிக்கபடுவது, மிக நீண்ட 110 அடி நீள கண்டெயினர் லாரியில் ஏற்றி,(எடை 10 டன்கள்) நியார்க் நகரின் உள்ளே அது வரும்போது டிராபிக்கை ஒழுங்கு செய்தது,  ராக்பெஃல்லர்  செண்டரில் ராட்சத கிரேன் தூக்கி நிறுத்தியது, விளக்குகள் அமைத்தது என்று தினசரி  டிவி செய்திகளில் இடம் பிடித்திருந்தது இந்த மரம்.  கான்கீரிட் தரையில்   இந்த மரத்தை “நடுவதை“யே ஒரு விழாவாக  கொண்டாடினார்கள்.  நகரமேயர் பங்கு பெற்று மரத்தின் விளக்குகளை ஆன் செய்த  நிகழ்ச்சியை லைவ்வாக நாடுமுழுவதும் எல்லா சானல்களிலும் காட்டினார்கள்.

 முன்னே வெண்பனி ஸ்கேட்டிங் மைதானம் பறந்திருக்க. பின்னே இருக்கும் உயர்ந்த கட்டிடங்கள் விளக்குகளினால் மெல்லிய நீல வண்ணமாக மாறிய பின்னணியில் 30,000 தங்க வண்ண பிஞ்சுபல்பு மலர்கள் மலர்ந்திருக்கும் இந்த கிருஸ்மஸ்  மரமும் அதன் உச்சியிலிருக்கும் ஸ்டாரும்  பார்ப்பவர்களை மயக்குகிறது.. இந்த ஆண்டு புவி வெப்பமாவதை தடுப்பதில் தங்கள் பங்காக மரத்தின் பல்புகளை எல்ஈடி LED பல்புகளாக (விலை மிக அதிக) நன்கொடையாக தந்திருக்கிறது ஜி இ நிறுவனம்.
கிருஸ்மஸ் மரம் இருந்தால் பரிசுகள் இருக்கவேண்டுமே?  இருக்கிறது நாட்டின் சிறந்த விருதுகள் பெற்ற இசைக்குழுவினர் நடத்தும் இலவச  இசை நிகழச்சிகள்  . 

 இந்த அறிவிப்பை விட மகிழ்ச்சி தரும் விஷயம், விழாக்காலம் முடிந்ததும்  கிருஸ்மஸ் மரம் பேப்பர் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு ஏலம் விடப்பட்டு கிடைக்கும்  பணத்தை நல்ல பணிகள் செய்யும் அறக்கட்டளைகளுக்கு வழங்கபோகிறார்கள் என்பதுதான்.
ஜனனி ஸ்ரீராம்


2 கருத்துகள் :

உங்கள் கருத்துக்கள்