21/12/12

ஒரு சிதார் அழுகிறது


அஞ்சலி

<இது என்ன வாத்தியம்? என்று கேட்ட அந்த 7 வயது சிறுவனுக்கு அன்று தெரியாது அதை அவன் கற்றுகொண்டு குருவை மிஞ்சிய சிஷ்யனாக வளர்ந்து உலகத்திற்கே அந்த வாத்தியத்தையும் இந்திய இசைக்கலையையும் அறிமுகப்படுத்தி  அடுத்த 80 ஆண்டுகள் கலக்கபோகிறோம் என்று.
வாரனாஸி நகரின் கங்கை கரையின் அருகிலிருக்கும் சிறிய சந்துகளில் ஒன்றில் வாழ்ந்த மிகசாதாரண குடும்பத்தின் 7 குழந்தைகளில் கடைசிப்பையனாக 1920ல் பிறந்த  ரவிசங்கரின் தந்தையும் தாயும் வாய்பாட்டு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள். இசையை தவிர எதுவும் தெரியாத அந்த குடும்பத்தில் தந்தையிடமே பாட்டு கற்றுகொள்ள துவங்கியிருந்த அவரை ஈர்த்தது அடுத்த தெருவில் இருந்து எழும் ஒரு வாத்தியத்தின் ஒலி. அதில் மயங்கி அதைகற்று கொள்ள விரும்பி வாசித்த முகமதியரிடம் தனக்கு கற்பிக்க கேட்ட போது அவர் சொன்னது உன் பெற்றோரின் அனுமதியுடன் வா என்பது. காரணம் ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீத விற்பனர்கள் சிதாரை இசைக்கு தகுந்த வாத்தியமாக ஏற்றகாத காலம் அது.>
. அண்ணன் உதயசங்கர் அம்மாவிடம் நடனம் கற்றுகொண்டு நிகழ்ச்சிகள் செய்ய துவங்கியிருந்தார். அவர் குழுவில் நடனம், இசை  மேடை அமைப்பு போன்ற பலவற்றிருக்கு உதவிகள் செய்துகொண்டிருந்தார் உதய்சங்கருடன். அவர் சென்ற முதல் ஐரோப்பிய பயணத்தின் போனபோதுதான் உலகமும், மேற்கத்திய இசைவடிவங்களின் பரிமாணங்களும் புரிந்தது. தன்னை மயக்கும் சிதார் மற்ற இந்திய வாத்தியங்களை விட எளிதில் மேற்கத்திய இசைக்கு ஒத்துபோகும் என்பதை புரிந்துகொண்டார் ரவிசங்கர். இந்தியா திரும்பியவுடன் நடனகுழுவை விட்டு விலகி வாரனாஸியில் தன் குரு அலாவூதின் கானை தேடிபோய் 6 வருடம் அவரிடம் குருகுல வாசம் செய்து கற்றது சிதார்.
தனது 24 வது வயதில் சினிமா இசையாளப்பாராக விரும்பிய இவரை ஆதாரித்தவர் சத்திய ஜித் ரே. தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் இல்லாதால் வேலை தேடிய போது கிடைத்தது அகில இந்திய வானொலியில்  இசை சேர்ப்பாளார் பணி. அதிக ஆர்வமில்லாமல் அதை தொடர்ந்துகொண்டிருந்தபோது கிடைத்த அறிமுகம் இந்தியாவந்த வயலின் மேதை மென்ஹிய்ன் (Menuhin )  இவரது சிதார்ஞானத்தை கண்டு பிரமித்தை அவர்தான் முழுநேர சிதார் கலைஞானாகமாற ஊக்குவித்தார்.  1952ல் நியூயார்க்கில் தனிகச்சரிகள் செய்ய உதவினார். அன்றிலிருந்து தன் கடைசி மூச்சுவரை ரவிசங்கர் படைத்தது இந்திய இசையின் சரித்திரம். 1966ல் பீட்டில்ஸ் குழுவினருக்கு சிதார் வாசிக்க கற்பித்துஅதைஅவர்கள் வாசித்தபோதும் மேற்கத்திய இசையின் புரட்சிக்கு வித்திட்ட ”வுட் ஸ்டாக்” இசைவிழாக்களில் வாசிக்கபட்டபோதும்  இந்தியாவில் “நம் இசையின் மாண்பபை இவர் கெடுக்கிறார்“ என்றவர்களும் உண்டு. ஆனால் அதன் மூலம் தான் சிதாரும் இந்திய இசை உலகத்தை கவர்ந்தது  என்பது தான் உண்மை. “மேற்கு கிழக்கை சந்திக்கிறது“ என்ற இவரது இசை வடிவம் 1967ல் கிராமி அவார்ட் வாங்கியது போது உலகம் இந்த இந்தியரை உற்று கவனித்தது. தொடர்ந்து 70களில் இவர் தன்னுடன் இந்திய புல்லாங்குழல், தபேலா மேதைகளை இணைத்து கொண்டு வழங்கிய ஃபூஷன் கச்சேரிகளினால் உலகையே  இந்திய இசையால் கலக்கினார். உலகின் பல நகரங்களில் ஆடிட்டோரியங்கள் போதாமல் புட்பால் மைதானங்கள் ஸ்டேடியங்களில் நிகழச்சிகள் நடத்தபட்டன. உலகமே பாராட்டிய அட்டன்பரோவின் காந்தி படத்திற்கு இசை அமைத்தவர் இவர்,
உலகின் பல நாடுகள் தங்கள் நாட்டில் கலைஞனுக்கு வழங்கபடும் உயரிய விருதுகளை வழங்கி கெளரவித்திருக்கிறது. 1999ல்இந்தியாவில் பாரத ரத்தனா வழங்கபட்டிருக்கிறது. புகழின் உச்சத்திலிருக்கும் போதே நம்நாட்டின் உயரிய விருது வழங்கி கெளரவிக்க பட்ட கலைஞன் இவர். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மாறி மாறி வசித்துவந்தார். 92 வயதிலும் கடந்த சில மாதங்கள் முன்வரை பல அமெரிக்க நகரங்களிங்களில் நிகழ்ச்சிகள் செய்துகொண்டிருந்தார்.

நீண்ட நாள் வாழ்ந்த இந்த சாதனையாளிரின் திருமணவாழ்க்கை வினோதமானது. இளம்வயதில் குருவின் மகளான அன்னபூர்ணாதேவியை  மணந்து 30 ஆண்டுகளுக்கு பின் அவரிடமிருந்து பிரிந்துவிட்டார், இவர்களுடைய மகன் சுபேந்திர சங்கரும் ஒரு சிதார் கலைஞர். இப்போது உயிருடன் இல்லை. 1970 களிலிருந்து ஸூஜோன்ஸ் என்ற அமெரிக்கரோடு இணைந்து வாழந்தபோது பிறந்தவர் நோரா. இந்த பெண்தான் 2003ல் சிறந்த பாப்பாடகி, சிறந்தஇசை, புதியபாடல், என்று 5 கிராமி அவார்ட்களை ஒரே நேரத்தில் வாங்கிய அமெரிக்க பாப்பாடகி நாராஜோன்ஸ். அமெரிக்க மனைவி . ஸீஜோன்ஸை பிரிந்த பின்னர் ரவிசங்கருடன் வாழந்தவர் சுகன்யா ராஜன். இவர்களுடைய மகள்தான் அனுஷ்கா. தந்தையுடன் சித்தார் கச்சேரிகள் செய்யும் இவரின் ஆல்பம் இந்த ஆண்டு கிராமி அவார்ட்க்கு பரிந்துரைக்க பட்டிருக்கிறது.  போட்டியிலிருக்கும் மற்றொன்று ரவிசங்கருடையது.(மூன்றாம் முறை) உலகில் இதுவரை இப்படி ஒரே குடும்பதினர் இத்தனை கிராமி விருதுகளைப் பெற்றதில்லை.
30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே சிதாரை உபயோகித்த ரவிசங்கர் அதை மிக நேசித்தார். ஒருமுறை லாஸ் ஏஞ்சல் நகருக்கு பயணத்தில் அது விமானத்தில் உடன் வரத்தவறிவிட்டது. அடுத்த விமானத்தில் வருகிறது. ஹோட்டலுக்கு அனுப்புகிறோம் என்று அதிகாரிகள் சொன்னபோதும் அதை பார்க்காமல் என்னால் தூங்கமுடியாது எனறு சொல்லி விமானநிலயத்திலே அதற்காக காத்திருந்தார். இப்பொது அந்த சிதார்  அமெரிக்காவில் அவரது சாண்டியாகோ நகர் வீட்டில்  அவரைப்பிரிந்து அழுது கொண்டிருக்கிறது


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்