16/5/10

“ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ


ஹாலிவுட்டை” காப்பாற்றிய ஹீரோ
 உலகம் முழுவதும் தனது சாம்ராஜ்ய எல்லைளை விரித்திற்கும்  அமெரிக்கத் திரைப்படதயாரிப்பு நிறுவனங்கள்,ஸ்டூடியோக்கள், லாப்கள் எல்லாம் நிறந்த  ஹாலிவுட் பகுதி லாஸ் எஞ்சல் நகரின் வெளியே மவுண்ட் லீ என்ற  சிறிய மலைப்பகுதியின் பின் புறமிருக்கிறது. பேசும் சினிமாக்கள் பிரபலமாகத்தொடங்கிய 1923ல் இந்த மலைச்சரிவில்  பிரமாண்டமான தனித்தனி எழுத்துகளாகHOLY WOOD LANDS என்ற போர்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகளில் LAND வாசகம்  நீக்கப்பட்டது. ஒவொரு எழுத்தும் 45 அடி உயரத்தில் ஒரு வார்தையாக 450 அடி நீளத்திற்கு நிற்கும் இது லாஸ் ஏஞ்சல் நகரின் அடையாளங்களில் ஒன்றாகி சுற்றுலாப்யணிகள் பார்க்கவேண்டியவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.  சுற்றுலாப்ப்யணிகளுக்கு -இதை எங்கிருந்து நன்றாக பார்க்கலாம்,எந்த இடத்திலிருந்து நீங்கள் குடும்பத்தோடு படமெடுத்துக்கொண்டால் பின்ணணியில் இது நன்றாகவரும், போன்றவிஷயங்களோடு,இது நிறுவப்பட்ட கதை, அடிக்கடிஉடைந்த எழுத்துகளை மாற்ற உதவியர்கள், இந்த எழுத்துகள்  இடம்பெற்ற பயங்கர ஹாலிவுட் படங்கள்,H என்ற எழுத்திலிருந்து தற்கொலை செய்துகொண்ட ஒரு நடிகை என்று  இதன் நீண்ட சரித்திரத்தை ஒரு சின்ன சினிமாகவே காட்டுகிறார்கள்.
சுற்றுலாவருவர்களிடையே வளர்ந்துவரும்  ஆர்வத்தால்  இப்போது இதை சீரமைத்து மின்சாரவேலியிட்டு பாதுகாக்கிறார்கள். எழுத்துகள் இருக்கும் மலைப்பகுதி தனியாருக்குச்சொந்தமானது. இத்தனை ஆண்டுகளுக்குபின் அதை வாங்கிய ஒரு கட்டிட நிறுவனம், அங்கே ஆடம்பர பங்களாக்களை கட்ட போவதாக அறிவித்தது. இந்த எழுத்துக்களை பராமரித்து நிர்வகித்துவரும் அறக்கட்டளை அந்த பகுதியை மட்டும்   வாங்க முயற்சித்தது. விலை12.5 மில்லியன் டாலர்கள் முழுபணமும் ஏப்ரல் 14க்குள் செலுத்தவேண்டும் என்பது நிபந்தனை.  செலுத்தவேண்டிய பணத்திற்காக அறக்கட்டளைவிடுத்த நன்கொடை வேண்டுகோளையெற்று, அமெரிக்காவின் 50  மாநிலங்களிலிருந்தும் 10 நாடுகளிலிருந்தும் பணம் வந்ததது. ஹாலிவுட் பிரபலங்கள் ஸ்டீவன் பில்பெர்க்,டாம் ஹாங்க்கஸ், போன்றவர்கள் உதவினார்கள் இந்த எழுத்துக்களைப்போல பிரம்மாண்ட வாசகங்களை அதே மலையில் நிறுவி .லாஸ் ஏஞ்சல் நகரில் நுழையும் கார்களில் எல்லாம் தொண்டர்களின் வசூல்,விசேஷ விற்பனை ஸ்டால்கள் என்று எல்லா வகையிலும் திரட்டியும் பணம் போதவில்லை, 1.5 மில்லியன் டாலர்கள் குவிந்தது. விற்கும் நிறுவனம் கெடுவை நீட்டிக்க தயாராக இல்லை. 87 வருடமாக புகழ்பெற்றிருந்த ஒரு அடையாளத்தை லாஸ் ஏஞ்சல் நகர் இழக்கபோகும் நிலை.
எதிர்பாராத ஆச்சரியமாக கெடுவிற்கு 2நாள் முன்னதாக பிளேபாய் பத்திரிகை  அதிபர்
ஹஃ ஹெப்ஃனர் அந்த பணத்தை தருவதாக அறிவித்தார்.  “ ஹாலிவுட் “ அழிக்கபடமல் காப்பற்ற பட்டுவிட்ட மகிழ்ச்சியை டிவீட்டர்களிலும்,பிளாக்களிலும் எழுதித் தள்ளுகிறார்கள் அதன் விசிறிகள்.
தன்சொந்த நன்கொடையைத்தவிர இதற்கான முயற்சிஎடுத்து கடைசிநேரத்தில் காப்பாற்றியவர்  முன்னாள் ஹாலிவுட் ஹீரோவும் இந்நாள் கவர்னமான ஆர்னால்ட் ஷ்வர்ஸென்ஸ்கர்.
 நிஜத்திலும் ஹீரோக்கள் கடைசிநேரத்தில் தான் வருவார்களோ?
(கல்கி 18.05.10)

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்