2/10/11

பேரீச்சையிலிருந்து எழுந்த சிங்கம்..


லைப் பூஸ்டர் 9             

 பொன்னுதுரை


பலகாலமாக பழையபொருட்களுக்கு மாற்றாக தரப்படுவதாக மட்டுமே அறியபட்டிருந்த பேரீச்சம் பழத்தை உடல் ஆரோக்கியத்தையும் வலிவையும் பெருக்கும் ஒரு விஷயமாக்கிய பெருமை லயன் டேட்சையே சாரும்.இன்று ஆண்டுக்கு 5000 டன்னுக்கு மேல் பேரீச்சைபழம்களை இறக்குமதி செய்து பக்குவபடுத்தி விற்பனை செய்யும் இந்த நிறுவனம் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இளைஞனின  சொந்த தொழில்துவங்க வேண்டும் என்ற  தணியாத ஆசையினால். 1970களில் இலங்கயிலிருந்து  இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த பல குடுமப்ங்களில் இவருடையதும் ஒன்று. இலங்கயில் 10 வயதிலிருந்து கடைகளில் வேலைசெய்துகொண்டே பள்ளிபடிப்பை  தொடர்ந்த பொன்னுத்துரை இந்தியா வந்தபின்னரும் அதையே  தொடர்ந்து  திருச்சியில் 80ரூபாய் சம்பளத்தில் 18 வ்யது வரை செய்து வந்தார். . துளிர் விட்டிருந்த சொந்ததொழில் ஆசையும் வளர்ந்தது இந்த காலகட்டதில்தான்நண்பர் ஒருவரின் உதவியால் வங்கிக்கடன் 5000 பெற்று ஆரம்பித்தது ஒரு சின்ன மளிகை கடை. ஆர்வம் இருந்த அளவிற்கு அனுபவம் இல்லாதால் வியாபாரம் செய்யத்தெரியவில்லை. ஆறு மாதத்திலியே படு நஷடம் கடனும் அதிகமாயிற்று. என்றோ மனுச்செய்த அரசாங்க வேலையும், கடை ஆரம்பித்தபோது விண்ணப்பித்த சபீனா பௌடருக்கான எஜென்சியும் ஒன்றாக வந்தது.  ஏதை ஏற்பது என்று குழம்பியிருந்தவருக்கு சபீனாகாரர்கள் சொன்ன யோசனை இரண்டையும் ஏற்றுகொள்ளுங்கள் எனபதுதான். பகலில் ஆபிஸ் மாலையில் சபீனா வியாபரத்திற்காக கடைகளுக்கு போவது எனப்து வாழ்க்கையாயிற்று. கிடைத்த கமிஷன் பணத்திலும் சம்பளத்திலும்  வங்கி கடனை அடைத்த பின்னர். மீண்டும் சொந்த பிஸினஸ் எண்ணம் எழுந்திருந்தது.
தினசரி திருச்சி நகரின் பல கடைகளுக்கு போய்கொண்டிருந்தபோது கவனித்த ஒரு விஷயம் சில கடைகளில் பேரீச்சம்ப்ழத்தை திறந்த கூடைகளில், ஈ க்களுடன் சுகாதாரமற்ற நிலையில் வைத்திருந்ததையும் அதை மக்கள் வாங்குவதையும் தான். இதை பாக்செய்து வைக்ககூடாடாதா? என்ற இவரது கேள்விக்கு ஒரு கடைகாரரின் பதில் தான் இவரை இந்த தொழிலுக்கு அழைத்திருக்கிறது எனபது ஆச்சரியமான உண்மை.  “ நீயே பேக்செய்து கொண்டுவாயேன் “ என்பது தான் அந்த பதில்.  அன்றே அதைப்பற்றி யோசித்து மறுநாளே தனது கீளினிங்பௌடருடன் இதையும் கடைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தவருக்கு அதற்கு கிடைத்த வரவேற்பு பிரம்பிப்பை தந்தது. தனியளாக இரவெல்லாம் பேக்கிங் செய்து காலை மாலை நேரங்களில் கடைகளில் விற்று வந்தார். சுத்தமான தரமான பழங்களை கொடுத்ததால் ஆர்டர்கள் அதிகமாயிற்று. ஒரு நாள் 500 பாகெட் வரை போக ஆரம்பித்தவுடன் இதுதான் நமது சொந்த தொழில் என தீர்மானித்ததும் செய்த முதல் வேலை அரசாங்க வேலையை ராஜினாமா செய்ததுதான். தினசரி சப்ளை செய்து பணம் வாங்குவது மட்டுமில்லாமல் வாடிக்கையாளார்களின் விர்ப்னையாளர்களின் கருத்துக்கு கேட்டு அதற்கு மதிப்பளிதிருக்கிறார். அப்படி செய்த  ஒரு விஷயமதான் இன்றும், இவராலும் மற்ற நிறுவனங்களாலும்  பின்பற்றபடுகிறது. அது பேரிச்சம்பழத்தை அதன் கொட்டைகள் நீக்கி விற்பது.
 தினசரி பல கடைகளுக்கு கொடுத்துவந்த பேரீச்சம்பழத்திற்கு ஒரு தனி[பெயர் இருந்தால் மக்கள் கேட்டு வாங்கவார்கள் என்று நண்பர் சொன்ன ஒரு யோசனையினால் ஒருநாள் இரவு பிறந்த பெயர்  “லயன் “. சிங்கதிற்கும் பேரீச்சைக்கும் என்ன சமபந்தம்.- பேட்டண்ட், ரிஜிஸ்டிரேஷன் பற்றியெல்லாம் தெரியாது. சிங்கம் மாதிரி இந்த தொழிலில் நம் சரக்கு ராஜாவாகயிருக்க வேண்டும்,. எல்லோருக்கு எளிதாக புரியக்கூடியபெயராக இருக்க வேண்டும் எனபதுதான் எண்ணமாகயிருந்தது.  டிசைன் செய்த கலர் சிங்க படத்துடன் சிவகாசியில் லேபில் தயாரிக்க வேண்டுமனால் ஆயிரகணக்கில் ஆர்டர் தரவேண்டும், நிறைய செலவாகும் அன்றைய சூழலில் அது முடியாத காரியமாக் இருந்தததால்  உள்ளூர் அச்சகத்தில் தயாராக இருந்த தேர்தல் சின்னங்களில் ஒன்றாக இருந்த சிங்க பட பிளாக்கையையே பயன் படுத்தி லேபில்களை அச்சிட்டேன்  என்று சொல்லும் இவரது நிறுவனம் இன்று விளமபரபட்ஜெட்க்காக பல கோடிகளை ஒதுக்கியிருக்கிறது
 சில ஆண்டுகளிலியே உள்ளூரில் கொள்முதல் செய்யும் நிலையிலிருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு உயர்ந்தவர் ஓமன் துனிஷியா போன்ற நாடுகளிலிருந்த்து நேரடியாக கண்டெயினர்களில் இறக்குமதி செய்து அதை தரம் பிரித்து சுத்தப்படுத்தி பேக் செய்ய தொழிற்சலைகளை நிறுவியிருக்கிறார்.  இவர் பலமுறை மும்பாய்க்கும் பல நகரங்களுக்கும் செல்ல நேர்ந்த போது உணர்ந்த விஷயம் வியாபாரத்தை பெருக்க தேவையானதில் முக்கியமானது ஆங்கிலம் எனபதைத்தான்.  அதற்காக 1990ல் பல மாதங்கள் டியூஷன் வைத்து கற்றுகொண்டேன்  என தயங்காமல் சொல்லும் இவரது பிஸினஸ் அணுகுமுறைகள் மிக யதார்த்தமாகயிருக்கிறது.
 “நீங்கள் ஒரு புதிய பொருளை அறிமுகபடுத்தி அதில் உங்களுடையதை பிராண்டாக ஆக்கவேண்டுமானால் முதலில் வாங்குவோருக்கு அந்த பொருளைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இதற்கு சற்று காலம் பிடிக்கும் ஆனால் இது அவசியம்” “ எனகிறார். பிலிப்ஸ் கோட்ல்ர் என்ற அமெரிக்க மார்கெட்டிங் குரு.  இதைப்பற்றியெல்லாம் அதிகம் அறிந்திருக்காத பொன்னுதுரை ஆரமபகாலத்தில்  இதை தனது பிராடக்டெக்காக அனாசியமாக செய்திருப்பது வியப்பாகயிருக்கிறது. இன்று அதிக அளவில் விற்பனையாவதற்கு காரணம் பேரீச்சை உடல் நலத்திற்கு உகந்தது எனபது  இவர்களால் கன்ஸ்யூமருக்கு புரிய வைக்கபட்டிருப்பது தான். இன்று உலக பேரீச்சையின் 5% இறக்குமதியை நம்து நாடு செய்கிறது. உள்ளூர் மார்கெட்டின் விற்பனை  இன்னும் உயர நல்ல வாய்ப்பு இருக்கிறது நாங்கள் இன்னும் நாட்டின் பல மாநிலங்களில் முழுவதுமாக பரவவில்லை என்று சொல்லுகிறார்.
பேரீச்சை பழஙகளை இவர்களுக்கு மஸ்கட்டிலிருந்து விற்பனை செய்துகொண்டிருந்த உலக புகழபெற்ற நிருவனம் பேரிச்சையிலிருந்து சிரப் த்யாரித்து கொண்டிருந்தது. அதை ஏற்றுமதி செய்யும் முயற்சிகளிலிருந்த அந்த அரசு நிருவனம் இவரை அழைத்து இந்தியாவில் அறிமுகபடுத்தமுடியுமா எனகேட்டார்கள்.   அவர்கள் ஆலோசனையின் பேரில் அதை இந்தியாவில் அறிமுக படுத்த துணிந்தது இவர்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டம். அந்த சிரப்பை நமது உணவுமுறைகளுடன் ஆரோக்கிய சம்பந்தமான விஷயமாக விளம்பரபடுத்தும் முன் நிறைய ஆராய்ச்சி செய்து பார்த்திருகிறார்கள். இறுதியாக கண்டுபிடித்த விஷயங்கள்  அதை இளம்சூடான பாலில் கலந்து சாப்பிடுவது மிக நல்லது. சில விஷயங்களில் சர்க்கரைக்கு மாற்றாக பயன் படுத்தலாம். எனபது.  மார்கெட்டில் பெறும் வரவேற்பை பெற்றிருந்த இந்த  சிரப். சில ஆண்டுகளுக்குபின் சந்தித்த பிரச்சனை சற்று வினோதமானது. மஸ்கட்டில் இதை த்யாரித்துகொண்டிருந்த ஆலை மூடப்படுவிட்டது.  இங்கு கஷ்ட்டபட்டு உருவாக்கிய பெருகிவரும் மார்க்கெட்  ஆனால் மூலப்பொருள் இறக்குமதி செய்ய முடியாது என்ற நிலை. உருவானது. அபோது பொன்னுத்துரை எடுத்த முடிவு அவரது துணிச்சலையும் தன்னம்பிக்கையையும் காட்டுகிறது. ஒரு சிரப் தயாரிக்கும் ஆலையை திருச்சிக்கு அருகில் நிறுவி அதை நிர்வகிக்க ஓமானிலிருந்து நபர்களை வேலைக்கு அமர்த்தியது இன்று அந்த தயாரிப்பை  உள் நாட்டில் விற்பதுமட்டுமிலாமல் மலேசியாவிற்கும் சிங்கபூருக்கும் ஏற்றுமதிசெய்கிறார்கள்.
சிரப்பை தொடர்ந்து தேனை விற்பனைக்கு அறிமுகபடுத்திய இவர்கள் அதில் தங்களின் தனி தரத்தால் தேன் விற்பனையில் நாட்டின முதலிடத்தை  விரைவில் அடைந்துவிடுவோம் எனபதில் நம்பிக்கையோடு இருக்கிறார்கள். திருச்சிக்கு அருகில் கிராமங்களில் அமைந்திருக்கும் இவர்கள் தொழிற்சாலைகளில் வேலையில் மகளீருக்கு முன்னுரிமை. ஒரு தொழிற்சாலையில்  அதிக அளவில் பணியிலிருப்பவர்களின் எண்ணிக்கை 50 வயதுக்குமேல். விரும்பி ஏற்ற தொழிலில் வாடிக்கையாளார்கள் தேவைகளை கூர்ந்து கவனித்தால் வெற்றி நிச்சியம் என்று சொல்லும்  இவரது இன்றைய கனவு இந்தியாவில் அத்தனை மாநிலத்தவரும் இவ்ர்களின் தயாரிப்புகளை அறிந்திருக்க வேண்டும்.  
 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்