லைப் பூஸ்டர் 8
ராம் ஸ்ரீராம்
அமெரிக்காவிலிருந்து
வெளிவரும் போர்ப்ஃஸ் பத்திரிகை ஆண்டு தோறும் முதல் 400 கோடிஸ்வரகளின் பெயர்களை
பட்டியிலிடும். 2005 ஆண்டிலிருந்து இந்த
பட்டியலில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் அமெரிக்கா
வாழ் இந்தியர் ராம்ஸ்ரீராம். அதே பத்திரிகை
புதிய தொழில்களில் முதலீடு செய்து பெறும் லாபம் ஈட்டியவர்களின் பெயர்களை மைடாஸ் லிஸ்ட்
MIDAS LIST (மைடாஸ் தொட்டதெல்லாம் தங்கமாகும் மன்னரின்
பெயர் ) என்றும் வெளியிடுகிறது. அதில்
இவரது பெயர் கடந்த 6 ஆண்டுகளாக முதல் 5 இடத்துக்குள்ளாகவே இருக்கிறது. இன்றைய
இவரது சொத்து 1.8 பில்லியன் டாலர்களுக்கு மேல். (ரூ9000 கோடிக்கும்மேல்) இன்று
14 நாடுகளிலிருக்கும் 11 நிறுவனங்களில் டைரக்கடாரக இருக்கிரார். அதில்
ஒன்று கூகுள் நிறுவனம். இந்த கோடிஸ்வரர்
ராம்ஸ்ரீராம் ஒரு தமிழர். சென்னையில் ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தில்
பிறந்தவர். தாத்தாவீட்டிலிருந்து டான்பாஸ்கோவிலும் பின்னர் லயோலா கல்லூரியிலும்
படித்தவர் தாய் ஒரு கல்லூரியில் ஆங்கில
விரிவுரையாளார். எப்படி இவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனார்.? “சரியான முடிவுகளை, மிக்சரியான நேரத்தில் எடுத்தது தான் ஒரு முக்கிய
காரணம். நல்ல படிப்பின் அவசியத்துடன், டிஸிப்பிளினாக வளர்த்த என அம்மா தான் என்
ஆதர்ஸம். படிப்புக்கு வெளியே எல்லா
போட்டிகளிலும் பங்கேற்கசெய்து டென்னிஸ்
விளையாட அனுப்பி, என்னை ஒரு துணிவான
மனிதாக்கினார். 70களில் எல்லாமத்திய தர குடும்பத்து மாணவன் போல எனக்கு ஐஐடி ஆசை-
பாங்க் வேலை போன்ற கனவுகள் இல்லை, தாத்தா
அதுபோன்ரவைகளை விரும்பினாலும் என்
விருப்பத்தை மதித்த அம்மா நான் விரும்பவதையே
படிக்க அனுமதித்தார். அமெரிக்கபோய் படிக்க விரும்பியபோதும் இந்த மாதிரி கோடிஸ்வர
கனவுகள் எதுவும் இருந்த்த்தில்லை. ஆனால் சொந்தமாக ஒரு கம்பெனி எனற எண்ணம் மட்டும வள்ர்ந்துகொண்டே
வந்த்தது. மெக்சிக்கன் பல்கலைகழகத்தில் எம்பிஏ முடித்தவுடன் ஒரு சிறிய டெலிகாம் கம்பெனியில் வேலைகிடைத்தது.
அப்போது வேலைக்கு இன்றுபோல் கஷடங்கள் கிடையாது. சிலநாளில் அந்த கம்பெனியை பெரிய அமெரிக்க நிறுவனமான பெல் வாங்கிவிட்டது.
அதில் எனக்கு இண்டெர்நேஷ்னல் மார்க்கெட்டிங் கற்றுகொள்ள நல்ல வாய்ப்புகள். உலகின் பல நாடுகளுக்கு நிறைய
பயணங்கள் புதிய அறிமுகங்கள் எல்லாம். அமெரிக்காவிலிருக்கும்போது வேலை தொடர்பாக்
அடிக்கடி சிலிகான் வேலிக்கு போவேன் அங்குதான் தனித் தொழில் வாய்ப்புகள் அதிகம்
எனபதை உணர்ந்தேன். இணைத்தை பயன்படுத்தும் பெளரவுசர்களில் முதலாவதான நெட்ஸ்கேப்
நிறுவந்த்தில் பணிகிடத்தது. அங்கு இண்டர்நெட்டின்
வலிமையை புரிந்துகொண்டேன். எனறு சொல்லும் ஸ்ரீராம் தன் 28 வயதில் பார்த்த
வேலையைவிட்டுவிட்டு, துவக்கியது ஒரு டெலிகாம் கம்பெனி. அன்றைய அமெரிக்க
அதிபர் ரீகன் அறிவித்தபுதிய ஸ்பெட்ரம் லைசென்ஸ் கொள்கையினால் கவரப்பட்டு டெலிகாம்
துறையில் புதிய தொழில் துவங்கி
தோற்றிருக்கிறார். அந்த டெக்னாலாஜியை முழுவதும் பயன்படுத்துகூடிய வேகமான கம்ப்யூட்டர்களும்,
லேப்டாப்களும் வராத காலம் அது. நிகழும் காலத்திற்கு முன்பாகவே நாம் சிந்திக்கிறோம்
எனற தவறை உணர்கிறார். க்டனை அடைக்க மீண்டும் வேலைதேடிபோய்
சம்பாதித்திருக்கிறார். பின்னர் 1994ல்
துவக்கிய தொழில் இணையதளத்தில் பொருட்கள்
விற்கும் ஒரு நிறுவனம், அப்போது அமோஸான்
என்ற நிறுவனம் அம்மாதிரி இணைய விற்பனையை பெரிய அளவில் துவக்கியிருந்தது. அவர்கள்
ஸ்ரீராமின் நிறுவனத்தை விலைக்கு கேட்க நல்லவிலையில்விற்றவர் அவர்களிட்மே அந்த
இணையதளத்தினை நிர்வகிக்கும் பொறுப்பை 1998ல் ஏற்கிறார். கிடைத்த பணத்தை
ஸ்டான்போர்ட் கல்லூரியில்தன்னுடன் படித்த நண்பர்கள்
துவங்கும் புதிய கம்பெனியில் முதலீடு
செய்கிறார். அந்த நிறுவனம் கூகுள். 30 லட்சமவாடிக்கையாளார்களுடன் இருந்த
அமோஸான் ராம் ஸ்ரீராமின்
நிர்வாக்திரமியினால் 1கோடி வாடிக்கையாளார்கள் உள்ள கம்பெனியாக் உயர்ந்து உலகின்
மிகபெரிய இணையதள வியாபார நிறுவனமாகிறது. சேவைக்கான போனஸாக அதன் பங்குகளைப்பெறுகிறார்.
அதனையும் விற்று கூகுளின் பங்குகளை வாங்கிகிறார். கூகுளின் இயக்குனராக இருந்த
போதும் அது முதலீட்டுக்கு நல்ல லாபத்தை ஈட்டிகொண்டிருந்த போதும். 2005ம்
இவர் வைத்திருந்த கூகுள் பங்குகள் 34 லட்சம் பங்குகள். அதில் பாதியை
பணமாக்கி ஒரு தனி கம்பெனியை நிறுவுகிறார்.
இவரது தன்னுடைய 25 ஆண்டுகால டெலிகாம்,
இணைய மார்க்கெட்டிங் புதிய கம்பெனிகள் துவக்கிய
அனுபவங்களின் அடிப்படையில் அவர் ஆரம்பித்த நிறுவனம் ஷெர்ப்பாலொ (SHERPALO) என்ற
வென்ச்சர் காப்பிட்டல் முதலீட்டு நிறுவனம். வென்சர் காப்பிட்டல் என்பது வெறும் நிதி நிறுவனம் இல்லை. மிக வேகமாக்
வளர்ந்து நல்ல லாபத்தை ஈட்டகூடிய புது முய்றசிகளுடன் தௌவங்கப்ட்டிருக்கும்
தொழிலைகளை கண்டறிந்து அவர்களுக்கு உதவுவது.
” “முயற்சி உங்களுடையது முதல் எங்களுடையது “ “ எனற
ரீதியில் முதலீடு செய்து லாபத்தில் பங்குப்பெறுவார்கள்.90களில் அமெரிகாவில்
தோன்றிய இது இன்று உல்கெங்கும் பரவியிருக்கிறது. அதனென்ன பெயர் ஷெர்ப்பாலொ ? ”
“கடினமான ம்லைஏற்றத்தில் சாதனையாளருடன்
கடைசி வரை, உச்சியை அடையும்
வரை வந்து உதவி செய்பவர் ஷெர்ப்பா எனற உதவியாளார். சாதனையாளாரின் அத்தனை
கஷ்டங்களையும் படுபவர் இவர். அதுபோல நாங்கள்” எனறு சொல்லும் இவரது நிறுவனம் இன்று உலகின்
பலநாடுகளில் வெற்றிபாதையை
நோக்கிச்செல்லும் புதிய தொழில்களில் செய்திருக்கும் முதலீடுகள் அதிக
அளவில் லாபத்தை கொட்டிகொண்டிருக்கிறது. . தொழில்துவங் கிறவர்க்ளுக்கு, நிதி மட்டுமில்லை ஆலோசனை, வழிகாட்டுதல்
மார்கெட்டிங், நிர்வாக் பயிற்சி
கூட்டுமுதலிட்டார்களை அறிமுகபடுத்துவது போன்ற பல விஷயஙகளில் உதவுகிறார்கள். ”
“எந்த வெற்றியையும் தவறுகள் செய்யாமல் அடைய
முடியாது. என் முயற்சிகளில்
நான் செய்த தவறுகளை “ ராமின் தவறுகள் “ என
புத்தகமே எழுதலாம். அவைகளை புதியவர்கள் செய்யகூடாது என்று சொல்லும் இவரது நிறுவனம்
இந்தியாவில் நாக்ரி.காம், மைட்ரிப்.காம், ஜூம் இன் போன்ற
நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது.
இவரது
மனைவி விஜயலக்ஷ்மியும் தமிழகத்தை சேர்ந்தவர். இரண்டு மகள்களும் ஸ்டான்போர்ட்
கல்லூரியில் படிக்கிறார்க்ள். விஜிஸ்ரீராம் என்று அறியபட்டிருக்கும் திருமதி ஸ்ரீராம்
தனம் என்ற அறகட்டளையை நிறுவி பள்ளிகல்வியை பாதியில் விட்ட அமெரிக்க மாணவர்களுக்கு
கல்வி அளிக்கும் K 12 பள்ளிகளையும் அதை சார்ந்த சமுக நல அமைப்புகளையும்
நிறுவி நடத்திகொண்டிருக்கிறார்.
கூகுள்
நிறுவனத்தின் பங்குகள் இந்த உயரதிற்கு போகும் எனபதை எப்படி உங்களால் கணிக்க
முடிந்தது? . ” “என்சொந்த கம்பெனியை விற்று கிடைத்த பணம், பத்திரமாகமூதலீடு செய்து ,அதிக லாபத்துடன் திருப்பிப்பெற நான் செய்த
ஆராய்ச்சி, நண்பர்க்ள் தேர்ந்த்டுத்திருந்த டெக்னாலாஜியின் மீது நம்பிக்கை ஆகியவ்றால்
கூகுள் இணைய உலகில் ஒரு மிகப்பெரிய அசைக்கமுடியாத சக்தியாகும் என்பதை அது
துவங்குமுன்பே கணித்தேன். கணிப்பு
சரியாகயிருந்தது “ என்கிறார். இப்படி ஒரு
நிறுவனத்தின் எதிர்கால வெற்றியை கணிக்கும் திறன் இவரிடமிருப்பதால் தானோ என்னவோ
இவரது ஷெர்ப்பாலொ நிறுவனம் உலகெங்கிருந்தும்
புதிய எண்ணங்களோடு சாதிக்க துடிக்கும்
இளைஞர்களின் முயற்சிகளை தேடிப்போய் வரவேற்று மூதலீடு செய்கிறாகள். உங்களிடம் எதாவது புது சூப்பர் ஐடியாக்ளும் திட்டங்களுமிருந்தால் தொடர்பு
கொள்ளுங்களேன்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்