20/1/13

புத்தகத்தினால் பெற்ற புதிய அனுபவம்சென்னை புத்தக கண்காட்சி இம்முறை மிக பிரம்மாணடானதாக  560 
ஸ்டால்களுடன் சென்னையிலியே பெரிய கிரவுண்டான YMCA கிரவுண்டில் நடைபெறுகிறது. நேற்று 19/01/13 நல்ல கூட்டம் லட்சம் பேர் !
கார்பார்க் நிரம்பி வழிந்தது. பார்க்கிங்க்கு வசூலித்த பணத்திற்கு இறங்கி 1 கீமி நடக்கும் பயிற்சியியையும் இலவசமாக தருகிறார்கள். 1975ல் முதல் கண்காட்சி செயிண்ட் அப்பாஸ் பள்ளிகூடத்திலும் பின் மவுண்ட்ரோடு 
ஆர்ட்ஸ் காலேஜிலும் மாலன், சுபரம்ணிய ராஜுவுடன் பார்த்த நினைவுகள் வந்தது. நேற்று வந்தவர்களில் 25% பேர் ஆளுக்கு இரண்டு புத்தகம் 
வாங்கியிருந்தால் கூட விற்பனை ஸுப்பர் ஹிட் படத்தின் முதல் நாள்  கலெக்கஷனைத் தாண்டியிருக்கும்.
கடந்த ஆண்டு வெளியான் என்னுடைய எப்படி ஜெயித்தார்கள்? இரண்டு பதிப்புகளை தாண்டியிருக்கிறது. இந்த கண்காட்சியில் புதிய
 தலைமுறை ஸ்டாலில் அவர்கள் வெளியிட்ட புத்தக ஆசிரியர்களை நாளொன்றுக்கு ஒருவராக அழைத்து வாசகர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். மாலன், பிரபஞ்சன் இறையன்புவரிசையில் என்னையும்அழைத்து கெளரவித்திருந்தார்கள். புத்தக ஆசிரியராக ஸ்டாலில் அமர்ந்து வாசகர்களை சந்தித்தது புதிய  இனிய அனுபவம். ”வாங்காதவர்கள் புஸ்தகத்தோடு நம்மையும் சேர்த்து வேடிக்கை பார்ப்பார்கள்” என்று சுஜாதா சொன்னது நினைவிற்கு வந்தது.
புத்தகம் வாங்கி கையெழுத்து வாங்கியவர்களில் பலர் இந்த தொடரை படிக்காதவர்கள். விமர்சனங்களையும் விளம்பரங்களையும் பார்த்து வாங்கியவர்கள் வங்கி நண்பர்கள், பேராசியர், டாக்டர் என பலவிதமானவர்களை சந்தித்தேன்.. கடந்த வாரம் துவங்கியிருக்கும் தொடர் பற்றி ஒரு பெண்மணி பேசியது ஆச்சரியம்  இந்த வாய்ப்புக்கும் கெளரவத்திற்கும் புதிய தலைமுறைக்கு நன்றி.
ஸ்டாலில் மிக சுறுசுறுப்பாக ”ஒரு புதிய தலைமுறையே” இயங்கி கொண்டிருக்கிறது. திருமதி கீதா விருந்தினர்களை இன்முகத்தோடு வரவேற்று இயல்பாக உரையாடுகிறார்.”கல்வி”யின் இணைஆசிரியர் பொன். தனசேகரணை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. கல்வியின் பழைய இதழ்களை கேட்டு வாங்கிப் போகிறார்கள். ஸேல்ஸ் டீம் விற்பனையோடு நிற்காமல்  கேட்பவர்களுக்கு விபரங்களையும் பொறுமையாக தருகிறார்கள். புதிய தலைமுறையின் வெற்றியில் இந்த இளைஞர் பட்டாளத்திற்கும் ஒரு பங்கு இருப்பது புரிந்தது. நண்பர் ஹரிபிராஸாத் மாலையில் எடுத்து இரவே அனுப்பிய படங்களில் சில இவை.
தாங்க்யூ வெரிமச் ஹரி 
posters/ads

1 கருத்து :

  1. படித்தவர்களே படித்த புத்தகத்தை வாங்குவதை விட (புத்தகம்) படிக்காதவர்கள் வாங்குவது நன்று

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள்