17/1/13

ஒரே ஒரு அடியில் திரும்பி வந்த உயிர்.


கல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கொண்டிருந்த அந்த விமானத்தில் கிளம்பிய அரை மணிக்குள் ஒரு பயணி மயங்கி விழுந்து நினைவிழந்தார். நாடிதுடிப்பு நின்று உடல் சில்லிட்டு போய்கொண்டிருந்தது.   அந்த பயணியின் கைநாடியில் மட்டுமில்லை கழுத்துபகுதியில் கூட துடிப்பு இல்லை. அவரது மனைவி அழத்தொடங்கிவிட்டார்.

அதிர்ஷ்ட வசமாக அந்த விமானத்தில் கல்கத்தாவில் ஒரு மருத்துவ  மாநாட்டில் பங்கேற்ற பின் சில டாக்டர்கள் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். அவர்களில் சென்னை லைப்லைன் மருத்துமனை சேர்மன் டாக்டர் ராஜ்குமாரும்  ஒருவர். மரணம் என்றே முடிவு செய்யபட்ட நிலையில் அந்தபயணியின்  நெஞ்சுகூட்டில்  இதயமிருக்கும் பகுதியில் மிக வேகமாக ஒரு அடி போட்டார் டாக்டர். ராஜ்குமார்.  மயங்கிய நிலையிலிருந்த அந்த பயணி துள்ளி எழுந்து உட்கார்ந்தார்நாடித்துடிப்பும் ரத்த அழுத்தமும் நார்மலுக்கு வந்துவிட்டது. தனக்கு நடந்தது பற்றி எதுவும் தெரியாததால்  அருகில் நின்ற டாக்டர்களை பார்த்து திகைத்து போனார். டாக்டர் ராஜ்குமார் கொடுத்த   அந்த பலமான அடி ஒரு அவசர முதலுதவி பயிற்சிடாக்டர்கள் பாஷையில்பெரிகார்டியல் தம்ப்” என்று சொல்லுப்படும் இதை சரியாக சரியான நேரத்தில் சரியாக கொடுக்க தெரிந்திருக்க வேண்டும். மிகமிக அரிதாக இயங்காமல் இதயம் ஒய்வெடுக்க ஆரம்பிக்கும் நிமிடங்களில் அதை எழுப்பி விடும் இந்த அடி முறையை ஆப்ரேஷன் தியட்டர்களில்  மின் இணைப்பிலிருக்கும் அதற்கான கருவிகள் மூலம் செய்வது உண்டு.
”மறு நாள் தான் பயணம் செய்திருக்க வேண்டிய நான் கடைசி நேரத்தில் பயணதிட்டம் மாறி அன்று கடைசி பயணியாக அந்த விமானத்திலேறினேன். ஏறியவுடனேயே ஒரு வயதான பெண்பயணியின் உடல்நிலை பயணத்திற்கு ஏற்றதாக இருக்கிறதா என சோதித்து சொல்லும்படி பைலட் கேட்டுகொண்டார். அவசியமனால் அவரை இறக்கிவிடுப்போவதாகவும் சொன்னார். அந்தபெண்மணியை சோதித்து பயமில்லை பிரயாணம் செய்யலாம்  என்று சொல்லிவிட்டு சீட்டில்  போய் அமர்ந்த அரைமணியில் இது நிகழ்ந்தது.
விமானத்தில் பயணம் செய்வர்கள் இப்ப்பொது ஆண்டுதோறும் அதிகரித்துகொண்டிருக்கின்றனர். அதில் பலர் இதய நோய்களுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள். அதனால் நமது விமான பணிப்பெண்களுக்கும்,பைலட்டுகளுக்கும் ஹாட்ட்டாக் முதலுதவி பயிற்சிகளும், அந்த கருவிகளை இயக்கும் பயிற்சிகளும் தரப்பட்டு அந்த கருவிகளும் விமானத்தில் வைக்கபடவேண்டும்” என்கிறார் டாக்டர் ராஜ்குமார். இதற்கு அதிகம் ஒன்றும் செலவகாது.
 30000 அடி உயரத்தில் பறக்கும் போது மரணத்தை சந்தித்து  அங்கேயே மறுவாழ்வும்  பெற்ற அந்த பயணியின் தொடர்ந்த சிகிச்சைக்காக  வழியில் புவனேஸ்வரில் விமானத்தை தரை இறக்க தயாராகயிருந்த பைலட்டிடம் டாக்டர்கள் அவசியமில்லை என்று சொல்லும் அளவிற்கு நார்மலாகிவிட்டார் அந்த பயணி.  ஆனாலும் அருகில் டாக்டர்கள் அமர்ந்து இதய துடிப்பை கண்காணித்து கொண்டே வந்தனர். விமானம் சென்னையை அடைந்ததும் அவர் விஜயா மருத்துவ மனைக்கு கொண்டு செல்லபட்டார்.  அவர் அங்கு பணியிலிருக்கும் ஒரு டாக்டர்.
மரண அடி என்று சொல்லக்கேட்டிருக்கிறோம். மரணத்திலிருந்து மீளவும் ஒரு அடி இருக்கிறது என்பது இப்போது தெரிகிறது.  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்