பெயரைச்சொன்னாலே
சின்ன குழந்தைகூட பிஸ்கட் எனறு புரிந்து கொள்ளும் பெயர் பிரிட்டானியா. 120 ஆண்டுகளுக்கு
முன் கல்கத்தாவில் ஒரு சிறிய வீட்டில் 295 ரூபாய் மூலதனத்தில் பிஸ்கட் பேக்ரியாக ஒரு இந்தியரால் துவக்க பட்ட இந்த
நிறுவனத்தை இரண்டாம் உலகபோரின் போது பிஸ்கட்டுக்கு ஏற்பட்ட டிமாண்டால் கல்கத்தாவிலிருந்த
வெள்ளைகாரார்களால் வாங்கி விரிவாக்கபட்டது. மிகப்பெரிய அளவில் பணம் ஈட்டிய அந்த நிறுவனம்
பம்பாயில் பெரிய தொழிற்சாலையை நிறுவி இங்கிலாந்துக்கே இங்கிருந்து பிஸ்கட் தயாரித்து
அனுப்பிக்கொண்டிருந்தது. 1821லியே இறக்குமதி செய்யபட்ட கியாஸ் அடுப்புகளிலும் தொடர்ந்து மின்சார அடுப்புகளிலும் தரமான பிஸ்கட்கள்
தயாரித்த இந்தநிறுவனம் அந்த கால்கட்டத்திலியே 1 கோடி ருபாய் விற்பனையை எட்டியிருக்கிறது.
ஆனால் முழு முதலீடும் இங்கிலாந்துகாரர்கள் வசமாகிவிட்டதால் கம்பெனியின் தலமையகம் இங்கிலாந்துக்கு
மாறியது. தொடர்ந்து இந்தியாவில் பிஸ்கட் தயாரித்து
விற்பனையை மற்றொரு ஆங்கில நிறுவனம் மூலம் செய்து கொண்டிருந்த இந்த பிரிட்டானியா இந்திய
நிருவனமாக மாறியது பல போராட்டங்களுக்கும் திருப்பங்களுக்கும்
பின்னர் தான்.
டெல்லி
கிளாத் மில்ஸ்(DCM) என்ற நிறுவனத்தின் அதிபர் ,நுஸ்லி வாடியா
(Nusli Wadia)மிக வேகமாக வளரும் தொழிலை நிறுவ எண்ணிக்கொண்டிருந்தவர். இந்த பிஸ்கட்
நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவர விரும்பி இங்கிலாந்திலேயே மற்றொரு ஆங்கிலேய நிறுவனத்துடன் இணைந்து முதலீடு செய்தார். அப்போது அந்த நிறுவனத்தின்
தலமைப்பொறுப்பிலிருந்த ஒரு இந்தியர் அவர்கள் நிருவனத்திற்கே தெரியாமல் நிறுவனத்தின்
பெரும்பாலான பங்குகளை ஒரு அமெரிக்க பிஸ்கட் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்த மோசடியை மறைக்க அவர்பிரச்சனைகளை எழுப்ப, வாடியா பணம்
முதலீடு செய்த நிறுவனத்துடன் போராடவேண்டியிருந்தது.இங்கிலாந்து கோர்ட்களில் வழக்குகள், அமெரிக்க கோர்ட்களில் வழக்குகள் எனத்துவங்கி பல திருப்பங்கள், வழக்குகள் எல்லாம்
ஒய ஆன காலம் 7 ஆண்டுகள். ” கோர்ட்களிலும் போர்ட் ரூம்களிலும் நடந்த இந்தியாவின் மிகப்
பெரிய கார்பேரட் போராட்டம்” என இதை எக்னாமிஸ்
டைம்ஸ் வர்ணித்தது எல்லாம் முடிந்து தொழிற்சாலையின்
விரிவாக்கம் என்ற திட்டங்களுடன் களம் இறங்கிய வாடியா சந்தித்தது இன்னொரு புதிய பிரச்னை. வெளி நாடுகளில் போராட்டங்களை கூடவே இருந்து கோர்ட், வழக்கு பிரச்சனைகளை சந்தித்த
பிஸினஸ் பார்ட்னர்களான டானொன் (Danone) என்ற பிரஞ்ச் நிருவனம் பிரிட்டானியாவையே தங்கள் வசபடுத்தம்
முயற்சியில் இறங்கிவிட்டது. அதுவும் இந்தியாவிலேயே ஒரு பிஸ்கட் ஆலையை. முதற்கட்டமாக பங்களூரில் ஒரு உள்ளூர் நிருவனத்துடன் இணைந்து ரொட்டிகள் தயாரிக்கும்
கம்பெனியையாக துவக்கிவிட்டார்கள், இதுஅன்னிய நாட்டு நிறுவனங்கள் பங்கு கொள்ளும் ஜாயிண்ட்
வென்ச்சர்கள் என்ற திட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. இந்த திருப்பத்தை சற்றும் எதிர் பார்க்காத வாடியா மீண்டும் அரசின் துறைகளையும் நீதிமன்றங்களையும்
நாடவேண்டிய நிலைக்கு தள்ள பட்டார். அரசின் விதிமுறைகளை சுட்டிகாட்டி வாதிட்டது இங்கிலாந்து
நிறுவனம். நீண்ட போராட்டங்களுக்கு பின்னர் அரசு அந்த நிறுவனத்தின் பணிகளை முடக்கியது.
. பிரச்னைகள் தொடர்ந்தாலும் இந்த இந்திய தயாரிப்புக்கும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வரவேற்பு இருக்கும் என வாடியா நம்பினார். அதன்படியே
திட்டமிட்டு படிப்படியாக வளர்ந்த இந்த நிருவனம் 2004ம் ஆண்டில் ஆண்டுக்கு நாலு லட்சம் டன் பிஸ்கட்கள் தயாரிக்கும் நிருவனமாக
உயர்ந்தது. ஆனால் அந்த ஆண்டு இவர்கள் சந்தித்த
சவால் வினோதமானது. பிரிட்டானியா பலவகைகளான பிஸ்கட்களை தயாரித்து வந்தது. அதில் ஒன்று
”டைகர்” என்ற வகை. இந்த தயாரிப்பை இங்கிலாந்திலிருக்கும்
இவர்களது பார்ட்னர்கள் தற்போது போட்டியாளார்ளாகிவிட்டனர்.
அந்த நிருவனம் உலகின் பல நாடுகளில் டைகர் பிஸ்கட்களை தயாரித்து விற்க ஆரம்பித்து விட்டனர். அது எங்களுடைய
தயாரிப்பு. மற்றவர்கள் எங்கள் ஒப்புதல் இல்லாமல் அதை தயாரிப்பது அறிவார்ந்த சொத்து உரிமை (intellectual propertyright) மீறல் வகையில் குற்றம் என விற்கபடும்
ஒவ்வொரு நாட்டிலும் வழக்குகள் தொடர்ந்து போராடினார் வாடியா.. ஒரு இந்திய நிறுவனம் தனது
படைப்புக்கு இப்படி போராடியது இதுவே முதல் முறை. சில நாடுகளில் இதற்கான சட்டங்கள் மிக
ஆரம்ப நிலையில் அல்லது இல்லாமலேயே இருந்தனால் வழக்குகளில் வெற்றி கிடைக்கவில்லை, ஆனாலும்
அயராது வாடியா குழுமத்தினர் போராடினர் மலேசியா சிங்கபூர் நாடுகளில் நடந்த இந்த வழக்கில்
இறுதியில் பிரிட்டானிய வெற்றியும் 22 ருபாய் கோடி நஷ்ட ஈடும் பெற்றது.
ஆனாலும் அடுத்த சில ஆண்டுகளில் அந்த நிறுவனம் இதை மீண்டும் தயாரிக்காமலிருக்க 250 மில்லியன் டாலர்கள் கொடுத்து தங்களது பங்கு
மூதலீட்டை திரும்ப பெற்றதோடு அவர்கள் பிஸ்கட் தயாரிப்பு தொழிலிருந்தே விலகும்படி ஒரு
ஒப்பந்தத்தையும் பெற்றனர்.. எங்கள் தயாரிப்புக்கே நாங்கள் கொடுத்த ”நியாமான” விலை இது
என்கிறார் வாடியா. இவர் தனது நிருவனத்தின் தயாரிப்பை ஒரு பிஸ்கட் என்ற அளவில் பார்க்காமல்
அதை கம்பெனியைன் சொத்தாக பார்ப்பதை உலகம் புரிந்து கொண்டது. ஒரு இந்திய தயாரிப்பை காப்பிஅடித்து
தங்களது தயாரிப்பாக காட்ட இனி மற்ற நாட்டு நிருவனங்கள் தயங்கும் என சொல்லுகிறார். நாடு
முழுவதும் 2500 க்கும்மேபட்ட மிக பெரியஸ்டாக்கிஸ்ட்கள்மூலமும் எண்ணற்ற சிறு கடைகள்
மூலமும் ஒரு நாளைக்கு விற்கும் பிஸ்கட் களின் எண்ணிக்கை 1.5 கோடிகளுக்கு மேல். மிக
திறமையான நிர்வாகிகள் நிர்வகிப்பில் விற்பனை ஆண்டுதோறும் உயர்கிறது. ஒரு குறிபிட்ட
வகை நாடு முழுவதும் வாரம்தோறும் வாங்கபடுவதையும் பள்ளி விடுமுறைகாலங்களில் குறைவதையும்
கவனித்த இவர்கள் அதை ஆராயந்தபோது, அந்த பிஸ்கட்
குழந்தைகளுக்கு பள்ளிக்கு அனுப்பும்போது கொடுத்து
அனுப்படுவதையும் அது பிரஷ் ஆக இருப்பதற்காக
பெரிய பாக்கெட் வாங்கமல் சிறிய பாக்கெட்களை வாங்குகிறார்கள் என்பதையும் அறிந்தார்கள்.
வாடியாவின் ஆலோசனைப்படி மூன்று பிஸ்கட்களை
சீலிட்ட சின்னபாக்கெட்களில் இட்டு அவைகளை
பெரிய பாக்கெட்களிலிட்டு அறிமுகபடுத்தினார்கள். பிஸ்கட் பாக்கிங் முறையில் இந்த திருப்பு
முனை விற்பனையை இரட்டிபாக்கியிற்று.. பல நிறுவனங்கள் இன்று இதை பின்பற்றுகின்றன. உற்பத்தியை பெருமளவில் அதிகரிப்பதின் மூலம் விலையை
குறைக்கும் மாடலை இந்த நிறுவனம் கையாளுகிறது. மாநில அரசுகள் சத்துணவிற்காக செலவிடும்
பணத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஊட்ட சத்து செறிவுட்டபட்ட கேக்காக தயாரித்து குழந்தைகளுக்கு வழங்கலாம். நாட்டின் எல்லா பிஸ்கட் நிறுவங்களும் அரசும் இணைந்து
இதைசெய்யலாம் என்கிறார் இதன் மேலாண்மை இயக்குநர் திருமதி வினிதா பாலி. இவர் அமெரிக்காவில்
பெப்சிகோலாவில் மார்கெட்டிங் பிரிவு தலைவராகயிருந்தவர்.
இன்று டைகர் உட்பட16 வகைகளுக்கு மேல் பிஸ்கட்களும் ரொட்டி,
கேக் போன்றவைகளை தயாரிக்கும் இந்த நிருவனத்தின் கடந்த ஆண்டு மொத்த வியாபாரம் 2000 கோடிக்கும்
மேல். எதிர்கால திட்டம்? பல இருக்கிறது எதிர்வரும்
எதிர்பாராத திருப்பங்களை திறமையாக சந்திப்பது உட்பட என்கிறார் நுல்சி வாடியா.
கல்கி17/02/13
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள்